வியாழக்கிழமை, ஜூன் 11
Shadow

சினி நிகழ்வுகள்

செல்லாது… செல்லாது… வருத்தம் மட்டுமல்ல பகிரங்க மன்னிப்பு கேட்கவேண்டும் வைரமுத்துவை சாடும் தமிழிசை..!

செல்லாது… செல்லாது… வருத்தம் மட்டுமல்ல பகிரங்க மன்னிப்பு கேட்கவேண்டும் வைரமுத்துவை சாடும் தமிழிசை..!

CINI NEWS, HOME SLIDER, NEWS, politics, சினி நிகழ்வுகள், செய்திகள்
பா.ஜ.க. தமிழக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- கவிஞர் வைரமுத்து, ஆண்டாளைப் பெருமைப்படுத்துகிறேன் என்று பேசவும், எழுதவும், ஆரம்பித்து சிறுமைப்படுத்தியிருக்கிறார். தேவதாயாக, பெண் ஆழ்வாராக பெருமை சேர்த்தவரை, தேவதாசியாக சித்தரிக்க எப்படி மனம் வந்தது? தமிழைப் பழித்தவரை தாய் தடுத்தாலும் விடேன் என்ற பாரதியின் வார்த்தையை தமிழ் வளர்த்த ஆண்டாளைப் பழித்தவரை யார் தடுத்தாலும் விடோம் என்பதே எங்களது நிலை. மனது புண்பட்டால் வருந்துகிறேன் என்பது, பண்படாமல் எழுதிய வாசகங்களுக்கு பதில் ஆகாது. உடனே கட்டுரையை மாற்றி, எழுத்து பூர்வமாக பதிவு செய்வது மட்டுமின்றி, இனிமேல் இதுபோன்று உணர்வுகளை காயப்படுத்த மாட்டேன் என மன்னிப்பு கேட்க வேண்டும். இப்போது நீங்கள் கொடுத்திருக்கும் மறுப்பு ஏதோ வெறுப்பை மனதில் வைத்தே கொடுத்தைப் போல் உள்ளதால் எங்களால் ஏற்றுக்கொள்ள முடியாது. ...
தேர்தலில் சீட் தருவதற்கு லஞ்சமாக நடிகையை  நிர்வாணமாக நிற்கச் சொன்ன ராஜபக்‌ஷே நண்பர்..!

தேர்தலில் சீட் தருவதற்கு லஞ்சமாக நடிகையை நிர்வாணமாக நிற்கச் சொன்ன ராஜபக்‌ஷே நண்பர்..!

CINI NEWS, HOME SLIDER, NEWS, politics, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகைகள்
  தேர்தலில் சீட் தருவதற்கு நிர்வாணமாக நிற்கச் சொன்ன ராஜபக்‌ஷே நண்பர்..! நடிகை வெளியிட்ட பகீர் குற்றச்சாட்டு இலங்கையில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெறுகிறது. இதில் மகிந்த ராஜபக்சேவின் இலங்கை பொதுஜன முன்னணியின் வேட்பாளராக போட்டியிட நடிகை மதுசா ராமசிங்கே விரும்பியுள்ளார். இது தொடர்பாக மகிந்த ராஜபக்சேவின் நெருங்கிய நண்பரிடம் நடிகை மதுசா உதவி கேட்டிருக்கிறார், ராஜபக்சேவின் நண்பரோ, நடிகை மதுசாவை படுக்கைக்கு வரும்படி அழைத்ததோடு முழு நிர்வாணமாக நிற்க வேண்டும் என 'லஞ்சம்' கேட்டிருக்கிறார். இதனால் அதிர்ச்சியடைந்த நடிகை மதுசா இந்த விவகாரம் குறித்து கட்சியின் நிர்வாகியான முன்னாள் அதிபர் ராஜபக்‌ஷேவை சந்தித்து அவர் நண்பரின் நிர்வாணமாக நிற்க சொன்ன கொடுமையை சொல்லியிருக்கிறார். ஆனால், இதை கேட்ட மகிந்த ராஜபக்சேவோ அந்த குற்றச்சாட்டை கண்டுகொள்ளாமல் வெறும் சாரி மட்டும் கூறி விட்டு போய்...
‘அருவா சண்ட’ படத்தின் டீசர் நன்றாக இருக்கிறது – அமீர் பாராட்டு

