செவ்வாய்க்கிழமை, நவம்பர் 24
Shadow

சினி நிகழ்வுகள்

அழகான ஹீரோயின் நிகிஷா படேலின் காமெடியில் எழில் படம்..!

அழகான ஹீரோயின் நிகிஷா படேலின் காமெடியில் எழில் படம்..!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகைகள்
  தமிழ் சினிமாவில் தமிழ் ரசிகர்களுக்கு பிடித்த நடிகையாக மாறுவதற்கான அத்தனை அம்சங்களும் பொருந்தியவராக இருக்கிறார் நடிகை நிகிஷா படேல். அரவிந்தசாமி நடிப்பில் வெளியான 'பாஸ்கர் ஒரு ராஸ்கல்' படத்தில் கொஞ்சநேரம் வந்தாலும் ரசிகர்களின் நெஞ்சில் இடம் பிடித்த நிகிஷா படேல் தற்போது இயக்குநர் எழில் இயக்கும் புதிய படத்தில் ஜிவி பிரகாஷோடு நடித்து வருகிறார்.     எழில் இயக்கும் படம் எதுவாக இருந்தாலும் அதில் ஹீரோவிற்கு போலவே ஹீரோயினுக்கும் முக்கியத்துவம் இருக்கும். அதனால் இப்படத்திற்குப் பிறகு தமிழில் நிகிஷா படேல் கவனம் ஈர்க்கும் நாயகியாக இருப்பார் என்பதில் சந்தேகமில்லை. இந்தப்படம் பற்றி நடிகை நிகிஷா படேல் கூறியதாவது,"இந்தப் படத்தில் நான் ஐடி நிறுவன ஊழியராக நடிக்கிறேன். படத்தின் நகைச்சுவை பகுதியின் ஆன்மாவே நான் தான் என்று சொல்லலாம். முதல் நாள் படப்பிடிப்பில் யோகா செய்யும் காட்சி படமாக்கட்டது. ஜிவி பி...
CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகைகள்
    தமிழ் சினிமாவில் சவாலான கதாபாத்திரங்களை தேர்வு செய்து நடிக்கும் நடிகைகளில் அமலா பால் முக்கியமானவர். மைனா, அம்மா கணக்கு உள்ளிட்ட பல்வேறு படங்களை அதற்கு உதாரணமாக சொல்லலாம். அவர் தற்போது ‘அதோ அந்த பறவை போல’ என்ற படத்தில் நடித்து வருகிறார். அறிமுக இயக்குநர் வினோத் கேஆர் இயக்கத்தில் ஹாரர் திரில்லராக உருவாகிறது இந்த திரைப்படம். மேற்குத் தொடர்ச்சி மலை பகுதியில் தொலைந்து போகும் ஒரு இளம் பெண்ணை பற்றிய கதைதான் ‘அதோ அந்த பறவை போல’. இதன் படப்பிடிப்புகள் விரைவாக நடைபெற்று வருகிறது. அமலா பாலின் கை கால்கள் கட்டப்பட்ட நிலையில் ஒரு ஆக்சன் காட்சி இதில் படமாக்கப்பட்டுள்ளது. https://www.instagram.com/p/BwBot7pnbtI/?utm_source=ig_share_sheet&igshid=1n7waow7iy58n இதில் அமலா பால் கை கால்கள் கட்டப்பட்ட நிலையில் காட்டுக்குள் அமர வைக்கப்பட்டிருக்கிறார். அமலா பால் இந்த புகைப்படத...
A.R.முருகதாஸ் -ரஜினிகாந்த் கூட்டணியின் “தர்பார்” பர்ஸ்ட் லுக் வெளியாகி பரபரப்பு..!

