சினி நிகழ்வுகள்
இயக்குனரிடம் கன்னத்தில் பளார் வாங்கிய தொடரா நாயகி..!
CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள், முன்னோட்டம்
"இன்னொரு தடவை கன்னத்தில அறைங்க சார்" ; இயக்குநரிடம் கெஞ்சிய 'தொட்ரா' நாயகி..!
சென்னைக்கு பஸ் பிடித்து வந்து 'தொட்ரா' இயக்குநரை மிரட்டும் ஜாதி அமைப்புகள்..!
குரு யாரென்று சொல்ல விரும்பாத 'தொட்ரா' இசையமைப்பாளர்
'தொட்ரா' தயாரிப்பாளரிடம் பாட்டு பாடியே பணம் கறந்த நடிகர்..!
ஜெ.எஸ்.அபூர்வா புரொடக்சன்ஸ் சார்பில் ஜெய்சந்திரா சரவணக்குமார் தயாரித்துள்ள படம் ’தொட்ரா’. இயக்குநர் பாக்யராஜின் சீடரான மதுராஜ் இந்தப்படத்தின் கதை திரைக்கதை எழுதி இயக்கியுள்ளார். பிருத்விராஜன் நாயகனாகவும், மலையாள நடிகை வீணா நாயகியாகவும் நடித்துள்ளனர்.
இந்தப்படத்தில்,வீணாவின் அண்ணனாக, படத்தை தாங்கி கொண்டுபோகிற, கதைக்கு திருப்புமுனை ஏற்படுத்தும் முக்கிய கேரக்டரில் எம்.எஸ்.குமார் அறிமுகமாகிறார். இவர் வேறு யாருமல்ல, இந்தப்படத்தின் தயாரிப்பாளர் ஜெய்சந்திராவின் கணவர் தான்..
இவர்களுடன் இயக்குன...
காமெடியாக உருவாகும் “இராஜாவின் பார்வை இராணியின் பக்கம்“
CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள், முன்னோட்டம்
விகாஷ் பிலிம் இண்டர்நேஷனல் பட நிறுவனம் சார்பில் விகாஷ் ரவிச்சந்திரன் தயாரிக்கும் படம் “ இராஜாவின் பார்வை இராணியின் பக்கம் “
இந்த படத்தில் ஆதவா கதாநாயகனாக அறிமுகமாகிறார். இவர் 8 பேக் உடற்கட்டுடன் அதிரடி சண்டைக் காட்சியில் நடித்துள்ளார். நாயகியாக அவந்திகா நடித்திருக்கிறார். இவர் மலையாள படங்களில் நடித்தவர் . மற்றும் மதுமிதா, கானாஉலகநாதன், சிங்கப்பூர் தீபன் ஆகியோர் நடித்திருக்கிறார்கள்.
ஒளிப்பதிவு சந்தான கிருஷ்ணன். லியாண்டர் லீ மார்டின் இசையில் பாடல்கள்.
விகாஷ் ரவிச்சந்திரன் தயாரிக்கிறார்.
கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கும் அழகுராஜ் படம் குறித்து கூறும் போது...
இது முழுக்க முழுக்க காமெடி படமாக உருவாக்கி இருக்கிறோம். தன்னை ஏமாற்றிய காதலியை பழிவாங்க ஒரு பெரிய டானின் உதவியை நாடிச்செல்கிறார் நாயகன். அந்த டான் நாயகனை எப்படியெல்லாம் பயன்படுத்திக் கொண்டார் என்பது க...
அரசியல் இல்லா மக்கள் பணி தனிக்கொடி அறிவித்தார் விஷால்..!
"விஷால் மக்கள் நல இயக்கம்" கொடியை அறிமுகம் செய்தார் விஷால் !
நடிகர் விஷால் தன்னுடைய பிறந்தநாளான இன்று தனது ரசிகர்களை சந்தித்து அவர்கள் முன் கலைவாணர் அரங்கத்தில் வைத்து தன்னுடைய ரசிகர் நற்பணி இயக்கத்தை மக்கள் நல இயக்கமாக மாற்றி அதன் கொடியை அறிமுகம் செய்து உரையாற்றினார்.
வந்திருக்கும் அத்தனை பேருக்கும் எனக்கும் பெரிய வித்தியாசம் ஏதும் இல்லை இந்த மேடை மட்டும்தான்.உங்களில் ஒருத்தனான நான் இன்று உங்களால் மேடை ஏறி பேசுகிறேன். இது என்னுடைய வெற்றி அல்ல உங்களுடைய வெற்றி.ஒரு விஷயத்தை கையில் எடுத்துவிட்டால் அதை முடிக்காமல் அடுத்த விஷயத்துக்கு போக கூடாது.நடிகனாக நல்லா சம்பாதித்து நாமலும்,நம்ம குடும்பமும் நல்லா இருந்தா போதும் என்று நினைத்துவிட்டு போய்விடலாம்.வீட்டுக்குள்ள போய்விட்டு மீண்டும் வீதிக்கு வர வேண்டும் அப்படி வரும் போது வீதியில் நடக்கும் சில விஷயங்களை பார்த்து சும்மா இருக்க முட...
