குற்றம் புதிது கோடங்கி விமர்சனம் 3/5
குற்றம் புதிது கோடங்கி விமர்சனம் 3/5
கொலை அதிலும் வித்தியாசமாக ரசித்து செய்யும் கொடூர கொலை கிரைம் த்ரில்லர் படங்களை ரசிக்கிறவர்களுக்காக வந்திருகிற படம் தான் குற்றம் புதிது.
நோவா ஆம்ஸ்டாங் இயக்கிய இந்த படத்தில் தருண்விஜய், ஜேஷ்விதா கனிமொழி உட்பட பலர் நடித்திருக்கிறார்கள்.
கதைப்படி ஒரு உயர் போலீஸ் அதிகாரியின் மகள் காணாமல் போகிறார்… அவர் கடத்தப்பட்டாரா? என்ன ஆனார் என போலீஸ் தேடும் போது அந்த பெண்ணின் கை விரலும், ரத்த மாதிரிகளும் கிடைக்கிறது.
இந்த சூழலில் ஒரு வாலிபன் தான் கொலை செய்து விட்ட்தாக போலீசில் சரண்டர் ஆகிறார். அதிலும் ஒரு கொலை இல்லை 3 கொலை செய்ததாக சொல்கிறார். அதிலும் கொடூராமாக கொன்றதாக சொல்கிறார். அதிர்ந்து போன போலீஸ் அவர் சொல்கிற இடங்களில் தேடுகிறது.
ஆனால் எங்கும் உடல் கிடைக்கவில்லை. அதற்கு மாறாக யாரை கொலை செய்ததாக அந்த வாலிபன் சொல்கிற...









