ஞாயிற்றுக்கிழமை, அக்டோபர் 11
Shadow

செய்திகள்

டெல்லி துணை முதல் மந்திரி மீது சிபிஐ வழக்குப்பதிவு  !

டெல்லி துணை முதல் மந்திரி மீது சிபிஐ வழக்குப்பதிவு !

HOME SLIDER, NEWS, politics, அரசியல், செய்திகள்
டெல்லியில் முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சியின் ஆட்சி நடைபெற்று வருகிறது. துணை முதல் மந்திரியாக மணீஷ் சிசோடியா செயல்பட்டு வருகிறார். மணீஷ் சிசோடியா வீட்டில் சி.பி.ஐ. அதிகாரிகள் இன்று அதிரடி சோதனை நடத்தினர். மதுபான உரிமம் வழங்குவதில் முறைகேடு நடைபெற்றுள்ளதாக பதியப்பட்ட வழக்கில் மணீஷ் சிசோடியாவின் வீடு உள்பட 21 இடங்களில் சி.பி.ஐ. அதிகாரிகள் சோதனை நடத்தினர். இந்நிலையில், டெல்லி துணை முதல் மந்திரி மணீஷ் சிசோடியா மீது சி.பி.ஐ. வழக்குப்பதிவு செய்துள்ளனர். புதிய மதுக்கொள்கை முறைகேடு புகாரில் டெல்லி துணை முதல் மந்திரி மணீஷ் சிசோடியா உள்ளிட்ட 16 பேர் மீது சிபிஐ வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது. துணை முதல் மந்திரி வீட்டில் சோதனை நடத்தப்பட்டதற்கு முதல் மந்திரி கெஜ்ரிவால் கண்டனம் தெரிவித்துள்ளார்....
வெடிகுண்டு தயாரித்த 6 பேர் கைது!

வெடிகுண்டு தயாரித்த 6 பேர் கைது!

HOME SLIDER, NEWS, செய்திகள்
வில்லியனூர் அருகே காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்த வாலிபரை கொல்ல வெடிகுண்டு தயாரித்த 6 பேர் கொண்ட கும்பலை போலீசார் கைது செய்தனர். வில்லியனூர் அருகே அரசூர் காலனியில் ஒரு வெட்டவெளி பகுதியில் ஒரு கும்பல் வெடிகுண்டு தயாரிப்பதாக வில்லியனூர் போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது. இதையடுத்து போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். அப்போது நாட்டு வெடிகுண்டு தயாரித்த 6 பேர் கொண்ட கும்பலை சுற்றி வளைத்து மடக்கி பிடித்தனர். விசாரணையில் அவர்கள் வில்லியனூர் கோபாலன் கடையை சேர்ந்த குமார் என்ற கலைக்குமார் (வயது22), சதீஷ்(21), சுரேஷ்(21), தீனா என்ற யுவராஜ்(21), சதீஷ்குமார் (23) மற்றும் வாழப்பட்டாம் பாளையத்தை சேர்ந்த ஜெயபிரகாஷ் (25) ஆகியோர் என்பது தெரியவந்தது. அவர்களிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் திடுக்கிடும் தகவலை தெரிவித்தனர். குமார் அதே பகுதியை சேர்ந்த ஒரு பெண்ணை காதலித்து வந்த...
கலைஞர் சொல்லி திருமா செய்யாதது திருமணம் மட்டும்தான் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு

கலைஞர் சொல்லி திருமா செய்யாதது திருமணம் மட்டும்தான் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு

HOME SLIDER, NEWS, செய்திகள், தமிழக அரசியல், முதல்வர் ஸ்டாலின்
இன்றைக்கு போல 30 ஆண்டுகளுக்கு முன்பு திருமாவும் நானும் நெருக்கமாக இருந்திருந்தால், அவருக்கு ஒரு பெண்ணை பார்த்து திருமணம் செய்து வைத்திருப்பேன். கலைஞர் பலமுறை திருமாவிடம் திருமணம் செய்ய கூறினார்; கலைஞர் சொல்லி திருமா செய்யாதது திருமணம் மட்டும்தான் - முதலமைச்சர் பேச்சு. ஆனால், திருமாவளவன் விடுதலை சிறுத்தைகள் கட்சியையே திருமணம் செய்துகொண்டார்; கட்சி தொண்டர்கள்தான் அவருக்கு பிள்ளைகள் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு. கலைஞர் சொல்லி திருமா செய்யாதது திருமணம் மட்டும்தான். இந்த ஆட்சி இருப்பதே தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் கலைஞரின் திராவிட கருத்தியல்களை நிறைவேற்றத்தான்; நெஞ்சை நிமிர்த்தி கம்பீரமாக இதை கூறுகிறேன். பாஜக உடன் குறைந்தபட்ச சமரசத்தை கூட திமுக செய்துகொள்ளாது; டெல்லிக்கு நான் செல்வது காவடி தூக்கவோ, கைகட்டி வாய் பொத்தி நிற்கவோ அல்ல; கலைஞர் பிள்ளை நான். ...
இந்திய கால்பந்து கூட்டமைப்பின் உரிமையை ரத்து செய்தது பிபா !

