வெள்ளிக்கிழமை, ஜூன் 12
Shadow

நடிகைகள்

16 கோடியில் மும்பையில் 14வது மாடியில் வீடு வாங்கிய தமன்னா..!

16 கோடியில் மும்பையில் 14வது மாடியில் வீடு வாங்கிய தமன்னா..!

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகைகள்
  மும்பை அந்தேரியில் உள்ள லோகண்ட்வாலா அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வரும் தம்மன்னா, மும்பை வெர்சோ வாவில் பிரபல பில்டர் சமீர் போஜ்வானியிடம் ரூ.16 கோடிக்கு புதிய வீடு ஒன்றை வாங்கியுள்ளார். ’பே வியூ’ என்ற பெயர் கொண்ட, 22 மாடிகளை கொண்ட இந்த அடுக்குமாடி குடியிருப்பில் 14 வது தளத்தை வாங்கி இருக்கிறார் தமன்னா. இந்த வீட்டின் ஒரு சதுர அடி விலை ரூ.80,778. இப்பகுதியில் விற்கப்படும் விலையை விட இரு மடங்கு அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது. தரகர்களின் கூற்றுப்படி இந்த கட்டிடத்திலிருந்து 500 மீட்டர் தொலைவில் வர இருக்கும் புதிய கட்டிடத்திற்கு சதுர அடி ரூ.35 ஆயிரம் முதல் ரூ.40 ஆயிரம் வரை விற்பனை செய்யப்படுகிறது. அப்படியிருக்க தமன்னா 2,055 சதுர அடி பிளாட்டிற்கு ரூ.16 கோடி தமன்னா செலுத்தியதாக கூறப்படுகிறது. இந்த புதிய வீட்டில் தமன்னா மற்றும் அவரது பாட்டி என இருவர் மட்டுமே குடியேறவிருப்பத...
பள்ளிகளில் வாத்தியாரே இல்லாமல் நீட் தேர்ச்சியை பற்றி பேசலாமா – மத்திய மாநில அரசுகளை சாடிய ஜோ..!

பள்ளிகளில் வாத்தியாரே இல்லாமல் நீட் தேர்ச்சியை பற்றி பேசலாமா – மத்திய மாநில அரசுகளை சாடிய ஜோ..!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகைகள்
  கிராமப்புற பள்ளிகளில் உள்ள ஆசிரியர் பற்றாக்குறையை போக்காமல் "நீட்" தேர்ச்சி விகிதம் குறைகிறது எனக்கூறுவது தவறு - மத்திய,மாநில அரசுகளை சாடிய ஜோதிகா ராட்சசி பட பத்திரிகையாளர் சந்திப்பில் ஜோதிகா ரொம்பவே ஆவேசமாக பேசினார். அப்போது அவர் கூறியது: அகரம் பவுண்டேசன் சார்பில் ஆண்டுதோறும் பல கிராமப்புற மாணவர்களை சந்திக்கிறேன். அவர்களில் பலர் சொல்வது எங்கள் பள்ளியில் பல நேரங்களில் ஆசிரியர்களே இருப்பதில்லை. பல பள்ளிகளில் ஆசிரியர்களே இல்லாமல் இருக்கிறது என்று, முதலில் அரசு பள்ளிக்கூடங்களில் உள்ள ஆசிரியர் பற்றாக்குறையை சரி செய்யாமல் நீட் தேர்வில் தேர்ச்சி விகிதம் குறைகிறது என்று சொன்னால் எப்படி. அதோடு இல்லாமல் நான் டிவிட்டரில் சில விஷயங்களை பார்த்தேன். நான் டிவிட்டரில் இல்லை ஆனால் என் கணவர் டிவிட்டர் மூலமாக ராட்சசி படம் பற்றி கருத்துக்களில் பல இது பள்ளிக்கூடம் போல உள்ளது, சாட்டை ப...
தேர்தலில் ஓட்டு போட வராத நயன்தாரா மீது கடுப்பான கருணாஸ்…!

