ஞாயிற்றுக்கிழமை, மே 31
Shadow

MOVIES

அஜீத் ரசிகர்களுக்கு குட்… சினிமா ரசிகர்களுக்கு பேட்… காமென் ஆடியன்சுக்கு அக்லி… கோடங்கி விமர்சனம் 2.5/5

அஜீத் ரசிகர்களுக்கு குட்… சினிமா ரசிகர்களுக்கு பேட்… காமென் ஆடியன்சுக்கு அக்லி… கோடங்கி விமர்சனம் 2.5/5

HOME SLIDER, MOVIES, REVIEWS, திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள், விமர்சனம்
    ஒரு படம்னா ஒரு ஒன்லைன் கதை இருக்கனும், அது திரைக்கதையா மாறியிருக்கனும்…. சரி கழுத அதுவும் இல்லனா ஒரு நாலு சண்டை, 2 பாட்டு ஒரு செண்டிமெண்ட், ஒரூ சோகம்னு ஏதாவது இருக்கனும்… இப்படி எதுவுமே இல்லாம அஜீத் அப்படின்னு ஒரே ஒரு கேரக்டரை மட்டும் வைச்சி முழுசா படம் எடுக்கனும்னா அந்த பட்த்துக்கு குட் பேட் அக்லின்னு வைச்சிடலாம். கதைன்னு ஒன்னும் இல்ல… பழைய கெங்ஸ்டார் தன் குடும்பத்திற்காக நல்லவனாக மாறி, ஜெயிலில் தண்டனை அனுபவிக்கிறார். அவர் திரும்பி வரும் போது அவர் குடும்பத்திற்காகவே மீண்டும் கேங்ஸ்டராக நேரிட்டால் என்ன ஆகும் என்பதே ‘குட் பேட் அக்லி’ பட்த்துல நாம கண்டுபுடிச்ச கதை. இந்தக் கதையை ஒரு தரமான கமர்சியல் ஆக்ஷன் படமாக எடுத்திருக்கலாம். ஆனாஇயக்குனர்  ஆதிக்கின் நோக்கம் கதையோ, திரைக்கதையோ இல்ல. அஜித்தை எந்தெந்த வகையில் கொண்டாட வேண்டுமோ அந்தந்த வகையில் கொண்டாட வேண்டும். அவ்வளவு...
“வேம்பு” படம் மே மாதத்தில் வெளியீடு!

“வேம்பு” படம் மே மாதத்தில் வெளியீடு!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
  "வேம்பு" படம் மே மாதத்தில் வெளியீடு. மஞ்சள் சினிமாஸ் சார்பில் கோல்டன் சுரேஷ் மற்றும் S.விஜயலட்சுமி தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘வேம்பு’. அறிமுக இயக்குநர் V.ஜஸ்டின் பிரபு இயக்கியுள்ளார் மெட்ராஸ் (ஜானி) ஹரிகிருஷ்ணன் கதாநாயகனாக நடிக்க, ஷீலா கதாநாயகியாக நடிக்கிறார். ஜெயராவ், பரியேறும் பெருமாள் கர்ணன் புகழ் ஜானகி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மேலும் கிராமப்புற நாடகக் கலைஞர்கள் பலரும் நடித்துள்ளனர்... தனுஷ் நடித்த 'தங்கமகன்' படத்தில் ஒளிப்பதிவாளராக பணியாற்றிய A.குமரன் இந்தப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்துள்ளார். 'மிருதன்' படத்திற்கு படத்தொகுப்பு செய்த KJ. வெங்கட்ரமணன் இந்த படத்தின் படத்தொகுப்பை கவனித்துள்ளார். மணிகண்டன் முரளி இசையமைத்துள்ளார். பாடல்களை அந்தோணி தாசன், மீனாட்சி இளையராஜா, 'ஜோக்கர்' படத்திற்காக தேசியவிருது பெற்ற சுந்தரய்யர் மற்றும் கபி...
விக்ரம் பிரபு நடிக்கும் ‘லவ் மேரேஜ்’ படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியீடு

விக்ரம் பிரபு நடிக்கும் ‘லவ் மேரேஜ்’ படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியீடு

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
    *விக்ரம் பிரபு நடிக்கும் 'லவ் மேரேஜ்' படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியீடு* தமிழ் சினிமாவில் பிரபல நடிகரான விக்ரம் பிரபு நடிக்கும் 'லவ் மேரேஜ்' படத்தில் இடம்பெற்ற திரையிசையுலகின் சென்சேஷனல் இசையமைப்பாளர் ஷான் ரோல்டன் எழுதி, இசையமைத்து பாடிய பாடலும், அவரே திரையில் தோன்றி நடனமாடும் ப்ரமோஷனல் வீடியோவும் வெளியிடப்பட்டிருக்கிறது. அறிமுக இயக்குநர் சண்முக பிரியன் இயக்கத்தில் உருவாகியுள்ள ' லவ் மேரேஜ் ' எனும் திரைப்படத்தில் விக்ரம் பிரபு , கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் மம்முட்டி நடித்த 'டொமினிக் அண்ட் தி லேடீஸ் பர்ஸ்' பட புகழ் நடிகை சுஷ்மிதா பட், மீனாட்சி தினேஷ், ரமேஷ் திலக், அருள்தாஸ், கஜ ராஜ், முருகானந்தம், கோடாங்கி வடிவேலு உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். இவர்களுடன் சத்யராஜ் சிறப்பு தோற்றத்தில் நடித்திருக்கிறார். மதன் கிறிஸ்டோபர் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த...
டாப் ஸ்டார் பிரஷாந்த், இயக்குனர் ஹரி மீண்டும் இணையும் புதிய படம்

டாப் ஸ்டார் பிரஷாந்த், இயக்குனர் ஹரி மீண்டும் இணையும் புதிய படம்

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
    டாப் ஸ்டார் பிரஷாந்த், இயக்குனர் ஹரி மீண்டும் இணையும் புதிய படம் அந்தகன் பிரம்மாண்ட வெற்றிக்குப் பிறகு, பிரஷாந்த் நடிக்கும் புதிய படத்திற்கு தற்காலிகமாக பிரஷாந்த் 55 என்று பெயரிடப்பட்டுள்ளது. அழுத்தமான கதை அம்சம், விறுவிறுப்பான திரைக்கதை, என சூடு பறக்கும் விதமாக, சமரசமற்ற பட்ஜெட்டில் தயாரிக்கப்பட உள்ள, இந்த படத்தின் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்க உள்ளார் இயக்குனர் ஹரி. நடிகர் பிரஷாந்துடன் இணைந்து, இயக்குனர் ஹரி இயக்கிய, அவரது அறிமுக படம் 'தமிழ்' மிகப் பெரிய வெற்றி அடைந்து வசூலை வாரிக் குவித்தது, அனைவரும் அறிந்ததே. பட்டி தொட்டி எங்கும், திரை அரங்கில் நூறு நாட்களுக்கு மேலாக ஓடி, சாதனை படைத்தது. அதன் பின் இயக்குனர் ஹரி, தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனராக வலம் வந்ததோடு, தொடர்ந்து வெற்றி படங்களை மட்டுமே இயக்கி, தான் ஒரு வெற்றி இயக்குனர் என தனி முத்திரை பதித்...
மே 30 அன்று திரையரங்குகளில் வெளியாகும் கராத்தே கிட்: லெஜென்ட்ஸ்!

மே 30 அன்று திரையரங்குகளில் வெளியாகும் கராத்தே கிட்: லெஜென்ட்ஸ்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, World News, உலகம், சினி நிகழ்வுகள், டிரைலர்கள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள், வீடியோ
    மே 30, 2025! அன்று திரையரங்குகளில் வெளியாகும் கராத்தே கிட்: லெஜென்ட்ஸ் – படத்தின் புதிய ட்ரெய்லர் Martial Arts ன் பழைய மரபையும் நினைவுகளையும் மீண்டும் ஞாபகப்படுத்துகிறது. நாட்டில் மிகவும் பிரபலமான திரைப்படத் தொடரான கராத்தே கிட், மிகுந்த எதிர்பார்ப்புக்கிடையில் தனது புதிய பகுதியுடன் திரும்பியுள்ளது – கராத்தே கிட்: லெஜென்ட்ஸ். மரபு நிறைந்த கராத்தே பயிற்சி, சீடர்-குரு உறவு, மற்றும் போட்டிகளை புதிய தலைமுறைக்கு கொண்டு செல்லும் இந்தப் படத்தில், ஜாக்கி சான் மற்றும் ரால்ஃப் மெக்கியோ மீண்டும் இணைந்துள்ளனர். புதிய ட்ரெய்லர் வெளியிடப்பட்டுள்ள நிலையில், இதன் மூலம் கராத்தே மற்றும் குங்பூவின் அதிரடியான காட்சிகளைப அதிகப்படியாக பார்த்து ரசிக்கும்படி அமைக்கப்பட்டுள்ளது. இந்த ட்ரெய்லர், முந்தைய திரைப்படங்களின் மரபுகளுக்கும், திரை உலகின் மகத்தான வழிகாட்டியான மிஸ்டர் மியாகி அவர்களு...
கார்த்தி நடிக்கும் “சர்தார் 2” படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வீடியோ வெளியீடு !!