இந்திய கால்பந்து கூட்டமைப்பின் உரிமையை ரத்து செய்தது பிபா !

HOME SLIDER, NEWS, sports, செய்திகள், விளையாட்டு செய்திகள்
17 வயதுக்கு உட்பட்டோருக்கான மகளிர் உலக கோப்பை கால்பந்து போட்டி வரும் அக்டோபர் மாதம் 11-ம் தேதி தொடங்கி 30-ம் தேதி வரை இந்தியாவில் நடைபெறவுள்ளது. 2 ஆண்டுக்கு ஒருமுறை நடைபெறும் உலகக் கோப்பை மகளிர் கால்பந்து போட்டி முதல் முறையாக இந்தியாவிலும் நடைபெற உள்ளது. இந்நிலையில், இந்திய கால்பந்து கூட்டமைப்பின் உரிமத்தை பிபா தற்காலிகமாக ரத்து செய்துள்ளது. கால்பந்து கூட்டமைப்பில் தேர்தல் நடத்தி புதிய நிர்வாகிகள் நியமிக்கப்படாததால் உரிமம் ரத்து செய்யப்பட்டுள்ளது. புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டால் மீண்டும் உரிமம் வழங்கப்படும் என பிபா அறிவித்துள்ளது. மேலும், வரும் அக்டோபர் மாதம் இந்தியாவில் நடக்கவிருந்த மகளிர் உலக கோப்பை கால்பந்து தொடரையும் இடமாற்றம் செய்ய பிபா முடிவு செய்துள்ளது....
பிளஸ் 2-தேர்வு எழுத ஆக்சிஜன் சிலிண்டருடன் சென்ற 50 வயது பெண்!

பிளஸ் 2-தேர்வு எழுத ஆக்சிஜன் சிலிண்டருடன் சென்ற 50 வயது பெண்!

HOME SLIDER, NEWS, செய்திகள்
கேரள மாநிலத்தில் முதியோர் கல்வி திட்டத்தில் ஏராளமான வயது முதிர்ந்த பெண்கள் கல்வி பயின்று வருகிறார்கள். இதில் காட்டுதுருத்தி பகுதியை சேர்ந்த 50 வயதான சிமி மோள் என்ற பெண்ணும் பிளஸ் 2-வுக்கு சமமான கல்வி பயின்று வந்தார். இதற்கான தேர்வு கடந்த 14-ந் தேதி அப்பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் நடந்தது. தேர்வுக்கு சில நாட்களே இருந்த நிலையில் சிமி மோளுக்கு கடுமையான மூச்சு திணறல் நோய் ஏற்பட்டது. இதற்காக அவரை உறவினர்கள் அருகில் உள்ள ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. என்றாலும் அவர் பிளஸ் 2-தேர்வை எழுதியே தீருவேன் என உறவினர்களிடம் கூறினார். இதையடுத்து அவரது உறவினர்கள் கடந்த ஞாயிற்றுகிழமை, சிமிமோளை, ஆக்சிஜன் உதவியுடன் தேர்வு அறைக்கு அழைத்து சென்றனர். அவரது நிலைமையை பார்த்த தேர்வு அதிகாரிகள், சிமி மோள் தேர்வு எழுத தனி அறை ஒதுக்கி கொடுத்தனர்....
மூவர்ண கொடியை போற்றுவோம்…மூட அரசியல்தனத்தை அடக்குவோம்- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் !

மூவர்ண கொடியை போற்றுவோம்…மூட அரசியல்தனத்தை அடக்குவோம்- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் !

