28 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் நடிக்க வரும் அமலா..!
நான் இன்னொரு அற்புதமான வாழ்க்கையை வாழ்ந்துவிட்டு திரும்பி வந்துள்ளேன்.. அமலா அக்கினேனி.
28 ஆண்டுகளுக்குப் பிறகு ட்ரீம் வாரியர்ஸ் பிக்சர்ஸ் தயாரிப்பில் மீண்டும் தமிழில் திரைப் பயணத்தைத் தொடங்கும் அமலா அக்கினேனியின் செய்தி.
'மைதிலி என்னை காதலி' படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகி 1980-90 களில் தமிழ் திரையுலகில் முன்னணி நாயகிகளில் ஒருவராக திகழ்ந்தவர் நடிகை அமலா. ரஜினிகாந்த் மற்றும் கமலஹாசனுடன் இணைந்து இவர் நடித்த படங்கள் மாபெரும் வெற்றியடைந்தது. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் பாலிவுட் திரைப்படங்களில் பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ளார். அவர் நடித்த பல படங்கள் வெற்றி பட்டியலில் இடம்பெற்றுள்ளன. சிறந்த நடிகைக்கான ஃபிலிம் ஃபேர் விருது வென்றிருக்கிறார்.
1991-ல் ஃபாசில் இயக்கத்தில் 'கற்பூர முல்லை' படத்தில் தனி நாயகியாக நடித்திருந்தார். அதன் பின்பு தெலுங்கு ந...