‘அருவா சண்ட’ படத்தின் டீசர் நன்றாக இருக்கிறது – அமீர் பாராட்டு

CINI NEWS, HOME SLIDER, MOVIES, NEWS, Trailer, சினி நிகழ்வுகள், செய்திகள், டிரைலர்கள், திரைப்படங்கள், நடிகர்கள்
  'அருவா சண்ட’ படத்தின் டீசர் நன்றாக இருக்கிறது - அமீர் பாராட்டு சிலந்தி, ரணதந்த்ரா படங்களைத் தொடர்ந்து ஆதிராஜன் எழுதி இயக்கும் படம் ‘அருவா சண்ட’. இப்படத்தின் இறுதிக்கட்ட பணிகள் வேகமாக நடந்து வருகிறது. புதுமுகம் ராஜா நாயகனாக அறிமுகமாகும் இந்தப் படத்தில் மாளவிகா மேனன், சரண்யா பொன்வண்ணன், ‘ஆடுகளம்’ நரேன், கஞ்சா கருப்பு, சௌந்தர்ராஜா, மதுரை சுஜாதா, காதல் சுகுமார், சரத் உட்பட பலர் நடித்திருக்கின்றனர். பரபரப்பான திரைக்கதையோடு உருவாகும் ‘அருவா சண்ட’ படத்தின் டீசரை, இயக்குநர் அமீர் வெளியிட்டார். https://youtu.be/AKZu28cjtYo   ‘டீசர் நன்றாக இருக்கிறது, படம் வெற்றிபெற வாழ்த்துக்கள்” என்று அமீர் பாராட்டினார். ஒயிட் ஸ்கிரீன் நிறுவனம் சார்பில் இந்தப் படத்தை வி.ராஜா தயாரித்திருக்கிறார் அருவா சண்ட படத்தில் நடித்திருக்கும் சரண்யா பொன்வண்ணன் இந்த படம்...
பிரபுதேவா இயக்கத்தில் சல்மான்கான் நடிக்கும் தபாங் 3 தொடங்க பேச்சுவார்த்தை..!

பிரபுதேவா இயக்கத்தில் சல்மான்கான் நடிக்கும் தபாங் 3 தொடங்க பேச்சுவார்த்தை..!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, NEWS, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள்
பிரபுதேவா இயக்கத்தில் சல்மான்கான் நடிக்கும் தபாங் 3 தொடங்க பேச்சுவார்த்தை..! பிரபுதேவா நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் படம் ‘குலேபகாவலி’. இதில் இவருக்கு ஜோடியாக ஹன்சிகா நடித்துள்ளார். இப்படம் பொங்கல் திருநாளை முன்னிட்டு இந்த வாரம் வெளியாக இருக்கிறது. தற்போது இப்படத்தின் தீவிர புரோமோஷனில் ஈடுபட்டு வருகிறார் பிரபுதேவா. இந்த புரோமோஷன் வேலைகளில் பல சுவாரஸ்ய தகவலை கூறியுள்ளார் பிரபுதேவா. சில காலமாக படம் இயக்குவதில் கவனம் செலுத்தி வந்த பிரபுதேவா, தற்போது நடிப்பில் கவனம் செலுத்தி வருகிறார். இதுகுறித்து கேட்டதற்கு, “படம் இயக்குவது குறித்து தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளேன், கண்டிப்பாக மீண்டும் படம் இயக்குவேன். மேலும், சல்மான் கான் நடிக்கவிருக்கும் தபாங் படத்தின் மூன்றாம் பாகத்தை இயக்கும் பேச்சு வார்த்தையும் நடந்து வருகின்றது” என்றார். சல்மான் கானில் தபாங் முதல் இரண்டு பாகங்களும் ரூ ...
‘குலேபகாவலி’ என்று பெயர் சூட்டியது ஏன்?  பிரபுதேவா பட டைரக்டர் விளக்கம்

‘குலேபகாவலி’ என்று பெயர் சூட்டியது ஏன்? பிரபுதேவா பட டைரக்டர் விளக்கம்

CINI NEWS, HOME SLIDER, MOVIES, NEWS, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
  ‘குலேபகாவலி’ என்று பெயர் சூட்டியது ஏன்? பிரபுதேவா பட டைரக்டர் விளக்கம் ‘‘எம்.ஜி.ஆர். நடித்த ‘குலேபகாவலி’ படம், ஒரு பயண கதைதான். அதேபோல் பிரபுதேவா நடித்துள்ள ‘குலேபகாவலி’ படமும் பயண கதைதான். அதனால்தான் எங்கள் படத்துக்கு ‘குலேபகாவலி’ என்று பெயர் சூட்டியிருக்கிறோம். மற்றபடி, 2 படங்களுக்கும் தொடர்பு இல்லை. பிரபுதேவா, ஹன்சிகா, முனீஸ்காந்த் ஆகிய மூவரும் ஒரு புதையலை தேடி செல்கிறார்கள். அதே புதையலை தேடி வில்லன்கள் ஆனந்தராஜ், மதுசூதனராவ், மன்சூர் அலிகான், மொட்டை ராஜேந்திரன் ஆகியோரும் அலைகிறார்கள். ரேவதி, ஒரு குழந்தையை தொலைத்து விட்டு தேடுகிறார். படத்தின் கலகலப்புக்கு யோகி பாபு இருக்கிறார். 15 வருடங்களுக்கு முன் பார்த்த பிரபுதேவாவை இந்த படத்தில் பார்க்கலாம். படத்தின் கதையை கேட்டதும், ஹன்சிகா நடிக்க சம்மதித்தார். படத்தில் அவர், ‘பப்’ டான்சராக வருகிறார். விவேக் மெர்வின் இசையமைத்து இர...

