வெள்ளிக்கிழமை, நவம்பர் 20
Shadow

MOVIES

கல்தா இயக்குனரின் “லாக்டவுன்” குறும்படம் விரைவில்..!

கல்தா இயக்குனரின் “லாக்டவுன்” குறும்படம் விரைவில்..!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, NEWS, சினி நிகழ்வுகள், செய்திகள்
    கொரானா பரவலை தடுக்க நாடு முழுவதும் போடப்பட்ட ஊரடங்கு உத்தரவு காரணமாக அனைவரும் வீடுகளில் முடக்கப்பட்டு இருக்கிறோம். இந்த சூழலில் திரைத்துறையில் உள்ள பலரும் விழிப்புணர்வு வீடியோக்கள், பாடல்கள், கவிதைகளை வெளியிட்டு வருகிறார்கள். சமீபத்தில் இறச்சி கழிவுகளால் ஏற்படக்கூடிய அபாயம் குறித்து தனது கல்தா திரைப்படம் மூலம் எச்சரிக்கை செய்த இயக்குனர் ஹரி உத்ரா இந்த ஊரடங்கு குறித்து "லாக் டவுன்" என்ற விழிப்புணர்வு குறும்படத்தை தயாரித்து இயக்கி இருக்கிறார். இந்த படத்தை விரைவில் சமூக வலைதளங்கங்களில் வெளியிட இருப்பதாக அறிவித்திருக்கிறார் ஹரி. அதோடு இவரது ஹரி உத்ரா அறக்கட்டளை சார்பில் கொரானா நிவாரண உதவிகளும் செய்யப்பட்டுள்ளது....
கொரானா ஒழிப்புக்கு நிவாரண நிதி கொடுத்தால் ஹாலிவுட் படத்தில் என்னோடு நடிக்கலாம் – டைட்டானிக் ஹீரோ அறிவிப்பு

கொரானா ஒழிப்புக்கு நிவாரண நிதி கொடுத்தால் ஹாலிவுட் படத்தில் என்னோடு நடிக்கலாம் – டைட்டானிக் ஹீரோ அறிவிப்பு

CINI NEWS, HOME SLIDER, MOVIES, NEWS, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள்
    கொரானா ஒழிப்புக்கு நிவாரண நிதி கொடுத்தால் ஹாலிவுட் படத்தில் என்னோடு நடிக்கலாம் - டைட்டானிக் ஹீரோ அறிவிப்பு உலகம் முழுதும் நடிகரை பார்க்க வேண்டும், அவரோடு போட்டோ எடுத்துக் கொள்ள வேண்டும், ஷூட்டிங் பார்க்க வேண்டும் என்ற ஆசை உலகம் முழுவதும் ஒரே மாதிரிதான் உள்ளது. அதிலும் இப்படி போட்டோ எடுத்துக் கொள்ளவும், ஷூட்டிங் பார்க்கவும் பலர் பணம் கொடுப்பது தனிக்கதை. அதில் பிரபலமான நடிகரின் படத்தில் ஒரு காட்சியில் நடிக்க வாய்ப்பு வந்தால் எவ்வளவு பணம் கொடுக்கவும் பலர் தயாராக இருக்கிறார்கள். சரி விஷயத்திற்கு வருவோம். உலகம் முழுவதும் கடந்த சில மாதங்களாக தினம் தினம் பல்லாயிரக்கணக்கான மக்களை கொன்று பல லட்சம் மக்களை பாதித்து இருக்கும் கொரானாவை கட்டுப்படுத்தவும் ஒழிக்கவும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவவும் உலகம் முழுதும் நிவாரண நிதி வசூல் நடை பெறுகிறது. திரையுலக பிரப...
இயக்குனர் அட்லீ தயாரிக்கும் “அந்தகாரம்”

இயக்குனர் அட்லீ தயாரிக்கும் “அந்தகாரம்”

