ஞாயிற்றுக்கிழமை, அக்டோபர் 11
Shadow

செய்திகள்

ராமநாதபுரம் அரசு ஆஸ்பத்திரியில் காவலாளிகள் திடீர் போராட்டம்!

ராமநாதபுரம் அரசு ஆஸ்பத்திரியில் காவலாளிகள் திடீர் போராட்டம்!

HOME SLIDER, NEWS, செய்திகள்
ராமநாதபுரம் மருத்துவமனை மருத்துவ கல்லூரியில் 400-க்கும் மேற்பட்டவர்கள் உள்நோயாளிகளாக சிகிச்சை பெற்று வருகின்றனர். தினமும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த 1000-க்கும் மேற்பட்டோர் சிகிச்சைக்கு வந்து செல்கின்றனர். இங்கு 200-க்கும் மேற்பட்டோர் காவலாளிகள் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றி வருகின்றனர். வார்டுகளில் தீவிர கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டு வரும் இவர்கள் நோயாளிகளை சந்திக்க கட்டுப்பாடுகளுடன் உறவினர்களை அனுமதித்து வருகின்றனர். இது தொடர்பாக அரசு ஆஸ்பத்திரி காவலாளிக்கும், நோயாளி ஒருவரின் குடும்ப உறுப்பினர்களுக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனை கண்டித்து அரசு ஆஸ்பத்திரி ஒப்பந்த காவலாளிகள் 200-க்கும் மேற்பட்டோர் இன்று பணியை புறக்கணித்து முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவலறிந்த உயரதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து பேச்சுவார்த்தை நடத்திய பின் போராட்டம் கைவ...
வாடிக்கையாளர்களின் தேவையை உணர்ந்து சேவையாற்ற வேண்டும் –  நல்லி குப்புசாமி

வாடிக்கையாளர்களின் தேவையை உணர்ந்து சேவையாற்ற வேண்டும் – நல்லி குப்புசாமி

HOME SLIDER, NEWS, செய்திகள்
    *வாடிக்கையாளர்களின் தேவையை உணர்ந்து சேவையாற்ற வேண்டும் - தொழிலதிபர் நல்லி குப்புசாமி* *வாடிக்கையாளர்களின் தேவைகளைப் பூர்த்திச் செய்ய நாள்தோறும் நல்ல விசயங்களைத் தேடித் தேடிக் கற்கிறோம்- ‘இறைவி’ விற்பனையக நிறுவனர் ஜெயஸ்ரீ ராஜேஷ்* சென்னை மாநகர மக்களுக்கு மட்டுமல்லாமல், புறநகரில் இருக்கும் பெண்மணிகளுக்கு, அவர்களின் அனைத்து வகையான சுப வைபவங்களுக்குரிய ஆடை அணிகலன் தேவைகளை, மனதிற்கு நிறைவாக பூர்த்தி செய்து வரும் விற்பனையகங்களில் சென்னை வேளச்சேரி பிரதான சாலை, செம்பாக்கம் பகுதியில் இயங்கி வரும் ‘இறைவி’ எனும் விற்பனையகமும் ஒன்று. தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திரமான 'மக்கள் செல்வன்' விஜய் சேதுபதியின் உடன்பிறந்த சகோதரி  ஜெயஸ்ரீ ராஜேஷின் நிர்வாகத்தின் கீழ் இயங்கி வரும் 'இறைவி' விற்பனையகம் ஐந்தாண்டுகளை பூர்த்தி செய்திருக்கிறது. இதனை கொண்டாடும் வகையில் இந்நிறுவன வள...
ஆசிய கோப்பை கிரிக்கெட்: இந்தியா-பாகிஸ்தான் நாளை மோதல்!

ஆசிய கோப்பை கிரிக்கெட்: இந்தியா-பாகிஸ்தான் நாளை மோதல்!

