வியாழக்கிழமை, ஜூலை 23
Shadow

நடிகர்கள்

சிவகார்த்திகேயன் வெளியிட்ட விமலின் ‘களவாணி-2’ பட அறிவிப்பு..!

சிவகார்த்திகேயன் வெளியிட்ட விமலின் ‘களவாணி-2’ பட அறிவிப்பு..!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
2010-ஆம் ஆண்டு வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற படம் ‘களவாணி’. சற்குணம் இயக்கத்தில் உருவான இந்த படத்தில் விமல் நாயகனாக நடித்திருந்தார். பிக்பாஸ் மூலம் பிரபலமாகி இருக்கும் நடிகை ஓவியா இந்த படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. நடிகர் விமலின் திரையுலக வாழ்க்கையை புதிய பாதைக்கு திருப்பிய ‘களவாணி’ படத்தின் இரண்டாவது பாகம் உருவாக இருப்பதாக தகவல் வெளியாகிய நிலையில், தற்போது இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. நடிகர் சிவகார்த்திகேயன் அவரது டுவிட்டர் பக்கத்தில் ‘களவாணி-2’ படத்தின் அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார். `கே-2' என தலைப்பு வைக்கப்பட்டிருக்கும் இந்த படத்திலும் விமல் - ஓவியா இணைந்து நடிக்கின்றனர். பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு ஓவியா காஞ்சனா-3 படத்தில் நடித்து வருகிறார். அதனைத் தொடர்ந்த தற்போது ‘களவாணி-2’ படத்தில் நடித்து வர...
ரஜினியின் பாபா சின்னத்தில் தொடரும் மாற்றங்கள்… தாமரை போனது இப்போது மாயமான நாகம்..!

ரஜினியின் பாபா சின்னத்தில் தொடரும் மாற்றங்கள்… தாமரை போனது இப்போது மாயமான நாகம்..!

CINI NEWS, HOME SLIDER, NEWS, politics, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகர்கள்
நடிகர் ரஜினிகாந்த் அரசியல் கட்சி தொடங்குவதில் தீவிர கவனம் செலுத்தி வருகிறார். ரஜினி ரசிகர் மன்றம் ரஜினி மக்கள் மன்றமாக மாற்றப்பட்டுள்ளது. இதில் உறுப்பினர்கள் சேர்க்கை தீவிரமாக நடந்து வருகிறது. ஆன்லைன் மூலமாகவும் உறுப்பினர் சேர்க்கை நடைபெறுகிறது. முதல்கட்டமாக மாநில அளவில் ரஜினி மக்கள் மன்றத்துக்கு நிர்வாகிகள் நியமிக்கப்பட்டு வருகிறார்கள். முதலில் வேலூர் மாவட்ட மக்கள் மன்ற நிர்வாகிகள் நியமிக்கப்பட்டனர். நேற்று நெல்லை மாவட்ட ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். ரஜினி மக்கள் மன்றம் மூலம் அதிக எண்ணிக்கையில் பெண்களை உறுப்பினர்களாக சேர்க்க வேண்டும் என்று ரஜினி உத்தரவிட்டுள்ளார். எனவே பெண்களை உறுப்பினர்களாக சேர்க்க ரஜினி ரசிகர்கள் கூடுதல் கவனம் செலுத்தி வருகிறார்கள். மகளிர் அணி அமைக்கும் ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. இளைஞர்களுக்கும் முன்னுரிமை கொடுக்கப்படுகிறது. விவசாயிகள் ...
400 க்கும் அதிகமான தியேட்டர்களில் வெளியாகும் ‘ஒரு நல்லநாள் பாத்து சொல்றேன்’!