A.R.முருகதாஸ் -ரஜினிகாந்த் கூட்டணியின் “தர்பார்” பர்ஸ்ட் லுக் வெளியாகி பரபரப்பு..!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள்
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் முருகதாஸ் இயக்கும் படத்தின் பெயர் பர்ஸ்ட் லுக் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. மிக பிரபல நிறுவனமான லைகா தயாரிக்கும் பிரமாண்டமான படம் இது. ரஜினிகாந்த் மீண்டும் ஒரு ஜாலியான கமர்சியல் படத்தில் நடிக்கப் போகிறார் என்றார்கள். அதே நேரம் படத்துக்கு நாற்காலி என டைட்டில் வைத்ததாக செய்திகள் வெளியானது. ஆனால் அதை மறுத்த இயக்குனர் முருகதாஸ் விரைவில் டைட்டில் அறிவிக்கப்படும் என்றார். கடந்த சில நாட்களுக்கு முன் போட்டோ ஷூட் நடைபெற்றது. இந்த நிலையில் நாளை 11ம் தேதி முதல் மும்பையில் படப்பிடிப்பு தொடங்க உள்ளது. முருகதாஸ், ரஜினிகாந்த் உட்பட படக்குழு இன்று புறப்பட்டு மும்பை செல்கிறார்கள். இந்த படத்தில் நயன்தாரா ஒப்பந்தம் ஆகியிருக்கிறார். அவரும் மும்பை செல்கிறார். இந்த சூழலில் படத்தின் பெயர், பர்ஸ்ட் லுக் வெளியாகி பெரும் பரபரப்பு ஏற்பட்டது. தர்பார் என பேருடன் வெளியா...
ஜெ.,ரகசியங்களை சொல்ல வருகிறதாம் சசிலலிதா..!

ஜெ.,ரகசியங்களை சொல்ல வருகிறதாம் சசிலலிதா..!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள்
  தமிழ்நாடு தெலுங்கு யுவசக்தியின் தலைவராக இருக்கும் ஜெகதீஸ்வர ரெட்டி ஜெயலலிதாவின் வாழ்க்கையை படமாக எடுக்கிறார். இயக்குநர் மற்றும் தயாரிப்பாளரான இவர், 'ஜெயம் மூவிஸ்' என்ற பெயரில் பல படங்கள் தயாரித்திருக்கிறார். அனைத்து இந்திய மொழிகளிலும் படங்கள் தயாரித்து வெளியிட்டிருக்கிறார். தற்போது அவர் தயாரித்து இயக்கப் போகும் படத்தின் பெயர் 'சசி லலிதா'. ஜெயலலிதா மீது கொண்ட அன்பினால் அவரின் வாழ்க்கையை படமாக எடுக்கப் போகிறார். ஜெயலலிதாவின் வாழ்க்கையில் நடந்த அத்தனை சம்பவங்களும் இப்படத்தில் இருக்கும். இக்கதையை ஜெயலலிதாவின் ஆத்மா கூறியதன் அடிப்படையில் தான் இந்த படம் அமைந்திருக்கும். சிறு வயதில் எப்படி இருந்தார்? எப்படி நடிகையாக ஆனார்? அரசியலில் அடியெடுத்து வைத்தது, அதிமுகவில் அவரது பங்களிப்பு, சசிகலாவின் வாழ்க்கை, அவருடன் ஜெயலலிதாவிற்கு ஏற்பட்ட தொடர்பு என்று மக்கள் அறியாத பல விஷயங்களையும்...
சினிமா தயாரிப்பாளரிடம் 40 லட்சம் மோசடி செய்த சென்னை தியேட்டர் உரிமையாளர் தம்பதி..!

சினிமா தயாரிப்பாளரிடம் 40 லட்சம் மோசடி செய்த சென்னை தியேட்டர் உரிமையாளர் தம்பதி..!

