செவ்வாய்க்கிழமை, நவம்பர் 24
Shadow

சினி நிகழ்வுகள்

இரவின் நிழல் ரிலீஸ் தேதியை வெளியிடும் நடிகர் தனுஷ்!

இரவின் நிழல் ரிலீஸ் தேதியை வெளியிடும் நடிகர் தனுஷ்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
  இயக்குனரும், நடிகருமான பார்த்திபன் இயக்கி நடித்துள்ள திரைப்படம் 'இரவின் நிழல்'. இதில் வரலஷ்மி சரத்குமார், ரோபோ ஷங்கர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். 'இரவின் நிழல்' திரைப்படம் நான் லீனியர் திரைக்கதை முறையில் ஒரே ஷாட்டில் எடுக்கப்பட்ட உலகின் முதல் படம் என்ற பெருமையை பெற்றுள்ளது. 'அகிரா புரொடக்ஷன்ஸ்' தயாரித்துள்ள இப்படத்திற்கு ஏ.ஆர் ரஹ்மான் இசையமைத்துள்ளார். சமீபத்தில் இதன் ட்ரைலர் மற்றும் பாடல்கள் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் 'இரவின் நிழல்' படத்தின் புதிய அப்டேட்டை பிரபலம் ஒருவர் வெளியிடுவார் என்றும் அப்பிரபலம் என்ற வார்த்தையிலுள்ள மூன்றெழுத்தும் அவர் நடித்துள்ள படத்தின் மூன்றெழுத்தும் ஒன்றாகும் என்று பார்த்திபன் சமூக வலைதளத்தில் பதிவிட்டிருந்தார். அதன்படி, இத்திரைப்படத்தின் ரிலீஸ் தேதியை நடிகர் தனுஷ் இன்று மாலை 6 மணிக்கு வெள...
சர்ச்சைக்கு பதிலளித்த மாதவன்!

சர்ச்சைக்கு பதிலளித்த மாதவன்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
பிரபல நடிகர் மாதவன் இயக்குனராக அறிமுகமாகியுள்ள திரைப்படம் 'ராக்கெட்ரி: தி நம்பி எஃபெக்ட்'. இஸ்ரோ ராக்கெட் விஞ்ஞானி ஸ்ரீ நம்பி நாராயணனின் வாழ்க்கையில் நடந்த உண்மைச் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்ட இந்த திரைப்படத்தை இயக்குவதோடு மட்டுமல்லாமல் அதில் முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்துள்ளார். சாம் சிஎஸ் பின்னணி இசையமைத்துள்ள இப்படத்திற்கு சிர்ஷா ரே ஒளிப்பதிவு செய்துள்ளார். இப்படம் ஜூலை 1-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. ராக்கெட்ரி படம் திரைக்கு வர உள்ள நிலையில் இப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு சமீபத்தில் நடைபெற்றது, அதில் மாதவான் பேசியதாவது, "ஆயிரம் ஆண்டுக்கு முன் நம் முன்னோர்கள் எழுதிய பஞ்சாங்கத்திற்கும், தற்போது உள்ள விஞ்ஞானத்திற்கும் தொடர்பு இருக்கிறது. நமது பஞ்சாங்கத்தில் கிரகங்கள் அதனுடைய ஈர்ப்பு விசை போன்றவற்றை ஆயிரம் வருடங்களுக்கு முன்பே எழுதி வைத்துள்ளனர். அந்த பஞ்ச...
23 ஆண்டுகளுக்கு பிறகு விஜய்யுடன் இணையும் குஷ்பு!

23 ஆண்டுகளுக்கு பிறகு விஜய்யுடன் இணையும் குஷ்பு!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
பீஸ்ட் படத்துக்கு பிறகு விஜய் வாரிசு என்ற புதிய படத்தில் நடித்து வருகிறார். இது விஜய்க்கு 66-வது படம். பிரபல தெலுங்கு இயக்குனர் வம்சி பைடிபள்ளி இப்படத்தை இயக்கி வருகிறார். இதில் நாயகியாக ராஷ்மிகா மந்தனா நடித்து வருகிறார். பணக்கார குடும்பத்தை சேர்ந்த விஜய் தனது குடும்பத்துக்கு வரும் பிரச்சினைகளை எதிர்கொண்டு எப்படி முறியடிக்கிறார் என்ற கதையம்சத்தில் படம் தயாராவதாக கூறப்படுகிறது. இப்படத்தின் முக்கிய கதாப்பாத்திரத்தில் சரத்குமார், ஷ்யாம், பிரபு, பிரகாஷ் ராஜ் ஆகியோரும் நடித்து வருகின்றனர். விஜய்யின் தந்தையாக சரத்குமாரும் சகோதரராக ஷ்யாமும் நடிப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில் இப்படத்தில் குஷ்பு முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. 1999-இல் வெளியான மின்சார கண்ணா படத்தில் விஜய்யும் குஷ்புவும் இணைந்து நடித்திருந்தனர். அதன்பின் 23 ஆண்டுகளுக்கு பிறகு மீண்...
வேழம் வித்தியாசம்! கோடங்கி விமர்சனம்

