ராக்ஸ்டார் அனிருத்தின் ‘ஹுக்கும்’ (Hukum) உலக சுற்றுப்பயணத்தின் வரலாறு படைத்த பிரமாண்ட நிறைவு விழா!
CINI NEWS, HOME SLIDER, World News, உலக செய்திகள், சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
மார்க் ஸ்வர்ணபூமியில்,( MARG Swarnabhoomi ) ராக்ஸ்டார் அனிருத்தின் ‘ஹுக்கும்’ (Hukum) உலக சுற்றுப்பயணத்தின் பிரமாண்ட நிறைவு விழா, வரலாறு படைத்தது
ராக்ஸ்டார் அனிருத் ரவிச்சந்தரின் "ஹுக்கும்"(Hukum)உலக இசைச் சுற்றுப்பயணத்தின் இறுதிக்கட்ட கச்சேரி, 2025 ஆகஸ்ட் 23-ஆம் தேதி, குவாத்தூர்(Kuvathur), ECR-ல் உள்ள மார்க் ஸ்வர்ணபூமியில் நடைபெற்றது. 50,000-க்கும் அதிகமான ரசிகர்கள் பங்கேற்று, சென்னை கண்ட மிகப்பெரிய, சிறப்பாக திட்டமிடப்பட்ட இசை நிகழ்வுகளில் ஒன்றாக, இந்த இசை நிகழ்ச்சி புதிய வரலாறு படைத்திருக்கிறது.
பரந்த வாகன நிறுத்துமிடம், உணவு மற்றும் குடிநீர் அரங்குகள், அனைத்து பகுதிகளிலும் கழிப்பறைகள், மருத்துவ மையங்கள், வலுவான உள்கட்டமைப்பு மற்றும் கடுமையான பாதுகாப்பு நடவடிக்கைகளுடன், நிகழ்ச்சி எந்த தடங்கலும், இடையூறுகளும் இல்லாமல் மிகச் சிறப்பாக நடத்தப்பட்டது. பெருமளவிலா...