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள்
    இயக்குனர் அட்லீ தயாரிக்கும் "அந்தகாரம்" இயக்குனர் அட்லீ தயாரிப்பில் சங்கிலி புங்கிலி கதவ தொற கடந்த 2017-ம் ஆண்டு வெளியானது. அதன்பின் 3 ஆண்டு இடைவேளைக்கு பிறகு தனது அடுத்த படத் தயாரிப்பு குறித்த அறிவிப்பை அட்லீ வெளியிட்டுள்ளார். அவர் தயாரிக்கும் படத்தின் பெயர், 'அந்தகாரம்' இதை பேஷன் ஸ்டுடியோஸ் உடன் இணைந்து அட்லீ தயாரிக்கிறார். விக்னராஜன் என்பவர் இயக்கியுள்ள இப்படத்தில் அர்ஜுன் தாஸ், வினோத் கிஷன், மீஷா கோஷல், பூஜா ராமச்சந்திரன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படத்திற்கு பிரதீப் குமார் இசையமைக்க, எட்வின் சாகே ஒளிப்பதிவு பணிகளை கவனிக்கிறார். அந்தகாரம் படத்தின் டிரைலர் ஏப்ரல் 14-ம் தேதி தமிழ் புத்தாண்டன்று வெளியிடப்படும் என அட்லீ  கூறியுள்ளார். படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரும் டைட்டிலுடன் வெயியானது....
மாரி செல்வராஜ் இயக்கத்தில் துருவ்விக்ரம்!

மாரி செல்வராஜ் இயக்கத்தில் துருவ்விக்ரம்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள்
  மாரி செல்வராஜ் இயக்கத்தில் துருவ்விக்ரம்! ஆதித்ய வர்மா படத்திற்கு பின் துருவ் விக்ரம் நடிக்கும் அடுத்த படத்தை மாரி செல்வராஜ் இயக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மாரி செல்வராஜ் இயக்கிய பரியேறும் பெருமாள் படம் நல்ல வரவேற்பை பெற்றது. மாரி செல்வராஜ் இப்போது தனுஷ் நடிக்கும் கர்ணன் படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து விட்டதாக கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து துருவ் விக்ரம் நடிக்கும் படத்தை மாரி செல்வராஜ் இயக்குவார் என கூறப்படுகிறது. இதுதொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது....
நாசா விஞ்ஞானியாக இருந்து பூமியை காக்க போராடும் ஜெயம்ரவி!

நாசா விஞ்ஞானியாக இருந்து பூமியை காக்க போராடும் ஜெயம்ரவி!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
  நாசா விஞ்ஞானியாக இருந்து பூமியை காக்க போராடும் ஜெயம்ரவி! பூமி படத்தில் ஜெயம் ரவி நாசா விஞ்ஞானி என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளதாக இயக்குநர் லட்சுமண் தெரிவித்துள்ளார். ரோமியோ ஜூலியட், போகன் ஆகிய படங்களைத் தொடர்ந்து ஜெயம் ரவி – இயக்குநர் லட்சுமண் கூட்டணியில் உருவாகியுள்ள 3ஆவது படம் பூமி. ஜெயம் ரவிக்கு ஜோடியாக நிதி அகர்வால் நடித்துள்ளார். மேலும், சரண்யா பொன்வண்ணன், தம்பி ராமையா ஆகியோரும் முக்கிய ரோலில் நடித்துள்ளனர். இமான் இசையமைத்துள்ளார். ஹோம் மூவி மேக்கர்ஸ் பட நிறுவனம் சார்பில் சுஜாதா விஜயகுமார் தயாரித்துள்ளார். வரும் மே 1 ஆம் தேதி தொழிலாளர்கள் தினம், அல்டிமேட் ஸ்டார் அஜீத்தின் பிறந்த நாளில் இப்படம் திரைக்கு வருகிறது. இப்படம் குறித்து இயக்குநர் லட்சுமண் கூறியிருப்பதாவது: விவசாயத்தை மையப்படுத்தி இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. இப்படத்தில் ஜெயம் ரவி செவ்வாய் கிரகத...
துப்பாக்கி 2 மீண்டும் அமைந்த விஜய்-முருகதாஸ் கூட்டணி!