கார்த்தி நடிக்கும் “சர்தார் 2” படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வீடியோ வெளியீடு !!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
    பிரின்ஸ் பிக்சர்ஸ், ஐ.வி. என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில், கார்த்தி  நடிக்கும் “சர்தார் 2” படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வீடியோ வெளியீடு !! பிரின்ஸ் பிக்சர்ஸ், ஐ.வி. என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில், சர்தார் படத்தின் பிரம்மாண்ட வெற்றியைத் தொடர்ந்து, நடிகர் கார்த்தி நடிப்பில், இயக்குநர் PS மித்ரன் இயக்கத்தில், அதன் இரண்டாம் பாகமாக “சர்தார் 2” உருவாகியுள்ளது. முதல் பாகத்தை விட பரபரப்பான திரில்லராக, பிரம்மாண்டமாக உருவாகியுள்ள இப்படம் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், ஃபர்ஸ்ட் லுக் டீசர் இன்று படக்குழுவினர் கலந்துகொள்ள, பத்திரிகை ஊடக நண்பர்கள் முன்னிலையில் கோலாகலமாக வெளியிடப்பட்டது. இந்நிகழ்வினில்.., நடிகர் கார்த்தி பேசியதாவது… சர்தார் பெயர் வைத்ததிலிருந்தே அந்தப்படத்தின் மீது, எனக்கு நிறைய பிரியம் இருந்தது. நம் கிராமத்தில் இருந்து ஒருவனை தேர்ந்தெடுத்து, அவனுக்கு டிர...
‘மாமன்னன்’ வெற்றிக்கு பிறகு மீண்டும் இணைந்துள்ள வடிவேலு – பஹத் பாசில் கூட்டணியின் ‘மாரீசன்’ பட அப்டேட்

‘மாமன்னன்’ வெற்றிக்கு பிறகு மீண்டும் இணைந்துள்ள வடிவேலு – பஹத் பாசில் கூட்டணியின் ‘மாரீசன்’ பட அப்டேட்

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
    'மாமன்னன்' வெற்றிக்கு பிறகு மீண்டும் இணைந்துள்ள வடிவேலு - பஹத் பாசில் கூட்டணியின் 'மாரீசன்' பட அப்டேட் நடிகர்கள் பஹத் பாசில் - வடிவேலு இருவரும் இணைந்திருக்கும் 'மாரீசன்' எனும் திரைப்படத்தின் வெளியீடு குறித்த புதிய தகவலை படக் குழுவினர் பிரத்யேக போஸ்டருடன் அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளனர். இயக்குநர் சுதீஷ் சங்கர் இயக்கத்தில் உருவாகியுள்ள 'மாரீசன்' எனும் திரைப்படத்தில் பகத் பாசில், வடிவேலு, விவேக் பிரசன்னா, ரேணுகா, சித்தாரா மற்றும் பலர் நடித்துள்ளனர். வி. கிருஷ்ணமூர்த்தி கதை, திரைக்கதை, வசனம் எழுதி, கிரியேட்டிவ் டைரக்டராக பணியாற்றி இருக்கும் இந்த திரைப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருக்கிறார். கலைச்செல்வன் சிவாஜி ஒளிப்பதிவு செய்ய, படத்தொகுப்பு பணிகளை ஸ்ரீஜித் சாரங் மேற்கொள்ள, மகேந்திரன் கலை இயக்கத்தை கவனித்திருக்கிறார். டிராவலிங் திரில்லராக தயாராகி இருக்கும...
ZEE5 தளம் வழங்கும் “செருப்புகள் ஜாக்கிரதை” சீரிஸின் முன் திரையிடல்!

