செவ்வாய்க்கிழமை, அக்டோபர் 6
Shadow

செய்திகள்

மறைந்த இயக்குநர் விக்ரம் சுகுமாரனின் குடும்பத்திற்கு தயாரிப்பாளர் கண்ணன் ரவி ரூ.5 லட்சம் நிதி!

மறைந்த இயக்குநர் விக்ரம் சுகுமாரனின் குடும்பத்திற்கு தயாரிப்பாளர் கண்ணன் ரவி ரூ.5 லட்சம் நிதி!

CINI NEWS, HOME SLIDER, NEWS, சினி நிகழ்வுகள், செய்திகள்
  *மறைந்த இயக்குநர் விக்ரம் சுகுமாரனின் குடும்பத்திற்கு தயாரிப்பாளர் கண்ணன் ரவி ரூ.5 லட்சம் நிதியுதவி வழங்கினார்!* தனது தனித்துவமான கதைசொல்லலுக்கு பெயர் பெற்ற இயக்குநர் விக்ரம் சுகுமாரனின் எதிர்பாராத மறைவு தமிழ் திரையுலகினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. விக்ரம் சுகுமாறனின் இந்த திடீர் மறைவு திரையுலகினருக்கு மட்டுமல்ல அவரது குடும்பத்தினருக்குமே ஈடுசெய்ய முடியாத இழப்பு. இந்த நேரத்தில் மறைந்த இயக்குநர் விக்ரம் சுகுமாரனின் குடும்பத்திற்கு ஆதரவளிக்கும் விதமாக அவரது கடைசிப் படமான ’இராவண கோட்ட’த்தைத் தயாரித்த தயாரிப்பாளர் கண்ணன் ரவி ரூ. 5 லட்சம் நிதியுதவி அளித்துள்ளார். நடிகர் சாந்தனு பாக்யராஜ், அம்மா கிரியேஷன்ஸ் டி. சிவா, FEFSI தலைவர் இயக்குநர் ஆர்.கே. செல்வமணி உள்ளிட்ரோர் முன்னிலையில் விக்ரம் சுகுமாரனின் தாயாரிடம், தயாரிப்பாளர் கண்ணன் ரவி மகன் தீபக் ரவி காசோலையை வழங்கினார். ...
மூத்த மொழி தமிழ்… கமல்ஹாசனுக்கு நடிகர் சங்கம் முழு ஆதரவு

மூத்த மொழி தமிழ்… கமல்ஹாசனுக்கு நடிகர் சங்கம் முழு ஆதரவு

CINI NEWS, HOME SLIDER, MOVIES, NEWS, அரசியல், சினி நிகழ்வுகள், செய்திகள், தமிழக அரசியல், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
      உலக நாயகன் .கமல்ஹாசன் அவர்கள் தமிழ்த் திரைப்படங்களை கடந்து இந்திய அளவிலும், அகில உலக அளவிலும் தனது படைப்புகளின் வாயிலாக தனி முத்திரை பதித்த ஒரு மூத்த கலைஞர். திரைப்படங்களையே தனது சுவாசமாகவும், உணர்வாகவும், உயிராகவும் சுமந்து வாழும் மகத்தான ஒரு படைப்பாளர். வெகுஜன மக்களை மட்டுமின்றி, அந்த மக்களின் பேராதரவையும், அபிமானத்தையும் ஈட்டிய பல திரை நட்சத்திரங்களின் மனதிலும், மதம், இனம், மொழி பேதமின்றி தனது பேரன்பாலும், கலைத்திறனாலும் நிரந்தர இடம் பிடித்தவர் பத்மஸ்ரீ டாக்டர்.கமல்ஹாசன் அவர்கள். அந்த வகையில், அவருக்கும் கிரிஷ் கர்னாட்டுக்கும் உள்ள நட்பும் அவர் எழுத்தின் மேல் இருக்கும் பெரும் ஈடுபாடும் அனைவரும் அறிந்ததே. அவரது 'ராஜ்கமல் பிலிம்ஸ்' நிறுவனத்தின் முதல் தயாரிப்பான 'ராஜ பார்வை' திரைப்படத்தை ஆழ்ந்த சகோதர பாசத்துடன் முன் நின்று 'கிளாப்' அடித்து துவக்கி வைத்...
4 ஆண்டு முயற்சியில் ஹிப் ஆப் ஆதி உருவாக்கிய ‘ *பொருநை* ’ ஆவணப் படம் !”

