மிஷ்கின் – கார்த்திக்ராஜா கூட்டணியில் ஆண்ட்ரியாவின் பிசாசு2
மிஷ்கின் இயக்கத்தில் ஆண்ட்ரியா ஜெர்மீயா நடிக்க,
ராக்ஃபோர்ட் எண்டர்ட்யின்மெண்ட் பெருமையுடன் வழங்கும் “பிசாசு 2” படத்திற்கு இசையமைக்கிறார் கார்த்திக் ராஜா !
மிஷ்கின் படங்களில் இசை தனித்து தெரியும். இசையின் வலிமை வெகு அழகாக படத்துடன் பொருந்தி இருக்கும். இசையை படத்திலிருந்து தனித்து பிரிக்க முடியாது. அவரது படங்களின் இசை, எப்போதும் ரசிகர்களை பிரமிக்க செய்வதாகவே இருக்கும். மிஷ்கின் படங்களில் இசை ஒரு முக்கிய கதாப்பாத்திரம் போன்றே இருக்கும். உண்மையில் இது தான் அவரது படங்களில் பாடல்கள் மெகா ஹிட் ஆவதற்கான காரணமாகும். தற்போது ஆண்ட்ரியா ஜெர்மீயா நடிக்க, மிஷ்கின் இயக்கும் "பிசாசு 2" படத்தில் நேர்த்தியான, தேர்ந்த இசையை தொடர்ந்து தந்து வரும் இசையமைப்பாளர் கார்த்திக் ராஜாவுடன் அவர் இணைந்திருக்கிறார். படத்தின் இசைக்கோர்ப்பு வேலைகள் ஏற்கனவே ஆரம்பித்துவிட்ட நிலையில், மிஷ்கின் அதனை, மிகவும் ...









