நடிகை அளித்த பாலியல் புகார் வழக்கு விசாரணைக்கு ஆஜரானார் சீமான்!
விசாரணைக்கு ஆஜரானார் சீமான்!
நடிகை அளித்த பாலியல் புகார் வழக்கு விசாரணைக்காக நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் வளசரவாக்கம் காவல் நிலையத்தில் வெள்ளிக்கிழமை இரவு ஆஜரானார்.
வழக்கு தொடர்பாக காவல் துறை 2 முறை சம்மன் அனுப்பிய நிலையில் தற்போது சீமான் ஆஜராகி உள்ளார். காவல் நிலையம் வரை சீமானின் காரை அனுமதிக்க வேண்டும் என காவல் துறையுடன் தொண்டர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து சீமானின் காரை மட்டும் அனுமதித்த காவல்துறை, மற்ற கார்களை தடுத்து நிறுத்தினர்.
இருப்பினும், வளசரவாக்கம் காவல் நிலையம் அருகே கூடியுள்ள நாதகவினர் தடுப்புகளை தாண்டி உள்ளே செல்ல முயன்றனர். இதனால் நாதகவினர்-காவல்துறையினர் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. விசாரணைக்கு ஆஜராகியுள்ள சீமானிடம் 50க்கும் மேற்பட்ட கேள்விகளுக்கு எழுத்துப்பூர்வமாக பதில் பெற காவல் துறை திட்டமிட்டுள்ளது.
சீமான் ஆஜராவதைய...








