வியாழக்கிழமை, ஜூலை 9
Shadow

தமிழக அரசியல்

பிப்ரவரி 19ல் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்!

பிப்ரவரி 19ல் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள், தமிழக அரசியல்
    தமிழக நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் தேதியை மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அதன்படி பிப்ரவரி 19ம் தேதி வாக்குப் பதிவு நடைபெறுகிறது. தேர்தலில் பதிவான வாக்குகள் பிப்ரவரி 22ம் தேதி தேதி எண்ணப்படவுள்ளது. தமிழகத்தில் உள்ளாட்சி அமைப்புகளின் பதவிகாலம் முடிந்தும் அவற்றுக்கு தேர்தல் நடத்தப்படாமல் இருந்தது.   இந்நிலையில், புதிதாக உருவாக்கப்பட்ட 9 மாவட்டங்கள் நீங்கலாக பிற மாவட்டங்களில் முதலில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்றது. அதனை தொடர்ந்து நெல்லை, விழுப்புரம், காஞ்சிபுரம், வேலூர் தென்காசி, கள்ளக்குறிச்சி, செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, திருப்பத்தூர் ஆகிய 9 மாவட்டங்களுக்கு கடந்த ஆண்டு அக்டோபர் 6 மற்றும் 9ம் தேதிகளில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்றது. இதனை தொடர்ந்து தமிழ்நாட்டில் உள்ள 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள் மற்றும் 490 பேரூராட்சிகள் என அனை...
தமிழர்கள் இந்தி மொழிக்கு எதிரானவர்கள் இல்லை இந்தி ஆதீக்கத்திற்கு எதிரானவர்கள் – முதல்வர் ஸ்டாலின் பளீச்

தமிழர்கள் இந்தி மொழிக்கு எதிரானவர்கள் இல்லை இந்தி ஆதீக்கத்திற்கு எதிரானவர்கள் – முதல்வர் ஸ்டாலின் பளீச்

HOME SLIDER, NEWS, politics, செய்திகள், தமிழக அரசியல்
  குடியரசு தின அலங்கார ஊர்தி அணிவகுப்பிற்கு அனுப்பி வைக்கப்பட்ட தமிழக ஊர்திக்கு திட்டமிட்டு அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாகவும், அதற்காக மத்திய அரசு கூறியுள்ள காரணத்தை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்   மொழிப்போர் தியாகிகள் தினத்தையொட்டி திமுக மாணவரணி சார்பில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் காணொலி வாயிலாக கலந்துகொண்டு உரையாற்றினார். அப்போது பேசிய அவர், மொழிப்போர் தியாகிகளின் தியாகத்தால் தமிழினம் மேன்மை அடைந்து உள்ளதாக புகழாரம் சூட்டினார். செம்மொழி தகுதியை தமிழக்கு பெற்றுத் தந்தது, மெட்ராஸ் பெயரை சென்னை என மாற்றியது தமிழில் வழிபாடு செய்யும் உரிமையை வழங்கியது என திமுக அரசின் திட்டங்களை பட்டியலிட்டார். தமிழ், தமிழர் என்று பேசுவது குறுகிய மனப்பான்மை அல்ல என்று கூறிய முதலமைச்சர், ஹிந்திக்கு எதிரானவர்கள் அல்ல, ஹிந...
சென்னையில் முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் தேசிய கொடி ஏற்றிவைத்த கவர்னர்!