4 ஆண்டு முயற்சியில் ஹிப் ஆப் ஆதி உருவாக்கிய ‘ *பொருநை* ’ ஆவணப் படம் !”

CINI NEWS, HOME SLIDER, NEWS, அரசியல், சினி நிகழ்வுகள், செய்திகள், தமிழக அரசியல், நடிகர்கள், முதல்வர் ஸ்டாலின்
  “இந்தியளவில் இதுவே முதல் முறை...” - தொல்லியல் ஆராய்ச்சி ஆவணப் படத்தை வெளியிடும் ஹிப் ஆப் ஆதி பெருமிதம் “4 ஆண்டு முயற்சியில் ‘ *பொருநை* ’ ஆவணப் படம் உருவாக்கம்!” இசையமைப்பாளர், நடிகர், பாடகர் எனப் பன்முகம் கொண்ட ஹிப் ஹாப் ஆதி 2019-ம் ஆண்டு தமிழ் எழுத்து வடிவத்தின் பரிணாமம் குறித்து ‘தமிழி’ என்ற ஆவணப்பட தொடரை வெளியிட்டிருந்தார். இதனைத் தொடர்ந்து தற்போது தொல்லியல் அகழ்வாராய்ச்சி தொடர்பாக ஒரு ஆவணப்படத்தை உருவாக்கியுள்ளார். 'மூக்குத்தி அம்மன்' இரண்டாம் பாகம் மற்றும் இன்னும் ஒரு படத்திற்கு இசை அமைக்கிறேன்" என்றும் "'ஜோ' படத்தை இயக்கிய ஹரிஹரன் ராம் இயக்கும் புதிய படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டிருக்கிறேன். அதற்கான படப்பிடிப்பு, என்னுடைய இசை உலக சுற்றுப்பயணம் முடியும் தருவாயில் இந்த படத்தை நடித்து முடிக்கத் திட்டமிட்டு இருக்கிறேன். இது தவிர இன்னொரு படத்திலும் நடிக்க ஒப்புக் கொண்டுள...
பெர்ப்லெக்ஸிடி ஏஐ நிறுவனர் அரவிந்த் ஶ்ரீநிவாஸை அமெரிக்காவில் சந்தித்துப் பேசினார் கமல்ஹாசன்!

பெர்ப்லெக்ஸிடி ஏஐ நிறுவனர் அரவிந்த் ஶ்ரீநிவாஸை அமெரிக்காவில் சந்தித்துப் பேசினார் கமல்ஹாசன்!