வேழம் வித்தியாசம்! கோடங்கி விமர்சனம்

MOVIES, REVIEWS, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள், விமர்சனம்
  கோடங்கி விமர்சனம் வேழம் வித்தியாசம்!   ஊட்டிக்கு தனது காதலியுடன் பைக்கில் டிராவல் செய்து கொண்டிருக்கும் ஹீரோ அசோக் செல்வனை திடீரென இரும்பு ராடால் தாக்கி விட்டு அவரது காதலி ஐஸ்வர்யா மேனனை மர்ம ஆசாமி கடத்தி சென்று கொன்று விடுகிறார். காதலியை யார் கொன்றார்கள்? எதற்காக கொன்றார்கள்? கொலையாளி சிக்கினானா இல்லையா எனபதை சொல்லும் படம் தான் வேழம். முழுக்க முழுக்க சைக்கோ த்ரில்லர்வகை படம்தான் இது. 7 ஆண்டுகள் கழித்து என அதன் பிறகு படம் ஆரம்பிக்க தாடி லுக்கில் அசோக் செல்வன் வந்து படம் முழுக்க கொலைகாரனின் வாய்ஸை மட்டுமே அடையாளமாகக் கொண்டு கொலையாளியை தேடுவதும், கடைசி கிளைமாக்ஸ் காட்சிவரை யூகிக்க முடியாமல் டிவிஸ்ட் மேல் டிவிஸ்ட் வைத்து ஓவர் டோஸ் கொடுத்திருக்கிறார் இயக்குனர். இது போன்ற சைக்கோ கில்லர் கதைகளில் கொலையாளி யார் என்று கண்டுபிடிக்கும் காட்சியமைப்புகள் படம் பார்க...
அந்த பாடலை கேட்க மிகவும் ஆவலுடன் இருக்கிறேன் – இமான்.

அந்த பாடலை கேட்க மிகவும் ஆவலுடன் இருக்கிறேன் – இமான்.

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள்
*அந்த பாடலை கேட்க மிகவும் ஆவலுடன் இருக்கிறேன் – இமான்.* இசை தமிழர் வாழ்வில் தவிர்க்க முடியாத ஒரு கலை வடிவம். மனிதர்களின் உணர்ச்சிகளுக்கு வாழ்வியல் மருந்தாக இருப்பது திரை இசை. எத்தகைய பெரிய துன்பங்களையும் நல்ல இசை ஆறுதல் படுத்திவிடும். அதிலும் நமக்கு நெருக்கமான மொழியும்,இசையும் சேரும் போது எத்தகைய நெஞ்சையும் கரைய செய்து விடும். அது போல் தமிழர்களின் நெஞ்சங்களை தான் இசை மூலம் நிறைய செய்தவர் டி.இமான். தமிழ் சினிமாவின் நம்பிக்கைக்குறிய இசையமைப்பாளர்களில் ஒருவர் டி. இமான். பெரிய படமோ, சின்ன படமோ இவரது பாடல்களே அந்த படத்திற்கு தனி அந்தஸ்தை கொடுத்து விடும். இருபது ஆண்டுகள் என்ற அசாதாரணமான இமானின் இசைப் பயணத்தில் 100 மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்து 150 புதிய பாடகர்களை அறிமுகப்படுத்துவது என்பது அவ்வளவு எளிதான காரியமில்லை. 2002 ஆம் ஆண்டு இளைய தளபதி விஜய் நடிப்பில் வெளியான தமிழன் படத்தி...
உலகின் மிக அழகான பெண்.. உற்சாகத்தில் ஆம்பர் ஹியர்ட் !