சிக்கிம் மாநில விளம்பர தூதராக ஏ.ஆர்.ரகுமான் நியமனம்

CINI NEWS, HOME SLIDER, NEWS, politics, சினி நிகழ்வுகள், செய்திகள்
சிக்கிம் மாநில விளம்பர தூதராக ஏ.ஆர்.ரகுமான் நியமனம் மாநில முதல்–அமைச்சர் பவன்குமார் சாம்லிங் தலைமையில் நடந்த இந்த விழாவில், சிறப்பு அழைப்பாளராக ஆஸ்கர் விருது பெற்ற பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் கலந்து கொண்டார். விழா மேடையில் சிக்கிம் மாநிலத்தின் விளம்பர தூதராக ஏ.ஆர்.ரகுமானை நியமிப்பதற்கு முதல்–மந்திரி விருப்பம் தெரிவித்தார். இதை அவரும் ஏற்றுக்கொண்டார். இதைத்தொடர்ந்து நிகழ்ச்சியில் பேசிய பவன்குமார் சாம்லிங், ‘‘எனது பணிவான பரிந்துரையை ஏற்று சிக்கிம் மாநிலத்தின் வளர்ச்சிக்காக தனது பொன்னான நேரத்தை செலவிட ஒப்புக்கொண்ட ஏ.ஆர்.ரகுமானுக்கு நன்றி’’ என்று குறிப்பிட்டார். நிகழ்ச்சியில் பேசிய ஏ.ஆர்.ரகுமான், ‘‘எனக்கு முக்கியத்துவம் தந்து கவுரவம் அளிக்கும் விதமாக மாநிலத்தின் விளம்பர தூதராக அறிவித்ததற்கு நன்றி. சிக்கிம் மாநிலம் சகிப்புத்தன்மை, அமைதி, ஒற்றுமை, சமூக நல்லிணக்கம் ஆகியவற்றை கொண்டு...
துப்பாக்கி முனையில் ஹன்சிகா..!

துப்பாக்கி முனையில் ஹன்சிகா..!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, NEWS, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
துப்பாக்கி முனையில் ஹன்சிகா பிரபுதேவா ஜோடியாக ஹன்சிகா நடித்திருக்கும் `குலேபகாவலி' படம் வருகிற பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வருகிற 12-ஆம் தேதி ரிலீசாக இருக்கிறது. ஹன்சிகா தற்போது சாம் ஆன்டன் இயக்கத்தில் அதர்வா ஜோடியாக ஒரு படத்தில் ஒப்பந்தமாகி இருக்கிறார். இந்நிலையில், அவரது அடுத்த படம் குறித்த அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. அதன்படி ஹன்சிகா அடுத்ததாக விக்ரம் பிரபு ஜோடியாக `துப்பாக்கி முனை' படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார். தினேஷ் செல்வராஜ் இயக்கும் இந்த படத்தை வி கிரியேஷன்ஸ் சார்பில் கலைப்புலி எஸ்.தாணு தயாரிக்கிறார். ராஸ்மதி ஒளிப்பதிவு செய்ய, நடிகர் சிம்புவின் உறவினர் எல்.வி.முத்து கணேஷ் இந்த படத்திற்கு இசையமைக்கிறார்....
திரையரங்குகளில் தேசிய கீதம் கட்டாயமில்லை: சுப்ரீம் கோர்ட் உத்தரவு

