டெல்லியில் நடிகர் அமிதாப் பச்சனுக்கு குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் தாதா சாகேப் பால்கே விருதினை வழங்கினார். இந்தி நடிகர் அமிதாப் பச்சனுக்கு திரைத்துறை சேவையை பாராட்டி தாதா சாகேப் பால்கே விருது வழங்கப்பட்டது.
விருது பெற்ற அமிதாப்புக்கு ரஜினி வாழ்த்து தெரிவித்தார்.
இந்தி மார்க்கெட்டை குறி வைக்கும் ரஜினி "தர்பார்" முருகதாஸ் சொன்ன ரகசியம்..!
ரஜினியை வைத்து முதல்முறையாக ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கியிருக்கும் ‘தர்பார்’ வரும் ஜனவரி 9 ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாக உள்ளது. லைகா புரொடக்ஷன்ஸ் தயாரித்திருக்கும் இப்படத்தில் நயன்தாரா, ஹீரோயினாக நடித்திருக்கிறார். பாலிவுட் நடிகர் சுனில் ஷெட்டி வில்லனாக நடித்திருக்கிறார்.
சென்சார் பணியில் ஈடுபட்டிருக்கும் இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ், பத்திரிகையாளர்களை சந்தித்த போது ”‘தர்பார்’ ரஜினி சார் ரசிகர்களை குஷிப்படுத்தும் சூப்பர் ஸ்டார் முத்திரை படமாக இருப்பதோடு, என் படங்களில் என்னவெல்லாம் இருக்குமோ, அதை ரஜினி சார் பாணியிலும் பார்க்கலாம்” என்றார்.
அவரிடம் ”தர்பார் படத்தின் டிரைலர் தமிழை விட இந்தியில் பெரிய அளவில் ரீச் ஆகியிருக்கிறதே, ஏன்” என்றதற்கு, “அது முதலிலேயே நாங்கள் திட்டமிட்டது தான். சுமா...
நடிகர் விஜய் சேதுபதியின் 41வது பிறந்தநாளை முன்னிட்டி ஒரு லட்ச ரூபாய்க்கு மேலான பரிசுப் போட்டிகளை திரைப்படம் டாட் காம் அறிவித்துள்ளது.
இந்தப் போட்டிகளில் விஜய் சேதுபதியை வரையும் ஓவியப்போட்டி, மிமிக்ரி போட்டி, டிக்டாக் போட்டி மற்றும் விஜய் சேதுபதியை குறித்த விமர்சன போட்டி இடம் பெறுகிறது.
இந்தப் போட்டிகள் ஒவ்வொன்றுக்கும் முதல் பரிசு ரூபாய் 10,000 இரண்டாம் பரிசு ரூபாய் ஐந்தாயிரம் மூன்றாம் பரிசு ரூபாய் 3 ஆயிரம் என வழங்கப்படுகிறது.
இந்தப் போட்டிகள் தவிர பெண்களுக்காக பிரத்தியேகமாக ஒரு போட்டியும் நடத்தப்படுகிறது விஜய் சேதுபதியை எதனால் பிடிக்கும் என்று சிறப்பாகச் சொல்லும் 41 பெண்களுக்கு தலா 1,000 வீதம் பரிசு அளிக்கப் படுகிறது.
இந்த போட்டிக்கான படைப்புகள் வந்து சேர வேண்டிய கடைசி தேதி டிசம்பர் 31, 2019.
இந்தப் போட்டிகள் குறித்த மேலதி...
ரஜினிக்கு பதில் சூர்யா...
கமலுக்கு பதில் தனுஷ்...
ஸ்ரீபிரியா ஆக மாறப்போகும் நயன்தாரா...
மீண்டும் வரப்போகும் அவள் அப்படிதான்..!
100 வருட தமிழ் சினிமா வரலாற்றில் முக்கிய பங்கு வகிக்கும் திரைப்படங்களில் ஒன்று ‘அவள் அப்படித்தான்’. ருத்ரயா இயக்கத்தில், ரஜினி, கமல், ஸ்ரீபிரியா ஆகியோரது நடிப்பில் 1978 ஆம் ஆண்டு வெளியான இப்படம் காலத்தால் அழியாத கலை பொக்கிஷமாகவே பார்க்கப்படுகிறது.
இப்படத்தின் ரீமேக் உரிமையை ருத்ரயாவிடம் ஸ்ரீப்ரியா கேட்ட போது, ரஜினி, கமல் வேடத்தில் யார் நடிப்பாங்கனு, என்று கேட்டவர், உரிமையை தர மறுத்துவிட்டாராம்.