உலகின் மிக அழகான பெண்.. உற்சாகத்தில் ஆம்பர் ஹியர்ட் !

CINI NEWS, HOME SLIDER, NEWS, World News, உலக செய்திகள், சினி நிகழ்வுகள், நடிகர்கள், நடிகைகள்
லண்டனில் உள்ள மேம்பட்ட முக அழகுசாதன மற்றும் பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை மையத்தைச் சேர்ந்த டாக்டர் ஜூலியன் டி சில்வா 2016 - ஆம் ஆண்டில் உலகின் மிக அழகான முகம் யாருடையது என்பதைக் கண்டறிய பண்டைய முக மேப்பிங் நுட்பமான பிஹச்ஐ பயன்படுத்தினார். இந்த பிஹச்ஐ- யானது அழகுக்கான கிரேக்க கோல்டன் ரேஷியோவிற்கு முகம் எவ்வளவு நெருக்கமாக இருக்கிறது என்பதைக் கணக்கிடப் பயன்படுகிறது. இதைத் தொடர்ந்து டாக்டர் ஜூலியன் டி சில்வா ஆராய்சிக்கு பிறகு நடிகை ஆம்பர் ஹியர்ட் முக அமைப்பானது கிரேக்க கோல்டன் ரேஷியோவிற்கு 91.85 சதவீதம் துல்லியமாக இருப்பதைக் கண்டறிந்தார். அதைத் தொடர்ந்து, இதே நுட்பத்தை பயன்படுத்தி ராபர்ட் பாட்டின்சன் முக அமைப்பானது கோல்டன் ரேஷியோவிற்கு 92.15 சதவீதம் துல்லியத்துடன் இருப்பதை கண்டறிந்துள்ளார். இதன் மூலம் நடிகை ஆம்பர் ஹியர்ட் உலகின் மிக அழகான பெண் என்றும் நடிகர் ராபர்ட் பாட்டின்சன் உலகி...
மாயோன் திரைப்படம்.. பார்வையற்றவர்களுக்காக சிறப்பு காட்சி‌!

மாயோன் திரைப்படம்.. பார்வையற்றவர்களுக்காக சிறப்பு காட்சி‌!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
  *நாளை வெளியாகும் மாயோன் திரைப்படம்.. பார்வையற்றவர்களுக்காக சிறப்பு காட்சி‌!* நாளை வெளியாக உள்ள மாயோன் திரைப்படத்தை பார்க்க பார்வையற்றவர்களுக்கு சிறப்பு காட்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தமிழ் சினிமாவில் டபுள் மீனிங் ப்ரொடக்ஷன் நிறுவனத்தின் சார்பில் அருண்மொழி மாணிக்கம் மாயோன் படத்தை தயாரித்து திரைக்கதை அமைத்துள்ளார். என் கிஷோர் என்பவர் படத்தை இயக்கியுள்ளார். சிபி சத்யராஜ், தான்யா ரவிச்சந்திரன், ராதாரவி, கே எஸ் ரவிக்குமார் மற்றும் பலர் நடிப்பில் இந்த திரைப்படம் உருவாகி உள்ளது. ஆன்மீகத்தையும் அறிவியலையும் மையமாக கொண்டு உருவாகியுள்ள இந்த திரைப்படத்தின் டீஸர், ட்ரைலர் ஆகியவை ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. மேலும் பார்வையற்றவர்களுக்காக பிரத்தியேகமாக ஆடியோ டிஸ்கிரிப்ஷனுடன் டீஸர், ட்ரைலர் ஆகியவை வெளியாகி மக்கள் மத்தியில் பெரும் பாராட்டுகளைப் பெற்றது. மேலும் இ...
மீண்டும் கேப்டனாக கர்ஜிக்க வேண்டும் – ரஜினிகாந்த் வாழ்த்து!

மீண்டும் கேப்டனாக கர்ஜிக்க வேண்டும் – ரஜினிகாந்த் வாழ்த்து!

