உலக யோகா தினம் இன்று கொண்டாடப்பட்டது.
சென்னையில் நடந்த யோகா நிகழ்ச்சியில் அமைச்சர் செங்கோட்டையன், பாஜக தலைவர் தமிழிசை சவுந்தர்ராஜன், நடிகை தன்ஷிகா உடபட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
கண்ட நாள் முதல் படத்தின் மூலமாக தமிழில் அறிமுகமானவர் ரெஜினா கசான்ட்ரா. கேடி பில்லா கில்லாடி ரங்கா படத்தில் நடித்து பிரபலமானார். சரவணன் இருக்க பயமேன், மிஸ்டர் சந்திரமவுலி, சிலுக்குவார்பட்டி சிங்கம் ஆகிய படங்களிலும் நடித்துள்ளார். வெங்கட் பிரபுவின் பார்ட்டி படத்தில் நடித்து முடித்துள்ளார். தற்போது சிம்புதேவன் இயக்கும் கசட தபற படத்தில் நடித்து வருகிறார்.
தெலுங்கிலும் முன்னணி நடிகையாக இருக்கிறார். ‘ஏக் லட்கி கோ தேக்கா’ என்ற படம் மூலம் இந்தியிலும் அறிமுகமாகி உள்ளார். இந்த படத்தில் ஓரின சேர்க்கையாளர் கதாபாத்திரத்தில் துணிச்சலாக நடித்து பரபரப்பை ஏற்படுத்தினார். ரெஜினாவுக்கு தற்போது 28 வயது ஆகிறது.
நிலையில் ரெஜினாவுக்கு நிச்சயதார்த்தம் முடிந்துள்ளதாக தெலுங்கு பட உலகில் தகவல் பரவி உள்ளது. குடும்பத்தினர் மட்டுமே இதில் கலந்துகொண்டதாகவும், மிகவும் ரகசியமாக நிச்சயதார்த்தத்தை நடத...
நடிகைக்கு துருக்கியில் தொழிலதிபருடன் டும் டும்..!
பாராளுமன்ற தேர்தலில் பசிராத் தொகுதியில் திரிணாமுல் காங்கிரஸ் சார்பில் நிறுத்தப்பட்ட வங்காள நடிகை நுஸ்ரத் ஜஹான், மூன்றரை லட்சம் ஓட்டு வித்தியாசத்தில் அமோக வெற்றி பெற்றார். அவருக்கு வயது 29. பிரசாரத்தின்போது, இவரைக் காண பெரும் கூட்டம் கூடியது.
முதல்முறை எம்.பி.யாகி உள்ள நுஸ்ரத் ஜஹானுக்கு துருக்கி நாட்டில் உள்ள போட்ரம் நகரில் திருமணம் நடைபெற்றது. மணமகன் பிரபல தொழிலதிபர் நிகில் ஜெயின்.
நுஸ்ரத் ஜஹானின் பெற்றோர், சகோதரி மற்றும் இதர நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள், நுஸ்ரத் ஜஹானின் நெருங்கிய தோழியும், அவரைப்போல் எம்.பி. ஆகி உள்ள வங்காள நடிகையுமான மிமி சக்ரவர்த்தியும் மட்டுமே கலந்து கொண்டனர். திருமணத்தில் மணமகனுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை நுஸ்ரத் ஜஹான் தனது சமூக வலைத்தள பக்கத்தில் வெளியிட்டுள்ளார்...
மலைப்பாம்புடன் மடோனா செபஸ்டியன் சாகசம்..!
பிரேமம்’ படத்தின் மூலம் மலையாள சினிமாவில் அறிமுகமானவர் நடிகை மடோனா செபஸ்டியன். அப்படத்தில் கிடைத்த நல்ல வரவேற்பையடுத்து தமிழ் சினிமாவில் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான ‘காதலும் கடந்து போகும்’ படத்தின் மூலம் அறிமுகமானார்.
அதையடுதது அவர் தமிழில் ‘கவண்’, ‘பவர் பாண்டி’ ஆகிய படங்களில் நடித்தார்.
துணிச்சல் மிக்க நடிகை என பேர் பெற்ற மடோனா மற்ற நடிகைகள் போல கவர்ச்சிபடங்களை பதிவிடாமல் அதிரடி படத்தை பதிவிட்டு இருக்கிறார்.
