கோபுரம் பிலிம்ஸ் G.N. அன்புசெழியன் தயாரிப்பில் சந்தானம் நடிக்கும் படம்!
G.N. அன்புசெழியனின் கோபுரம் பிலிம்ஸ் நிறுவனம், 'வெள்ளைக்கார துரை', 'தங்கமகன்' 'மருது', 'ஆண்டவன் கட்டளை', உள்ளிட்ட வெற்றி படங்களை தொடர்ந்து சந்தானம் கதாநாயகனாக நடிக்கும் புதிய படம் ஒன்றை பிரம்மாண்டமான பொருட்செலவில் தயாரிக்கிறது.
அனைத்து இளைஞர்களும் ரசித்து கொண்டாடும் விதமாக சந்தானத்தின் கதாபாத்திரம் உருவாகியுள்ளது. மேலும், சந்தானத்தின் ரசிகர்கள் கொண்டாடும் வகையில் படம் மிகச் சிறப்பாக அமைந்துள்ளது.
சந்தானத்தின் ஜோடியாக பிரியாலயா கதாநாயகியாக அறிமுகமாகிறார். முக்கிய வேடத்தில் தம்பி ராமையாவும், சுவாரஸ்யமான வேடத்தில் மனோபாலா இவர்களுடன், முனீஷ்காந்த், விவேக் பிரசன்னா, பால சரவணன், மாறன், கூல் சுரேஷ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
பல வெற்றி படங்களுக்கு கதை, வசனம் எழுதிய எழிச்சூர் அரவிந்தன் இப்படத்தின் கதை, திரைக்கதை,...
"நல்ல கதை இருந்தால் சின்ன பட்ஜெட் படங்களை தைரியமாக எடுக்கலாம்” ; இறுகப்பற்று தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு
சின்ன பட்ஜெட்டில் அதேசமயம் வித்தியாசமான கதைக்களங்களுடன் படங்களை தொடர்ந்து தயாரித்து வரும் பொட்டன்ஷியல் ஸ்டுடியோ நிறுவனத்தின் தயாரிப்பில் கடந்த அக்-6ஆம் தேதி வெளியான ‘இறுகப்பற்று’ திரைப்படம் ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது.
யுவராஜ் தயாளன் இயக்கியுள்ள இப்படத்தில் விக்ரம் பிரபு, விதார்த், ஸ்ரீ, ஷ்ரத்தா ஸ்ரீநாத், சானியா ஐயப்பன், அபர்ணதி மற்றும் பலர் நடித்துள்ளனர். ஜஸ்டின் பிரபாகரன் இசையமைத்துள்ளார். படத்திற்கு மிகப்பெரிய வெற்றியை பரிசளித்த ரசிகர்களுக்கும் ஊடகங்களுக்கும் நன்றி தெரிவிக்கும் விதமாக நேற்று மாலை நடைபெற்ற நன்றி தெரிவிக்கும் சந்திப்பில் ‘இறுகப்பற்று’ படக்குழுவினர் கலந்துகொண்டனர்.
இந்த நிகழ்வில் பாடலாசிரியர் கார்த்திக் நேத்தா பேசும்போது,...
இறுகப்பற்று ரசிக்கும் ரகமா? கோடங்கி விமர்சனம் 3.5/5
காலங்கள் மாறிவிட்ட இவ்வுலகில் காதல் எவ்வளவு எளிது என்ற நிலையை அடைந்து விட்டதோ, அதேபோல் பிரேக் அப், விவாகரத்து உள்ளிட்ட சம்பவங்களும் சர்வ சாதாரண ஒன்றாக மாறிவிட்டது. வார்த்தைப்போர் தொடங்கி உடல் ரீதியான தாக்குதல், தம்பதிகளுக்குள் சண்டையே வராமல் இருப்பது உள்ளிட்ட பல காரணங்களை சொல்லி விவாகரத்து கேட்டு நீதிமன்றத்தை நாடுபவர்களின் செய்தியை நாம் தினமும் கேட்டுக் கொண்டு தான் இருக்கிறோம். இவை அனைத்திற்கும் மிக அழகாக விடை சொல்லியிருக்கிறது “இறுகப்பற்று”..!