CINI NEWS, HOME SLIDER, NEWS, சினி நிகழ்வுகள், செய்திகள்
  சினிமா தயாரிப்பாளரிடம் 40 லட்சம் மோசடி செய்த தியேட்டர் உரிமையாளர் தம்பதி..! சென்னை திருவெற்றியூர் எம்.எஸ்.எம். தியேட்டர் உரிமையாளர்கள் சுசீலா இவரது கணவர் தவமணி. இவர்களுடன் சினிமா தயாரிப்பாளர் தங்களது தியேட்டர் தொழிலை மேம்படுத்த பங்குதாரராக இணைத்து கொண்டு படங்கள் வாங்கி வெளியிடும் தொழில் செய்து வந்தார்கள். இந்த நிலையில் கடந்த 2016ம் ஆண்டு MSM தியேட்டரை சீரமைக்க 25 லட்சம் ரூபாயை தயாரிப்பாளர் தங்கராஜிடம் கடனாக கேட்டிருக்கிறார் சுசீலா. இந்த கடனுக்காக ராயபுரத்தில் உள்ள சொத்தை அடமானமாக எழுதி கொடுத்திருக்கிறார்கள். இந்த தொகையை தனது வங்கியில் இருந்து தங்கராஜ் காசோலை மூலம் சுசீலாவுக்கு வழங்கி இருக்கிறார். கடன் வாங்கிய சில மாதங்களில் கணவன் மனைவியான சுசீலா-தவமணி தம்பதியின் வரவு செலவு கணக்குகளில் தவறு இருப்பது தெரிந்ததும் அவர்களோடு இணைந்து செய்து வந்த தொழிலில் இருந்து தங்கராஜ் விலக...
ரூ.5 கோடி செலவில் செட்டப்  புட்பால் மைதானம் … அட்லியின் விஜய்63 ஸ்பெஷல்!

ரூ.5 கோடி செலவில் செட்டப் புட்பால் மைதானம் … அட்லியின் விஜய்63 ஸ்பெஷல்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், நடிகர்கள்
ரூ.5 கோடி செலவில் செட்டப் புட்பால் மைதானம் ... அட்லியின் விஜய்63 ஸ்பெஷல்! தளபதி 63 படத்தின் படப்பிடிப்பு கடந்த ஜனவரி மாதம் தொடங்கி சென்னையில் பல்வேறு இடத்தில் நடைபெற்று வருகிறது. மேலும் ஷூட்டிங் தொடங்கி 2 மாதத்தில் 60% படப்பிடிப்பு முடிவுயடைந்துள்ளதாக தெரிவித்துள்ளனர். இந்நிலையில் கால்பந்தை மையமாக கொண்டு உருவாகிவரும் இப்படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பிக்காக சென்னையில் உள்ள ஈவிபி ஸ்டுடியோவில் பிரமாண்டமாக கால்பந்தாட்ட அரங்கம் தயாராகி வருகிறது. அப்பணிகள் முடிந்த பின் தொடர்ந்து 50 நாட்கள் அங்கு தான் படப்பிடிப்பு நடக்கவுள்ளது. இந்த அரங்கம் தயாரிப்புப் பணிகளின் புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரலாக பரவி வருகிறது. இந்த மைதானம் அமைக்க செலவு மட்டும் ரூ.5 கோடியாம். அம்மாடி... ஒரு சினிமா பட்ஜெட்டில் ஒரு ஷூட்டிங் ஸ்பாட் செலவான்னு வாய பொளக்காதீங்க... அட்லி டைரக்டரு... விஜய் நடிகரு... அப்...
கோடையை குளிர்விக்க கவர்ச்சி காமெடி கமர்சியலாக வரும் லாரன்சின் காஞ்சனா3

கோடையை குளிர்விக்க கவர்ச்சி காமெடி கமர்சியலாக வரும் லாரன்சின் காஞ்சனா3

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
  சன் பிக்சரஸ் வழங்க ராகவேந்திரா புரொடக்‌ஷன்ஸ் மிக பிரமாண்டமான முறையில் தயாரிக்கும் படம் முனி 4 காஞ்சனா 3. ராகவா லாரன்ஸ் கதாநாயகனாக நடிக்கிறார். கதா நாயகிகளாக வேதிகா, ஓவியா, நிக்கி தம்போடி நடிக்கிறார்கள். மற்றும் சூரி, கோவை சரளா ஸ்ரீமன்,தேவதர்ஷினி, டெல்லி கணேஷ், சம்பத்ராம், அனுபமாகுமார்,ஆர்.என்.ஆர்.மனோகர், இவர்களுடன் வில்லன்களாக தருண் அரோரா, கபீர்சிங், அஜய்கோஷ் ஆகியோர் நடிக்கிறார்கள். ஒளிப்பதிவு  -  வெற்றி பழனிச்சாமி,  சர்வேஷ் முராரி. இசை  -     டூபாடு பின்னணி இசை   -    எஸ்.தமன் எடிட்டிங் -  ரூபன் கலை -   ஆர்.ஜனார்த்தன் ஸ்டண்ட்  -       சூப்பர் சுப்பராயன். நடனம்  -    ராகவா லாரன்ஸ் பாடல்கள் -    விவேகா, மதன்கார்க்கி, சரவெடி சரவணன். தயாரிப்பு மேற்பார்வை  -  விமல்.ஜி   கதை திரைக்கதை வசனம் எழுதி இயக்குகிறார் ராகவா லாரன்ஸ். சன் பிக்சர்ஸ் வழங்க ராகவேந்திரா புரொ...
ஜி.வி.பிரகாஷின் வித்தியாசமான குப்பத்து ராஜா

