ஞாயிற்றுக்கிழமை, மே 31
Shadow

நடிகைகள்

கவனம் ஈர்க்கும் மெடிக்கல் கிரைம் திரில்லர் திரைப்படம் “அதர்ஸ்“ !!

கவனம் ஈர்க்கும் மெடிக்கல் கிரைம் திரில்லர் திரைப்படம் “அதர்ஸ்“ !!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
  *கவனம் ஈர்க்கும் மெடிக்கல் கிரைம் திரில்லர் திரைப்படம் “அதர்ஸ்“ !!* இளைய தலைமுறையின் கதை சொல்லல், காட்சியமைப்பு மற்றும் நடிப்புத் திறமைகள் மூலம் புதிய பரிமாணங்களை நோக்கி பாய்ந்து வரும் தமிழ் சினிமாவில், புதிய படைப்பான ‘அதர்ஸ்’ மெடிக்கல் கிரைம் த்ரில்லர் திரைப்படம் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது. புதிய அறிமுகம் ஆதித்யா மாதவன், கடமை உணர்வுமிக்க காவல் அதிகாரியாக நடித்திருக்கும் இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் சமீபத்தில் வெளியிடப்பட்டது. 96, மாஸ்டர் போன்ற படங்களில் தன் நடிப்புத் திறமையால் பாராட்டைப் பெற்ற கவுரி G. கிஷன், இப்படத்தில் மருத்துவராக முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். அதர்ஸ் படத்தில் அஞ்சு குரியன், முனீஷ்காந்த், ஹரீஷ் பேரடி, மாளா பார்வதி, ஜகன், R.சுந்தர்ராஜன் உள்ளிட்ட வலுவான நடிகர் பட்டாளம் இணைந்து நடித்துள்ளனர். டிமாண்டி காலனி புகழ் அரவிந்த் சிங் ஒளிப்பதிவு செய்ய...
மார்ஷல் ராபின்சனின் *எதிர்பார்த்தேன்* புதிய காதல் பாடல் வெளியீடு!

மார்ஷல் ராபின்சனின் *எதிர்பார்த்தேன்* புதிய காதல் பாடல் வெளியீடு!

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள், நடிகர்கள், நடிகைகள், வீடியோ
  மார்ஷல் ராபின்சனின் *எதிர்பார்த்தேன்* என்ற புதிய காதல் பாடல் வெளியீடு அன்பு, காதல் , தளராத நம்பிக்கை – இந்த மூன்றும் ஒன்றிணையும் புதிய இசைப் படைப்பை இசையமைத்தும் , தயாரித்தும், எழுதியும், பாடியும் உள்ளார் மார்ஷல் ராபின்சன். வாழ்க்கையில் உறவுகளில் பிளவுகள் தோன்றும் நேரத்தில், நல்லது நடக்கும் என்ற நம்பிக்கையை அமைதியாகப் பேணும் தருணங்களை இந்த பாடல் பசுமையாக சித்தரிக்கிறது. நெஞ்சை நெகிழச் செய்யும் இசை அமைப்பும், ஆழமான குரல்களும், தீவிரமான காதலின் உணர்வுகளை துல்லியமாக வெளிப்படுத்துகின்றன இப்பாடல் தற்போது YouTube-ல் வெளியாகி உள்ளது. காதலின் இனிமையும், வலியும் கலந்த அந்த உலகுக்குள் உங்களை அழைத்துச் செல்லும் இந்த பாடல். https://youtu.be/ksg1_VcEn3o?si=nqfmH8X2Xmrfx3bK...
யோகி பாபு நடிக்கும் ‘சன்னிதானம்(P.O)’ படத்தின் முதல் பார்வையை வெளியிட்ட இயக்குநர் சேரன் மற்றும் நடிகை மஞ்சு வாரியர்!