CINI NEWS, HOME SLIDER, NEWS, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகர்கள்
நடிகரும் தே.மு.தி.க. தலைவருமான விஜயகாந்த் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு ரத்த ஓட்டம் சீராக இல்லாத காரணத்தால் வலது கால் விரல் நீக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியானது. இதுதொடர்பாக தே.மு.தி.க. வெளியிட்ட அறிக்கையில், நீண்ட ஆண்டுகளாக இருக்கும் நீரிழிவு பிரச்சினையால் தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்தின் வலது காலில் உள்ள விரல் பகுதியில் ரத்த ஓட்டம் சீராக இல்லாததால் டாக்டரின் ஆலோசனைப்படி விரல் அகற்றப்பட்டது. மருத்துவர்களின் கண்காணிப்பில் தற்போது அவர் நலமாக இருக்கிறார். சிகிச்சை முடிந்து ஓரிரு நாட்களில் விஜயகாந்த் வீடு திரும்புவார் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. இந்நிலையில், விஜயகாந்த் விரைவில் குணமடைய வேண்டும் என்று நடிகர் ரஜினிகாந்த் அவருடைய சமூக வலைத்தளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இதுகுறித்து ரஜினிகாந்த் வெளியிட்டுள்ள பதிவில், என் அருமை நண்பர் விஜயகாந்த் அவர்கள் விரைவில் குணமட...
பாடகி சின்மயிக்கு இரட்டை குழந்தை பிறந்தது!

பாடகி சின்மயிக்கு இரட்டை குழந்தை பிறந்தது!

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள்
தமிழ் சினிமாவில் பிரபலமான பின்னணி பாடகிகளுள் ஒருவர் சின்மயி. இவர் பின்னணி பாடகியாக மட்டுமல்லாமல் தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் பின்னணி குரல் கொடுப்பவராகவும் இருக்கிறார். இவர் 2014-ஆம் ஆண்டு நடிகரும், இயக்குனருமான ராகுல் ரவீந்திரனை திருமணம் செய்து கொண்டார். 2018-ஆம் ஆண்டு தெலுங்கில் இயக்குனராக அறிமுகமானார் ராகுல் ரவீந்திரன். இவர் இயக்கிய மன்மதடு 2 என்ற படத்தில் நாகர்ஜுனா மற்றும் ரகுல் ப்ரீத் சிங் நடித்திருந்தனர். இந்த படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. சின்மயி, ராகுல் ரவீந்திரன் தம்பதியினருக்கு திருமணமாகி எட்டு வருடங்கள் ஆகியுள்ளதை அடுத்து சின்மயிக்கு இரட்டை குழந்தை பிறந்துள்ளது. ஆண் மற்றும் பெண் குழந்தைகளான இவர்களுக்கு த்ரிப்தா, ஷர்வாஸ் என்று பெயர் வைத்துள்ளனர். அந்த குழந்தைகளின் கைகளை மட்டும் புகைப்படம் எடுத்து சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். அவருக்கு ரசிகர்கள் ப...
விஜய் பர்த்டேவை முன்னிட்டு அடுத்த போஸ்டரை வெளியிட்ட படக்குழு!

விஜய் பர்த்டேவை முன்னிட்டு அடுத்த போஸ்டரை வெளியிட்ட படக்குழு!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
பீஸ்ட் படத்தின் வெற்றியை தொடர்ந்து தோழா உள்ளிட்ட படங்களை இயக்கிய வம்சி பைடிப்பள்ளி இயக்கும் படத்தில் விஜய் நடித்து வருகிறார். இப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் நேரடியாக வெளியாக உள்ளது. இதில் விஜய்க்கு ஜோடியாக ரஷ்மிகா மந்தனா நடித்து வருகிறார். முக்கிய கதாபாத்திரத்தில் சரத்குமார், பிரபு, பிரகாஷ் ராஜ், ஷாம், ஸ்ரீகாந்த், ஜெயசுதா, சங்கீதா, சம்யுக்தா உள்ளிட்ட பல முன்னணி நடிகர்கள் நடித்து வருகின்றனர். இப்படத்தைப் பிரபல தயாரிப்பாளர் தில் ராஜு தயாரிக்கிறார். இப்படம் குடும்ப பின்னணி படமாக இருக்கும் என படக்குழு ஏற்கனவே அறிவித்திருந்தது. இப்படத்தின் படப்பிடிப்பு முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. சில தினங்களுக்கு முன்பு, தளபதி 66 படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ஜூன் 21-ஆம் தேதி மாலை 6.01 மணிக்கு வெளியாகும் என படக்குழு அறிவித்திருந்தது. நேற்று தளபதி 66 படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்...