ரஜினிகாந்த் நடித்து 2010-ல் வெளியாகி வெற்றிகரமாக ஓடிய ‘எந்திரன்’ படத்தின் இரண்டாம் பாகம் ‘2.0’ என்ற பெயரில் தயாராகியுள்ளது. இதில் ரஜினிகாந்த், எமிஜாக்சன் ஜோடியாக நடித்துள்ளனர். இந்தி நடிகர் அக்ஷய்குமார் வில்லனாக வருகிறார். ஷங்கர் டைரக்டு செய்துள்ளார்.
ரூ.450 கோடி செலவில் இந்த படம் உருவாகி உள்ளது. இந்தியாவில் வேறு எந்த படமும் இவ்வளவு பெரிய செலவில் எடுக்கப்பட்டது இல்லை. தமிழ், இந்தி, தெலுங்கு ஆகிய மூன்று மொழிகளில் ரிலீசாகிறது. இதன் படப்பிடிப்பு இரண்டு வருடங்களாக நடந்து சில மாதங்களுக்கு முன்பு முடிந்தது. கடந்த அக்டோபர் மாதம் துபாயில் பிரமாண்ட விழா நடத்தி பாடல்களை வெளியிட்டனர்.
படம் எப்படி உருவானது என்று 1 நிமிடம் 48 நொடிகள் ஓடக்கூடிய தயாரிப்பு வீடியோவும் இணையதளங்களில் பரவி படத்துக்கு பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. இந்த வீடியோவில் அரங்குகள் அமைக்கப்பட்ட விதம், ரஜினிகாந்த், அக்ஷய்க...
சென்னை மாநகராட்சி மேயர் பதவிக்கு உதயநிதி ஸ்டாலின் போட்டியிட உள்ளார் என்ற தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆனால் இது அதிகாரப்பூர்வ அறிவிக்கப்படவில்லை என்று முன்னாள் மேயர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.
அரசியலுக்கு வர விரும்புகிறேன், கட்சி வேலையில் ஈடுபடுகிறேன் அதை பொறுத்து வாய்ப்பு கொடுங்கள் என்று கேட்டிருந்த உதயநிதி ஸ்டாலின் முதன் முதலாக திமுகவின் போராட்டத்தில் பங்கேற்றுள்ளார்.
சென்னையை அடுத்த தாம்பரத்தில் பேருந்து கட்டண உயர்வை கண்டித்து நடைபெற்ற போராட்டத்தில் உதயநிதி ஸ்டாலின் தொண்டர்களுடன் தொண்டர்களாக கட்சிக் கொடியை கையில் ஏந்தியவாறு அரசுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினார்.
அரசியல் வருகை குறித்த அறிவிப்பை வெளியிட்ட கையோடு போராட்ட களத்தில் இணைந்துள்ளது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.
நடிகர்கள் ரஜினி, கமல் இருவரும் அரசியல் அறிவிப்பை வெளியிட்ட நிலையில் திமுகவும் நடிகராக உள்ள உதய ...
கதிர் - சிருஷ்டி டாங்கே நடிக்கும் “ சத்ரு “
ஆர்.டி.இன்பினிட்டி டீல் எண்டர்டைன்மென்ட் பட நிறுவனம் சார்பில் ரகுகுமார் என்கிற திரு, ராஜரத்தினம், ஸ்ரீதரன் ஆகியோர் இணைந்து தயாரிக்கும் படம் “ சத்ரு “
இந்த படத்தின் கதாநாயகனாக கதிர் நடிக்கிறார். கதாநாயகியாக சிருஷ்டி டாங்கே நடிக்கிறார். மற்றும் பொன்வண்ணன், நீலிமா, மாரிமுத்து, ரிஷி, சுஜா வாருணி,பவன், அர்ஜுன் ராம், ரகுநாத், கீயன், சாது, குருமூர்த்தி, பாலா மற்றும் பலர் நடிக்கிறார்கள்.
ராட்டினம் படத்தில் நடித்த லகுபரன் இந்த படத்தின் வில்லனாக நடிக்கிறார். இது ஒரு ஆக்ஷன் திரில்லர் படம் இது. 24 மணி நேரத்தில் நடக்கும் சம்பவங்கள்
தான் இந்த படம். இந்த படத்தின் MOTION போஸ்டரை இயக்குனர் கெளதம்மேனன் வெளியிட்டார். படம் விரைவில் வெளியாக உள்ளது.
https://youtu.be/bXgon4HKoco...