ஜி.வி.பிரகாஷின் வித்தியாசமான குப்பத்து ராஜா

CINI NEWS, HOME SLIDER, Uncategorized, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
  தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களால் 'டான்ஸ் மாஸ்டர்  ' என்றே அழைக்கப்படுகிறார் பாபா பாஸ்கர். நவநாகரீக நடன அமைப்புகளை கொடுக்க அவர் பெரும் முயற்சிகள் எடுத்தாலும், உள்ளூர் விஷயங்களை கலந்து கொடுக்கவும் தவறியதில்லை. அதனால் தான் அனைத்து தரப்பு ரசிகர்களுக்கும் பிடித்த நடன இயக்குனராகவும் இருக்கிறார். பல கொண்டாடப்படும் வெற்றி பாடல்களுக்கு நடனம் அமைத்த பாபா பாஸ்கர், குப்பத்து ராஜா படத்தின் மூலம் இயக்குனராகி இருக்கிறார். சமீபத்தில் வெளியான குப்பத்து ராஜா டிரெய்லர் 'லோக்கல்' பின்னணியை கொண்டிருக்கிறது என்று கூறப்படுகிறது, இது குறித்து பாபா பாஸ்கர் கூறும்போது, "உண்மையில் நான் 'லோக்கல்' என்ற வார்த்தையை ஏற்றுக் கொள்ளவில்லை, மாறாக அதை 'நேட்டிவிட்டி' என்று தான் அழைப்பேன். நம்மை சுற்றியுள்ள மக்கள் கிராமங்கள் மற்றும் அண்டை மாநிலங்களின் நேட்டிவிட்டியை பார்த்து வியக்கிறார்கள். சேரிகள் என்பவை உண்மை...
அக்னி தேவி விவகாரத்தில் அடாவடி செய்த பாபி சிம்ஹாவுக்கு ரெட் போட திட்டம்!

அக்னி தேவி விவகாரத்தில் அடாவடி செய்த பாபி சிம்ஹாவுக்கு ரெட் போட திட்டம்!

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
  'அக்னிதேவி'  படம் பல தடைகளை தாண்டி ரிலீஸ் ஆகியுள்ளது. இந்த வாரம் கோலாகலாமாக ரிலீஸாகி, கோபதாபங்களுடன் மல்லுக்கட்டு நடந்துகொண்டிருக்கும் 'அக்னிதேவி' என்ற தமிழ்த் திரைப்படம் 300 க்கும் அதிகமான தியேட்டர்களில் ஓடிக் கொண்டிருக்கிறது. எழுத்தாளர் ராஜேஷ்குமார் நாவலின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட இந்த அக்னி தேவி ரோஜா நாயகி மதுபாலாவின் வில்லி கெட்டப்பால் ரசிகர்களிடம் பெரிய வரவேற்பைப் பெற்று நன்றாக ஓடிக்கொண்டிருக்கிறது. இந்தப் படத்தில் முக்கியக் கதாபாத்தில் நடிக்க ஒத்துக் கொண்டு, படப்பிடிப்பில் உச்சாணிக் கொம்பில் உட்கார்ந்து கொண்டு குடைச்சல் கொடுத்த பாபிசிம்ஹாவின் டார்ச்சர் தாங்காமல் அவரை தேவையான அளவு 'நடிக்க' வைத்து அனுப்பி விட்ட இயக்குநரும், இணைத் தயாரிப்பாளருமான ஜான் தான் நினைத்தபடி, எழுத்தாளர் ராஜேஷ்குமாரின் எழுத்தை மெருகேற்றி, ரசிகர்களுக்குப் பிடிக்கும் வகையில் படமாக்கினா...