தேர்தலில் ஓட்டு போட வராத நயன்தாரா மீது கடுப்பான கருணாஸ்…!

CINI NEWS, HOME SLIDER, NEWS, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகர்கள், நடிகைகள்
  தேர்தலில் ஓட்டு போட வராத நயன்தாரா மீது கடுப்பான கருணாஸ்...! நடிகர் சங்க தேர்தலில் பாக்யராஜ் தலைமையிலான சுவாமி சங்கரதாஸ் அணியினரும், நாசர் தலைமையிலான பாண்டவர் அணியினரும் போட்டியிட்டனர். பல்வேறு சிரமங்களுக்கிடையே நடைபெற்ற இந்த தேர்தலில் ஏராளமான நடிக, நடிகையரும் வாக்களித்தனர். ஆனால் இதில் நயன்தாரா, த்ரிஷா போன்ற நடிகைகள் வாக்களிக்க வரவில்லை. நயன்தாராவை பொதுவெளியில் ராதாரவி கேவலமாக பேசியதாக நடிகர் சங்கத்தில் நயன்தாரா புகார் அளித்தபோது உடனடி நடவடிக்கை எடுத்தார்கள். ராதாரவிக்கு கண்டன நோட்டீஸ் அனுப்பினார்கள். விஷால் தயாரிப்பாளர் சங்கத்திலும் இருந்ததால் தயாரிப்பாளர்கள் சங்கத்திலிருந்தும் அவருக்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டது. இதை தாண்டி ராதாரவியை அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்தே திமுக நீக்கியதோடு, இதுபோன்ற அநாகரீக பேச்சில் ஈடுபட்டதற்காக ராதாரவியை கண்டித்தது. நயன்தாரா அளித...
திருமண உடையில் படுகவர்ச்சியாக இலியானா..!

திருமண உடையில் படுகவர்ச்சியாக இலியானா..!

CINI NEWS, HOME SLIDER, Photos, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகைகள்
  திருமண உடையில் படுகவர்ச்சியாக இலியானா..! வழக்கமாக எல்லா நடிகைகளைப் போல இலியானாவும் அடிக்கடி சமூக வலைதளங்களில் கவர்ச்சி படங்களை பதிவிடுவார்.   அந்த வகையில் இலியானா இப்போது வெட்டிங் அபையர் ( wedding affair) என்ற இதழுக்காக திருமண உடையை அணிந்து கொண்டு அழகான பல படங்களை கவர்ச்சியாக எடுத்துள்ளார். அதில் சில படங்கள் இணையத்தில் வைரல் ஆகி உள்ளது. திருமண உடையில் இப்படி யாராவது கவர்ச்சி காட்டுவார்களா என அந்த படங்களை பார்த்த பலரும் இலியானாவை கழுவி ஊற்றவும் செய்கிறார்கள்....
தலைகீழாக நின்றாலும் வாய்ப்பு எதுவும் கிடைக்கலியே… வருத்தத்தில் பிரணிதா..!

தலைகீழாக நின்றாலும் வாய்ப்பு எதுவும் கிடைக்கலியே… வருத்தத்தில் பிரணிதா..!

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகைகள்
  தலைகீழாக நின்றாலும் வாய்ப்பு எதுவும் கிடைக்கலியே... வருத்தத்தில் பிரணிதா..! நடிகை பிரணிதா தமிழில் கடைசியாக நடித்த திரைப்படம் 2017 ஆம் ஆண்டு வெளிவந்த ஜெமினி கணேஷனும் சுருளிராஜனும் என்ற திரைப்படம் தான் என்பது குறிப்பிடத்தக்கது. தமிழில் பட வாய்ப்பு இல்லையென்றாலும் தற்போது தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளில் நடித்து வருகிறார். இந்நிலையில் நடிகைகள் கவர்ச்சி படங்களை வெளியிட்டு பரபரப்பை தேடிக் கொள்வார்கள். பிரணிதா வித்தியாசமாக தனது இன்ஸ்டா பக்கத்தில் தலைகீழாக நின்று உடற்பயிற்சி செய்வது போன்ற புகைப்படத்தை பகிர்ந்திருக்கிறார். என்னதான் தலைகீழாக நின்றாலும் தமிழில் பாவம் பிரணிதாவுக்கு வாய்ப்பு எதுவும் கிடைக்கவில்லை....
நடிகர் சங்க தேர்தலில் 1604 வாக்குகள் பதிவானது..!

