சில்க் ஸ்மிதாவின் ‘தி டர்ட்டி பிக்சர்’ வாழ்க்கை படத்தில் நடித்த பிரபல இந்தி நடிகை மர்மச்சாவு
சில்க் ஸ்மிதாவின் ‘தி டர்ட்டி பிக்சர்’ வாழ்க்கை படத்தில் நடித்த பிரபல இந்தி நடிகை மர்மச்சாவு
நடிகை சில்க் ஸ்மிதாவின் வாழ்க்கையை தழுவி பிரபல இயக்குனர் மிலன் லூத்ரியா எடுத்த இந்தி படம் ‘தி டர்ட்டி பிக்சர்’. 2011-ம் ஆண்டு வெளியான இந்த படம் உள்பட பல படங்களில் நடித்து பெயர் பெற்றவர் பிரபல இந்தி நடிகை ஆர்யா பானர்ஜி (வயது 33). இவரது தந்தை மறைந்த சிதார் இசைக்கலைஞர் நிகில் பந்தோபாத்யா ஆவார்.
மும்பையில் மாடலிங் கலைஞராகவும் புகழ் பெற்றவர், ஆர்யா பானர்ஜி.
இவர் கொல்கத்தாவின் தெற்கு பகுதியில் ஒரு அடுக்குமாடி குடியிருப்பின் 3-வது தளத்தில் உள்ள வீட்டில் வசித்து வந்தார்.
நேற்று காலையில் அவரது வீட்டில் வேலை செய்து வந்த வேலைக்கார பெண் வழக்கம்போல வேலைக்கு அங்கு சென்றார். அழைப்பு மணியை அழுத்தினாலும் நீண்ட நேரமாக பதில் இல்லை. செல்போனில் அழைத்தாலும், அந்த அழைப்பு ஏற்கப்படவில்லை. இதனால் சந...