HOME SLIDER, NEWS, sports, செய்திகள், விளையாட்டு செய்திகள்
15-வது ஆசிய கோப்பை 20 ஓவர் கிரிக்கெட் போட்டி ஐக்கிய அரபு எமிரேட்சு நாட்டில் இன்று தொடங்குகிறது. இந்த போட்டியில் மொத்தம் 6 அணிகள் பங்கேற்கின்றன. இரண்டு பிரிவுகளாக அந்த அணிகள் பிரிக்கப்பட்டுள்ள நிலையில் 'ஏ' பிரிவில் 7 முறை சாம்பியனான இந்தியா, 2 முறை ஆசிய கோப்பையை வென்ற பாகிஸ்தான், ஆங்காங் ஆகிய அணிகளும், 'பி' பிரிவில் 5 முறை சாம்பியனான இலங்கை, வங்காளதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளும் இடம் பெற்றுள்ளன. ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள அணிகளுடன் தலா ஒருமுறை மோத வேண்டும். லீக் முடிவில் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் 'சூப்பர் 4' சுற்றுக்கு தகுதி பெறும். 'சூப்பர் 4' சுற்றில் 4 அணிகள் விளையாடும். இதில் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதி போட்டிக்கு தகுதி பெறும். இந்நிலையில் துபாயில் இன்று இரவு 7.30 மணிக்கு நடைபெறும் தொடக்க ஆட்டத்தில் 'பி' பிரிவில் உள்ள இலங்கை-ஆப்கானிஸ்த...
பாகிஸ்தான் கொடியுடன் சுற்றி திரிந்த மூன்று பயங்கரவாதிகள் கைது- பாதுகாப்பு படையினர் நடவடிக்கை!

பாகிஸ்தான் கொடியுடன் சுற்றி திரிந்த மூன்று பயங்கரவாதிகள் கைது- பாதுகாப்பு படையினர் நடவடிக்கை!

HOME SLIDER, NEWS, செய்திகள்
ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகள் குறித்த தேடுதல் வேட்டையில் மாநில காவல்துறையினர், ராஷ்ட்ரிய ரைபிள்ஸ் மற்றும் மத்திய ரிசர்வ் போலீஸ் உள்ளிட்ட பாதுகாப்புப் படையினருடன் இணைந்து ஈடுபட்டு வருகின்றனர். அவர்கள் நடத்திய சோதனையின் போது ​​கோரிபுராவில் இருந்து போமை பகுதி நோக்கி வந்த மூன்று சந்தேகத்திற்குரிய நபர்களை தடுத்து நிறுத்த முற்பட்டனர். ஆனால் அந்த நபர்கள் அங்கிருந்து தப்பி ஓட முயன்றனர், இருப்பினும், பாதுகாப்புப் படையினர் அவர்களை மடக்கி பிடித்து கைது செய்தனர். விசாரணையின் போது அவர்கள் பாகிஸ்தானை சேர்ந்த லஷ்கர் இ தொய்பா பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்த ஷாரிக் அஷ்ரப், சக்லைன் முஷ்டாக் மற்றும் தவ்பீக் ஹசன் ஷேக் என அடையாளம் காணப்பட்டனர். மேலும் நடத்தப்பட்ட சோதனையில், பயங்கரவாதிகள் வைத்திருந்த பாகிஸ்தான் கொடிகள், மூன்று கை எறிக்குண்டுகள் உள்ளிட்டவை கைப்பற்றப்பட்டன. ஜம்முகாஷ்மீரில் பாதுகாப்புப...
ஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணை இறுதி அறிக்கை- நாளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் தாக்கல்!

ஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணை இறுதி அறிக்கை- நாளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் தாக்கல்!

CINI NEWS, HOME SLIDER, NEWS, politics, அரசியல், சினி நிகழ்வுகள், செய்திகள், தமிழக அரசியல், நடிகைகள்
முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்க ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான ஆணையத்தை அமைத்து 2017-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 25-ந்தேதி அப்போதைய முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டர். முதல் கட்டமாக விசாரணை ஆணையத்தின் காலம் 3 மாதமாக நிர்ணயிக்கப்பட்டது. விசாரணையை தொடங்கிய ஆணையம், ஜெயலலிதாவின் உதவியாளர்கள் அவருடன் உடன் இருந்தவர்கள், உறவினர்கள், அமைச்சர்கள், போலீஸ் அதிகாரிகள், அப்பல்லோ நிர்வாகம், டாக்டர்கள் உள்ளிட்ட பலருக்கு சம்மன் அனுப்பி விசாரித்து வந்தது. குறிப்பிட்ட காலத்துக்குள் விசாரணை முடிவடையாததால் 2017 டிசம்பர் 24-ந் தேதியில் இருந்து 6 மாதங்களுக்கு ஆணையத்தின் கால அவகாசத்தை தமிழக அரசு முதன் முதலாக நீட்டித்தது. அதன்பிறகு அடுத்தடுத்து ஆணையத்தின் கால அவகாசம் நீட்டிக்கப்பட்டு கொண்டே வந்தது. விசாரணை ஆணையத்தின் கால அவகாசம் தொடர்ந்து நீட்ட...
இயக்குனர் பாரதிராஜா நலமோடு இருக்கிறார் – கவிஞர் வைரமுத்து தகவல்!