விக்ரம் பிரபு - ஷ்ரத்தா ஸ்ரீநாத், விதார்த் - அபர்ணதி, ஸ்ரீ - சானியா ஐயப்பன் ஆகியோர் வெவ்வேறு வாழ்க்கை நிலையை வாழும் தம்பதியினர். திருமண பிரிவு பிரச்சினைகளுக்கு கவுன்சிலிங் கொடுக்கும் மருத்துவராக வரும் ஷ்ரத்தாவுடன் கணவர் விக்ரம் பிரபுவுக்கு சண்டையே வந்தது இல்லை. அதையே ஒ...
இறைவன் ஆபத்தானவனா? கோடங்கி விமர்சனம் 2.5/5
நகரத்தில் அடுத்தடுத்து நடக்கும் பல கொடூரக் கொலைகள், அவற்றைக் கண்டுபிடிக்கக் களமிறங்கும் காவல் அதிகாரிகள்,அந்த விசாரணையில் என்னவெல்லாம் நடக்கிறது? என்கிற வழக்கமான கதைக்குள் உளவியல் சிக்கல்களை மையமாகக் கொண்டு திரைக்கதை அமைத்து வேறுபடுத்திக் காட்ட முயன்றிருக்கும் படம் இறைவன்.
இறைவன் படத்தின் ட்ரெய்லர் வெளியான போதே சைக்காலஜிக்கல் ஆக்ஷன் த்ரில்லர் படம் என்பது அனைவருக்கும் தெரிந்தது. படம் முழுக்க ரத்தம் தெறிக்க தெறிக்க காட்சிகள் இருப்பது போன்று ட்ரெய்லர் அமைந்திருந்தது. போதாக்குறைக்கு படத்துக்கு ஏ சர்ட்டிஃபிகேட் கொடுக்கப்பட்ட நிலையில், குழந்தைகளுடன் படம் பார்க்க வேண்டாம் என ஜெயம் ரவியே வேண்டுகோள் விடுத்திருந்தார். அப்படி என்ன கதை எனப் பார்த்தால், நம்மை அச்சப்படுத்தும் காட்சிகள் தான் இறைவன் படத்தில் அதிகம் இடம்பெற்றுள்ளன.
“ம...
800 அடித்து ஆடும் படமா? கோடங்கி விமர்சனம் 3/5
இந்திய சினிமாவில் கிரிக்கெட் வீரர்களின் வாழ்க்கையைப் பற்றிய பயோபிக்கள் நிறைய செய்யப்பட்டுள்ளன, ஒவ்வொரு கிரிக்கெட் வீரரும் திரையில் அவரது அண்டர்டாக் முதல் சூப்பர்ஸ்டார் கதையைப் பெறுகிறார்கள். ஒரு மாற்றத்திற்காக, பெரிய திரையில் முத்தையா முரளிதரனின் கதையை 800 என்ற வடிவத்தில் சொல்ல வித்தியாசமான கதையுடன் வருகிறார் இயக்குனர் எம்.எஸ்.ஸ்ரீபதி.
முரளிதரனின் வாழ்க்கை மற்றும் அவரது சிறு வயது முதல் அவரது 800வது விக்கெட்டு வரை நடந்த சம்பவங்கள், மிகவும் சிறப்பாக கொண்டாடப்பட்ட நிகழ்வாக அமைந்தது. மேலும் இப்படத்தின் சிறந்த அம்சம் என்னவென்றால், அவரது வாழ்க்கையில் நடந்த பல்வேறு அசம்பாவிதங்கள் - அவர் எதிர்கொள்ள வேண்டிய அரசியல், ஒரு இலங்கையர் மற்றும் ஒரு தமிழர் இடையே கயிற்றில் நடப்பதை நிரூபிக்கும் தொடர்ச்சியான போராட்டம் ஆகியவற்றிலிருந்த...
ரத்தம் வன்முறை படமா? கோடங்கி விமர்சனம்
பிரபல பத்திரிக்கை நிறுவனத்தில் பத்திரிகையாளர் செழியன் என்பவரை அடையாளம் தெரியாத ஒரு இளைஞர் கொலை செய்கிறார். தனது தலைவரைப் பற்றி செய்தி எழுதியதற்காக தான் இந்த கொலையை செய்ததாக தனது செயலை நியாயப்படுத்துகிறான் கொலையாளி. இந்த கொலையை அந்த இளைஞர் ஏன் செய்கிறார் என்கிற புதிரில் இருந்து தொடங்கும் கதை மெல்ல நமது கதாநாயகன் ரஞ்சித் குமாரை (விஜய் ஆண்டனி) நோக்கி நகர்கிறது.