HOME SLIDER, NEWS, politics, செய்திகள், தமிழக அரசியல்
முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் திமுக தொண்டர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியுள்ளதாவது: இந்திய விடுதலையின் பவள விழா ஆண்டில் மூவர்ண கொடியையையும், விடுதலைக்காக பாடுபட்ட உண்மையான தியாகிகளையும் போற்றுவோம். தேசிய கொடி பொருத்தப்பட்ட அமைச்சரின் கார் மீது செருப்பு வீசி விடுதலை நாளின் பவள விழா மகத்துவத்தை மலிவுபடுத்தி இருக்கின்றனர். அமைச்சரின் கார் மீது செருப்பு வீசியும், தேசிய கொடியை அவமதித்தும் கலவரம் செய்ய முயன்றவர்கள் கைது செய்யப் பட்டுள்ளனர். தமிழ்நாட்டில் இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டால் சட்டப்படி கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடும்.இது தமிழ்நாடு இங்கே உங்கள் அரசியல் விளையாட்டு எடுபடாது. இந்தியாவின் பன்முகத்தன்மையையும், ஒருமைப்பாட்டையும் மதவெறி அரசியலால் சிதைத்து விடலாம் என சிலர் நினைக்கிறார்கள். தாங்கள்தான் தேசப்பக்திக்கு ஒட்டுமொத்த குத்தகைகாரர்கள் என நினைத்து வரம்...
ஆதிச்சநல்லூர் அகழாய்வு பணியில் முதல் முறையாக 2 மூடியுடன் கூடிய முதுமக்கள் தாழி!

ஆதிச்சநல்லூர் அகழாய்வு பணியில் முதல் முறையாக 2 மூடியுடன் கூடிய முதுமக்கள் தாழி!

HOME SLIDER, NEWS, செய்திகள்
  ஆதிச்சநல்லூர் அகழாய்வு பணியில் முதல் முறையாக 2 மூடியுடன் கூடிய முதுமக்கள் தாழி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. உலோகங்களை பிரித்து கூறும் கருவியுடன் ஆய்வாளர்கள் ஆய்வுப்பணியில் தீவிரம் தூத்துக்குடி மாவட்டம், ஆதிச்சநல்லூரில் மத்திய தொல்லியல் துறை சார்பில் உலகத்தரம் வாய்ந்த அருங்காட்சியம் அமைக்கப்படும் என்று மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், கடந்த 2020ம் ஆண்டு அறிவித்திருந்தார். அதன் முதல் கட்டமாக மத்திய தொல்லியல் துறை சார்பில், திருச்சி மத்திய தொல்லியல் மண்டல இயக்குனர் அருண் ராஜ் தலைமையில் அகழாய்வு பணிகள் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் தொடங்கப்பட்டது. இந்த அகழாய்வு பணியில் கிடைக்கும் பொருட்கள் அனைத்தும் இங்கேயே காட்சிப்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்த அகழாய்வு பணிகள், ஆதிச்சநல்லூர் பரம்பு பகுதியில் மூன்று இடங்களில் நடந்து வருகிறது. இந்த அகழாய்வ...
கள்ளக்குறிச்சி மாணவி ஸ்ரீமதி உடல் அடக்கம் செய்யப்பட்ட இடத்தில் நடப்பட்ட மரக்கன்று! கதறி அழுத தாயார்!!

கள்ளக்குறிச்சி மாணவி ஸ்ரீமதி உடல் அடக்கம் செய்யப்பட்ட இடத்தில் நடப்பட்ட மரக்கன்று! கதறி அழுத தாயார்!!