CINI NEWS, HOME SLIDER, NEWS, உலக செய்திகள், செய்திகள், நடிகர்கள்
    சான்ஃப்ரான்சிஸ்கோவில் சந்தித்துக்கொண்ட சாதனைத் தமிழர்கள்! பெர்ப்லெக்ஸிடி ஏஐ நிறுவனர் அரவிந்த் ஶ்ரீநிவாஸை அமெரிக்காவில் சந்தித்துப் பேசினார் கமல்ஹாசன்! பெர்ப்லெக்ஸிடி ஏஐ செயற்கை நுண்ணறிவுத் துறையில் இன்று சாட்ஜிபிடி பரபரப்பாகப் பேசப்படுகிறது. அது தொடாத பகுதிகளிலும் கூட சிறப்பாகச் செயல்பட, கூடுதல் திறன்களோடு பெர்ப்லெக்ஸிடி ஏஐ நிறுவனம் வந்திருக்கிறது. சாட்ஜிபிடி என்பது படைப்புத் துறையிலும் உரையாடலிலும் பொதுத் தேவைகளுக்காகவும் பணியாற்றுகிறது எனில், பெர்ப்லெக்ஸிடி ஏஐ என்பதுஆய்வு நோக்கங்களுக்காகவும், உண்மை சரிபார்ப்புக்கும் பொருத்தமானதாக உள்ளது. கூகிளுக்கு நிகராக அல்லது அதை விட அதிகமான சாத்தியங்களைக் கொண்ட நிறுவனமாக பெர்ப்லெக்ஸிட்டியை உலகத்தொழில்நுட்ப வல்லுனர்கள் கருதுகிறார்கள். சர்வதேச அளவில் மிகுந்த கவனம் பெற்ற தொழில்நுட்ப ஆளுமையாகவும், செயற்கை நுண்ணறிவுத்து...
தமிழ் சினிமாவின் மிக மூத்த பாடலாசிரியர் கவிஞர்  முத்துலிங்கத்திற்கு நடைபெற்ற பாராட்டு விழாவில் கவிஞருக்கு இயக்குனர் பாக்யராஜ் தங்க மோதிரம் அணிவித்து மகிழ்ந்தார்!

தமிழ் சினிமாவின் மிக மூத்த பாடலாசிரியர் கவிஞர்  முத்துலிங்கத்திற்கு நடைபெற்ற பாராட்டு விழாவில் கவிஞருக்கு இயக்குனர் பாக்யராஜ் தங்க மோதிரம் அணிவித்து மகிழ்ந்தார்!

CINI NEWS, HOME SLIDER, NEWS, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகர்கள், நடிகைகள்
      தமிழ் சினிமாவின் மிக மூத்த பாடலாசிரியர் கவிஞர்  முத்துலிங்கத்திற்கு நடைபெற்ற பாராட்டு விழாவில் கவிஞருக்கு இயக்குனர் பாக்யராஜ் தங்க மோதிரம் அணிவித்து மகிழ்ந்தார்! தென்னிந்தியத் திரைப்பட எழுத்தாளர்கள் சங்கம் மற்றும் மயிலாப்பூர் கணபதிஸ் வெண்ணைய் நெய் இணைந்து வழங்கிய கவிஞர்  முத்துலிங்கத்தின் பாராட்டு விழா சென்னையில் வெகு சிறப்பாக நடைபெற்றது. திரைப் பிரபலங்கள் உள்ளிட்ட பல்துறை முக்கிய பிரமுகர்கள் இந்நிகழ்வில் திரளாக பங்கேற்றனர். முத்துக்கு முத்தான விழா என்ற தலைப்பில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் முத்துலிங்கம் திரைப்பட முத்துக்கள் எனும் நூல் வெளியிடப்பட்டது. இப்புத்தகத்தை நடிகர் சிவகுமார் வெளியிட சென்னை மாநகரத்தின் முன்னாள் மேயரும் மனிதநேய அறக்கட்டளையின் தலைவருமான சைதை துரைசாமி முதல் பிரதியை பெற்றுக் கொண்டார். காற்றில் விதைத்த கருத்து நூலின் இரண்டாவது ப...
சிம்பொனி இசை விருந்து படைத்த இசைஞானி இளையராஜாவுக்கு தமிழ் திரைப்பட பத்திரிகையாளர்கள் சங்கம் சார்பில் சிறப்பு கவுரவம்!

சிம்பொனி இசை விருந்து படைத்த இசைஞானி இளையராஜாவுக்கு தமிழ் திரைப்பட பத்திரிகையாளர்கள் சங்கம் சார்பில் சிறப்பு கவுரவம்!