ZEE5 தளம் வழங்கும் “செருப்புகள் ஜாக்கிரதை” சீரிஸின் முன் திரையிடல்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, OTT Release, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
  *ZEE5 தளம் வழங்கும் "செருப்புகள் ஜாக்கிரதை" சீரிஸின் முன் திரையிடல் மற்றும் பத்திரிகையாளர் சந்திப்பு !!* இந்தியாவின் முன்னணி வீடியோ ஸ்ட்ரீமிங் தளமான ZEE5, தமிழ் ரசிகர்களுக்கென பல பிரத்தியேகமான படைப்புகளைத் தொடர்ந்து வழங்கி வருகிறது. தற்போது தனது அடுத்த ஒரிஜினல் காமெடி சீரிஸான "செருப்புகள் ஜாக்கிரதை" சீரிஸை வெளியிட்டுள்ளது. S Group சார்பில் தயாரிப்பாளர் சிங்காரவேலன் தயாரிப்பில், இயக்குநர் ராஜேஷ் சூசைராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள, இந்த அதிரடி காமெடி சீரிஸில், சிங்கம்புலி, விவேக் ராஜகோபால், ஐரா அகர்வால், லொள்ளு சபா மனோகர் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்த சீரிஸின் முன் திரையிடல் பத்திரிகை ஊடக நண்பர்களுக்காகப் பிரத்தியேகமாகத் திரையிடப்பட்டது. இதனைத் தொடர்ந்து படக்குழுவினர் பத்திரிகை ஊடக நண்பர்களை சந்தித்தனர். இந்நிகழ்வினில் ZEE5 நிறுவனம் சார்பில்...
யானையை மையமாக வைத்து உருவாகும் ‘இத்திக்கர கொம்பன்’

யானையை மையமாக வைத்து உருவாகும் ‘இத்திக்கர கொம்பன்’

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள், முன்னோட்டம்
  தமிழ் நடிகர் தக்ஷன் விஜய் மலையாளத்தில் வில்லனாக அறிமுகமாகும் 'இத்திக்கர கொம்பன்' யானையை மையமாக வைத்து உருவாகும் 'இத்திக்கர கொம்பன்' குழந்தைகளைக் கவர வருகிறது.! திரைப்படங்களில் விலங்குகள் பங்கேற்கும் கதைகள், விலங்குகளை மையப்படுத்திய கதைகள் குழந்தைகளைக் கவரும் வகையில் அமைந்து பெரிய வெற்றிப் படங்களாக மாறி இருக்கின்றன.அவை மொழியைக் கடந்து மனங்களைக் கவரும். அந்த வகையில்'இத்திக்கர கொம்பன்' என்கிற மலையாளப்படம் உருவாகி வருகிறது. தமிழில் மொழிமாற்றம் செய்து வெளியாக உள்ளது. இப்படத்தில் சாது என்கிற ஒரு யானை பிரதான பாத்திரத்தில் நடித்துள்ளது.அந்த யானைக்குக் கதையில் உள்ள இடமும் காட்சிகளும் குழந்தைகள் மனதைக் கவரும் வகையில் அமைக்கப்பட்டுள்ளன. இப்படத்தை ஸ்ரீ லட்சுமி சினி புரொடக்ஷன்ஸ் சார்பில் ராஜன் பாப்பன், ஸ்ரீலா வடகரா தயாரித்துள்ளனர் மலையாளத்தில் அறிமுகமான நடிகர்களான டினி டோம், ...
டேனியல் பாலாஜி நடித்த கடைசி படமான ‘ஆர் பி எம் (RPM) ‘ படத்தின் டிரெய்லரை அவரது தாயார் வெளியிட்டார்!

டேனியல் பாலாஜி நடித்த கடைசி படமான ‘ஆர் பி எம் (RPM) ‘ படத்தின் டிரெய்லரை அவரது தாயார் வெளியிட்டார்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
    டேனியல் பாலாஜி நடித்த கடைசி படமான 'ஆர் பி எம் (RPM) ' படத்தின் டிரெய்லரை அவரது தாயார் வெளியிட்டார் நடிகர் டேனியல் பாலாஜி கதையின் நாயகனாக முதன்மையான கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் 'ஆர் பி எம் - RPM 'படத்தின் முன்னோட்ட வெளியீட்டு விழா சென்னையில் சிறப்பாக நடைபெற்றது. நடிகர் டேனியல் பாலாஜி மறைந்து ஓராண்டு நிறைவு பெறுவதால்.. அவருக்கு நினைவஞ்சலி செலுத்தும் வகையில் இப்படத்தின் முன்னோட்ட வெளியீட்டு விழா ஒருங்கிணைக்கப்பட்டிருந்தது. இயக்குநர் பிரசாத் பிரபாகர் இயக்கத்தில் உருவாகி வரும் 'ஆர் பி எம் ' ( R P M) எனும் திரைப்படத்தில் நடிகர் டேனியல் பாலாஜி, கோவை சரளா, ஒய் ஜி மகேந்திரன், இளவரசு, தேவதர்ஷினி , சுனில் சுகதா, ஈஸ்வர் கிருஷ்ணா, தயா பிரசாத் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். அனியன் சித்திரசாலா ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஜெ. செபாஸ்டியன் ரோஸாரியோ...