HOME SLIDER, NEWS, செய்திகள், தமிழக அரசியல்
கள்ளக்குறிச்சி மாணவி ஸ்ரீமதி உடல் அடக்கம் செய்யப்பட்ட இடத்தில் மரக்கன்று நடப்பட்டது! கள்ளக்குறிச்சி மாவட்டம் தனியார் பள்ளியில் உயிரிழந்த மாணவி ஸ்ரீமதியின் 17 ஆவது பிறந்த நாள் முன்னிட்டு அவரது தந்தை  அருகில் உள்ள நகரமான வேப்பூர் கூட்டு ரோடு பகுதியில்  பொதுமக்களுக்கு  2000 மரக்கன்றுகள் வழங்க வேப்பூர் காவல் நிலையத்தில் அனுமதி கேட்டிருந்தனர். அதற்கு வேப்பூர் காவல் நிலையத்தில் ஸ்ரீமதியின் குடும்பத்தினர் மரக்கன்று வழங்க அனுமதி கேட்ட பகுதி தேசிய நெடுஞ்சாலை என்பதால் போக்குவரத்து இடையூறு ஏற்படும் எனவும், மேலும் அந்த இடம் அதிக மக்கள் கூடும் இடம் என்பதால் சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்படும் எனக் கூறி அனுமதி மறுத்திருந்தனர். இதனையடுத்து ஸ்ரீமதியின்  சொந்த கிராமத்திலேயே அவரது பெற்றோர்கள் மரக்கன்று வழங்குவது என முடிவு செய்துள்ளனர். இந்நிலையில் பெரியநெசலூர் கிராமத்தில் ஸ்ரீமதி உடல் அடக்கம் ...
ஸ்டண்ட் மாஸ்டர் கனல் கண்ணன் ஜாமீன் மனு தள்ளுபடி

ஸ்டண்ட் மாஸ்டர் கனல் கண்ணன் ஜாமீன் மனு தள்ளுபடி

HOME SLIDER, NEWS, செய்திகள், தமிழக அரசியல்
ஸ்ரீரங்கம் கோயில் முன்பு இருக்கும் பெரியார் சிலையை இடிக்க வேண்டும் என ஸ்டண்ட் மாஸ்டர் கனல் கண்ணன் பேசியது சர்ச்சையை கிளப்பியது. அதில், உலகப் புகழ் பெற்ற திருச்சி ஸ்ரீரங்கம் கோயில் முன்பு இருக்கும், கடவுள் இல்லை என்று சொன்னவரின் சிலை என்றைக்கு உடைக்கப்படுகிறதோ அன்றுதான் ஹிந்துக்களின் உண்மையான எழுச்சி நாள் என்று கனல் கண்ணன் பேசியுள்ளார். இவரின் இந்த கருத்துக்கு எதிர்ப்பும் ஆதரவும் தெரிவித்து வருகின்றனர். கனல் கண்ணனுக்கு எதிராக சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில், தந்தை பெரியார் திராவிடக்கழகத்தின் மாவட்ட செயலாளர் குமரன் புகார் அளித்தார். இந்த புகாரின் அடிப்படையில், பொது அமைதியை சீர்குலைத்தல் சட்டப்பிரிவுகளின் கீழ் கனல் கண்ணன் மீது சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதையடுத்து முன்ஜாமீன் கேட்டு கனல் கண்ணன், மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்....
ரூ.55 ஆயிரம் கோடிக்கு டெஸ்லா பங்குகளை விற்ற எலான் மஸ்க்!

ரூ.55 ஆயிரம் கோடிக்கு டெஸ்லா பங்குகளை விற்ற எலான் மஸ்க்!

HOME SLIDER, NEWS, செய்திகள்
உலக பெரும் பணக்காரரும், டெஸ்லா நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியுமான எலான் மஸ்க், டுவிட்டர் நிறுவனத்தை வாங்கும் ஒப்பந்தத்தை சமீபத்தில் கைவிட்டார். இந்த முடிவை எதிர்த்து டுவிட்டர் நிறுவனம் கோர்ட்டில் வழங்கு தொடர்ந்தது. இதனை தொடர்ந்து கடந்த ஏப்ரல் மாதத்தில் 8.5 பில்லியன் டாலர் மதிப்புள்ள டெஸ்லா பங்குகளை எலான் மஸ்க் விற்றார். இதன் இந்திய மதிப்பு ரூ.67 ஆயிரம் கோடி ஆகும். இந்தநிலையில் தற்போது எலான் மஸ்க் மீண்டும் 7 பில்லியன் டாலர் பங்குகளை விற்றுள்ளார். இதன் இந்திய மதிப்பு ரூ.55ஆயிரம் கோடி ஆகும். ஒருவேளை டுவிட்டர் நிறுவனத்தை வாங்கும் ஒப்பந்தத்தை செயல்படுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டால் குறைந்த விலையில் டெஸ்லா பங்குகளை விற்க வேண்டிய சூழ்நிலையை தவிர்க்க தற்போது விற்பனை செய்ததாக எலான் மஸ்க் தெரிவித்துள்ளார். ஆகஸ்டு 5-ந்தேதி முதல் 9-ந்தேதி வரை டெஸ்லா நிறுவனத்தின் சுமார் 79 லட்சத...