செவ்வாய்க்கிழமை, ஏப்ரல் 28
Shadow

உலகம்

அமெரிக்காவில் மீண்டும் ஒரு கருப்பின வாலிபரை சுட்டுக்கொன்ற வெள்ளைக்கார போலீஸ்… வெடித்த வன்முறை!

அமெரிக்காவில் மீண்டும் ஒரு கருப்பின வாலிபரை சுட்டுக்கொன்ற வெள்ளைக்கார போலீஸ்… வெடித்த வன்முறை!

HOME SLIDER, NEWS, politics, உலக செய்திகள், உலகம், செய்திகள்
அமெரிக்காவில் மீண்டும் ஒரு கருப்பின வாலிபரை போலீஸ் சுட்டுக் கொன்றதால் பதற்றம் அதிகரிப்பு. பல இடங்களில் வன்முறை தொடங்கியது. அமெரிக்காவின் மின்னபொலிஸ் நகரில், கடந்த 25-ந் தேதி, ஜார்ஜ் பிளாய்டு என்ற கறுப்பின இளைஞரை, சந்தேகத்தின் அடிப்படையில் விசாரித்த போலீஸ் அதிகாரி ஒருவர், அவரை தரையில் தள்ளி கழுத்தை காலால் நசுக்கினார். இதில், ஜார்ஜ் பிளாய்டு, சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார் இதையடுத்து, போலீசாரின் செயலுக்கு எதிர்ப்பு தெரிவித்தும் நிறம் மற்றும் இனவெறிக்கு எதிராகவும் , அமெரிக்கா முழுவதும் போராட்டங்கள் வெடித்தன. இந்த போராட்டங்களின் போது பெருமளவில் வன்முறை சம்பவங்கள் அரங்கேறின. தற்போதும் அமெரிக்காவின் பல நகரங்களில் நிறம் மற்றும் இனவெறிக்கு எதிரான போராட்டங்கள் தொடர்ந்து வருகின்றன. இந்த சூழலில் மேலும் ஒரு கருப்பின வாலிபரை போலீஸ் துப்பாக்கியால் சுட்டுக் கொன்ற சம்பவத்தால் அமெரிக்...
தேர்தலில் மீண்டும் பதவியை பிடிக்க டிரம்ப் மோசடி செய்வார் – குற்றம் சாட்டும் ஜனநாயக கட்சி

தேர்தலில் மீண்டும் பதவியை பிடிக்க டிரம்ப் மோசடி செய்வார் – குற்றம் சாட்டும் ஜனநாயக கட்சி

HOME SLIDER, NEWS, politics, உலக செய்திகள், உலகம், செய்திகள்
    தேர்தலில் மீண்டும் பதவியை பிடிக்க டிரம்ப் மோசடி செய்வார் - குற்றம் சாட்டும் ஜனநாயக கட்சி கொரானா பீதி, வைரஸ் பரவல் , உலக அளவில் தொற்று தாக்கத்திலும், பலி எண்ணிக்கையிலும் முதலிடத்தில் இருந்தாலும் இந்த பதட்டத்திலும் அமெரிக்காவில் வரும் நவம்பர் மாதம் நடைபெறும் ஜனாதிபதித் தேர்தலில் குடியரசு கட்சி சார்பில் ஜனாதிபதி டிரம்ப் மீண்டும் போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து ஜனநாயக கட்சி சார்பில் முன்னாள் துணை ஜனாதிபதி ஜோ பிடன் போட்டியிடுகிறார். இந்நிலையில், அண்மையில் டிரம்ப் பற்றி பேசிய ஜோ பிடன், “வரும் ஜனாதிபதி தேர்தலில் டிரம்ப் தோற்றால் அதை அவர் ஏற்றுக்கொள்ள மாட்டார், வெள்ளை மாளிகையிலிருந்து வெளியே வரமாட்டார். அவரால் தோல்வியை ஏற்றுக்கொள்ள முடியாது. எனவே, தேர்தலில் முறைகேடு செய்ய முயற்சி செய்வார்” எனக் குற்றம் சாட்டினார். இந்த சூழலில் வெள்ளை மாளிகையில் நடந்த பத்திரிக்க...
பெண் பிரதமரின் மதி நுட்பத்தால் கொரானாவை ஒழித்த முதல் நாடு நியூசிலாந்து!

பெண் பிரதமரின் மதி நுட்பத்தால் கொரானாவை ஒழித்த முதல் நாடு நியூசிலாந்து!