திரையரங்குகளில் தேசிய கீதம் கட்டாயமில்லை: சுப்ரீம் கோர்ட் உத்தரவு

CINI NEWS, HOME SLIDER, NEWS, politics, சினி நிகழ்வுகள், செய்திகள்
  திரையரங்குகளில் படம் தொடங்குவதற்கு முன் தேசிய கீதம் இசைப்பதை கட்டாயமாக்க வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் பா.ஜ.க வழக்கறிஞர் அஸ்வினி உபாத்தியா பொதுநல வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம் தேசிய கீதம் இசைப்பதை கட்டாயமாக்கி உத்தரவு பிறப்பித்தது உச்சநீதிமன்றத்தின் இந்த உத்தரவு கடும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையிலும், எதிர்ப்பு தெரிவிக்கும் வகையிலும் பலர் கருத்து தெரிவித்தனர். இது தொடர்பாக மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில்a நேற்று ஒரு மனுதாக்கல் செய்தது. அதில், தேசிய கீதம் கட்டாயம் இசைக்கப்பட வேண்டும் என்கிற உத்தரவை மாற்ற வேண்டும் என மத்திய அரசு வலியுறுத்தியுள்ளது. தேசிய கீதத்தை இசைப்பது தொடர்பான வழிமுறைகளை அமைச்சரவை குழு உருவாக்கும் வரை இதனை நிறுத்தி வைக்க வேண்டும் எனவும் மத்திய அரசு கேட்டுக் கொண்டுள்ளது. மேலும் இந்த குழுவை அமைத்து வழ...
பாண்டியராஜனின் ‘மெரினா புரட்சி’க்கு கை கொடுத்த சிவகார்த்திகேயன்..!

பாண்டியராஜனின் ‘மெரினா புரட்சி’க்கு கை கொடுத்த சிவகார்த்திகேயன்..!

CINI NEWS, MOVIES, NEWS, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள்
பாண்டியராஜனின் ‘மெரினா புரட்சி’க்கு கை கொடுத்த சிவகார்த்திகேயன்..! ‘பசங்க’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமானவர் பாண்டிராஜ். இதனையடுத்து ‘வம்சம், மெரினா, கேடி பில்லா கில்லாடி ரங்கா, பசங்க 2, கதகளி, இது நம்ம ஆளு’ போன்ற பல படங்களை இயக்கியுள்ளார். இதில் 5 படங்களை அவரே தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான ‘பசங்க புரொடக்ஷன்ஸ்’ மூலம் தயாரித்துள்ளார். தற்போது, ‘பசங்க புரொடக்ஷன்ஸ்’ நிறுவனம் சார்பில் புதிய படத்தை தயாரித்து வருகிறார். அந்தப் படத்திற்கு ‘மெரினா புரட்சி’ என தலைப்பு சூட்டியுள்ளனர். கடந்த வருடம் ஜனவரி 8ம் தேதி ஜல்லிக்கட்டு தடைக்கு எதிராக மெரினாவில் தொடங்கி நடைபெற்ற போராட்டத்தை மையப்படுத்திய திரைப்படமாம் இது. எம்.எஸ்.ராஜ் என்பவர் இயக்கி வரும் இப்படத்திற்கு ஆர்.வேல்ராஜ் ஒளிப்பதிவாளராகவும், அல்ருஃபியான் இசையமைப்பாளராகவும், தீபக் படத்தொகுப்பாளராகவும் பணியாற்றி வருகின்ற...
பொங்கல் ரேசில் களமிறங்கிய  சூர்யா,விக்ரம்,பிரபுதேவா..!

பொங்கல் ரேசில் களமிறங்கிய சூர்யா,விக்ரம்,பிரபுதேவா..!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, NEWS, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள்
  பொங்கல் ரேசில் களமிறங்கிய சூர்யா,விக்ரம்,பிரபுதேவா..! இந்தாண்டு பொங்கல் பண்டிகையின்போது ரசிகர்களை திருப்திபடுத்த 7 படங்கள் களத்தில் இறங்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. அதற்கேற்றார்போல பல படங்கள் ஜனவரி வெளியீடு என்று பல நாட்களுக்கு முன்பே விளம்பரங்களும் வெளியிட்டு வந்தன. இந்த நிலையில், சூர்யாவின் தானா சேர்ந்த கூட்டம், பிரபுதேவாவின் குலேபகாவலி, விக்ரமின் ஸ்கெட்ச் என 3 படங்கள் மட்டுமே பொங்கல் விருந்தாக ரிலீஸ் ஆக உள்ளது. பொங்கலுக்கு இரு தினங்களுக்கு முன்பே 12ம் தேதியே இந்த படங்கள் ரிலீஸ் ஆகிறது. இதுதவிர அரவிந்த்சாமி நடிப்பில் உருவாகி இருக்கும் `பாஸ்கர் ஒரு ராஸ்கல்', விஜயகாந்த் மகன் சண்முக பாண்டியன் நடிப்பில் `மதுர வீரன்', விமல் நடிப்பில் `மன்னர் வகையறா' உள்ளிட்ட படங்களும் பொங்கல் ரேசில் கலந்து கொள்ள முயற்சித்தன. இதில் பாஸ்கர் ஒரு ராஸ்கல் பட தயாரிப்பாளர் மீது ஒன்றரை க...