சஸ்பென்ஸ் திரில்லர் கதையை புதிய கோணத்தில் சொல்லும் ‘அதோமுகம்’
ரீல் பெட்டி மற்றும் தரிகோ பிலிம் ஒர்க்ஸ் இணைந்து தயாரிக்கும் புதிய சஸ்பென்ஸ் திரில்லர் திரைப்படம் ‘அதோமுகம்’
அதோமுகம் என்ற பழந்தமிழ் வார்த்தைக்கு மறைத்து வைத்திருக்கும் முகம் என்று பொருள். மனிதர்கள் மறைத்து வைத்திருக்கும் கோர முகங்கள் சில சமயங்களில் வெளிவரும் போது எந்தவிதமான வினோதங்கள், அசம்பாவிதங்கள் நிகழ்கிறது என்பதை அதோமுகம் புதிய கோணத்தில் திரைப்படமாக வடிவமைத்துள்ளனர்.
ஊட்டி, குன்னூர் மற்றும் அதை சுற்றிய பகுதிகளில் கதைகளம் அமைத்து படப்பிடிப்பு நடத்தியுள்ளனர். மலைகள், குளிர், மிஸ்ட் ஆகியவையுடன் டெக்னாலஜியுடன் கூடிய சஸ்பென்ஸ் திரில்லாராக படம் உருவாகியுள்ளது. ஹீரோ தனது மனைவி மொபைல் போனில் அவருக்கு தெரியாமல் ஒரு ஸ்பை அப்ளிகேஷனை இன்ஸ்டால் செய்ததால் அவனது வாழ்க்கை தலைகீழாக மாறுவது தான் கதை. இதை சுற்றி பல திருப்பங்களுடன் கூடிய திரைக்கதையை வடிவமைத்து அதோமுகம் படத்தை உருவாக்கியுள்ளார்க...