நடிகர் சங்க தேர்தலில் 1604 வாக்குகள் பதிவானது..!

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகர்கள், நடிகைகள்
  நடிகர் சங்க தேர்தலில் 1604 வாக்குகள் பதிவானது..! நடிகர் சங்கத்துக்கு புதிய நிர்வாகிகளை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் மயிலாப்பூர் ராதாகிருஷ்ணன் சாலையில் உள்ள புனித எப்பாஸ் பள்ளியில் இன்று நடைபெற்று வந்தது. காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. இதில் நடிகர்கள் கமல், விஜய், விக்ரம், சூர்யா, சிவகார்த்திகேயன், கவுண்டமணி, செந்தில் உள்ளிட்ட பல நடிகர்களும், லதா, அம்பிகா, ராதா, குஷ்பு, சங்கீதா, வரலட்சுமி, மும்தாஜ், ஜனனி ஐயர் உள்ளிட்ட பல நடிகைகளும் வாக்குபதிவு செய்தார்கள். விறுவிறுப்பாக நடைபெற்று வந்த இந்த வாக்குப்பதிவு மாலை 5 மணிக்கு நிறைவு பெற்றது. மொத்தமுள்ள 3171 ஓட்டுக்களில் மாலை 5 மணிவரை 1604 பேர் வாக்குகளை பதிவு செய்தனர். பதிவான வாக்குச் சீட்டுகள் உள்ள பெட்டிகள் மிக பத்திரமாக வைக்கப்பட இருக்கிறது. கோர்ட் உத்தரவை தொடர்ந்து 8ம் தேதி வாக்குகள் எண்ணிக்கை நடைபெறும் என்...
நடிகர் சங்க தேர்தலில் வாக்களித்த விஜய்

நடிகர் சங்க தேர்தலில் வாக்களித்த விஜய்

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகர்கள், நடிகைகள்
    நடிகர் சங்க தேர்தலில் வாக்களித்த விஜய் நடிகர் சங்கத்துக்கு புதிய நிர்வாகிகளை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் மயிலாப்பூர் ராதாகிருஷ்ணன் சாலையில் உள்ள புனித எப்பாஸ் பள்ளியில் இன்று நடைபெற்று வருகிறது. காலை 7 மணி முதல் தொடங்கிய இந்த வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் பல முன்னணி நடிகர்கள், நாடக கலைஞர்கள், பழம் பெரும் நடிகர்கள், நடிகைகள் உள்ளிட்ட பலர் வாக்களித்து வருகின்றனர். இந்நிலையில், நடிகர் விஜய் தன்னுடைய வாக்கை பதிவு செய்திருக்கிறார். நடிகர் விஜய் வரும் போது கடும் தள்ளுமுள்ளு நடைபெற்றது. போலீசார் சிரமபட்டு விஜயை பாதுகாப்புடன் வாக்களிக்க வைத்து அனுப்பி வைத்தனர்....
தமிழ் நடிகைக்கு திடீர் திருமணம்..!

தமிழ் நடிகைக்கு திடீர் திருமணம்..!