சுற்றுலா போன இடத்தில் மலைப்பாம்பை பயமில்லாமல் தன் மீது போட்டுக் கொண்டு மடோனா சாகசம் செய்த படங்கள் இணையத்தில் வைரல் ஆகியுள்ளது....
நடிகர் சங்க தேர்தலில் விஷாலை வீழ்த்த வீடுவீடாக பணப்பட்டுவாடா களத்தில் நேரடியாக குதித்த அதிமுக - ஒரு அதிர்ச்சி ரிப்போர்ட்
நாடக நடிகர்களின் வீடு வீடாக போய் ஓட்டு கேட்கும் அதிமுக எம்.எல்.ஏ, முன்னாள் மேயர் - இது சேலம் கலாட்டா
நடிகர் சங்க தேர்தல் பொது தேர்தலை விட பல திருப்பங்கள், திரை மறைவு வேலைகளில் நொடிக்கு நொடி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
வெறும் 3 ஆயிரத்து சொச்சம் வாக்காளர்கள் இருக்கும் ஒரு அமைப்பு. அதிலும் ஆயிரத்து சொச்சம் உறுப்பினர்கள் மட்டுமே கடந்த முறை வாக்களித்தார்கள்.
இதைவிட ஆயிரக்கணக்கான உறுப்பினர்கள் கொண்ட எந்த சங்கத்திலும் அதன் தேர்தல் நேரங்களில் இத்தகைய பரபரப்பு ஏற்படுவதில்லை.
இதற்கு காரணம் தமிழக அரசியலையும் திரைத்துறையையும் குறிப்பாக நடிகர்களையும் பிரிக்க முடியாது.
சரி விஷயத்திற்கு வருவோம்...
நடிகர் சங்கத்தில் ராதாரவி-சரத்குமார் கூட்டணி பதவியில் இருந்த போது ...
பகலில் ஹோட்டல் பணிப்பெண் இரவில் படுபயங்கர கொலைகாரி ஸ்ருதிஹாசனின் புதிய அவதாரம்..!
கமல்ஹாசனின் மகள் ஸ்ருதிஹாசன் இப்போது விஜய் சேதுபதியுடன் நடித்து வருகிறார்.
இந்நிலையில் ஹாலிவுட் சீரிஸ் ஒன்றில் முக்கிய ரோலில் நடிக்க ஸ்ருதி ஹாசன் தேர்வாகியுள்ளார். உலகப்புகழ் பெற்ற Jason Bourne universeன் Treadstone சீரிஸில் தான் ஸ்ருதி நடிக்கிறார்.
டெல்லியில் ஒரு ஹோட்டலில் வேலை செய்துகொண்டே மற்ற நேரங்களில் கொலை செய்பவராக ஸ்ருதி ஹாசன் நடிக்கிறார்.
ஹங்கேரியின் புத்தாபெஸ்ட்டில் நடக்கவுள்ள ஷூட்டிங்கில் அவர் விரைவில் கலந்து கொள்ளவுள்ளார்.
ஹாலிவுட் படங்களை சீரியல்களை நாம் பார்த்து வியந்த காலம் போய் இப்போது ஹாலிவுட் படங்களில் சீரியஸ்களில் நமது நடிகர்கள், நடிகைகள் நடிப்பது தமிழ் திரைத்துறைக்கு கிடைத்த மரியாதை என்றே சொல்லலாம்.
...
குட்டைப் பாவாடை காற்றில் பறக்கும் மர்லின் மன்றோ சிலை மாயம்...!
ஹாலிவுட்டின் பிரபல நடிகையான மர்லின் மன்றோவின் சிலை அடையாளம் தெரியாத மர்ம நபர்களால் திருடப்பட்ட சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
1950களில் ஹாலிவுட் சினிமாவின் உச்சநட்சத்திரமாக வலம் வந்தவர் மர்லின் மன்றோ. அப்போதைய அமெரிக்க அதிபரான ஜான் எஃப் கென்னடியும், இவரும் காதலித்ததாக கூட சொல்லப்படுவது உண்டு.
இவர் நடித்து 1955 ல் வெளியான படம் “செவன் இயர்ஸ் இட்ச்”. அதில் உள்ள இவரின் பிரபலமாக இருந்த காற்றில் குட்டைப் பாவாடை பறக்கும் பிரபலமான போஸ் ஒன்றை சிலையாக வடித்தார் ஒரு கலைஞர். ஹாலிவுட் படப்பிடிப்பு பகுதிகளில் அந்த சிலை வைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை அந்த சிலையை மீது மர்ம மனிதர் யாரோ நிற்பதாக போலீஸாருக்கு புகார் வந்துள்ளது. உடனே போலீஸார அங்கு சென்று பார்த்திருக்கிறார்கள்.
