ஞாயிற்றுக்கிழமை, மே 31
Shadow

நடிகைகள்

தாய்லாந்தில் விஜய்சேதுபதி – அஞ்சலி!

தாய்லாந்தில் விஜய்சேதுபதி – அஞ்சலி!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
பாகுபலி 2 வெற்றிப் படத்தை வெளியிட்ட பட நிறுவனம் S.N.ராஜராஜனின் கே.புரொடக்‌ஷன்ஸ்..அத்துடன் ராணா ரெஜினா சத்யராஜ் நடிக்க சத்யசிவா இயக்கத்தில் தமிழில் மடை திறந்து தெலுங்கில் 1945 படங்கலையும் தயாரித்துக் கொண்டிருக்கிறது. கே புரொடக்சன்ஸ் எஸ்.என்.ராஜராஜன்,  ஒய்.எஸ்.ஆர் பிலிம்ஸ் யுவன்சங்கர்ராஜா,  இர்பான் மாலிக்  இணைந்து சூப்பர் ஹிட் டான பியார் பிரேமா காதல் வெற்றிப் படத்தை  தொடர்ந்து விஜய் சேதுபதி அஞ்சலி  நடிக்கும் புதிய படம் ஒன்றையும்  தயாரித்துக் கொண்டிருக்கிறார்கள்.. இந்த படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு தென்காசி குற்றாலம் போன்ற இடங்களில் 30நாட்கள் நடை பெற்று முடிவடைந்தது... இதைத் தொடர்ந்து இரண்டாம் கட்டப் படப்பிடிப்பு தாய்லாந்தில் தொடங்கியது. 40 நாட்கள் இடை விடாமல் தாய்லாந்து அதை சுற்றி உள்ள இடங்களில் மிகப் பிரமாண்டமான முறையில் படமாக்கப் பட உள்ளது. விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகும் இப்பட...
பள்ளி மாணவிகளுக்கு ”கராத்தே”! தமிழக அரசு அறிவிப்பு. “எழுமின்” படக்குழுவினர் மகிழ்ச்சி.!!

பள்ளி மாணவிகளுக்கு ”கராத்தே”! தமிழக அரசு அறிவிப்பு. “எழுமின்” படக்குழுவினர் மகிழ்ச்சி.!!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
  பள்ளி மாணவர்கள் தற்காப்புக்கலையை கற்றுக்கொள்ள வேண்டும், என்ற கருத்தை பரப்பும் நோக்கில் எடுக்கப்பட்ட திரைப்படம், எழுமின்.  வையம் மீடியாஸ் சார்பில் வி.பி.விஜி தயாரித்து இயக்கிய எழுமின் திரைப்படம் இந்த வாரம் வெளியானது. வெளியான நாளில் இருந்து அனைவராலும் கொண்டாடப்பட்டிருக்கும் இந்த படத்தில் ஜனங்களின் கலைஞன் விவேக், தேவயானி உட்பட பலர் நடித்துள்ளனர். மேலும், உண்மையான தற்காப்புக்கலை பயின்று சாம்பியன்களாகத் திகழும் 6 குழந்தைகள் நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த குழந்தைகள் 6 பேரும் நடிப்பதில் மட்டுமல்ல அடிப்பதிலும் அசத்தி இருக்கிறார்கள். எழுமின் படத்தின் க்ளைமாக்ஸ் சண்டைக்காட்சியை பார்த்து அனைவரும் வியந்து பாராட்டியதே அதற்கு சாட்சி. இன்றைய சூழலில் தற்காப்புக்கலை எத்தனை அவசியமானது என்பதை அனைவருக்கும் உணர்த்தும் நோக்கில் எடுக்கப்பட்ட எங்களின் எழுமின் திரைப்படம் வெளியாகி ...
நடிகைகள் பாலியல் புகாரை விசாரிக்க 3 பேர் குழு- விஷால்