HOME SLIDER, NEWS, உலக செய்திகள், உலகம், செய்திகள்
  பெண் பிரதமரின் மதி நுட்பத்தால் கொரானாவை ஒழித்த முதல் நாடு நியூசிலாந்து! உலகையே கடந்த 3 மாதங்களுக்கு மேலாக முடக்கிப் போட்டிருக்கும் கொடிய கொரானா வைரஸ் தாக்கத்தில் இருந்து எப்படியாவது விடுபட வேண்டும் என ஒவ்வொரு நாடும் வித விதமான நடைமுறைகளை பின்பற்றி வருகின்றனர். அப்படி இருந்தும் கொரானா போவேனா பார் உலக வல்லரசு நாடுகளுக்கு சவால் விட்டு வருகிறது. ஆண்கள் ஆளுகிற நாடுகளை விட பெண்கள் ஆளுகிற நாடுகளில் வைரஸ் தாக்கம் பெருமளவு கட்டுப்படுத்தப்பட்டு வருகிறது. இப்போது உலக அளவில் கொரானாவை முற்றிலும் ஒழித்த முதல் நாடு என்ற பெருமையை பெண் பிரதமர் ஆளும் நியூசிலாந்து பெற்றுள்ளது. ஜெசிந்தா ஆர்டெர்ன் என்ற பெண் பிரதமர் ஆளுகிற இந்த நாட்டில் மொத்தம் 1,154 பேருக்குத்தான் கொரானா தொற்று ஏற்பட்டது. பலியானவர்களின் எண்ணிக்கை வெறும் 22 மட்டுமே. மற்றவர்கள் சிகிச்சைக்கு பின்னர் குணம் அடைந்து வீடு...
கொரானா தடுப்பூசி கிடைக்க இன்னும் ஓராண்டாகலாம் என்கிறார் சிங்கப்பூர் பிரதமர்!

கொரானா தடுப்பூசி கிடைக்க இன்னும் ஓராண்டாகலாம் என்கிறார் சிங்கப்பூர் பிரதமர்!

HOME SLIDER, NEWS, politics, உலக செய்திகள், உலகம், செய்திகள்
    கொரானா தடுப்பூசி கிடைக்க இன்னும் ஓராண்டாகலாம் என்கிறார் சிங்கப்பூர் பிரதமர்! கொரானா வைரஸ் தடுப்பூசி உலகம் முழுவதும் பரவலாக அனைவருக்கும் கிடைக்க குறைந்தது ஓராண்டு ஆகும் என்று சிங்கப்பூர் பிரதமர் லீ சியென் லூங் தெரிவித்துள்ளார். நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற பிரதமர் லீ சி யென்லூங் பேசியதாவது:- கொரானா வைரசுக்கு எதிரான தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்ட காலத்தில் இருந்து உலகம் முழுவதும் அனைவருக்கும் பரவலாக கிடைக்க குறைந்தது ஒரு ஆண்டாகும். அநேகமாக ஓராண்டு காலத்திற்கு மேல் ஆகலாம். நாம் கொரானா வைரசுடன் நீண்ட நாட்கள் வாழ கற்றுக்கொள்ள வேண்டும். அது காசநோய் போன்ற ஆபத்தான தொற்று நோயுடன் கடந்த காலத்தில் நாம் வாழ்ந்து வருவதுபோல் கற்றுக்கொள்ள வேண்டும். சிங்கப்பூரில் புதிதாக பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை குறைந்து கொண்டே வருகிறது. கொரானா தொற்று மனித இனம் நீண்ட காலத்துக்கு பிறக...
முற்றும் மோதல்… சீன விமானங்களுக்கு அமெரிக்கா தடை

முற்றும் மோதல்… சீன விமானங்களுக்கு அமெரிக்கா தடை

HOME SLIDER, NEWS, politics, உலக செய்திகள், உலகம், செய்திகள்
  முற்றும் மோதல்... சீன விமானங்களுக்கு அமெரிக்கா தடை உலகமெங்கும் பரவி லட்சக்கணக்கான மக்களை வாட்டி வதைத்து வரும் கொரானா வைரஸ் பாதிப்பு காரணமாக அமெரிக்காவில் இருந்து சீனாவுக்கு இயங்கக்கூடிய 3 விமான நிறுவனங்களும் தங்களது இயக்கத்தை நிறுத்திக் கொண்டன. அதனால் அந்த விமான நிறுவனங்களுக்கு சீனா தடை விதித்தது. ஆனாலும், அமெரிக்காவின் பல்வேறு நகரங்களுக்கு சீன விமானங்கள் மட்டும் இயங்கி வந்தன. ஜனவரி மாதம் வரை, அமெரிக்கா மற்றும் சீன நாடுகளின் விமான நிறுவனங்கள் பரஸ்பரம் வாரத்துக்கு சுமார் 325 விமானங்களை இயக்கின. பிப்ரவரியில் அது அதிரடியாக 20 என்ற அளவுக்கு குறைந்தது. அதிலும் சீன விமானங்கள் மட்டுமே இயங்கின. மார்ச் மாதத்தில் சீனாவின் விமான ஒழுங்குமுறை ஆணையம் வெளி நாடுகளிலிருந்து இயக்கக்கூடிய விமானங்களுக்கான கட்டுப்பாட்டை விதித்தது. அதன்படி, வாரத்துக்கு ஒரு வெளிநாட்டு விமானம் மட்டுமே அனுமத...
டிரம்ப் பதிவை நீக்கி கருப்பின வாலிபர் கொலைக்கு கண்டனம் தெரிவித்து கருப்பாக மாறிய டிவிட்டர் குருவி!