யோகி பாபு நடிக்கும் ‘சன்னிதானம்(P.O)’ படத்தின் முதல் பார்வையை வெளியிட்ட இயக்குநர் சேரன் மற்றும் நடிகை மஞ்சு வாரியர்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
  *யோகி பாபு நடிக்கும் 'சன்னிதானம்(P.O)' படத்தின் முதல் பார்வையை வெளியிட்ட இயக்குநர் சேரன் மற்றும் நடிகை மஞ்சு வாரியர்!* பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் உருவாகி வரும் 'சன்னிதானம்(P.O)' திரைப்படத்தின் முதல் பார்வை போஸ்டரை, புகழ்பெற்ற திரைப்பட இயக்குநர் சேரன் மற்றும் பிரபல நடிகை மஞ்சு வாரியர் ஆகியோர் இன்று அதிகாரப்பூர்வமாக வெளியிட்டனர். இது, ஒரு சுவாரஸ்யமான சினிமா அனுபவத்திற்கு வழிவகுத்துள்ளது. 'Tootu Madike' போன்ற படங்களை தயாரித்த கன்னடாவின் புகழ்பெற்ற தயாரிப்பு நிறுவனமான Sarvata Cine Garage மற்றும் 'Veerappan', 'Sooryavamsi', 'Vaanku' (தயாரிப்பு), 'Nalla Samayam' (விநியோகம்), 'Rudhiram' (கிரியேட்டிவ் தயாரிப்பாளர்) போன்ற வெற்றி படங்களை தந்த மலையாளத்தின் முன்னணி நிறுவனமான ஷிமோகா கிரியேஷன்ஸ் இணைந்து இந்த படத்தைத் தயாரிக்கின்றன. மது ராவ், வி.விவேகானந்தன் மற்றும் ஷபீர் ப...
கல்யாணி & நஸ்லென் இணைந்து நடிக்கும், “லோகா – சேப்டர் 1 சந்திரா” திரைப்படம் ஓணம் பண்டிகை அன்று ரிலீஸ்!

கல்யாணி & நஸ்லென் இணைந்து நடிக்கும், “லோகா – சேப்டர் 1 சந்திரா” திரைப்படம் ஓணம் பண்டிகை அன்று ரிலீஸ்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
  *கல்யாணி (Kalyani) & நஸ்லென் (Naslen) இணைந்து நடிக்கும், “லோகா (Lokah) – சேப்டர் 1 : சந்திரா” திரைப்படம் ஓணம் பண்டிகை அன்று திரைக்குவருகிறது!!* துல்கர் சல்மானின் வெய்ஃபரர் பிலிம்ஸ் ( Wayfarer Films ) நிறுவனம் தயாரிக்கும் ஏழாவது படைப்பு, லோகா – சேப்டர் 1 : சந்திரா திரைப்படம், இந்த ஓணம் பண்டிகைக் கொண்டாட்டமாக திரையரங்குகளில் வெளியாகிறது. இது குறித்து படக்குழு வெளியிட்டுள்ள புதிய போஸ்டர், ரசிகர்களின் எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்துள்ளது. இந்தத்திரைப்படம், இந்திய சினிமாவில் முதல் பெண் சூப்பர் ஹீரோவை அறிமுகப்படுத்தும் வரலாற்றுச் சிறப்புமிக்க முயற்சியாகும். டொமினிக் அருண் ( Dominic Arun) எழுதி இயக்கியுள்ள இந்த சூப்பர் ஹீரோ திரைப்படத்தில், கல்யாணி பிரியதர்ஷன் மற்றும் நஸ்லென் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இதில் கல்யாணி, சூப்பர் ஹீரோவாக அதிரடி அவதாரத்தில் நடித்துள்ளார...
காந்தா” படம் மூலம் தமிழில் பிரம்மாண்டமாக அறிமுகமாகிறார் நடிகை பாக்யஸ்ரீ போர்ஸ் !!

காந்தா” படம் மூலம் தமிழில் பிரம்மாண்டமாக அறிமுகமாகிறார் நடிகை பாக்யஸ்ரீ போர்ஸ் !!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகைகள்
  *“காந்தா” படம் மூலம் தமிழில் பிரம்மாண்டமாக அறிமுகமாகிறார் நடிகை பாக்யஸ்ரீ போர்ஸ் !!* ஸ்பிரிட் மீடியா தயாரிக்கும் வரலாற்றுத் திரைப்படமான படமான “காந்தா” மூலம் தமிழில் பிரமாண்டமாக அறிமுகமாகிறார் பாக்யஸ்ரீ போர்ஸ் !! இந்திய சினிமாவின் புதிய திறமைகளில் ஒருவராக வேகமாக வளர்ந்து வரும் பாக்யஸ்ரீ போர்ஸ், மிகவும் எதிர்பார்க்கப்படும் பீரியாடிக் படமான “காந்தா” மூலம் தமிழ்த் திரையுலகில் அறிமுகமாகவுள்ளார். ஸ்பிரிட் மீடியா மற்றும் வேஃபரர் பிலிம்ஸ் இணைந்து தயாரிக்கும் இப்படத்தில், துல்கர் சல்மான் மற்றும் சமுத்திரகனி முதன்மை வேடங்களில் நடிக்க, விமர்சகர்களால் கொண்டாடப்படும் இயக்குநர் செல்வமணி செல்வராஜ் இயக்குகிறார். 1950களின் சென்னையின் கலாச்சாரப் பின்புலத்தில் நடைபெறும் “காந்தா” திரைப்படம், கண்ணைக் கவரும் காட்சிகள், உணர்ச்சி பூர்வமான கதைக்களத்துடன், அடையாள சிக்கல், ஈகோ போராட்டம், காதல்...
இந்திரா திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா

