உடுக்கை இழந்தவன்
கைபோல ஆங்கே இடுக்கண் களைவது நட்பாம்!
வேட்டிக் கழண்டாதான் மானம் போகனும்னு அவசியமில்லே…. ஒரு கலைஞனுக்கு அந்த வருஷத்தில படமே வரலேன்னாலும்,வந்த படம் சரியாப் போகலைன்னாலும், உரிய அங்கீகாரம் கிடைக்கலைன்னாலும் மானம் மட்டுமில்லே ஒட்டிகிட்டே மரியாதையும் கூடவே போயிடும்.
20 மாசமா மனசு கர்ப்பமாவே இருக்கு, என் இயக்கப் படம் வரலைங்கிற பாரத்தோட… இந்த அறிவிப்பு மானம் போகாம இடுக்கண் களைந்த நட்பாய் கண்களில் நீர் கோர்த்த பரவசத்தோட, சுவாசத்தை சுவாரஸ்யமா மாத்தியிருக்கு,நம்பிக்கை தசையை ஏத்தியிருக்கு, தித்திப்பை திசையெங்கும் கூட்டியிருக்கு. நன்றி சொல்ல நா வரண்டுப் போனதால , எழுதி சமாளிக்க ஏதுவான வார்த்தையை வானத்தில கண்கள் தேடிகிட்டிருக்கு.
விருது பெற்ற அனைவருக்கும் என் மனமொத்தத்தையும் ஒரு பூப்பந்தாக்கி வாழ்த்துக்கள். முந்தாநாள் பொறந்து வந்த குதிரைகளோடு பந்தயத்தில் ...
எழுத்தாளர் இரா. சரவணன் எழுதிய 'சங்காரம்' நூல் வெளியீடு & அறிமுக விழா
'கத்துக்குட்டி', 'உடன்பிறப்பே', 'நந்தன்' ஆகிய படங்களை இயக்கிய இயக்குநரும், எழுத்தாளருமான இரா. சரவணன் எழுதிய 'சங்காரம்' எனும் நூல் வெளியீட்டு விழா சென்னையில் சிறப்பாக நடைபெற்றது.
இவ்விழாவில் எழுத்தாளரும், பத்திரிக்கையாளரும், பதிப்பாளருமான நக்கீரன் கோபால் , மக்களவை உறுப்பினரும், இலக்கியவாதியுமான திருமதி தமிழச்சி தங்கபாண்டியன், 'ஆனந்த விகடன்' ஆசிரியர் முருகன், 'ஜூனியர் விகடன்' ஆசிரியர் கலைச்செல்வன், கவிஞர் வெயில், நடிகர்கள் சசிகுமார், சூரி, திருமதி கலா சின்னதுரை, தயாரிப்பாளர் யுவராஜ் கணேசன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.
ஜூனியர் விகடன் எனும் வார இதழில் ஐம்பது வாரத்திற்கும் மேலாக எழுதப்பட்டு, வாசகர்களிடம் பேராதரவை பெற்ற தொடர்.. தற்போது' சங்காரம்' எனும் நூலாக தயாராகி இருக்கிறது. வன்...
“வரலாற்றின் ஒரு பகுதியில் இருந்து உருவான ‘பராசக்தி’ எல்லோருக்கும் ஸ்பெஷல் படமாக இருக்கும்” – நடிகர் அதர்வா முரளி!
வசீகரமும், வித்தியாசமான கதாபாத்திரங்களை தேடி நடிப்பதில் ஆர்வம் கொண்டவருமான நடிகர் அதர்வா முரளி பல்வேறு வெற்றிப்படங்களில் தனது நடிப்பு திறனை நிரூபித்துள்ளார். தற்போது நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியாக இருக்கும் ‘பராசக்தி’ படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களின் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளார். ஜனவரி 10, 2026 அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகவுள்ள இந்தப் படத்தில் இருந்து தனது மனதுக்கு நெருக்கமான தருணங்களைப் பகிர்ந்து கொண்டுள்ளார்.
“ஆகாஷ் பாஸ்கரன் சாரை இயக்குநராக எனக்கு முன்பே தெரியும். தற்போது அவர் படங்கள் தயாரிப்பதிலும் ஆர்வம் காட்டி வருகிறார். ‘பராசக்தி’ கதையையும் அதில் என்னுடைய கதாபாத்திரம் குறித்தும் என்னிடம் முதல...
*துபாயில் கண்ணன் ரவி குழுமம் (Kannan Ravi Group) க்கு சொந்தமான புதிய பாந்தர் கிளப் Panther Club ஐ, திறந்து வைத்த கிங் கான் ஷாருக்கான் ! (King Khan Shah Rukh Khan)*
பிரமாண்ட தொடக்கம்! Kannan Ravi Group-ன் Panther Club திறப்பு விழாவில் ஷாருக் கான் கலந்துகொண்டார் !
துபாயில் Kannan Ravi Group நிறுவனத்திற்கு சொந்தமான புதிய பிரம்மாண்ட பொழுதுபோக்கு மையமான Panther Club-ஐ, கிங் கான் ஷாருக் கான் நேற்று திறந்து வைத்து சிறப்பித்தார். இந்த நிகழ்வு, துபாயின் நைட்லைஃப் வரலாற்றில் முக்கியமான தருணமாக மாறி, புத்தாண்டு கொண்டாட்டங்களின் உச்சமாக அமைந்தது.
துபாயை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் கண்ணன் ரவி குழுமம் (Kannan Ravi Group), வணிகம், ரியல் எஸ்டேட், விருந்தோம்பல் (Hospitality), பொழுதுபோக்கு மற்றும் லக்ஷரி சேவைகள் உள்ளிட்ட பல துறைகளில் சிறப்பாக செயல்பட்டு வரும் முன்னணி நிறுவ...
தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்திற்கான 2026 முதல் 2029ம் ஆண்டுக்கான நிர்வாகிகள் மற்றும் செயற்குழு உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பதற்கான சங்க தேர்தல் வரும் பிப்ரவரி 22, 2026 அன்று நடைபெற உள்ளது. இத் தேர்தலில் ஜி.கே.எம்.தமிழ்குமரன் தலைமையிலான தயாரிப்பாளர்களின் நலன் காக்கும் அணி அறிமுக கூட்டம் 22-12-2025 அன்று ஹோட்டல் ராதா பார்க் இன்னில் மாலை 6.00 மணியளவில் தொடங்கி நடைப்பெற்றது. இக் கூட்டதிற்கு சிறப்பு விருந்தினர்களாக கலைபுலி எஸ்.தாணு, பெப்சி தலைவர் ஆர்.கே.செல்வமணி, பேராசிரியர்ஏ.எஸ்.பிரகாசம், வி.சி.குகநாதன், இசையமைப்பாளர் தீனா, இயக்குநர் லிங்குசாமி, இயக்குநர் சரண் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்ச்சியில், தயாரிப்பாளர்கள் நலன் காக்கும் அணி சார்பில் போட்டியிடும் தலைவர் உள்ளிட்ட அனைத்து வேட்பாளர்களுக்கும் கலைப்புலி எஸ்.தாணு மற்றும் பெப்ஸி தலைவர் ஆர்.கே.செல்வமணி ஆகியோர...