செப்டம்பர் 30-ந்தேதி எம்.ஜி.ஆர். நூற்றாண்டு நிறைவு விழா- தமிழக அரசு அறிவிப்பு
மறைந்த முதல்-அமைச்சர் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவை, தமிழக அரசு சார்பில் அனைத்து மாவட்டங்களிலும் கொண்டாட முடிவு செய்யப்பட்டது.
அதன்படி அனைத்து மாவட்டங்களிலும் அரசு சார்பில் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா நடத்தப்பட்டது. ஆனால் தவிர்க்க முடியாத காரணத்தால் கன்னியாகுமரி மாவட்டத்திலும், சென்னையிலும் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா ஒத்திவைக்கப்பட்டது.
தற்போது குமரி மாவட்டத்திலும், சென்னையிலும் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா நடைபெறும் தேதியை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.
இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறி இருப்பதாவது:-
முதல்-அமைச்சர் தலைமையில் கடந்த ஆண்டு மே மாதம் 2-ந்தேதி நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளின் அடிப்படையில், அனைத்து மாவட்டங்களிலும் மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் எம்.ஜி.ஆரின் நூற்றாண்டு விழாவினை கொண்டாட முடிவு செய்யப்பட்டு விழா நட...
4 மாதத்தில் பழைய மிரட்டலோடு பார்ப்பீர்கள் என பார்த்தீபனிடம் சொன்னாராம் விஜயகாந்த்..!
4 மாதத்தில் பழைய மிரட்டலோடு பார்ப்பீர்கள் என பார்த்தீபனிடம் சொன்னாராம் விஜயகாந்த்..!
தே.மு.தி.க தலைவர் விஜய காந்த் கடந்த 25-ந்தேதி தனது 66-வது பிறந்தநாளைக் கொண்டாடினார்.
உடல்நலக்குறைவு காரணமாக அவர் அவ்வப்போது மருத்துவ சிகிச்சை எடுத்து வருகிறார். சமீபத்தில் அமெரிக்காவிற்கு சென்று சிகிச்சை மேற்கொண்டுவிட்டு வந்தார். மீண்டும் சிகிச்சைக்காக அமெரிக்கா செல்ல இருக்கிறார்.
நடிகர் பார்த்திபன் நேற்று விஜயகாந்தை நேரில் சந்தித்து வாழ்த்தியதோடு பிறந்தநாளுக்காக ஒரு மெழுகு விளக்கை பரிசளித்துள்ளார்.
படம் எடுத்து அதனை பகிர்ந்துள்ள பார்த்திபன் ‘முன் தினம் தளபதி, நேற்று நம்மவர், இன்று கேப்டன். அழகு மெழுகு விளக்கை பிறந்த நாள் பரிசாக அளித்து சந்தித்தேன். மனதில் பாரமும், இமையில் ஈரமும் கண்டவர் நாலே மாதத்தில் என்னை பழைய மிரட்டலுடன் காணப்போகிறீர்கள்’ என நம்பிக்கை அளித்தார் என்று பதிவிட்டுள்ளார்....
சிவாமனசுல புஷ்பா சினிமாவுக்கு தடைவிதித்த தணிக்கைதுறைக்கு கோர்ட் நோட்டீஸ்..!
பத்திரிகையாளர், சமூக ஆர்வலர், தயாரிப்பாளர் வாராகி இயக்கத்தில் ‘சிவா மனசில புஷ்பா’ என்ற பெயரில் புதிய அரசியல் படம் தயாராகி உள்ளது. புதுமுகங்கள் நடித்துள்ளனர். இதன் படப்பிடிப்பு முடிந்து கடந்த மாதம் தணிக்கைக்கு அனுப்பினர். படத்தை பார்த்த தணிக்கை குழு உறுப்பினர்கள் 20–க்கும் அதிகமான இடங்களில் சர்ச்சை காட்சிகள் இருப்பதாகவும் அவற்றை நீக்க வேண்டும் என்றும் கூறினர்.
படத்தின் தலைப்பையும் மாற்ற வேண்டும் என்றார்கள். இதனை படக்குழுவினர் ஏற்கவில்லை. இதனால் படத்தை வெளியிட தணிக்கை குழுவினர் அனுமதி மறுத்தனர். இதைத் தொடர்ந்து மேல் முறையீட்டு குழுவுக்கு படத்தை அனுப்பினர். நடிகை கவுதமி உள்ளிட்ட மேல் முறையீட்டு குழுவினர் படத்தை பார்த்து சிவா, புஷ்பா என்ற கதாபாத்திரங்கள் பெயரையும் படத்தின் தலைப்பையும் மாற்ற வேண்டும் என்று கூறினர்.
படத்தின் தலைப்பை மாற்ற இயக்குனர் வாராகி சம்மதிக்காததால் ...