400 க்கும் அதிகமான தியேட்டர்களில் வெளியாகும் ‘ஒரு நல்லநாள் பாத்து சொல்றேன்’!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
தொடர்ந்து வெற்றிப் படங்களை கொடுத்து வரும் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியாகும் படம் என்றாலே ரசிகர்களிடம் மிகப்பெரிய எதிர்ப்பார்ப்பு ஏற்படுகிறது. அதிலும் விஜய் சேதுபதி, கெளதம் கார்த்தில் நடிப்பில் உருவாகியுள்ள ‘ஒரு நல்லநாள் பாத்து சொல்றேன்’ படம் வித்தியாசமான கான்சப்ட் கொண்ட படம் என்பதால், அப்படம் மீது ரசிகர்கள் மட்டும் இன்றி திரையுலகினரும் ஆர்வமாக இருக்கிறார்கள். விஜய் சேதுபதி முதல் முறையாக ஒரே படத்தில் பலவிதமான கெட்டப்புகளில் தோன்றும் ‘ஒரு நல்லநாள் பாத்து சொல்றேன்’ படம் தமிழகத்தில் மட்டும் 400 க்கும் மேற்பட்ட தியேட்டர்களில் வெளியாகிறது என்பது குறிப்பிடத்தக்கது. தரமான படங்களை வெளியிட்டு வரும் கிளாப்போர்ட் தயாரிப்பு நிறுவனம் இப்படத்தின் தமிழக வெளியீட்டு உரிமையை பெற்றுள்ளது. இது குறித்து இந்நிறுவனத்தின் உரிமையாளர் வி.சத்யமூர்த்தி கூறுகையில், “இது வரை நான்   'ஒரு நல்லநாள் பாத்து சொ...
ஏஆர் முருகதாஸ் வெளியிட்ட ஜருகண்டி பர்ஸ்ட் லுக்..!

ஏஆர் முருகதாஸ் வெளியிட்ட ஜருகண்டி பர்ஸ்ட் லுக்..!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
நடிகர் ஜெய் நடிப்பில் இயக்குனர் சுந்தர் சி இயக்கத்தில் 'கலகலப்பு 2' படம் பிப்ரவரி 9-ஆம் தேதி வெளியாகவுள்ளது. இதனை தொடர்ந்து இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிகர் ஜெய் நடிப்பில் 'பார்ட்டி' படம் பிப்ரவரி 9-ஆம் தேதி வெளியாகவுள்ளது. இதனை அடுத்து நடிகர் ஜெய் 'எத்தன்' படத்தை இயக்கிய இயக்குனர் சுரேஷ் இயக்கத்தில் 'நீயா 2' என்ற படத்திலும், அறிமுக இயக்குனர்களான ஷியாம் மற்றும் பிரவின் ஆகியோர் இணைந்து இயக்கவுள்ள 'மாங்கல்யம் தந்துனானே னா' என்ற படத்திலும், இயக்குனர் பிச்சுமணி இயக்கும் 'ஜருகண்டி' படத்திலும் தற்போது பிசியாக நடித்து வருகிறார். இந்த படத்தில் இவருக்கு ஜோடியாக நடிகை மற்றும் மாடல் அழகியான ரெபா மோனிகா ஜான் நடித்து வருகிறார். இவர் இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிகர் ஜெய் மற்றும் பல திரை வட்டாரங்கள் நடிப்பில் உருவாகியுள்ள 'பார்ட்டி' படத்தில் கீர்த்தி என்ற காதாபாத்திரத்தில் இணைந்துள...
பாலாவின் நாச்சியார் படத்தோடு மோதும் கிருஷ்ணவின் வீரா..!

