மு.க.ஸ்டாலினின் உடல் நலம் குறித்து தொலைபேசியில் நலம் விசாரித்த பிரதமர் மோடி
முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு கடந்த செவாய்க்கிழமை கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால் ஆழ்வார்பேட்டையில் உள்ள இல்லத்தில் மு.க.ஸ்டாலின் தனிமைப்படுத்திக் கொண்டார் இந்த நிலையில் 2 நாட்கள் தனிமைபடுத்தி கொண்டிருந்த நிலையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கொரோனா தொடர்பான அறிகுறிகள் குறித்து மு.க ஸ்டாலினுக்கு மருத்துவ பரிசோதனை நடைபெற்று வருகிறது என காவேரி மருத்துவமனை சார்பில் தெரிவிக்கப்பட்டது. இன்று அவர் வீடு திரும்புவார் என திரும்புவார் என தகவல் வெளியாகியுள்ளது.
இந்த நிலையில் மு.க.ஸ்டாலினின் உடல் நலம் குறித்து தொலைபேசியில் பிரதமர் மோடி நலம் விசாரித்தார். இதுகுறித்து பிரதமருக்கு நன்றிய கூறிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தான் நன்கு குணமடைந்து வருவதாக தெரிவித்தார்.
மேலும் சென்னையில் வரும் ஜூலை 28ஆம் தேதி துவங...









