ஹீரோவாக உதயநிதியை இயக்குனர் பிரியதர்ஷன் தேர்வு செய்த பிண்ணனி…நிமிர் இசை விழாவில் – சமுத்திரக்கனி ரகசியம்
ஹீரோவாக உதயநிதியை இயக்குனர் பிரியதர்ஷன் தேர்வு செய்த பிண்ணனி...!
நிமிர் இசை விழாவில் சமுத்திரக்கனி சொன்ன ரகசியம்
மூன்ஷாட் எண்டர்டெயின்மெண்ட் சார்பில் சந்தோஷ் டி.குருவில்லா தயாரிப்பில் உதயநிதி ஸ்டாலின், நமீதா பிரமோத், பார்வதி நாயர், சமுத்திரகனி, இயக்குனர் மகேந்திரன் ஆகியோர் நடித்திருக்கும் படம் `நிமிர்'. பிரியதர்ஷன் இயக்கியிருக்கும் இந்த படத்துக்கு தர்புகா சிவா, அஜனீஷ் லோக்நாத் இசையமைத்திருக்கிறார்கள். ஜனவரி 26-ஆம் தேதி வெளியாகும் இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.
நான் நாடகத்தில் இருந்து வந்தவன், காஞ்சிவரம் படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. நாடகத்தில் இருந்து வந்ததால் நடிப்பு கொஞ்சம் மிகையாகவும் இருந்தது, பிரியதர்ஷன் சார் தான் எப்படி யதார்த்தமாக நடிக்கணும்னு சொல்லி கொடுத்தார் என்றார் நடிகர் ஜார்ஜ்.
பிரியதர்ஷன் எனக்கு மிகவும் பிடித்த ஒரு இயக்குனர்...