பாலாவின் நாச்சியார் படத்தோடு மோதும் கிருஷ்ணவின் வீரா..!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
இயக்குனர் ராஜா ராமன் இயக்கத்தில் நடிகர் கிருஷ்ணா நாயகனாக நடித்துள்ள படம் 'வீரா'. இந்த படத்தில் நடிகர் கருணாகரன் நண்பன் கதாபத்திரத்தில் நடித்துள்ளார். இந்த படத்திற்கு பாக்கியம் சங்கர் கதை அமைத்துள்ளார். இந்த படத்தில் நடிகர் கிருஷ்ணாவிற்கு ஜோடியாக நடிகை ஐஸ்வர்யா மேனன் இணைந்துள்ளார். இவர் முன்னதாக தமிழ், கன்னடா, மலையாளம் போன்ற மொழிகளில் ஐந்து படங்களில் நடித்துள்ளார். இவர் தமிழ் திரையுலகில் அறிமுகமான முதல் படம் 'தீயா வேல செய்யணும் குமாரு'. இந்த படத்தில் நாயகி ஹன்சிகாவுக்கு தோழி கதாபத்திரத்தில் நடித்திருந்தார் இதனை தொடர்ந்து இவர் நாயகியாக அறிமுகமாகும் படம் 'வீரா'. இந்த படம் டிசம்பர் மாதம் வெளியாவதாக படக்குழு அறிவித்தது. ஆனால் இந்த படம் வெளியாகும் நாளில் கிட்டத்தட்ட 8 படங்கள் வெளியாக இருந்தது. இதனால் திரையரங்குகள் கிடைக்காமல் தள்ளி போனது. இந்நிலையில் தற்போது இந்த படத்தின் வெளியீடு தேதியை நட...
மார்ச் கடைசிக்கு போன  விஷாலின் இரும்புத்திரை ரிலீஸ்..!

மார்ச் கடைசிக்கு போன விஷாலின் இரும்புத்திரை ரிலீஸ்..!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
விஷால் நடிப்பில் அடுத்ததாக வெளியாக இருக்கும் படம் `இரும்புத்திரை'. பி.எஸ்.மித்ரன் இயக்கியிருக்கும் இந்த படத்தில் அர்ஜூன் வில்லனாக நடித்திருக்கிறார். விஷால் ஜோடியாக சமந்தா நடித்திருக்கிறார். டெல்லி கணேஷ், கோபி, ரோபோ ஷங்கர், வின்சென்ட் அசோகன் உள்ளிட்ட பலரும் முக்கிய கதபாத்திரத்தில் நடித்திருக்கும் இந்த படம் சமூகத்தின் முக்கிய பிரச்னை ஒன்றை மையப்படுத்தி உருவாகி இருப்பதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். விஷால் அவரது சொந்த தயாரிப்பு நிறுவனமான விஷால் பிலிம் பேக்டரி மூலம் தயாரித்திருக்கும் இந்த படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்திருக்கிறார். தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் உருவாகி இருக்கும் இந்த படத்தின் ரிலீஸ் தேதி தொடர்ந்து தள்ளிப்போகி வரும் நிலையில், படம் வருகிற மார்ச் 29-ஆம் தேதி ரிலீசாகும் என்று விஷால் அவரது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். ஏற்கனவே பொங்கலுக்கு ரிலீஸ் ஆகும்...
ஆர்கானிக் திருடன் – விஜய்சேதுபதி விளக்கம்!

ஆர்கானிக் திருடன் – விஜய்சேதுபதி விளக்கம்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
அறிமுக இயக்குனர் ஆறுமுக குமார் இயக்கத்தில் விஜய்சேதுபதி, கௌதம் கார்த்திக், காயத்ரி, நிகாரிகா முதலானோர் நடித்துள்ள படம் ‘ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன்’. இந்த படம் வருகிற 2-ஆம் தேதி வெளியாகிறது. இதனையொட்டி இப்படத்தின் புரொமோஷன் வேலைகள் விறுவிறுப்பாக நடந்து வர, இந்த பட விளம்பரங்களில் ‘ORGANIC THIEF’ என்ற வார்த்தையை மையப்படுத்தியுள்ளார்கள். இந்நிலையில் ‘ORGANIC THIEF’ என்றால் என்ன என்பதற்கு விஜய்சேதுபதி விளக்கம் அளித்துள்ளார். ‘ஒரு திருடன் திருடும்போது அந்த திருட்டு, யாரது மனதையும் புண்படுத்தவோ வேதனைப்படுத்துவது மாதிரியோ இருக்கக் கூடாது, அப்படி திருடுபவர் தான் ஆர்கானிக் திருடன்’ என்று விளக்கம் தந்துள்ளார் விஜய்சேதுபதி! ஸ்ரீசரவணன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த படத்திற்கு ஜஸ்டின் பிரபாகர் இசை அமைத்துள்ளார்....
மே மாதம் தள்ளிப்போகிறது ரஜினியின் ‘2.0’?