நடிகைகள் பாலியல் புகாரை விசாரிக்க 3 பேர் குழு- விஷால்

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள், நடிகர்கள், நடிகைகள்
  சமீபத்தில் இந்தி நடிகர் நானா படேகர் மீது நடிகை தனுஸ்ரீ தத்தா பாலியல் புகார் கூறி பரபரப்பை ஏற்படுத்தினார். சினிமா பிரபலங்கள், அரசியல்வாதிகளின் மிரட்டலையும் பொருட்படுத்தாமல் தனுஸ்ரீ தத்தா தொடர்ந்து பாலியல் புகாரை வெளிச்சத்துக்கு கொண்டு வந்தார். அவருக்கு பெண்கள் அமைப்பு, பெண் எழுத்தாளர்கள், பிரபலங்கள் ஆதரவு தெரிவித்தனர். தனுஸ்ரீ தத்தாவைத் தொடர்ந்து பாதிக்கப்பட்ட மேலும் பல பெண் பிரபலங்கள் தாங்கள் சந்தித்த பாலியல் தொல்லைகளை வெளியிட முன்வந்தனர். இதற்காக சமூக வலைதளத்தில் ‘மீ டூ’ ஹேஷ்டேக் தொடங்கப்பட்டது. அதில் பல பெண்கள் தெரிவித்த பாலியல் புகார்கள் வெளியிடப்பட்டன. முதலில் மத்திய மந்திரி எம்.ஜே. அக்பர் மீது பெண் பத்திரிகையாளர் ஒருவர் பாலியல் புகார் தெரிவித்தார். தென்னிந்தியாவில் முதல் முறையாக பிரபல பின்னணி பாடகி சின்மயி கவிஞர் வைரமுத்து மீது பாலியல் புகார் செய்தார். சென்ன...
பயோபிக் படங்களில் நடிக்க ஆசைப்படும் பூஜா குமார்

பயோபிக் படங்களில் நடிக்க ஆசைப்படும் பூஜா குமார்

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகைகள்
மூத்த நடிகை வைஜெயந்தி மாலா அவர்களின் வாழ்க்கை வரலாற்றை திரைப்படமாக உருவானால் அதில் கதையின் நாயகியாக நடிக்க ஆசைப்படுகிறேன் என்று ‘விஸ்வரூபம்’ புகழ் நடிகை பூஜா குமார் தெரிவித்தார். அவர் தொடர்ந்து பேசுகையில்,‘விஸ்வரூபம் படத்தின் முதல் மற்றும் இரண்டாம் பாகத்தில் நடித்தது மறக்க முடியாத அனுபவம். கிட்டத்தட்ட நான்காண்டு கால கடின உழைப்பிற்கு ரசிகர்கள் வெற்றி என்ற அங்கீகாரத்தை அளித்து படக்குழுவினரை மகிழ்ச்சியடைய வைத்தனர். இதனால் உற்சாகத்தில் திளைக்கிறேன். கமல்ஹாசனிடம் மருதநாயகத்தை எப்போது தொடங்கவிருக்கிறீர்கள்? என்று கேட்டிருக்கிறேன். அதற்கு அவர், ‘அது போன்ற படங்களுக்கு கடின உழைப்பு, நீண்ட கால தயாரிப்பு, முன் தயாரிப்பு, ஆய்வு பணிகள் என அதிக உழைப்பை கேட்கும். அதனால் அதற்கு காலம் தான் பதில் சொல்லும்’ என்று என்னிடம் பகிர்ந்திருக்கிறார். ஆனால் அவர் மருதநாயகத்தை தொடங்கினால், வாய்ப்பு கிடைத்தால் அதில் ...
நானா படேகரிடம் உண்மை கண்டறியும் சோதனை செய்ய வேண்டும் – தனுஸ்ரீ தத்தா

நானா படேகரிடம் உண்மை கண்டறியும் சோதனை செய்ய வேண்டும் – தனுஸ்ரீ தத்தா

CINI NEWS, HOME SLIDER, NEWS, சினி நிகழ்வுகள், நடிகைகள்
  பிரபல பாலிவுட் நடிகை தனுஸ்ரீ தத்தா. இவர் தமிழில் நடிகர் விஷாலுடன் ‘தீராத விளையாட்டு பிள்ளை’ என்ற படத்தில் நடித்துள்ளார். இந்த நிலையில் பாலிவுட்டின் மூத்த நடிகரான நானா படேகர் மீது நடிகை தனுஸ்ரீதத்தா பாலியல் புகார் கூறியுள்ளார். 2008-ம் ஆண்டு ‘ஹார்ன் ஒகே பிளீஸ்’ என்ற இந்தி படத்தின் பாடல் காட்சி படமாக்கப்படும் போது அவர் பாலியல் தொல்லை கொடுத்தார் என்று குற்றம் சாட்டி இருந்தார். தன் மீதான பாலியல் குற்றச்சாட்டை நானா படேகர் மறுத்து வந்தார். தனு ஸ்ரீதத்தா பொய் கூறுவதாக தெரிவித்தார். இந்த நிலையில் நானா படேகர், நடன இயக்குனர் கணேஷ் ஆச்சார்யா, தயாரிப்பாளர் சமீர்சித்திக், இயக்குனர் ராகேஷ் சாரங் ஆகிய 4 பேர் மீது தனுஸ்ரீ தத்தா மும்பை ஒஹிவாரா போலீசில் புகார் அளித்தார். இந்த புகாரை தொடர்ந்து நானா படேகர் உள்பட 4 பேர் மீது போலீசார் 354 மற்றும் 509 ஆகிய 2 பிரிவுகளின் கீழ் வழக்குபதிவு செய்...
நாங்கள் உண்மையில் காதலிக்க வில்லை – கௌரி