7சி எண்டர்டெயின்மெண்ட் ஆறுமுககுமார் மற்றும் அம்மே நாராயணா என்டர்டைன்மென்ட் சார்பில் கணேஷ் காளிமுத்து, ரமேஷ் காளிமுத்து தயாரிப்பில் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி, கௌதம் கார்த்திக் இணைந்து நடித்துள்ள படம் 'ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன்'. படத்தின் தயாரிப்பாளரான ஆறுமுக குமார் எழுதி இயக்கி இருக்கும் இந்த படத்துக்கு ஜஸ்டின் பிரபாகரன் இசையமைத்திருக்கிறார். கிளாப் போர்டு புரொடக்ஷன்ஸ் சத்தியமூர்த்தி வெளியிட, வரும் பிப்ரவரி 2ஆம் தேதி வெளியாகிறது. இந்த படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது.
இயக்குனர் ஆறுமுக குமார் பேசும்போது, ‘இந்த கதையின் மீதும், எங்கள் மீதும் நம்பிக்கை வைத்து ஃபைனான்ஸ் செய்திருக்கிறார்கள் அம்மே நாராயணா எண்டர்டெயின்மெண்ட். நான் இயல்பாக பழகுவது ஒரு சாதாரண விஷயம். ஆனால் விஸ்வரூப வளர்ச்சி அடைந்திருக்கும் விஜய் சேதுபதி இப்போதும் அதே மாதிரி பழகுவது தான் ரொம்ப பெரி...
7சி எண்டர்டெயின்மெண்ட் ஆறுமுககுமார் மற்றும் அம்மே நாராயணா என்டர்டைன்மென்ட் சார்பில் கணேஷ் காளிமுத்து, ரமேஷ் காளிமுத்து தயாரிப்பில் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி, கௌதம் கார்த்திக் இணைந்து நடித்துள்ள படம் 'ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன்'. படத்தின் தயாரிப்பாளரான ஆறுமுக குமார் எழுதி இயக்கி இருக்கும் இந்த படத்துக்கு ஜஸ்டின் பிரபாகரன் இசையமைத்திருக்கிறார். கிளாப் போர்டு புரொடக்ஷன்ஸ் சத்தியமூர்த்தி வெளியிட, வரும் பிப்ரவரி 2ஆம் தேதி வெளியாகிறது. இந்த படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது.
இதில் விஜய் சேதுபதி பேசும்போது, ‘ஒரு தெளிந்த நீரோடை போல மிகவும் தெளிவானவர் தான் இயக்குனர் ஆறுமுக குமார். ஆள் பார்த்து பழகாமல், எல்லோரையும் சமமாக நினைத்து பழகக் கூடியவர். அவர் முதல் படத்திலேயே தயாரித்து இயக்கியிருக்கிறார். தன் திறமை மேல் நம்பிக்கை வைத்து உழைக்கும் ஹீரோ தான் கௌதம் கார்த்திக்...
கிராமங்களை தத்து எடுத்து, அனைத்து வித வசதிகளையும் செய்து கொடுக்க நடிகர் கமல்ஹாசன் புதிய திட்டம் ஒன்றை வகுத்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வார இதழில் எழுதி வரும் கட்டுரையில் கூறி இருப்பதாவது:-
‘மக்களைக் களத்தில் சந்திக்க, வரும் பிப்ரவரி 21-ந்தேதி பயணம் கிளம்புகிறேன்’ என்று சொல்லியிருந்தேன். இந்தப் பயணத் திட்டத்துக்கு ஒரு பெயர் வைத்துள்ளோம். ‘நாளை நமதே’. ஆம், அந்தப் பயணத்திட்டத்துக்கு நாங்கள் வைத்துள்ள பெயர் இது தான்.
அவர் ஞாபகம் வந்தாலும் பரவாயில்லை, அவை நல்ல ஞாபகங்கள் என்பதால் இந்தப் பெயரை வைத்துள்ளோம்.
நான் ஏதோ சக்கரத்தைப் புதிதாக வடிவமைத்தவன் போல் பேசுவதாக நினைக்க வேண்டாம். ஏற்கெனவே அதைக் கண்டுபிடித்துச் சுழலவிட்டுக் கொண்டிருந்தவர்களிடம் போய்ப் பாடம் கற்றேன்.
