பிறந்தது தை..!
வாழ்வில் மாற்றத் “தை”
தொழிலில் ஏற்றத் “தை”
வசதியில் உயரத் “தை”
உலகுக்கு வீரத் “தை”
தேவையான பணத் “தை”
அளவில்லாத செல்வத் “தை”
எல்லாரோடும் சமாதானத் “தை”
எப்போதும் சந்தோஷத் “தை”
குறைவில்லாமல் பெற இறைவனின் ஆசியும்,
நல்ல நண்பர்களின் துணையும் இருக்கட்டும்.
இனிய பொங்கல் தமிழர் திருநாள் வாழ்த்துகள்..!
அன்புடன்
கோடங்கி @ ஆபிரகாம் லிங்கன்...
நடிகா் ரஜினிகாந்த் வெகுகாலமாக அரசியலுக்கு வரும் எண்ணத்தில் இருந்தாலும் வெளிப்படையாக அறிவிக்காமல் அமைதி காத்து வருகிறார். சமீபத்தில் தனது ரசிகர்களைச் சந்தித்த ரஜினி, 'போர் வரும்போது பார்த்துக்கொள்ளலாம்' எனக் கூறியது அவரது அரசியல் பிரவேசத்துக்கான அறிவிப்பாகவே எடுத்துக் கொள்ளப்பட்டது.
https://www.youtube.com/watch?v=o7A9hryfrJ4
ரஜினியை அரசியலுக்கு அழைக்கும் வண்ணம் ராகவா லாரன்ஸ் "போருக்கு வா தலைவா" என்ற பாடலை உருவாக்கி இன்று வெளியிட்டிருக்கிறார்
...
கரூர் நாச்சியார் பட விவகாரம் தொடர்பாக நடிகை ஜோதிகா, டைரக்டர் பாலா ஆகியோர் மீது கரூர் கோர்ட்டில் இன்று மேலும் ஒரு வழக்கு தொடரப்பட்டுள்ளது.
டைரக்டர் பாலாவின் நாச்சியார் திரைப்படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியானது. இந்த ட்ரைலரின் நடிகை ஜோதிகா கெட்ட வார்த்தை பேசிய காட்சி இடம்பெற்றது.
https://youtu.be/bg3hJuBtE-8
இதற்கு சமூகவலைதளங்களில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. இதுதொடர்பாக மேட்டுப்பாளையத்தை சேர்ந்த ராஜன் மேட்டுப்பாளையம் ஜூடிஷியல் மாஜிஸ்திரேட்டு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இந்நிலையில் கரூர் குற்றவியல் நீதிமன்றத்தில் நடிகை ஜோதிகா, இயக்குனர் பாலா மீது மேலும் ஒரு வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கை இந்திய குடியரசு கட்சியின் மாநில அமைப்பாளர் தலித் பாண்டியன் தொடர்ந்துள்ளார்.
இது தொடர்பாக அவர் தாக்கல் செய்த மனுவில், நாச்சியார் படத்தில் நடிகை ஜோதிகா அவதூறாகவு...