நடிகர் ஜெய் நடிப்பில் “பிரேக்கிங் நியூஸ்” விரைவில் திரையில் !
நடிகர் ஜெய் நடிப்பில் வெளிவரவிருக்கும் அடுத்தடுத்த படங்கள், ஒவ்வொன்றும் பெரும் நம்பிக்கையளிப்பதாக, வணிக வட்டாரத்தில் அவருக்கு ஒரு நிலையான இடத்தை பெற்றுத்தருவதாக உள்ளது. அந்த வகையில் திருகடல் உதயம் தயாரிப்பில் இயக்குநர் ஆண்ட்ரு பாண்டியன் இயக்கத்தில் உருவாகும் “பிரேக்கிங் நியூஸ்” திரைப்படம் ஜெய் நடிப்பில் மிக முக்கியமானதொரு திருப்புமுனை படமாக வளர்ந்து வருகிறது. விஷுவல் புரொமோக்கள் மற்றும் பாடல்கள் ஒன்றன்பின் ஒன்றாக வெளியாகி ரசிகர்களை கவர்ந்த நிலையில், விரைவில் உலகளவில் திரையரங்கில் இப்படம் வெளியாகவுள்ளது.
இயக்குநர் ஆண்ட்ரு பாண்டியன் படம் குறித்து கூறியதாவது...
படத்தின் படப்பிடிப்பை முழுதாக முடித்துவிட்டோம். போஸ்ட் புரடக்ஷன் பணிகள் முழு வீச்சில் நடந்தேற, தற்போது அதுவும் முடியும் தருவாயில் உள்ளது. நடிகர் ஜெய்யு...
*ட்ரெண்டிங்கில் இடம்பிடித்த ‘மாநாடு’ பர்ஸ்ட்லுக் போஸ்டர்*
சுரேஷ் காமாட்சியின் ‘வி’ ஹவுஸ் புரொடக்சன்ஸ் நிறுவனம் தயாரிப்பில், வெங்கட்பிரபு இயக்கத்தில், சிலம்பரசன் நடித்துவரும் ‘மாநாடு’ படத்தின் படப்பிடிப்பு, தற்போது பாண்டிச்சேரியில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. வெங்கட் பிரபு காட்சிகளை படமாகும் வேகமும் அதற்கு கொஞ்சமும் சளைக்காமல் ஈடுகொடுக்கும் சிலம்பரசனின் ஒத்துழைப்பும் படக்குழுவினரை ஆச்சர்யப்பட வைத்துள்ளது.
குறிப்பாக புதிய சிலம்பரசனை இந்தப்படப்பிடிப்பில் பார்க்க முடிவதாக படக்குழுவினர் சிலாகிக்கின்றனர். இதேவேகத்தில் சென்றால், ஏற்கனவே திட்டமிட்ட நாட்களுக்கு முன்பாகவே படப்பிடிப்பு முடிவடைவதற்கான வாய்ப்புகள் நிறையவே இருக்கிறது என்றும் சொல்லப்படுகிறது,
இந்தநிலையில், தற்போது ‘மாநாடு’ படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. அப்துல் காலிக் என்கிற பெயரில் இஸ்லாமிய இளைஞன் கதாபாத்தி...
சிலம்பரசன் நடிப்பில் தற்போது உருவாகி வரும் படம் மாநாடு. ஊரடங்கிற்கு முன்னர் ஹைதராபாத் ராமோஜி பிலிம் சிட்டியில் பிரம்மாண்ட செட் அமைத்து மாநாடு படத்தின் முதல்கட்ட படப்பிடிப்புகள் நடந்தது. ஊரடங்கிற்குப் பின்னர் இந்தப் படவேலைகள் அப்படியே நின்றது. இதனால் சுசீந்திரன் இயக்கத்தில் 40 நாட்களில் ‘ஈஸ்வரன்’ படத்தில் நடித்து முடித்தார் சிம்பு.
‘ஈஸ்வரன்’ படத்தை முடித்த கையோடு நவம்பர் 9-ம் தேதியிலிருந்து பாண்டிச்சேரியில் தொடங்கிய ‘மாநாடு’ படப்பிடிப்பில் கலந்து கொண்டார் சிம்பு. சிலம்பரசன் முதல்முறையாக அப்துல் காலிக் என்ற இஸ்லாமிய இளைஞராக நடித்திருக்கும் மாநாடு திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு இன்று வெளியிட்டுள்ளது. அதில் சிம்பு தலையின் ஒரு பக்கத்திலிருந்து ரத்தம் வழிய, அவர் கைகளை உயர்த்தி பிரார்த்தனையில் ஈடுபடுவது போல் வடிவமைக்கப்பட்டுள்ளது.
தலையில் புல்லட் பாய்ந்து ரத...
சூர்யா நடித்த சூரரைப் போற்று படத்தில் இறுதி காட்சியில் வரும் பெண் பைலட் நிஜத்திலும் பைலட் என்பது தற்போது தெரிய வந்துள்ளது.
சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள சூரரைப் போற்று திரைப்படம் தீபாவளி விருந்தாக ஒடிடி தளத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
இந்த படத்தில் நெடுமாறானாக சூர்யா, பொம்மியாக அபர்ணா பாலமுரளி என்று நடித்த அனைவரும் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தனர்.
ஒரு காட்சிக்கு வந்தாலும் அனைவரையும் திரும்பி பார்க்க வைத்துள்ளார் க்ளைமேக்ஸ் காட்சியில் வந்த பெண் பைலட் ஒருவர்.