ஒரு காலத்தில் உலக அளவில் புகழ்பெற்ற புலனாய்வு பத்திரிகையாளராக இருந்த ரஞ்சித் தற்போது தனது மகளுடன் கொல்கத்தாவில் வசித்து வருகிறார். தனது மனைவி இறந்துவிட்ட குற்றவுணர்ச்சியால் தீவிர மதுபோதைக்கு அடிமையாகிறார். சந்தர்ப்ப சூழ்நிலையால் மீண்டும் தனது வேலைக்குத் திரும்பும் ரஞ்சித் மர்மமான முறையில் நடக்கும் இந்த கொலைகளை செய்பவர்களை தேடிக் கண்டுபிடிப்பதே படத்தின் கதை.
வழக்கமான...
’அயலான்’ படத்தின் டீசர் வெளியீட்டு விழா!
இயக்குநர் ரவிக்குமார் இயக்கத்தில் நடிகர்கள் சிவகார்த்திகேயன், ரகுல் ப்ரீதி சிங் நடிப்பில் 24ஏ.எம். தயாரிப்பில் அடுத்த வருடம் பொங்கலுக்கு வெளியாக இருக்கும் திரைப்படம் ‘அயலான்’. இதன் டீசர் வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது.
நிகழ்வில் முதலாவதாக கே.ஜே.ஆர். ஸ்டுடியோஸ் எக்ஸிகியூடிவ் புரொடியூசர் சவுந்தர் பைரவி பேசியதாவது, “இந்த விழாவிற்கு வருகை தந்துள்ள இயக்குநர் ரவிக்குமார், நடிகர் சிவகார்த்திகேயன், படக்குழுவினர் அனைவரையும் வரவேற்கிறோம்” என்றார்.
நடிகர் பாலசரவணன் பேசியதாவது, “இவ்வளவு நாள் எதற்காக காத்திருந்தோமோ அது நடக்கிறது. இந்தப் படத்தில் எனக்கு நல்ல கதாபாத்திரம் கொடுத்த இயக்குநர் ரவிக்குமாருக்கும், சிவகார்த்திகேயன் பிரதருக்கும் படக்குழுவினருக்கும் நன்றி”.
பாடலாசிரியர் விவேக் பேசியதாவது, “ஒருத்தருக்கு வெற்றி கஷ்டப்பட்டு கிடைக்கும்போதுதான்...
ஜீ ஸ்டுடியோஸ் மற்றும் பேரலல் யூனிவர்ஸ் பிக்சர்ஸ் இணைந்து தயாரிக்கும் இந்தியாவின் முதல் கடல் சார் திகில் சாகசப்படமான 'கிங்ஸ்டன்' எனும் திரைப்படத்தை 'உலக நாயகன்' கமல்ஹாசன் தொடங்கி வைத்தார்!
இசையமைப்பாளரும், நடிகருமான ஜீ. வி. பிரகாஷ் குமார் கதையின் நாயகனாக நடிக்கும் புதிய திரைப்படத்திற்கு 'கிங்ஸ்டன்' என பெயரிடப்பட்டு, அதன் டைட்டில் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது. இதனை 'உலக நாயகன்' கமல்ஹாசன் வெளியிட்டு சிறப்பித்திருக்கிறார். சென்னையில் நடைபெற்ற இப்படத்தின் தொடக்கவிழாவில், ‘உலகநாயகன்’ கமல்ஹாசன் கலந்துகொண்டு, ‘கிங்ஸ்டன்’ படத்தை கிளாப் அடித்து, அதன் படப்பிடிப்பையும் தொடங்கி வைத்தார்.
அறிமுக இயக்குநர் கமல் பிரகாஷ் இயக்கத்தில் தயாராகும் திரைப்படம் 'கிங்ஸ்டன்'. இப்படத்தில் 'இசை அசுரன்' ஜீ. வி பிரகாஷ் குமார் கதையின் நாயகனாக நடிக்கிறார். இவருடன் திவ்யபாரதி, 'மேற்குத் தொடர்ச்சி மலை'...