உங்களது விமர்சனங்கள் எனக்கு செருப்படி மாதிரி இருந்தது – விஜய் சேதுபதி
லெனின் பாரதி இயக்கத்தில் வெளியாகி நல்ல விமர்சனங்களை பெற்று வரும் `மேற்குத் தொடர்ச்சி மலை' படத்திற்கு நீங்கள் அளித்த விமர்சனம் எனக்கு செருப்படி மாதிரி இருப்பதாக விஜய் சேதுபதி பேசினார்.
விஜய்சேதுபதி தயாரிப்பில் முற்றிலும் புதுமுகங்கள் நடிப்பில் உருவாகி வெளியாகி இருக்கும் படம் மேற்குத் தொடர்ச்சி மலை. மலைவாழ் மூட்டை தூக்கும் தொழிலாளிகளின் வாழ்வியலை இயல்பாக கூறி இருக்கும் இந்த படத்துக்கு நல்ல விமர்சனங்கள் கிடைத்துள்ளன.
இதற்கு நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட விஜய்சேதுபதி, ‘இந்த படத்தை இயக்குனர் லெனின் பாரதிக்காக தயாரிக்க சம்மதித்தேன். படத்தை பார்த்தபோது எனக்கு திருப்தியை தரவில்லை. படத்துக்கு செலவழித்த தொகை வந்தால் போதும் என்று நினைத்தேன். வாங்க யாரும் முன்வரவில்லை. சில லட்சங்கள் நஷ்டத்தில் வெளியிடலாமா என்றும் முயற்சித்தேன். முடியவில்லை. அந்த சூழலில் தான் சரவணன் வந்து ரிலீஸ் செ...
சென்சார் அதிகாரிகள் பாராட்டை பெற்ற மிகமிக அவசரம்
ஸ்ரீபிரியங்காவின் நடிப்பை சிலாகித்து பாராட்டிய சென்சார் அதிகாரிகள்..!
விஹவுஸ் புரொடக்ஷன்ஸ் சார்பில் சுரேஷ் காமாட்சி தயாரித்துள்ள 3-வது படம் ‘மிகமிக அவசரம்’. அதுமட்டுமல்ல இந்த படத்தின் மூலம் முதல்முறையாக இயக்குனர் ஆகி இருக்கிறார் சுரேஷ்காமாட்சி.. நாயகியாக ஸ்ரீப்ரியங்கா நடித்துள்ளார். அரீஷ்குமார் கதாநாயகனாகவும், இயக்குநர் சீமான் காவல்துறை உயரதிகாரியாகவும் நடித்துள்ளனர்.
முத்துராமன், இயக்குநர் ஈ ராமதாஸ், அரவிந்த், லிங்கா, சாரதி, இயக்குநர் சரவண சக்தி, வெற்றிக்குமரன், வி கே சுந்தர், குணசீலன், மாஸ்டர் சாமுண்டி உள்ளிட்ட பலர் இந்தப்படத்தில் நடித்துள்ளனர்.
இன்று சமூகத்தில் பெரும்பாலும் பெண்கள் வேலைக்கு செல்ல ஆரம்பித்துவிட்டனர். இப்படி சூழல் மாறினாலும், வேலைக்கு செல்லும் பெண்களின் அவல நிலை மட்டும் மாறவே இல்லை. ஆம். ஒவ்வொரு துறையிலும் ஒவ்வொரு விதமான பிரச்னைகளை அவர்கள் எதிர்கொள்...
300 தியேட்டர்களில் வெளியாகும் கலைப்புலி தாணுவின் 60வயது மாநிறம்!
300 அரங்குகளில் பிரமாண்டமாய் வெளியாகும் கலைப்புலி தாணுவின் 60வயது மாநிறம்!
படம் அறிவிக்கப்பட்டதிலிருந்து அனைத்துத் தரப்பு மக்களின் எதிர்ப்பார்ப்புக்கும் உரிய படமாக மாறியிருக்கிறது கலைப்புலி தாணுவின் அடுத்த வெளியீடான 60 வயது மாநிறம். ராதாமோகன் இயக்கத்தில் பிரகாஷ்ராஜ், சமுத்திரக்கனி, விக்ரம் பிரபு நடித்துள்ள இந்தப் படத்துக்கு இளையராஜா இசையமைத்துள்ளார்.
தனது பெருமைக்குரிய தயாரிப்பாக கலைப்புலி தாணுவே அறிவித்துள்ள இந்தப் படம் வரும் ஆகஸ்ட் 31-ம் தேதி உலகெங்கும் வெளியாகிறது.
தமிழகத்தில் மட்டும் இந்தப் படத்துக்கு 300 அரங்குகள் கிடைத்துள்ளன. வெளி மாநிலங்கள், வெளிநாடுகள் என 600-க்கும் மேற்பட்ட அரங்குகளில் பிரமாண்டமாக வெளியாகிறது 60 வயது மாநிறம்.
இந்தப் படம் குறித்து தயாரிப்பாளர் கலைப்புலி தாணு கூறுகையில், "உண்மையிலேயே எனது பெருமைக்குரிய தயாரிப்புகளில...