இவர் படத்தில் மட்டுமல்ல நிஜத்திலும் பைலட் தான். இவர் பெயர் வர்ஷா. இண்டிகோ விமானத்தில் பைலட்டாக இவர் உள்ளார்.
சென்னையில் வசித்து வரும் இவரது கணவர் லோகேஷ் என்பவரும் பைலட் தான். இவரது பூர்விகம் கேரளா.
சூரரைப் போற்று படத்தின் இயக்குனர் சுதா கொங்கரா கேட்டுக் கொண்டதற்காக சிறப்பு ...
சாமி இயக்கத்தில் ஆதி, பத்மபிரியா ஜோடியாக நடித்து 2007-ல் திரைக்கு வந்த படம் மிருகம். போதை, பெண்களுடன் தகாத உறவு, ரவுடித்தனம் என்று மிருகத்தனமாக திரியும் இளைஞன் எய்ட்ஸ் நோயில் சிக்கி எப்படி சீரழிகிறான் என்பது கதை. இந்த படத்துக்கு ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு கிடைத்தது. வசூலும் பார்த்தது. தற்போது மிருகம் படத்தின் இரண்டாம் பாகம் தயாராக உள்ளது. இதில் கதாநாயகனாக ஆர்.கே.சுரேஷ் நடிக்கிறார்.
இதுகுறித்து ஆர்.கே.சுரேஷ் கூறும்போது, “மிருகம் படத்தின் முதல் பாகம் பெரிய வெற்றி பெற்றது. அதன் இரண்டாம் பாகத்தில் கதாநாயகனாக நடிப்பது பெருமையாக உள்ளது. திரைக்கதை முதல் பாகத்தை விட சிறப்பாக இருக்கும். இதர நடிகர், நடிகை தேர்வு நடக்கிறது. படப்பிடிப்பு பிப்ரவரி மாதம் தொடங்கும்” என்றார்....
இயக்குனரும் நடிகர் விஜய்யின் தந்தையுமான எஸ்.ஏ.சந்திரசேகர், விஜய் மக்கள் இயக்கத்தை அரசியல் கட்சியாக சமீபத்தில் பதிவு செய்தார். இதற்கும் விஜய்க்கும் சம்மந்தம் இல்லை என்று அவரே கூறினார். விஜய்யும் மறுப்பு தெரிவித்து அறிக்கை வெளியிட்டார். இந்த விஷயம் மிகவும் பரபரப்பானது.
இதற்கிடையில் எஸ்.ஏ.சந்திரசேகர், வெங்கட் பிரபு இயக்கி வரும் மாநாடு படத்தில் நடித்து வருகிறார். அரசியலை மையமாக வைத்து உருவாகி வரும் இதில் எஸ்.ஏ.சந்திரசேகர் முதலமைச்சர் வேடத்தில் நடித்து இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கான காட்சிகள் பாண்டிசேரியில் படக்குழுவினர் படமாக்கியுள்ளனர்
சிம்பு கதாநாயகனாக நடித்து வரும் இப்படத்தில் கல்யாணி பிரியதர்ஷன், பாரதி ராஜா, எஸ்.ஜே.சூர்யா, மனோஜ், உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள். சுரேஷ் காமாட்சி இப்படத்தை தயாரித்து வருகிறார்....
மீண்டும் சினிமா தயாரிப்பில் இறங்கிய வேந்தர் மூவீஸ் பார்ட்னர்!
பல ஆண்டுகளுக்கு முன்பு பெரும் பரபரப்பான தயாரிப்பு நிறுவனமாக இருந்த வேந்தர் மூவீஸ் பட நிறுவனத்தில் இணைப் தயாரிப்பாளராக இருந்தவர் பாலா.
இவர் நீண்ட நாட்களுக்கு பின் மீண்டும் பட தயாரிப்பில் இறங்கி உள்ளார்.
ஆடம்பரமில்லாமல் இன்று பாலா தயாரிக்கும் படத்தின் துவக்க விழா நடந்துள்ளது.
தேஜாயூ என பெயரிடப்பட்ட புதுப்படத்தை ஒயிட் கார்ப்பெட் பிலிம்ஸ் சார்பாக விஜய பாண்டி என்பவர் பெயரில் இவர் தயாரிக்கிறார் என்கிறார்கள் விவரம் அறிந்தவர்கள்....
தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க புதிய நிர்வாகிகளுக்கான தேர்தல் சென்னையில் வரும் நவம்பர் 22 அன்று நடைபெற உள்ளது.
துணை தலைவர் பதவிக்கு போட்டியிடும் சிங்காரவடிவேலன் வெளியிட்ட நிழல் பட்ஜெட்!
சுயேச்சையாக துணை தலைவர் பதவிக்கு போட்டியிடும் R.சிங்காரவடிவேலன் கடந்த இரு வார காலமாக தயாரிப்பாளர்களை நேரடியாக சந்தித்து வாக்கு கேட்டு வந்தார்.
“வெற்றி பெற்றால் நீங்கள் என்ன செய்வீர்கள்..?” என எல்லோரும் கேட்ட கேள்விக்கு பதிலாக சங்கத்தின் நிழல் பட்ஜெட் ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில் சங்க வருமானத்திற்கான வழிமுறை, அதற்குரிய செலவு கணக்கு, இரண்டையும் புள்ளி விபரங்களுடன் வெளியிட்டு இருப்பது தேர்தல் களத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.
இதுவரையிலும் நடைபெற்ற எந்தத் தேர்தலிலும் போட்டியிட்ட அணியோ அல்லது தனிப்பட்ட நபர்களோ இது போன்ற நிழல் பட்ஜெட்டை வெளியிட்டது இல்லை என்பது க...