இந்திரா திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
    இந்திரா திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா JSM Movie Production, Emperor Entertainment நிறுவனங்கள் சார்பில், தயாரிப்பாளர்கள் ஜாஃபர் சாதிக், இர்ஃபான் மாலிக்  தயாரிப்பில், இயக்குநர் சபரீஷ் நந்தா இயக்கத்தில், வசந்த் ரவி, மெஹ்ரீன், சுனில் நடிப்பில் மிரட்டலான திரில்லராக உருவாகியுள்ள திரைப்படம் இந்திரா. சீரியல் கொலை பின்னணியில் மிரட்டலான திரைக்கதையில் பரபரப்பான திரில்லராக உருவாகியுள்ள இப்படம் வரும் ஆகஸ்ட் 22 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. இப்படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா தனியார் மாலில் படக்குழுவினர் கலந்துகொள்ள, பத்திரிக்கை,  ஊடக நண்பர்களுடன், ஆயிரக்கணக்கான ரசிகர்கள் முன்னிலையில் கோலாகலமாக நடைபெற்றது. இவ்விழாவினில்.., இசையமைப்பாளர் அஜ்மல் பேசியதாவது… இந்தப்படத்தின் கதை சொன்ன போதே சவாலாக இருக்கும் என்று தோன்றியது. ஷூட்...
துல்கர் சல்மானின் ‘காந்தா’ படத்தில் இருந்து ‘பனிமலரே…’ முதல் பாடல் ரிலீஸ்!

துல்கர் சல்மானின் ‘காந்தா’ படத்தில் இருந்து ‘பனிமலரே…’ முதல் பாடல் ரிலீஸ்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
    *நடிகர் துல்கர் சல்மானின் 'காந்தா' படத்தில் இருந்து 'பனிமலரே...' முதல் பாடல் வெளியாகியுள்ளது!* செல்வமணி செல்வராஜ் இயக்கத்தில் நடிகர் துல்கர் சல்மான் நடிப்பில் உருவாகி இருக்கும் 'காந்தா' படத்தில் இருந்து 'பனிமலரே...' முதல் சிங்கிள் வெளியாகியுள்ளது. மனதிற்கும் செவிக்கும் இன்பம் சேர்க்கும் வகையில் ஆர்டி பர்மன் மற்றும் எம்.எஸ். விஸ்வநாதனின் கோல்டன் மெலோடிஸூக்கு மாடர்ன் ஹார்ட்பீட் சேர்த்து இன்றைய தலைமுறையினரும் ரசிக்கும்படி கொடுத்துள்ளார் இசையமைப்பாளர் ஜானு சாந்தர். 'மரியான்' படத்தில் 'எங்க போன ராசா...' உள்ளிட்ட ஹிட் பாடல்களைக் கொடுத்த பாடலாசிரியர் குட்டி ரேவதி உணர்வுப்பூர்வமான ஆழமான பாடல் வரிகளை இதில் கொடுத்துள்ளார். கூடுதல் பாடல் வரிகளை சிவம் மற்றும் தீபக் கார்த்திக் குமார் எழுதி, இந்தப் பாடலுக்கு மேலும் அழகூட்டியுள்ளனர். பிரதீப் குமார் மற்றும் என்கே பிரியங்கா...
ஹ்ரித்திக் ரோஷன், ஜூனியர் என்டிஆரின்  “வார் 2” படத்தின் டிக்கெட் முன்பதிவு தொடங்கியது!

ஹ்ரித்திக் ரோஷன், ஜூனியர் என்டிஆரின் “வார் 2” படத்தின் டிக்கெட் முன்பதிவு தொடங்கியது!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
    *வார் 2 படத்தின் டிக்கெட் முன்பதிவு இந்தியளவில் துவக்கியதை ஹ்ரித்திக் ரோஷன், ஜூனியர் என்டிஆரின் அதிரடி புரோமொ உடன் யஷ் ராஜ் நிறுவனம் அறிவித்துள்ளனர்!* யஷ் ராஜ் பிலிம்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் அயன் முகர்ஜி இயக்கத்தில் உருவாகியுள்ள படம் 'வார் 2' . 2025ம் ஆண்டில் ரசிகர்கள் அதிகம் எதிர்பார்க்கும் படமாக வார் 2 அமைந்துள்ளது. பெரிய பொருட்செலவில் பான் இந்திய அதிரடி படமாக உருவாகியுள்ள இந்த படத்தின் டிக்கெட் முன்பதிவை இந்தியளவில் உள்ள திரையரங்குகளில் துவங்கியதை, ஹ்ரித்திக் ரோஷன் , ஜூனியர் என்டிஆர் ஆகியோர் கபீர் மற்றும் விக்ரம் கதாபாத்திரங்களில் களமிறங்கும், பரபரப்பான புரோமொ காட்சியுடன் யஷ் ராஜ் நிறுவனம் வெளியிட்டு அறிவித்துள்ளனர். அதித்யா சோப்ரா தயாரிப்பில் உருவாகியுள்ள வார் 2, வரலாற்று சிறப்புமிக்க யஷ் ராஜ் ஸ்பை யூனிவர்சில் இது ஆறாவது பாகமாக இணைகிறது . இதற்கு முன் இந்த ய...
MM ஸ்டுடியோஸ் வழங்கும் “பிளாக் கோல்டு” திரைப்படத்தின் first லுக் போஸ்டர் வெளியானது..!!