டிரம்ப் பதிவை நீக்கி கருப்பின வாலிபர் கொலைக்கு கண்டனம் தெரிவித்து கருப்பாக மாறிய டிவிட்டர் குருவி!

HOME SLIDER, NEWS, politics, உலக செய்திகள், உலகம், செய்திகள்
    அமெரிக்காவில் கருப்பின வாலிபர் கொலைக்கு கண்டனம் தெரிவித்து கருப்பாக மாறிய டிவிட்டர் குருவி! அமெரிக்காவில் உள்ள மின்னபொலிஸ் என்ற நகரில் கடந்த 25ஆம் தேதி கருப்பின வாலிபர் ஒருவரை விசாரணை என்ற பெயரில் போலீசார் அவரை கீழே தள்ளி முழங்காலால் கழுத்தில் அழுத்தி நெறித்து கொலை செய்தார். அது சம்மந்தமான வீடியோ உலகெங்கும் பரவி கடும் அதிர்ச்சியையும், கண்டனங்களையும் பெற்றது. இதனையடுத்து கருப்பின வாலிபரை கொலை செய்த போலீஸ் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து போராட்டங்கள் வெடித்தன. நாடு முழுவதும் நடந்து வரும் இந்த போராட்டத்தை கட்டுப்படுத்த போலீசாருடன் ராணுவத்தினரும் ஈடுபட்டு வருகின்றனர் . இதையடுத்து கருப்பின இளைஞரை கொலை செய்த போலீசாரை கைது செய்து அவர் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது. இந்நிலையில் அந்த போலீஸ்காரரின் மனைவி அவருக்கு விவாகரத்து நோட்...
கொரானா சிகிச்சைக்கு ஆஸ்பத்திரி அனுப்பிய பில் ரூ.11.33 கோடி… ஷாக் ஆன ஆசிரியர்

கொரானா சிகிச்சைக்கு ஆஸ்பத்திரி அனுப்பிய பில் ரூ.11.33 கோடி… ஷாக் ஆன ஆசிரியர்

HOME SLIDER, NEWS, உலக செய்திகள், உலகம், செய்திகள்
  கொரானா சிகிச்சைக்கு ஆஸ்பத்திரி அனுப்பிய பில் ரூ.11.33 கோடி... ஷாக் ஆன ஆசிரியர்- இங்கல்ல அமெரிக்காவில்... அமெரிக்காவில் கொலராடோ மாநிலத்தில் உள்ள டென்வர் நகரை சேர்ந்த ராபர்ட் டென்னிஸ் என்ற உயர்நிலைப்பள்ளி ஆசிரியருக்கு கொரானா வைரஸ் பாதித்தது. இதையடுத்து அவர் அங்குள்ள ஸ்கை ரிட்ஜ் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. 2 வாரம் செயற்கை சுவாச கருவி பொருத்தி இருந்தனர்.இந்த நிலையில் குணம் அடைந்து குடியிருப்பு திரும்பிய பின்னர் அவருக்கு அந்த மருத்துவமனை சிகிச்சைக்கான பில்லை அனுப்பியுள்ளனர் அதைப் பார்த்து அவர் அதிர்ச்சியில் உறைந்து போய்விட்டார். இருக்காதா பின்னே... சிகிச்சை கட்டணமாக 8 லட்சத்து 40 ஆயிரத்து 386 டாலர் செலவானதாக அதில் குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த பில்லில் ராபர்ட் டென்னிஸ் ஸ்பால்டிங் புனர்வாழ்வு மருத்து...
ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு பயந்து பதுங்கு குழிக்குள் போனாரா டிரம்ப்!?

ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு பயந்து பதுங்கு குழிக்குள் போனாரா டிரம்ப்!?