சென்னையில் முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் தேசிய கொடி ஏற்றிவைத்த கவர்னர்!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள், தமிழக அரசியல்
  நாடு முழுவதும் 73ஆவது குடியரசு தினம் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. தமிழ்நாடு கவர்னர் ஆர்.என்.ரவி சென்னையில் தேசியக் கொடியை ஏற்றி வைத்தார். அப்போது, இந்திய விமானப்படை ஹெலிகாப்டர் மூலம் மலர்தூவப்பட்டது. பின்னர், அணிவகுப்பு மரியாதையை ஆளுநர் ஏற்றார்.   இந்நிலையில், 2022 ஆம் ஆண்டிற்கான தமிழகத்தின் அனைத்து மாநகரங்கள் மற்றும் மாவட்டங்கள் ஆகியவற்றில் உள்ள காவல் நிலையங்களில் மிகவும் சிறப்பாக பணிகளை செய்தல் குற்றங்களை குறைத்தல், உடனடியாக நடவடிக்கை எடுத்தல் போன்றவற்றில் மத்திய அரசின் மூலம் வரையறுக்கப் பட்ட திறநளவிகளின் அடிப்படையில் மதிப்பெண்கள் வழங்கப்பட்டு அதன் அடிப்படையில் சிறந்த காவல் நிலையத்திற்கு முதலாம் இரண்டாம் மற்றும் மூன்றாம் பரிசுகள் அரசால் வழங்கப்பட்டன. அதில் தமிழகத்திலேயே சிறந்த காவல் நிலையமாக முதலிடம் பிடித்த திருப்பூர் மாநகரத்தை சேர்ந்த திருப்பூர் தெ...
அதிமுக ஆட்சியில் நடைபெற்ற தவறுகள் கண்டறியப்படும்: பூச்சி முருகன் உறுதி!

அதிமுக ஆட்சியில் நடைபெற்ற தவறுகள் கண்டறியப்படும்: பூச்சி முருகன் உறுதி!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள், தமிழக அரசியல், நடிகர்கள்
    வீட்டு வசதி வாரியத் தலைவராக பூச்சி.எஸ்.முருகன் நியமிக்கப்பட்டுள்ளார். சென்னை கோயம்பேட்டில் உள்ள சிஎம்டிஏ அலுவலகத்தில் வீட்டு வசதி வாரிய அமைச்சர் முத்துசாமி முன்னிலையில் புதிதாக நியமிக்கப்பட்டுள்ள வீட்டு வசதி வாரிய தலைவர் பூச்சி எஸ். முருகன் பொறுப் பேற்றுக் கொண்டார். திமுக தலைமை நிலையச் செயலராக பதவி வகித்து வரும் பூச்சி. எஸ். முருகனை வீட்டு வசதி வாரிய தலைவராக நியமித்து கடந்த இரு தினங்களுக்கு முன்பு தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் அவர்கள் அறிவிப்பினை வெளியிட்டிருந்தார். இதையடுத்து முதல்வர் ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றார். இந்நிலையில் நேற்று கோயம்பேடு சிஎம்டிஏ அலுவலகத்தில் பூச்சி எஸ் . முருகன் வீட்டு வசதி வாரிய தலைவராக பொறுப்பேற்றுக்கொண்டார் அதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த பூச்சி எஸ் முருகன், “வீட்டு வசதி வாரிய தலைவராக நியமித்ததற்கு முதல்வ...
பொதுசொத்து வாரிய தலைவராகிறாரா சி.என்.இராமமூர்த்தி!?

பொதுசொத்து வாரிய தலைவராகிறாரா சி.என்.இராமமூர்த்தி!?

HOME SLIDER, NEWS, politics, கட்டுரை, செய்திகள், தமிழக அரசியல்
    ராமதாஸ் வசம் உள்ள பலகோடி வன்னியர் சொத்தை மீட்க அரசு முயற்சி! பொதுசொத்து வாரிய தலைவராகிறாரா சி.என்.இராமமூர்த்தி!? வன்னிய முன்னோர்கள் மற்றும் பெரியவர்கள் தாங்கள் ஈட்டிய பெரும் சொத்துக்களை இன மக்களின் நலனுக்காக அர்ப்பணித்து தங்கள் சொத்துக்களை நிர்வகிக்கும் அறக்கட்டளைகளை ஏற்படுத்தி விட்டு சென்றார்கள். இந்த வன்னிய பெரியோர்கள் அமைத்து இருக்கும் அறக்கட்டளைகள் தமிழகம் முழுவதும் பரவி உள்ளது. சுமார் பத்து லட்சம் கோடி ருபாய் பெறுமான சொத்துக்கள் இந்த அறக்கட்டளைகளுக்கு சொந்தமாக உள்ளது. இந்த அறக்கட்டளைகள் எந்த நோக்கத்திற்காக அமைக்க பெற்றதோ அந்த நோக்கம் நிறைவேறாமல், காலபோக்கில் கேட்பாரின்றி இந்த அறக்கட்டளைகளின் சொத்துக்கள் சுயநல எண்ணம் கொண்டோர்  கைகளில் சிக்கிக் கொண்டுள்ளது. அந்த அறக்கட்டளைகளின் மூலமாக வரும் பல கோடி பெறுமான வருமானங்கள் மக்களின் பயன்பாட்டுக்கு கிட...
‘விடுதலை போரில் தமிழகம்” என்ற தலைப்பில் குடியரசு தினவிழா அலங்கார ஊர்திகள்!