லயன்ஸ் கிளப், ரோட்டரி கிளப்புகளுக்குச் சென்று அவர்களின் நற்பணிகள் என்னென்ன என்று தெரிந்து கொண்டு அதை அப்படியே நகலெடு...
அறிமுக இயக்குனர் எஸ்.எஸ்.சூர்யா இயக்கத்தில் விக்ரம் பிரபு, நிக்கி கல்ராணி, பிந்து மாதவி, சூரி, ரவி மரியா, சதீஷ், ஆனந்தராஜ், நிழல்கள் ரவி, இமான் அண்ணாச்சி, வையாபுரி முதலானோர் நடிக்கும் படம் ‘பக்கா’. சத்யா இசை அமைக்கும் இந்த படத்தின் ஆடியோ வெளியிட்டு விழா சென்னையில் நடைபெற்றது.
‘பக்கா’ படம் குறித்து இயக்குனர் எஸ்.எஸ்.சூர்யா பேசும்போது, ‘‘இதுவரை வெளிவந்த படங்களில் ஒரு காட்சியிலோ அல்லது ஒரு பாடல் காட்சியிலோ தான் திருவிழாவை பார்த்திருப்பீர்கள். ஆனால் ‘பக்கா’ படத்தை முழுக்க முழுக்க திருவிழா பின்னணியில் எடுக்கப்பட்டுள்ளது. ‘பக்கா’ ஜாலியான ஒரு காமெடி படமாக இருக்கும்! இந்த கதையை படமாக்க நான் சந்திக்காத தயாரிப்பாளர்களே இல்லை! ஆனால் நான் தேடி சென்று சந்திக்காத ஒரு தயாரிப்பாளரான சிவகுமார் சார் என்னை கூப்பிட்டு இந்த கதையை படமாக்க முன் வந்தார். அவருக்கு என் வாழ்நாள் முழுக்க நன்றி கடன் பட்டுள்ளேன்...
ரஞ்சித் இயக்கத்தில் மிக பிரமாண்டமான செலவில் பெரும் எதிர்பார்ப்பில் உருவாகிவரும் காலா படப்பிடிப்பு முடிந்து அடுத்தகட்ட பணிகள் நடந்து வருகிறது.
அதன் ஒரு பகுதியாக டப்பிங் பணிகளில் ரஜினிகாந்த் பிசியாகியிருக்கிறார். இதற்காக டப்பிக் தியேட்டருக்கு வந்த ரஜினியை டப்பிங் தியேட்டர் நிர்வாகி கல்யாணம் வரவேற்றார். அவரோடு காலா இயக்குனர் ரஞ்சித் உடனிருந்தார்....
கமர்ஷியல் படங்களை நூறு சதவீதம் நகைச்சுவை கியாரண்டியுடன் தரக்கூடியவர் தான் இயக்குனர் பூபதி பாண்டியன். இவர் வசனங்கள் எழுதிய வின்னர், கிரி ஆகிய படங்களின் காமெடி காட்சிகள் தான் இப்போதும் டாப் டென் காமெடிகளில் இடம்பிடித்திருக்கின்றன. அதேபோல இவர் இயக்கிய தேவதையையை கண்டேன், திருவிளையாடல் ஆரம்பம், மலைக்கோட்டை உள்ளிட்ட படங்களில் உணர்வுப்பூர்வமான காட்சிகளுடன் நகைச்சுவைக்கும் சரிவிகித முக்கியத்துவம் கொடுத்திருந்தார்.
அப்படிப்பட்டவரின் இயக்கத்தில் விமல் - ஆனந்தி நடிப்பில் உருவாகியுள்ள ‘மன்னர் வகையறா’ படம், வரும் ஜன - 26 ஆம் தேதி வெளியாக இருக்கிறது. பிரபு, சரண்யா பொன்வண்ணன், ரோபோ சங்கர், சாந்தினி, கார்த்திக் குமார், வம்சி கிருஷ்ணா, யோகிபாபு உள்ளிட்ட முக்கிய நட்சத்திர பட்டாளத்துடன் கமர்ஷியல் அம்சங்களுடன் உருவாகியுள்ள இந்தப்படம் குறித்த சில சுவாரஸ்யமான தகவல்களை பகிர்ந்துகொண்டுள்ளார் இயக்குனர் பூபதி பா...