ராம் சரண் நடித்துள்ள பெத்தி (Peddi) படத்துக்கான பாடல் படப்பிடிப்பு 1000-க்கும் மேற்பட்ட நடனக் கலைஞர்களுடன் தொடங்கியது!!
குளோபல் ஸ்டார் ராம் சரண் நடித்துள்ள பெத்தி (Peddi) படத்துக்கான பாடல் படப்பிடிப்பு, மைசூரில் ஜானி மாஸ்டர் நடன அமைப்பில், 1000-க்கும் மேற்பட்ட நடனக் கலைஞர்களுடன் தொடங்கியது!!
குளோபல் ஸ்டார் ராம் சரண் நடிப்பில், முன்னணி இயக்குநர் புஜ்ஜி பாபு சனா (Buchi Babu Sana) இயக்கும், மிகுந்த எதிர்பார்ப்புக்குரிய பான்-இந்தியா திரைப்படமான “பெத்தி” படம், பிரம்மாண்டமாக உருவாகி வருகிறது. குளோபல் ஸ்டார் ராம் சரண் அசத்தலான மேக் ஓவர், வலிமையான உடல் மாற்றம், கடுமையான பயிற்சிகள் என அந்தக் கதாபாத்திரத்தை முழுமையாக வெளிப்படுத்த அவர் தனது முழு ஆற்றலையும் தந்து உழைத்து வருகிறார்.
மிகுந்த பெருமையுடன், வெங்கட சதீஷ் கிலாரு தயாரிக்க, விருத்தி சினிமாஸ், மற்றும் மைத்திரி மூவி மேக்கர்ஸ் & சுகுமார் ரைட்டிங்ஸ் வழங்க, மிகுந்த பொருட்செலவில், பிரம்மாண்ட படைப்பாக உருவாகி வரும் இப்படம், ரசிகர்கள் ...