துப்பாக்கி 2 மீண்டும் அமைந்த விஜய்-முருகதாஸ் கூட்டணி!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள்
    மீண்டும் அமைந்த விஜய்-முருகதாஸ் கூட்டணி! நடிகர் விஜய் இயக்குநர் முருகதாஸ் இருவரும் ஏற்கனவே கத்தி, துப்பாக்கி, சர்கார் போன்ற வெற்றிப் படங்களை கொடுத்திருக்கிறார்கள். விஜய் இப்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மாஸ்டர் படத்தில் நடித்து வருகிறார். இயக்குனர் முருகதாஸ் சமீபத்தில் தான் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான தர்பார் படத்தை இயக்கி இருந்தார். இந்த நிலையில் விஜய் 65 படத்தை இயக்கப் போகும் இயக்குனர் யாராக இருக்கக்கூடும் என பல ஹோசியங்கள் திரைத்துறையில் உலவி வந்தது. இந்த நிலையில் மீண்டும் விஜய் நடிக்க அந்த படத்தை முருகதாஸ் இயக்க முடிவாகி உள்ளது. விஜய் - முருகதாஸ் கூட்டணி இதுவரை 3 படங்களில் இணைந்திருந்தாலும் ஒவ்வொரு படத்திலும் சமூக கருத்தை சொல்வது வழக்கம். இப்போது மீண்டும் விஜய்65 படத்திலும் அழுத்தமான சமூக கருத்தை சொல்வார் என எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. வ...
விசாரணை என்ற பெயரில் மீண்டும் மீண்டும் நடித்து காட்டச்சொல்லி போலீசார் துன்புறுத்துகிறார்கள் – கோர்ட்டுக்கு போன கமல்

விசாரணை என்ற பெயரில் மீண்டும் மீண்டும் நடித்து காட்டச்சொல்லி போலீசார் துன்புறுத்துகிறார்கள் – கோர்ட்டுக்கு போன கமல்

CINI NEWS, HOME SLIDER, MOVIES, NEWS, politics, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகர்கள்
    விசாரணை என்ற பெயரில் மீண்டும் மீண்டும் நடித்து காட்டச்சொல்லி போலீசார் துன்புறுத்துகிறார்கள் - கோர்ட்டுக்கு போன கமல் இந்தியன் 2 படப்பிடிப்பு தொடங்கியதில் இருந்து பல்வேறு சிரமங்களை சந்தித்து வருகிறது. கடந்த பிப்ரவரி 1-ந் தேதி நடைபெற்ற படப்பிடிப்பில் கிரேன் அறுந்து விழுந்ததில் 3 பேர் பலியானார்கள். படப்பிடிப்பில் நடந்த இந்த திடீர் விபத்து காரணமாக படப்பிடிப்பு முழுமையாக பாதிக்கப்பட்டு பாதியில் நிற்கிறது. இந்த விபத்து காரணமாக மத்திய குற்றப்பிரிவு போலீசாரின் விசாரணை நடைபெற்று வருகிறது. ‌ஷங்கர், கமல்ஹாசன் இருவரையும் விசாரித்தது பரபரப்பானது. இவர்கள் தவிர விபத்து நடந்தபோது படப்பிடிப்பு தளத்தில் இருந்தவர்களும் விசாரணைக்கு அழைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டு வருகிறார்கள். இந்நிலையில், இந்தியன் 2 படப்பிடிப்பு விபத்து வழக்கில் காவல்துறையினர் தொடர்ந்து துன்புறுத்துவதாக நடிக...
டிவிட்டர் கோஷ்டியின் பொய் பதிவால் சர்ச்சையில் மீண்டும் சிக்கிய மாஸ்டர் விஜய்!