இயக்குனர் பாரதிராஜா நலமோடு இருக்கிறார் – கவிஞர் வைரமுத்து தகவல்!

CINI NEWS, HOME SLIDER, NEWS, சினி நிகழ்வுகள், செய்திகள்
தமிழ் திரையுலகின் முன்னணி இயக்குனராக அறியப்பட்டவர் பாரதிராஜா. இவர் 16 வயதினிலே படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானார். அதன்பின்னர் கிழக்கே போகும் ரயில், சிகப்பு ரோஜாக்கள், புதிய வார்ப்புகள், நிழல்கள், அலைகள் ஓய்வதில்லை, காதல் ஓவியம், முதல் மரியாதை உள்ளிட்ட பல படங்களை இயக்கியதன் மூலம் தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத இயக்குனராக உருவெடுத்தார். இயக்குனராக மட்டுமில்லாமல் நடிகராகவும் பல படங்களில் நடித்துள்ளார். சில தினங்களுக்கு முன்பு இயக்குனர் பாரதிராஜா திடீர் உடல்நலக் குறைவு காரணமாக சென்னை தி.நகரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதையடுத்து சிகிச்சை பெற்று வரும் இயக்குனர் பாரதிராஜா அமைந்தகரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் மேல் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் பாரதிராஜாவை மருத்துவமனைக்கு நேரில் சென்று பார்த்துள்ளார் கவிஞர் வைரமுத்த...
தமிழக பஞ்சாயத்து அமைப்புகள் ஆன் லைன் மூலம் பொருட்களை கொள்முதல் செய்ய ஏற்பாடு- ஜெம் அமைப்பு தகவல்!

தமிழக பஞ்சாயத்து அமைப்புகள் ஆன் லைன் மூலம் பொருட்களை கொள்முதல் செய்ய ஏற்பாடு- ஜெம் அமைப்பு தகவல்!

HOME SLIDER, NEWS, செய்திகள்
ஜெம் எனப்படும் அரசு மின்னணு சந்தை மூலம் பஞ்சாயத்து அமைப்புகள் பொருட்களை கொள்முதல் செய்வதற்கு பயிற்சிகள் வழங்கப்பட உள்ளதாக அந்த அமைப்பின் தலைமைச் செயல் அதிகாரி பி.கே.சிங், தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழ்நாட்டில் மொத்தம் பதிவு செய்துள்ள 8 லட்சம் நிறுவனங்களில் 4 லட்சம் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் என்றார். ஜெம் அமைப்பை பஞ்சாயத்து அமைப்புகளுடன் ஒருங்கிணைத்ததன் மூலம் ஆன்லைன் மூலம் பொருட்களை கொள்முதல் செய்ய வழிவகை ஏற்பட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்தார். இந்தத் திட்டம் ஹரியானா மாநிலத்தில் சோதனை அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டு வெற்றி பெற்றிருப்பதால் அடுத்தக்கட்டமாக நாடு முழுவதும் அமல்படுத்தப்பட உள்ளதாகக் அவர் கூறினார். மாநில அரசின் ஒத்துழைப்பு மற்றும் வழிகாட்டுதல் காரணமாக ஜெம் இணையதளத்தில் கொள்முதல் செய்யும் மூன்றாவது பெரிய மாநிலமாக தமிழ...
பேனா நினைவு சின்னம் அமைக்க ஆரம்ப கட்ட அனுமதிகள் கிடைத்து விடும்?!

பேனா நினைவு சின்னம் அமைக்க ஆரம்ப கட்ட அனுமதிகள் கிடைத்து விடும்?!