CINI NEWS, HOME SLIDER, NEWS, சினி நிகழ்வுகள், செய்திகள்
  இசைஞானி இளையராஜாவுக்கு விரைவில் பாரத ரத்னா விருது - வாழ்த்திய TMJA நிர்வாகிகள் நம்பிக்கையுடன் சொன்னதை கேட்டு சிரித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்திய இசைஞானி. உலகம் போற்றும் வகையில் சமீபத்தில் சிம்பொனி இசை விருந்து படைத்த பண்ணைபுரம் தந்த இசைஞானி இளையராஜா அவர்களுக்கு தமிழ் திரைப்பட பத்திரிகையாளர்கள் சங்கம் சார்பில் சிறப்பு கவுரவம் செய்யப்பட்டது. இதற்காக வடபழனி முருகன் கோயிலில் இளையராஜா அவர்களின் பெயரில் சிறப்பு அர்ச்சனை செய்து கோயில் பிரசாதமும், சங்கம் சார்பில் அழகிய நினைவு பரிசையும் தலைவர் கவிதா, செயலாளர் கோடங்கி ஆபிரகாம், பொருளாளர் ஒற்றன் துரை, துணைத் தலைவர் பரத் உள்ளிட்ட நிர்வாகிகள் இசைஞானியை சந்தித்து வழங்கி, "விரைவில் பாரத ரத்னா விருது கிடைக்க வேண்டும்" என்று அட்வான்ஸ் வாழ்த்துகளையும் தெரிவித்த போது, அதைக் கேட்டு மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வழக்கமான சிரிப்பை பதிலாக தந்...
ரூ.1,488.50 கோடி கடனில் சென்னை மாநகராட்சி!

ரூ.1,488.50 கோடி கடனில் சென்னை மாநகராட்சி!

HOME SLIDER, NEWS, politics, அரசியல், செய்திகள், தமிழக அரசியல்
  ரூ.1,488.50 கோடி கடனில் சென்னை மாநகராட்சி சென்னை மாநகராட்சிக்கு ரூ.1,488.50 கோடி கடன் நிலுவையில் இருப்பதாக மேயர் பிரியா தகவல் "ரூ.3,065.65 கோடி கடன் இருந்த நிலையில் அதில் ரூ.1,577.10 கோடி திருப்பி செலுத்தப்பட்டுள்ளது; ரூ.1,488,50 கோடி கடனுக்கு வட்டி மட்டும் ரூ.8.5 கோடி செலுத்தப்பட்டு வருகிறது.
நடிகை அளித்த பாலியல் புகார் வழக்கு விசாரணைக்கு ஆஜரானார் சீமான்!

நடிகை அளித்த பாலியல் புகார் வழக்கு விசாரணைக்கு ஆஜரானார் சீமான்!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள், தமிழக அரசியல், நடிகர்கள், நடிகைகள்
  விசாரணைக்கு ஆஜரானார் சீமான்! நடிகை அளித்த பாலியல் புகார் வழக்கு விசாரணைக்காக நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் வளசரவாக்கம் காவல் நிலையத்தில் வெள்ளிக்கிழமை இரவு ஆஜரானார். வழக்கு தொடர்பாக காவல் துறை 2 முறை சம்மன் அனுப்பிய நிலையில் தற்போது சீமான் ஆஜராகி உள்ளார். காவல் நிலையம் வரை சீமானின் காரை அனுமதிக்க வேண்டும் என காவல் துறையுடன் தொண்டர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து சீமானின் காரை மட்டும் அனுமதித்த காவல்துறை, மற்ற கார்களை தடுத்து நிறுத்தினர். இருப்பினும், வளசரவாக்கம் காவல் நிலையம் அருகே கூடியுள்ள நாதகவினர் தடுப்புகளை தாண்டி உள்ளே செல்ல முயன்றனர். இதனால் நாதகவினர்-காவல்துறையினர் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. விசாரணைக்கு ஆஜராகியுள்ள சீமானிடம் 50க்கும் மேற்பட்ட கேள்விகளுக்கு எழுத்துப்பூர்வமாக பதில் பெற காவல் துறை திட்டமிட்டுள்ளது. சீமான் ஆஜராவதைய...
சீமானின் “பிசுறு” பேச்சால் ஒதுங்கியிருந்த காளியம்மாள் “நாம் தமிழர்” கட்சியிலிருந்து விலகல்!