அதே சமயம், ருத்ரயா இறப்பதற்கு ஒரு மாதத்திற்கு முன்பு ஸ்ரீபிரியாவுக்கு ‘அவள் அப்படித்தான்’ ரீமேக் உரிமையை வழங்கியுள்ளார். அப்போது ‘த்ரிஷ்யம்’ படத்தின் தெலுங்கு ரீமேக்கை இயக்கிக் கொண்டிருந்ததால், ஸ்ரீபிரியாவால் அவள் அப்படித்தான் படத்தின் ரீமேக்கை ...
புதுமுகங்கள் டாக்டர் மாறன், ‘அம்மணி’ புகழ் ஸ்ரீமகேஷ், தீஷா, தாரா, மனோபாலா, இமான் அண்ணாச்சி, நெல்லை சிவா, ‘போஸ்டர்’ நந்தகுமார், விஜய் டிவி புகழ் நாஞ்சில் விஜயன், ராதா, மடிப்பாக்கம் சுரேஷ், கன்னட பட உலகில் கதாநாயகியாக நடித்து வரும் ரூபிகா, நடன இயக்குனர் சிவசங்கர் ஆகியோர் இப்படத்தில் நடித்துள்ளனர்.
‘டிஜி திங்க் மீடியா ஒர்க்ஸ்’ சார்பில் டாக்டர் சி.மணிமேகலை இப்படத்தை தயாரித்துள்ளார்.
கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியிருப்பவர் டாக்டர் மாறன். ‘வேதம் புதிது’ தேவேந்திரன் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். பாடல்களை விஜய்சாகர், டாக்டர் கிருதயா, மற்றும் டாக்டர் மாறன் எழுதியுள்ளனர். நடனத்தை சிவசங்கர், சந்திரிக்கா ஆகியோர் கவனிக்கின்றனர். பாலாஜிஒளிப்பதிவு செய்ய, படத்தொகுப்பு சுரேஷ் அர்ஸ் கவனிக்கிறார்.
திரைப்பட கல்லூரியிலும் படித்து பட்டம் பெற்றுள்ள டாக்டர் மாறன், ‘இனிய பயணம்’, ‘பொன்னான ...
தமிழ் சினிமாவில் இயல்பான கதைகளை படமாக பார்த்து ரொம்ப நாளாகிவிட்டது. அதிலும் வலியோடு நிஜத்தை சொல்லும் படங்கள் வருவது நின்றே விட்டது என்றே சொல்லலாம்.
ஆனால் அத்திப் பூத்தார் போல 96 படம் வந்து மெகா ஹிட் ஆனது. அப்படி ஒரு ஹிட் வரிசையில் சேரும் கதை கொண்ட படம்தான் நான் அவளை சந்தித்த போது.
எல்.ஜி.ரவிசந்தர் இயக்கியுள்ள "நான் அவளை சந்தித்த போது" படமும் 96ல் நடந்த ஒரு உண்மையான கதை என சொல்லும் போதே படம் பார்க்கத் தொடங்கிய எல்லாரும் கண்டிப்பாக நிமிர்ந்து உட்காருவார்கள்.
இயக்குனர் ஆன பிறகுதான் கல்யாணம் என வைராக்கியத்தோடு இருக்கும் ஹீரோ வழி தெரியாமல் தவிக்கும் ஹீரோயினை சொந்த ஊருக்கு அழைத்து செல்கிறார்.
அங்கே ஹீரோவை தவறாக புரிந்து கொள்ளும் ஹீரோயின் வீட்டில் திடீர் கல்யாணம் செய்து வைக்கிறார்கள்.
அதன் பின் ஹீரோவின் இயக்குனர் கனவு என்ன ஆனது என்பதை வலியோடு சொல்லி படம் பார்க...
இரண்டு கலைஞர்களை மட்டுமே வைத்து ஹாரர் திரில்லர் படமாக வெறும் 10 நாட்களில் உருவாகியிருக்கும் ‘டோலா’ படத்தின் வெளியீட்டு விழா இன்று (25.12.2019) நடைபெற்றது. அவ்விழாவில் கலந்து கொண்ட படக்குழுவினர்கள் மற்றும் சிறப்பு விருந்திருனர்கள் பேசியதாவது
தயாரிப்பாளர் டாக்டர் ஷாம் குமார் பேசும்போது,
நான் இந்த இடத்திற்கு வருவதற்கு காரணம் என் நண்பர்கள் தான். ஊக்குவிக்க முடியவில்லையென்றாலும் கைதட்டி விடாமலாவது இருங்கள். தயாரிப்பாளர்களை வரவேற்க வேண்டும். அப்போது தான் பெரிய படங்கள் உருவாகும். ஒரு ஜிம் பாயாக வந்தவன் இன்று தயாரிப்பாளராக நிற்கிறேன். அதுதான் சினிமா. சினிமாவை நேசியுங்கள், அதேபோல் குடும்பத்திலுள்ளவர்களையும் நேசியுங்கள். நான் இந்த நிலைக்கு வருவதற்கு என் குடும்பமும் ஒரு காரணம். ஒரு நல்ல படம் தயாரிக்க வேண்டும் என்று நினைத்துதான் இப்படத்தை எடுத்தேன். இப்படத்திற்குப் பிறகு ‘ர...