HOME SLIDER, NEWS, செய்திகள்
முன்னாள் முதல்-அமைச்சர் மறைந்த தி.மு.க தலைவர் கருணாநிதிக்கு மெரினா கடற்கரையில் அண்ணா நினைவிட வளாகத்தில் 2.23 ஏக்கர் பரப்பளவில் அரசு சார்பில் நினைவிடம் கட்டப்பட்டு வருகிறது. உதயசூரியன் வடிவத்தில் நினைவிடத்தின் முகப்பு அமைகிறது. நினைவிடத்தின் பின்புறம் 360 மீட்டர் தொலைவில் நடுக்கடலில் பேனா வடிவிலான நினைவு சின்னம் அமைக்க அரசு திட்டம் வகுத்துள்ளது. கருணாநிதி நினைவிடத்தின் பின்பகுதியில் பெரிய கேட் அமைத்து அதன் வழியாக மக்கள் கடல் மேல் பாலத்தில் நடந்து சென்று பேனா நினைவு சின்னத்தை அடையும் வகையில் 650 மீட்டர் தூரத்துக்கு இரும்பு பாலம் அமைக்கவும் முடிவு செய்துள்ளனர் பாலத்தில் நடந்து செல்லும் பகுதி முழுவதும் கண்ணாடி தரையாக அமைக்கப்படும். இந்த பாலம் நிலத்தின் மீது 290 மீட்டரும், கடலின் மீது 360 மீட்டரும் அமையும் வகையில் கட்டுவதற்கு திட்டமிட்டுள்ளனர். கடலில் பேனா நினைவு சின்னம் அமைக்க ர...
ஐக்கிய அரபு அமீரகத்தை வீழ்த்தி ஆசிய கோப்பைக்கு தகுதி பெற்றது ஹாங்காங்!

ஐக்கிய அரபு அமீரகத்தை வீழ்த்தி ஆசிய கோப்பைக்கு தகுதி பெற்றது ஹாங்காங்!

HOME SLIDER, NEWS, sports, செய்திகள், விளையாட்டு செய்திகள்
இந்தியா, பாகிஸ்தான், இலங்கை உள்பட 6 அணிகள் பங்கேற்கும் 20 ஓவர் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் வருகிற 27-ந்தேதி தொடங்குகிறது. இந்த போட்டியில் மொத்தம் 6 நாடுகள் பங்கேற்கின்றன. இதில் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்காளதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய 5 நாடுகள் நேரடியாக விளையாடுகின்றன. ஒருநாடு மட்டும் தகுதி சுற்றில் இருந்து நுழையும். இதில் ஹாங்காங், ஐக்கிய அரபு எமிரேட்ஸ், குவைத், சிங்கப்பூர் ஆகிய 4 நாடுகள் பங்கேற்று விளையாடின. சிங்கப்பூர் தான் மோதிய 2 ஆட்டத்திலும் தோற்று வாய்ப்பை இழந்தது. நேற்று இரவு நடந்த கடைசி 'லீக்' ஆட்டங்களில் குவைத்-சிங்கப்பூர், ஆங்காங்-ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணிகள் மோதின. குவைத்துக்கு எதிரான ஆட்டத்தில் சிங்கப்பூர் அணி 19.5 ஓவரில் 104 ரன்னில் ஆல்-அவுட் ஆனது. பின்னர் குவைத் அணி 7.5 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 105 ரன் எடுத்து 6 விக்கெட் வித்தி...
தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய தலைவர் பூச்சி முருகன் திருநெல்வேலியில் ஆய்வு!

தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய தலைவர் பூச்சி முருகன் திருநெல்வேலியில் ஆய்வு!

HOME SLIDER, NEWS, செய்திகள், நடிகர்கள்
தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய தலைவர் பூச்சி எஸ். முருகன் வீட்டு வசதி வாரிய திருநெல்வேலி பிரிவு அலுவலக கட்டடத்தையும் திருநெல்வேலி மாவட்டம், பாளையங்கோட்டை வட்டம், குலவணிகர்புரம் கிராமத்தில் நடைபெறும் திருநெல்வேலி PHASE VII 892 வீட்டு வசதி வாரிய மனை குடியிருப்புகள் மேம்பாட்டு திட்ட பணிகளையும் ஆய்வு செய்து பணிகளை விரைந்து முடிக்க ஆலோசனை வழங்கினார். பாளையங்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் மு. அப்துல் வஹாப் எம்.எல்.ஏ., மற்றும் திமுக கழக நிர்வாகிகள், திருநெல்வேலி வீட்டு வசதி வாரிய செயற்பொறியாளர் பாண்டியராஜன், உதவி பொறியாளர் கண்ணன் உள்ளிட்ட வீட்டு வசதி வாரிய துறை உயர் அதிகாரிகள் உடன் இருந்தனர்.  ...