பள்ளிப் பருவத்திலே விமர்சனம்
கிராமத்தில் உள்ள பள்ளியின் தலைமை ஆசிரியராக வருகிறார் கே.எஸ்.ரவிக்குமார். அதே பள்ளியில் படிக்கும் அவரது மகன் நந்தன் ராம், நாயகி வெண்பாவை காதலிக்கிறார். ஆனால் நந்தன் ராமின் காதலுக்கு வெண்பா எதிர்ப்பு தெரிவிக்கிறாள்.
ஒரு கட்டத்தில் நந்தன் ராம், வெண்பாவை காதலிப்பது வெண்பாவின் அப்பாவான பொன்வண்ணனுக்கு தெரிய வருகிறது. கே.எஸ்.ரவிக்குமார் மீதுள்ள மதிப்பினால், நந்தன் ராமை நேரில் அழைத்து காதல் வேண்டாம் என்று அறிவுரை கூறி, எச்சரித்து அனுப்புகிறார். ஆனால் பொன்வண்ணனின் பேச்சை பொறுட்படுத்தாத நந்தன் ராம் தொடர்ந்து வெண்பாவிடம் தனது காதலை வெளிப்படுத்தி வருகிறார்.
ஒரு கட்டத்தில் வெண்பாவின் கையை பிடித்து பேசுவதை பொன்வண்ணனும், வெண்பாவின் சித்தப்பா ஆர்.கே.சுரேஷும் பார்த்து விடுகின்றனர். இதையடுத்து இருவீட்டாருக்கும் இடையே பேச்சுவார்த்தை நடத்தப்படுகிறது. அதில் நந்தன் ராமை தான் காதலிக்கவில்லை என்று வெண்பா மற...









