உருமாறிய கொரோனா வைரஸ் பிரிட்டனில் மிக வேகமாக பரவி வருவதால் அதிக அளவிலான பாதிப்பு
பிரிட்டனில் உருமாறிய கொரோனா வைரஸ் மிக வேகமாக பரவி வருவதால் மருத்துவமனைகள் அனைத்தும் நிரம்பி வழிகின்றன. கொரோனாவின் முதல் அலையை விட இந்த முறை அதிக அளவிலான பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
கொரோனா வைரஸ் பாதிப்பு உலகில் ஏற்பட தொடங்கி ஒருவருடம் நிறைவடைந்து விட்டது. இன்னமும் இதற்கு முழுமையான தீர்வு எட்டப்படவில்லை. பல உலக நாடுகளும் கொரோனாவின் கோரப்பிடியில் சிக்கி இப்போதுதான் கொஞ்சம் மூச்சுவிட தொடங்கியுள்ளன. ஆனால் அதற்குள்ளாகவே கொரோனா வைரஸ் மியூட்டேட் அடைந்து இரண்டாவது அலையாக முன்பை விட வீரியத்துடன் பரவ தொடங்கியுள்ளன. உலகம் முழுவதும் உள்ள பல்வேறு மருந்து நிறுவனங்கள் கொரோனா வைரஸ்க்கு எதிரான தடுப்பூசியின் இறுதிக்கட்ட சோதனையில் உள்ளன. பல நாடுகளும் ஒருசில நிறுவனங்களின் தடுப்பூசிக்கு அனுமதி வழங்கி தடுப்பூசி செலுத்தும் பணியும் தொடங்கிவிட்டன. பிரிட்டன் தான் உலகிலேயே முதலில...