சிவனையும் மாயர்களையும் மையமாகக் கொண்டு பிரம்மாண்ட
கிராபிக்ஸ் காட்சி அமைப்புகளுடன் தமிழ் மற்றும் ஆங்கிலம் ஆகிய இரு மொழிகளிலும் தயாராகிக் கொண்டிருக்கும் படம் தான் மாயன்.இப்படத்தை சன் தொலைக்காட்சி நிறுவனத்தின் சன் நாம் ஒருவர் என்ற விஷால் தொகுத்து வழங்கிய நிகழ்ச்சியை இயக்கிய ராஜேஷ் கண்ணா தயாரித்து இயக்கியுள்ளார் மலேஷிய நடிகர் வினோத் மோகன் இதில் கதாநாயகனாகவும், அவருக்கு ஜோடியாக தமிழில் பிந்துமாதவியும் நடித்துள்ளனர். சிறப்பு பாடல் காட்சிக்காக பியா பஜ்பையும் இப்படத்தில் இடம்பெற்றுள்ளார் ..மற்றும் பிரபல நடிகர்களான ஜான் விஜய் ஆடுகளம் நரேன் தெறி தீனா , ராஜ சிம்மன் , கஞ்சா கருப்பு , ஸ்ரீ ரஞ்ஜினி அகிய அனைவரும் நடித்துள்ளனர்.
மாயனுக்காகப் பாடிய சிம்பு
இப்படத்தின் ஒரு பாடலை நடிகர் சிம்பு பாடியுள்ளார். அந்த Single track விரைவில் வெளிவரும் என்று தயாரிப்பு தரப்பில் கூறியுள்ளனர். இப்...
இயக்குநர் கே.பாலசந்தரின் வாழ்க்கையில் தவிர்க்க முடியாத மூன்று பேர் நாகேஷ், ரஜினி மற்றும் கமல் - நடிகர் சிவகுமார்
மறைந்த இயக்குநர் கே.பாலச்சந்தர் பெயரில் 'கே.பாலச்சந்தர் ரசிகர்கள் சங்கம்' உருவாக முக்கிய காரணம் 'கவிதாலயா' பாபு மற்றும் 'கவிதாலயா' பழனிசாமி இருவரும் தான். அதற்கான தொடக்க விழாவில் கே.பாலச்சந்தரைப் பற்றி சினிமா பிரபலங்கள் பேசியதாவது:-
நடிகர் சிவகுமார் பேசியதாவது,
இயக்குநர் கே.பாலசந்தரின் வாழ்க்கையில் தவிர்க்க முடியாத மூன்று பேர் நாகேஷ், ரஜினி மற்றும் கமல். ‘மூன்று முடிச்சு’ படத்திற்காக விருந்தினர் கதாபாத்திரத்திற்காக என்னை அணுகியபோது நான் நடிக்க மறுத்துவிட்டேன். ஆனால், மூன்று முடிச்சு படத்தில் ரஜினி நடிக்கும்போது நீ கறுப்பாக இருக்கிறாய் என்று வருந்தாதே நீ கருப்பு வைரம் தமிழ்நாட்டையே கலக்கப் போகிறாய் என்று அன்றைக்கே கூறியவர். அதேபோல், இயக்குநர் பாலசந்தரின் தய...
சிறந்த நடிகைக்கான தேசிய விருதை பெற்றார் கீர்த்தி சுரேஷ்..!/
சிறந்த நடிகைக்கான தேசிய விருதை டெல்லியில் நடைபெற்ற விழாவில் கீர்த்தி சுரேஷ் பெற்றுக் கொண்டார்.
2019-ம் ஆண்டுக்கான தேசிய விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றது. இவ்விருதுகளை துணை குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு வழங்கி வருகிறார். இந்த விழா விக்ஞான் பவனில் நடைபெறுகிறது. இவ்விழாவில் கூடுதல் சிறப்பு விருந்தினராக மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜாவ்டேகர் கலந்து கொண்டுள்ளார்.
விருதுகளை பெற்றவர்களுக்கு இன்று மாலை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தேநீர் விருந்து நடை பெற்றது. இந்த ஆண்டுக்கான திரைப்பட விருதுகள் கடந்த ஆகஸ்ட் மாதம் அறிவிக்கப்பட்டது. இன்று நடைபெற்ற விருது வழங்கும் விழாவில், சிறந்த நடிகைக்கான தேசிய விருதை கீர்த்தி சுரேஷ் பெற்றுக் கொண்டார்....