HOME SLIDER, NEWS, politics, உலக செய்திகள், உலகம், செய்திகள்
    கருப்பினத்தவர் கொல்லப்பட்ட விவகாரம் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு பயந்து பதுங்கு குழிக்குள் போனாரா டிரம்ப்!? அமெரிக்காவின் மின்னபொலிஸ்  நகரில் கருப்பினத்தவரான ஜார்ஜ் பிளாய்ட் என்பவர் போலீஸ் அதிகாரியால் கொலை செய்யபட்டார். இந்தவிவகாரத்தில் பல்வேறு மாகாணங்களில் ஆர்ப்பாட்டம் மற்றும் கலவரம் வெடித்துள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை இரவு ஜனாதிபதி டிரம்பின் அதிகாரப்பூர்வ இல்லமான வெள்ளை மாளிகை அருகே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மக்கள் மீது, மிகவும் கொடூரமான நாய்களை ஏவியிருப்பேன் எனவும், அவர்களை துப்பாக்கி குண்டுகள் பதம் பார்த்திருக்கும் எனவும் டிரம்ப் தெரிவித்திருந்தார். ஆனால் வெள்ளை மாளிகையில் பாதுகாப்பில் ஈடுபட்டிருந்த அதிகாரிகள் அதற்கான வாய்ப்பை ஏற்படுத்தவில்லை எனவும், அவர்கள் மிக சாமர்த்தியமாக ஆர்ப்பாட்டக்காரர்களை எதிர்கொண்டதாகவும் டிரம்ப் பாராட்டி இருந்தார். வெள்ளிக்கிழமை ...
ஆயுதங்களுக்கு ஒதுக்கும் நிதியை இப்படி பயன்படுத்தலாமே – உலக தலைவர்களுக்கு போப் வேண்டுகோள்

ஆயுதங்களுக்கு ஒதுக்கும் நிதியை இப்படி பயன்படுத்தலாமே – உலக தலைவர்களுக்கு போப் வேண்டுகோள்

HOME SLIDER, NEWS, politics, உலக செய்திகள், உலகம், செய்திகள்
  ஆயுதங்களுக்கு செலவழிக்கும் நிதியை கொரானா போன்ற வைரஸ் ஒழிப்பு ஆராய்ச்சிக்கு பயன்படுத்துங்கள் - உலக தலைவர்களுக்கு போப் வேண்டுகோள் வாடிகன் சிட்டியில் வெளிப்புறத்தில் நடைபெற்ற பிரார்த்தனை நிகழ்ச்சியில் போப் பிரான்சிஸ் கலந்து கொண்டார். சுமார் 3 மாத காலத்திற்கு பிறகு நடந்த இந்நிகழ்ச்சியில் 130க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர். அவர்களில் பெரும்பாலோனார் கொரானா தொற்றால் பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்கள். அவர்கள் மத்தியில் உரையாற்றிய போப் பிரான்சிஸ், தேசியத் தலைவர்கள் தற்போது தொலைநோக்கு பார்வையுடன் செயல்பட வேண்டும். தற்போது உதவி தேவைப்படுபவர்களுக்கு உதவ வேண்டும். நீண்டகால பொருளாதார மற்றும் சமூகத் தீர்வுகளை தீர்த்து வைக்க வேண்டும். ஆயுதங்களுக்கு செலவழிக்கும் தொகையினை கொரானா போன்ற பெருந்தொற்றை தடுப்பதற்கான ஆராய்ச்சிக்கு பயன்படுத்த வேண்டும் என்று நாட்டின் தலைவர்களை கேட்டு கொண்டார...
இனி உலக சுகாதார அமைப்புக்கு நிதி கிடையாது – டிரம்ப் அதிரடி

இனி உலக சுகாதார அமைப்புக்கு நிதி கிடையாது – டிரம்ப் அதிரடி

HOME SLIDER, NEWS, politics, உலக செய்திகள், உலகம், செய்திகள்
  வைரஸ் விவகாரத்தில் சீனாவுக்கு ஆதரவாக இருப்பதால் இனி உலக சுகாதார அமைப்புக்கு நிதி கிடையாது - டிரம்ப் அதிரடி கொரானா வைரஸ் மனிதர்களிடமிருந்து மனிதர்களுக்கு பரவும் என்ற தகவல் மற்றும் வைரஸ் தொடர்பான விவரங்களை சீன அரசு மறைத்து விட்டதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகிறார். இந்த வைரசின் தீவிரத்தன்மை குறித்து பிற நாடுகளுக்கு எச்சரிக்கை விடுக்காமல் சீனாவுக்கு ஆதரவாக செயல்பட்டு வந்ததாக உலக சுகாதார அமைப்பு மீது டொனால்டு டிரம்ப் கடும் விமர்சனங்களை முன்வைத்துள்ளார். அந்த அமைப்பின் தாமதமான செயல்கள் உலக நாடுகளுக்கு பல்வேறு பின்விளைவுகளை ஏற்படுத்தி விட்டதாக தெரிவித்தார். கொரானா வைரஸ் விவகாரத்தில் சீனாவுக்கு ஆதாரவாக உலக சுகாதார அமைப்பு உள்ளது. எனவே அந்த அமைப்பிற்கு வழங்கும் நிதியை நிறுத்துவதாக அறிவித்தார். இதையடுத்து முதல் கட்டமாக கடந்த ஏப்ரலில் ரூ. 3000 கோடி ...