மே மாதம் தள்ளிப்போகிறது ரஜினியின் ‘2.0’?

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
ரஜினிகாந்த் நடித்து 2010-ல் வெளியாகி வெற்றிகரமாக ஓடிய ‘எந்திரன்’ படத்தின் இரண்டாம் பாகம் ‘2.0’ என்ற பெயரில் தயாராகியுள்ளது. இதில் ரஜினிகாந்த், எமிஜாக்சன் ஜோடியாக நடித்துள்ளனர். இந்தி நடிகர் அக்‌ஷய்குமார் வில்லனாக வருகிறார். ஷங்கர் டைரக்டு செய்துள்ளார். ரூ.450 கோடி செலவில் இந்த படம் உருவாகி உள்ளது. இந்தியாவில் வேறு எந்த படமும் இவ்வளவு பெரிய செலவில் எடுக்கப்பட்டது இல்லை. தமிழ், இந்தி, தெலுங்கு ஆகிய மூன்று மொழிகளில்  ரிலீசாகிறது. இதன் படப்பிடிப்பு இரண்டு வருடங்களாக நடந்து சில மாதங்களுக்கு முன்பு முடிந்தது. கடந்த அக்டோபர் மாதம் துபாயில் பிரமாண்ட விழா நடத்தி பாடல்களை வெளியிட்டனர். படம் எப்படி உருவானது என்று 1 நிமிடம் 48 நொடிகள் ஓடக்கூடிய தயாரிப்பு வீடியோவும் இணையதளங்களில் பரவி படத்துக்கு பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. இந்த வீடியோவில் அரங்குகள் அமைக்கப்பட்ட விதம், ரஜினிகாந்த், அக்‌ஷய்க...
நடிகர்கள் ரஜினி-கமலுக்கு போட்டியாக உதயநிதியை களமிறக்கும் திமுக..!

நடிகர்கள் ரஜினி-கமலுக்கு போட்டியாக உதயநிதியை களமிறக்கும் திமுக..!

CINI NEWS, HOME SLIDER, NEWS, politics, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகர்கள்
சென்னை மாநகராட்சி மேயர் பதவிக்கு உதயநிதி ஸ்டாலின் போட்டியிட உள்ளார் என்ற தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆனால் இது அதிகாரப்பூர்வ அறிவிக்கப்படவில்லை என்று முன்னாள் மேயர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார். அரசியலுக்கு வர விரும்புகிறேன், கட்சி வேலையில் ஈடுபடுகிறேன் அதை பொறுத்து வாய்ப்பு கொடுங்கள் என்று கேட்டிருந்த உதயநிதி ஸ்டாலின்  முதன் முதலாக திமுகவின் போராட்டத்தில் பங்கேற்றுள்ளார். சென்னையை அடுத்த தாம்பரத்தில் பேருந்து கட்டண உயர்வை கண்டித்து நடைபெற்ற போராட்டத்தில் உதயநிதி ஸ்டாலின் தொண்டர்களுடன் தொண்டர்களாக கட்சிக் கொடியை கையில் ஏந்தியவாறு அரசுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினார். அரசியல் வருகை குறித்த அறிவிப்பை வெளியிட்ட கையோடு போராட்ட களத்தில் இணைந்துள்ளது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. நடிகர்கள் ரஜினி, கமல் இருவரும் அரசியல் அறிவிப்பை வெளியிட்ட நிலையில் திமுகவும் நடிகராக உள்ள உதய ...