நாங்கள் உண்மையில் காதலிக்க வில்லை – கௌரி

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகர்கள், நடிகைகள்
விஜய் சேதுபதி நடிப்பில் தற்போது வெளியாகி இருக்கும் படம் ‘96’. பிரேம் இயக்கியுள்ள இப்படத்தில் திரிஷா கதாநாயகியாகா நடித்திருக்கிறார். மேலும் இதில் விஜய் சேதுபதி, திரிஷாவின் பள்ளி பருவ காட்சியில் ஆதித்யா பாஸ்கரும், கௌரியும் நடித்திருந்தார்கள். ஆதித்யாவும் கௌரியும் சிறு வயது கதாபாத்திரத்தில் நடித்தது ரசிகர்களை பெருமளவு கவர்ந்திருக்கிறது. இந்நிலையில், இவர்கள் இருவரும் ஒன்றாக இருக்கும் புகைப்படம் ஒன்று வெளியானது. இதையடுத்து இவர்கள் இருவரும் உண்மையில் காதலிக்கிறார்கள் என்று செய்திகள் பரவியது. இதையறிந்த கௌரி, நாங்கள் இருவரும் காதலிக்க வில்லை. 96 திரைப்படத்தில் ராம் மற்றும் ஜானு கதாபாத்திரத்தில் காதலர்களாக நடித்தோம். திரைக்குப் பின்னால் இல்லை. எங்களைப் பற்றி தவறான வதந்திகளை பரப்பாதீர்கள்’ என்று கூறியிருக்கிறார்...
ஹீரோ ஆன நாட்டுப்புற பாடகர்!

ஹீரோ ஆன நாட்டுப்புற பாடகர்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
விஜய் டி.வியில் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் பாடகராக சின்ன மச்சான் செவத்த மச்சான் என்ற பாடலை பாடி முதல் பரிசு வென்றார்கள் செந்தில் கணேஷ் - ராஜலஷ்மி தம்பதியினர். இந்த பாடலை எழுதியவர் செல்ல தங்கையா. அதற்கு பிறகு இந்த பாடல் சார்லி சாப்ளின் 2 படத்தில் அம்ரீஷ் இசையில் உருவாக்கப்பட்டது...யூடியூப்பில் இன்று வரை 13 மில்லியன் பார்வையாளர்கள் கண்டு களித்திருக்கிறார்கள். உலகம் முழுதும் பிரபலமான இந்த குழு “ கரிமுகன் “ என்ற படத்தின் மூலம் சினிமாவில் களமிறங்கி இருக்கிறார்கள்.. செந்தில் கணேஷ் கதாநாயகனாக நடிக்கிறார்.காயத்ரி என்ற கேரளா பெண் கதாநாயகியாக நடிக்கிறார். மற்றும் யோகிராம், பாவாலட்சுமணன், விஜய் கணேஷ், வின்செண்ட் ராய், தீபாஸ்ரீ ரா.கா.செந்தில் இவர்களுடன் இயக்குனர் செல்ல தங்கையாவும் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.  ஒளிப்பதிவு    எழில் பூஜித்.  ஏ விமல் புரொடக்சன்ஸ் சார்பாக T.சித்திரைச்செல்வி , M.ச...
காற்றின் மொழி படத்தின் ரிலீஸ் தள்ளிவைப்பு

காற்றின் மொழி படத்தின் ரிலீஸ் தள்ளிவைப்பு

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
ராதா மோகன் இயக்கத்தில் ஜோதிகா - விதார்த் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் `காற்றின் மொழி'. படப்பிடிப்பு முடிந்து பின்னணி வேலைகள் விறுவிறுப்பாக நடந்து வரும் இந்த படம் ஆயுத பூஜையை முன்னிட்டு அக்டோபர் 18-ஆம் தேதி ரிலீசாக இருப்பதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், படத்தின் ரிலீஸ் நவம்பர் மாதத்திற்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. இதுகுறித்து படத்தின் தயாரிப்பாளர் தனஞ்ஜெயன் அவரது ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது, `ஒவ்வொரு வாரமும் ரிலீசாகும் படங்களின் எண்ணிக்கை உயர்ந்து கொண்டே செல்கிறது. ஆயுத பூஜை நாளிலும் படங்கள் வரிசைக் கட்டியிருப்பதால், திரையரங்குகள் கிடைப்பதில் சிக்கல் ஏற்படும் சூழல் உருவாகிறது. அதனை தவிர்க்க படத்தை நவம்பர் மாதத்திற்கு தள்ளிவைக்க முடிவு செய்துள்ளோம். தீபாவளிக்கு பிறகு படம் ரிலீசாகும். படத்தின் புதிய ரிலீஸ் தேதி விரைவில் அறிவிக்கப்படும்' என்...