டிவிட்டர் கோஷ்டியின் பொய் பதிவால் சர்ச்சையில் மீண்டும் சிக்கிய மாஸ்டர் விஜய்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, NEWS, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள்
    பேசாத ஒன்றை பேசுயதாக பதிவு செய்து விஜய்யை மீண்டும் சிக்க வைத்த டிவிட்டர் கோஷ்டி! தமிழ் சினிமாவை கடந்த சில ஆண்டுகளாக உயிர்க்கொல்லி நோய் போல கூடவே இருந்து மெல்ல அழித்து வருபவர்கள் சமூக வலைதள கோஷ்டிகள். இவர்களில் மிக முக்கியமானவர்கள் டிவிட்டர் கோஷ்டிதான். அதிலும் விஜய்யை தொடர்ந்து ரெய்டு சிக்கலில் வைத்து இன்றளவும் மன நிமமதியை கெடுத்ததும் இந்த குருவி செய்தி கோஷ்டிதான். ஒரு கூட்டமாக சேர்ந்து கொண்டு இல்லாத ஒரு செய்தியை மிகைப்படுத்தி "பிட்" பதிவாக போட்டு பரப்பி விடுவதில் இந்த டிவிட்டர் கோஷ்டிகளுக்கு நிகர் அவர்களே. தமிழ் சினிமாவின் சாபக்கேடு தயாரிப்பாளர்களின் நம்பிக்கை தான். அதை பயன்படுத்தி கடைசி நேரத்தில் பல லட்சங்களை வாங்கிகொண்டு இப்படி புளுகு மூட்டைகளை அவிழ்த்து விட்டு தன் வங்கிக் கணக்கை உயர்த்தி கொள்ளும் டிவிட்டர் புரொமோஷன் கோஷ்டிகளால் இதுவரை ஒரு தமிழ் ப...
கொரானா பீதி நாளை முதல் அனைத்து படப்பிடிப்புகளும் நிறுத்தப்படும்!?

கொரானா பீதி நாளை முதல் அனைத்து படப்பிடிப்புகளும் நிறுத்தப்படும்!?

CINI NEWS, HOME SLIDER, MOVIES, NEWS, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள்
  கொரானா பீதி நாளை முதல் அனைத்து படப்பிடிப்புகளும் நிறுத்தப்படும்!? உலகம் முழுதும் அச்சுறுத்தல் செய்து வரும் கொரானா வைரஸ் பீதி தமிழ் சினிமா உலக்த்தையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. திரைப்பட விழாக்கள் ஏற்கனவே கேன்சல் செய்யப்பட்ட நிலையில் அரசு தமிழக எல்லையோர மாவட்ட தியேட்டர்களையும், ஷாப்பிங் மால்களையும் மூட உத்தரவிட்டது. இந்த நிலையில் அறிவிக்கப்பட்ட பல பட ரிலீசும் தள்ளிப்போகிறது. கடைசியாக எல்லா படப்பிடிப்புகளையும் நிறுத்த முடிவு செய்து இருக்கிறார்கள். நளை முதல் சினிமா, டிவி தொடர்பாக எந்த ஷூட்டிங்கும் நடக்காது வரும் 31வரை இதே நிலை நீடிக்கலாம் என தெரிகிறது....
நண்பர் அஜீத் மாதிரி கோட் சூட் போட்டிருக்கேன் – மாஸ்டர் விழாவில் விஜய் கலகல

நண்பர் அஜீத் மாதிரி கோட் சூட் போட்டிருக்கேன் – மாஸ்டர் விழாவில் விஜய் கலகல

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
    நண்பர் அஜீத் மாதிரி கோட் சூட் போட்டிருக்கேன் - மாஸ்டர் விழாவில் விஜய் கலகல மாஸ்டர் ஆடியோ விழாவில் விஜய் பேசியதாவது… என் நெஞ்சில் குடியிருக்கும் என் ரசிகர்களே… எனக்கு வருத்தமாக இருக்கு. என் ரசிகர்களை இந்த இசை விழாவுக்கு அழைக்க முடியவில்லையே என்று. பிகில் பட இசை விழாவின் போது சில பிரச்சினை ஏற்பட்டது. அதுமட்டுமில்லாமல் கொரோனா வைரஸ் வேற. எனவே தான் அழைக்க முடியவில்லை. அதற்கு மன்னிக்கவும். இந்த படத்தில் உள்ள ஒவ்வொரு பாடலுக்கு ஒரு குட்டி கதை இருக்கு, அனிருத் மற்றும் அருண்காமராஜ் வச்சி செஞ்சிட்டாங்க. விஜய்சேதுபதி இந்த படத்தோட வில்லன். தமிழ் சினிமாவுல ஒரு தவிர்க்க முடியாத ஆள உருவாகி நிக்கிறாரு. ஏன் இந்த படத்துல வில்லன் கேரக்டர் பண்ணிறிங்கன்னு விஜய்சேதுபதி கிட்ட கேட்டேன். என்னை நாலே வார்த்தையில ஆஃப் பண்ணிட்டாரு. உங்கள எனக்கு ரொம்ப புடிக்கும் சொல்லிட்டாரு. ம...