...
மெழுகு சிலையாக பிரியங்கா சோப்ரா..!
அமெரிக்காவில் நியூயார்க் நகரில் உள்ள பிரபலமான மெழுகு சிலை அருங்காட்சியகத்தில் பிரியங்கா சோப்ரா மெழுகு சிலை வைக்கப்பட்டுள்ளது.
டில்லி, சிங்கப்பூர் போன்ற இடங்களில் இந்த மேடம் டு சாட்ஸ் மியூசியம் உள்ளது.
பிரியங்கா சோப்ரா யுனிசெப் நல்லெண்ணத் தூதராகவும் இருக்கிறார்.
இந்த அருங்காட்சியகத்தில் இந்திய திரைப் பிரபலங்கள் அமிதாப், ஷாருக்கான் போன்றோரின் தத்ரூபமான மெழுகு சிலைகள் உள்ளன. சன்னி லியோன் மெழுகு சிலையும் உள்ளது....
கவிஞர் வைரமுத்து மீதான பாலியல் குற்றச்சாட்டு எழுப்பியதும் திரையுலகில் சர்ச்சை பெண்ணாக சித்தரிக்கபட்டவர் சின்மயி.
சிறந்த பாடகி அதே போல சிறந்த பின்னணி குரல் கலைஞர் என்பதால் பல முன்னணி ஹீரோயின் பலருக்கு டப்பிங் குரல் கொடுத்து வந்தார்.
வைரமுத்து சர்ச்சைக்கு பின் டப்பிங் கலைஞர்கள் சங்கத்தில் இருந்து சின்மயி திடீரென நீக்கப்பட்டார்.
இதனால் அவரை யாரும் டப்பிங் பேசவோ, பாடவோ அழைக்காமல் இருந்தார்கள். இந்த சர்ச்சையில் சிக்குவதற்கு முன் 96 படத்தில் திரிஷாவுக்கு டப்பிங் பேசினார்.
இதுகுறித்து சின்மயி கூறும்போது, “டப்பிங் கலைஞர்கள் சங்கத்தில் இருந்து எந்த முன்னறிவிப்பும் இல்லாமல் என்னை நீக்கிவிட்டனர். அதனால் தமிழ் படங்களுக்கு பின்னணி குரல் கொடுக்க முடியாது. சங்கத்துக்கு இரண்டு ஆண்டுகளாக சந்தா கட்டவில்லை என்றும் அதனால் நீக்கி விட்டதாகவும் காரணம் சொல்கிறார்கள். சந்தா கட்டாதது குறித...
நடிகர் பிரபல தயாரிப்பாளர், பைனான்சியர் அருண் பாண்டியன். இவரது மகள் கீர்த்தி பாண்டியன். இவர் தும்பா என்ற படத்தின் மூலம் ஹீரோயின் ஆக அறிமுகம் ஆகிறார்.
இந்த படத்தின் விழாவில் கீர்த்தி பாண்டியன் பேசும் போது ரொம்பவே உணர்ச்சி வசப்பட்டு ஒரு கட்டத்தில் அடக்க முடியாமல் கண்ணீர் விட்டு கதறி அழ அரங்கம் நிசப்தமானது.
வழக்கமாக நடிப்புக்காக மேடையில் அழுகிற பிரபலங்களுக்கு மத்தியில் ஒரு பிரபலத்தின் வாரீசாக இருந்தும் தான் அவமதிப்பு செய்யப்பட்டதை பகிரங்கமாக சொல்லி உணர்ச்சிகளை கீர்த்தி பாண்டியன் வெளிப்படுத்தியது குறிப்பிடத்தக்கது.
அவர் பேசும் போது ""எனக்கு வாய்ப்புத் தருவதற்காக பலர் வந்தனர்.பேசினார்கள்.நானும் பலரிடம் வாய்ப்புக் கேட்டுச்சென்றேன்.
ஆனால் அவர்களில் பலர் என் தோற்றத்தைக் கண்டு இந்த உருவத்தை எல்லாம் எவன் பார்ப்பான்..யாரும் தியேட்டருக்கு வரமாட்டார்கள் என்று இழிவாக பேசினார்கள்...