சிலம்பரசன் TR – வெற்றிமாறன் – கலைப்புலி எஸ் தாணு – கூட்டணி
*தமிழ் திரையுலகில் முதன் முறையாக தரமான சம்பவம் செய்யும் சிலம்பரசன் TR - வெற்றிமாறன் - கலைப்புலி எஸ் தாணு - கூட்டணி*
*ரசிகர்களையும், திரையுலகினரையும் வியக்க வைக்கும் சிலம்பரசன் TR ன் 'அரசன்'*
சிலம்பரசன் TR - இயக்குநர் வெற்றிமாறன் - பிரபல தயாரிப்பாளர் கலைப்புலி எஸ் தாணு - ஆகியோரின் கூட்டணியில் உருவாகும் 'அரசன்' படத்தின் ஐந்து நிமிட ப்ரோமோ வீடியோவை படக்குழுவினர் அக்டோபர் 16ஆம் தேதி திரையரங்கிலும், 17 ஆம் தேதி இணையத்திலும் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டு, புதிய சாதனையை படைக்க உள்ளனர்.
சிலம்பரசன் TR நடிப்பில் வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகும் புதிய படத்திற்கு, 'அரசன்' என பெயரிடப்பட்டு, அதன் ஃபர்ஸ்ட் லுக்கும் கடந்த வாரம் வெளியானது. இதில் சிலம்பரசனின் தோற்றம் மற்றும் டைட்டில் ரசிகர்களை வெகுவாக வசீகரித்ததுடன் படத்தைப் பற்றிய எதிர்பார்ப்பையும் எகிற செய்தது. அத்துடன் படத...