சீமானின் “பிசுறு” பேச்சால் ஒதுங்கியிருந்த காளியம்மாள் “நாம் தமிழர்” கட்சியிலிருந்து விலகல்!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள், தமிழக அரசியல், நடிகர்கள்
  சீமானின் “பிசுறு” பேச்சால் ஒதுங்கியிருந்த காளியம்மாள் “நாம் தமிழர்” கட்சியிலிருந்து விலகல்! நாம் தமிழர் கட்சியின் நட்சத்திர பேச்சாளரான காளியம்மாள் அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளரான சீமானுடன் நிலவும் கருத்து முரண்பாடு காரணமாக விலகியே இருந்தார். சமீபத்தில் செய்தியாளர்களை சந்தித்த சீமான் காளியம்மாள் விலகுவதாக இருந்தால் விலகி கொள்ளட்டும் என பேசினார். இந்நிலையில் காளியம்மாள் நாம் தமிழர் கட்சியிலிருந்து விலகியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் : கடந்த 6 வருடகாலமாக ஒரு சமூக மாற்றத்திற்காக ஒரு பெண்ணாக இருந்து எவ்வளவு போராட முடியுமோ, என் ஆற்றலையும் மீறி உங்கள் எல்லோர் அன்பாலும், நம்பிக்கையாலும் இந்த களத்தில் நின்றிருக்கிறேன். எனினும் காலத்தின் சூழல், உயிராக எண்ணி, வழிநடந்த நாம் தமிழர் கட்சி எனும் இந்த பாதை இத்துடன் முடித்து வைக்கப்படுகிறது என்பதை மிகவும் வருத்தத்த...
தமிழ் நாடு அரசியலில் திடீர் பரபரப்பு ஜெ., பிறந்த நாளை முன்னிட்டு அவர் வீட்டுக்கு சென்று மலர் தூவி மரியாதை செலுத்திய சூப்பர் ஸ்டார் ரஜினி!

தமிழ் நாடு அரசியலில் திடீர் பரபரப்பு ஜெ., பிறந்த நாளை முன்னிட்டு அவர் வீட்டுக்கு சென்று மலர் தூவி மரியாதை செலுத்திய சூப்பர் ஸ்டார் ரஜினி!

HOME SLIDER, NEWS, politics, அரசியல், செய்திகள், தமிழக அரசியல், நடிகர்கள், நடிகைகள்
    முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்த நாளை முன்னிட்டு போயஸ்கார்டனில் இருக்கும் அவரது வீட்டுக்கு சென்று ஜெயலலிதா உருவ படத்துக்கு மலர் தூவி நடிகர் ரஜினிகாந்த் மரியாதை செலுத்தினார். அரசியலில் இருந்த ஜெயலலிதாவுக்கும், அரசியலுக்கு வரலாம் என்றிருந்த ரஜினிக்கும் பல முரண்கள் இருந்தது. பல முறை ஜெயலலிதாவை நடிகர் ரஜினிகாந்த கடுமையாக விமர்சித்த வரலாறும் உண்டு. அப்படி இருக்கும் சூழலில் ஜெயலலிதா மறைந்து பல ஆண்டுகள் ஆகிற நிலையில் எந்த ஆண்டும் இப்படி ஜெயலலிதா வீட்டுக்கு ரஜினி சென்று மரியாதை செலுத்தியது இல்லை. இந்த ஆண்டு யாரும் எதிர்பாராதவிதமாக ஜெயலலிதா வீட்டுக்கு ரஜினி சென்று மலர் தூவி மரியாதை செலுத்தியது தமிழ் நாடு அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது குறிப்பிடத்தக்கது.  ...