MM ஸ்டுடியோஸ் வழங்கும் “பிளாக் கோல்டு” திரைப்படத்தின் first லுக் போஸ்டர் வெளியானது..!!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
  MM ஸ்டுடியோஸ் வழங்கும் "பிளாக் கோல்டு" திரைப்படத்தின் first லுக் போஸ்டர் வெளியானது..!! எட்டு தோட்டாக்கள், ஜீவி புகழ் நடிகர் வெற்றியின் "பிளாக் கோல்டு" திரைப்பட first லுக் போஸ்டர் வெளியானது..!! MM ஸ்டுடியோஸ் சார்பில் M.மூர்த்தி வழங்கும், "தீர்ப்புகள் விற்கப்படும்" புகழ் தீரன் அருண்குமார் இயக்கத்தில், நடிகர் வெற்றி, பிரியாலயா, லிவிங்ஸ்டன், துளசி, பிக்பாஸ் அபிராமி, A.வெங்கடேஷ், அருள் D சங்கர், விஜய் டிவி ராமர் உள்ளிட்டோர் நடிக்க, பரபரப்பான ஆக்சன் திரில்லர் ஜானரில் உருவாகியிருக்கும் "பிளாக் கோல்டு" படத்தின் First லுக் வெளியானது. First லுக்கில் ஒரு படித்த யதார்த்த இளைஞன் போல இருக்கும் நடிகர் வெற்றி, ஆக்ரோசமாக, ரத்தம் தெறிக்க ஒரு எதிரியை வாட்டர் பம்ப் பிளேயர் ரிங்கால் அடித்து வீழ்த்துவதுபோல் உள்ளது. நடிகர் வெற்றியின் ஆக்ரோசமான முகமும், பின்னணியில் கதவு திறந்த நிலையில் இ...
விக்ரம் பிரபு & LK அக்‌ஷய் குமார் நடிப்பில் “சிறை” (Sirai) பட ஃபர்ஸ்ட் லுக்கை, இயக்குநர் லோகேஷ் கனகராஜ் வெளியிட்டார் !!

விக்ரம் பிரபு & LK அக்‌ஷய் குமார் நடிப்பில் “சிறை” (Sirai) பட ஃபர்ஸ்ட் லுக்கை, இயக்குநர் லோகேஷ் கனகராஜ் வெளியிட்டார் !!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
    *நடிகர் விக்ரம் பிரபு & LK அக்‌ஷய் குமார் நடிப்பில் “சிறை” (Sirai) பட ஃபர்ஸ்ட் லுக்கை, இயக்குநர் லோகேஷ் கனகராஜ் வெளியிட்டார் !!* *செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ (Seven Screen Studio)* சார்பில், தயாரிப்பாளர் *SS லலித் குமார்* தயாரிப்பில், நடிகர் *விக்ரம் பிரபு* நடிப்பில், அறிமுக இயக்குநர் *சுரேஷ் ராஜகுமாரி* இயக்கத்தில், மாறுபட்ட களத்தில் உண்மைச் சம்பவத்தை அடிப்படையாக வைத்து உருவாகியுள்ள *“சிறை”* படத்தின் அசத்தலான ஃபர்ஸ்ட் லுக்கை, முன்னணி இயக்குநர் *லோகேஷ் கனகராஜ்* சமூக வலைத்தளம் வழியே வெளியிட்டுள்ளார். கதையில் களத்தையும் கதாப்பாத்திரங்களையும் பிரதிபலிக்கும் அற்புதமான ஃபர்ஸ்ட் லுக் ரசிகர்கள் மற்றும் திரை ஆர்வலர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைக் குவித்து வருகிறது. டாணாக்காரன் இயக்குநர் *தமிழ்*, தான் உண்மையில் சந்தித்த அனுபவத்தை வைத்து, இப்படத்தின் கதையை எழுதியுள்ளா...