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகைகள்
  தமிழில் செல்வா இயக்கிய ‘நாங்க’ படத்தில் கதாநாயகியாக நடித்தவர் விஷ்ணுபிரியா. புதுமுகங்கள் தேவை என்ற படத்திலும் நடித்துள்ளார். மலையாளத்தில் ஸ்பீடு டிராக் படத்தில் துணை நடிகையாக அறிமுகமாகி முன்னணி நடிகையாக உயர்ந்தார். ராத்திரி மழா, மகர மன்சு, கிரைம் ஸ்டோரி, பெண் பட்டினம், நாட்டி பிரபொசர், காட்ஸ் ஓன் கண்ட்ரி உள்பட பல வெற்றி படங்களில் நடித்துள்ளார். மலையாள டி.வி. தொடர்களிலும் நடிக்கிறார். விஷ்ணுபிரியா பரதநாட்டியம் கற்றவர். மேடை நிகழ்ச்சிகளில் பரதநாட்டியம் ஆடி வருகிறார். விஷ்ணுபிரியாவுக்கும், பிரபல மலையாள இயக்குனரும் தயாரிப்பாளருமான ஈஸ்ட் கோஸ்ட் விஜயன் மகன் வினய்க்கும் பெற்றோர்களால் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. இவர்கள் திருமணம் ஆழப்புழையில் நடந்தது. திருமணத்தில் நெருங்கிய உறவினர்கள் கலந்துகொண்டனர்...
ஆதியின் ‘கிளாப்’ ஷூட்டிங் சத்தமில்லாமல் வேகமெடுக்க தொடங்கிடுச்சி..!

ஆதியின் ‘கிளாப்’ ஷூட்டிங் சத்தமில்லாமல் வேகமெடுக்க தொடங்கிடுச்சி..!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
  ஆதியின் 'கிளாப்' ஷூட்டிங் சத்தமில்லாமல் வேகமெடுக்க தொடங்கிடுச்சி..! அடுத்த எதிர்வரும் நாட்களுக்கு, ஆதி வியர்வையில் நனைவது, தசைகளை நெகிழச் செய்வது, மூட்டுகளை நீட்டுவதை நீங்கள் காண முடியும். ஆம், ஒரு கடுமையான தடகள வீரரான அவர், அறிமுக இயக்குனர் பிரித்வி ஆதித்யா இயக்கும் “கிளாப்” படத்தில், தன் கதாபாத்திரத்திற்கு தன் உயிரையும், ஆன்மாவையும் தந்து உழைக்கிறார். ‘தி சவுண்ட் ஆஃப் சக்சஸ்’ என்ற உத்வேகம் அளிக்கும் டேக்லைன் உடன் படம் வெளியாகிறது. பிக் பிரிண்ட் பிக்சர்ஸ் ஐபி கார்த்திகேயன் தயாரிப்பில் ஜூன் 12ஆம் தேதி ஒரு எளிய சடங்கு விழாவுடன் தொடங்கப்பட்ட இந்த படத்தின் படப்பிடிப்பு நேற்று (ஜூன் 20) முதல் முழு வீச்சில் தொடங்கப்பட்டிருக்கிறது. முதல் கட்ட படப்பிடிப்பு சென்னையை சுற்றியுள்ள நேர்த்தியான மற்றும் அழகான பகுதிகளில் படமாக்கப்படுகிறது. ஆதி ஒரு பரிபூரணமான தடகள வீரராக பிர...
அருண் விஜய் ஜோடியான நிக்கியின் தங்கை..!

அருண் விஜய் ஜோடியான நிக்கியின் தங்கை..!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
  அருண் விஜய் ஜோடியான நிக்கியின் தங்கை..! அருண்விஜய் நடிக்கும் புதிய படமான ‘பாக்ஸர்’ படத்தின் தொடக்கவிழா நடைபெற்றது. விவேக் இயக்கத்தில் மார்க்கஸ் ஒளிப்பதிவில் லியோன் இசையில் உருவாகும் இந்த படத்தை வி.மதியழகன் தயாரிக்கவுள்ளார் இந்த படத்தில் பிரபல நடிகை நிக்கி கல்ராணியின் சகோதரி சஞ்சனா கல்ராணி நாயகியாக நடிக்கவுள்ளார். இவர் தமிழில் நடிக்கும் முதல் படம் என்றாலும் ஏற்கனவே இவர் தெலுங்கு, கன்னட, மலையாள திரையுலகில் பிரபலமானவர் என்பது குறிப்பிடத்தக்கது. பூஜையை அடுத்து விரைவில் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கவுள்ளது....