‘விடுதலை போரில் தமிழகம்” என்ற தலைப்பில் குடியரசு தினவிழா அலங்கார ஊர்திகள்!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள், தமிழக அரசியல்
    ஜனவரி 26ம் தேதி நாடு முழுவதும் 75வது குடியரசு தினவிழா கொண்டாடப்பட உள்ளது. குடியரசு தின விழாவையொட்டி புது டெல்லியில் நடைபெறும் பிரம்மாண்ட அணிவகுப்பில் தமிழக அரசு சார்பில் பங்கேற்க இருந்த அலங்கார ஊர்தியை மத்திய அரசு நிராகரித்தது. கப்பலோட்டிய தமிழர் வ.உ.சிதம்பரனார், வீரமங்கை வேலுநாச்சியார், பாரதியார் உருவங்கள் அடங்கிய அலங்கார ஊர்தி நிராகரிக்கப்பட்டது. தமிழக அரசின் அலங்கார ஊர்தி நிராகரிக்கப்பட்டதற்கு அரசியல் கட்சித்தலைவர்கள் பலரும் மத்திய அரசுக்கு கண்டனம் தெரிவித்தனர். மேலும், மத்திய அரசு சார்பில் அனுமதி மறுக்கப்பட்ட அலங்கார ஊர்திகள் மாநில அரசின் சார்பில் நடைபெறும் குடியரசு தின கொண்டாட்டத்தில் இடம்பெறும் எனவும், தமிழ்நாட்டின் முக்கிய நகரங்களுக்கும் இந்த அலங்கார ஊர்தி மக்களின் பார்வைக்காக அனுப்பப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிக்கை மூலமாக தெரிவித்திருந்தார...
”அய்யாதுரை”யாக அழைக்கப்பட வேண்டிய நான் ஸ்டாலின் ஆனது எப்படி? முதல்வர் சொன்ன ருசிகர தகவல்!

”அய்யாதுரை”யாக அழைக்கப்பட வேண்டிய நான் ஸ்டாலின் ஆனது எப்படி? முதல்வர் சொன்ன ருசிகர தகவல்!

CINI NEWS, HOME SLIDER, NEWS, politics, செய்திகள், தமிழக அரசியல், நடிகர்கள்
  தமிழ் திரைப்பட நடிகர் சங்கத்தின் நிர்வாகிகளில் ஒருவரும், திமுக தலைமை நிலைய செயலாளரும், தமிழ் நாடு வீட்டுவசதி துறை வாரியத்தலைவருமான பூச்சி முருகன் இல்ல திருமணம் இன்று நடைபெற்றது. இந்த திருமணத்தில் முதல்-அமைச்சர் மு க ஸ்டாலின் அவர்கள் கலந்துகொண்டு மணமக்களுக்கு வாழ்த்து தெரிவித்தார் அது ஒரு காரணப்பெயர். கம்யூனிச கொள்கை மீது கலைஞர் அவர்களுக்கு அசைக்க முடியாத நம்பிக்கை உண்டு. அதனால் தான் அவர் இறந்த நேரத்தில், நான் பிறந்த காரணத்தால் அவருடைய நினைவாக அந்த பெயரை எனக்கு சூட்டினார்கள். அந்த பெயரை சூட்டுவதற்கு முன்பு கலைஞர் அவர்கள் எனக்கு என்ன பெயர் வைக்கவேண்டும் என்று நினைத்திருந்தால் என்று சொன்னால், எனக்கு 'அய்யாதுரை' என பெயர் வைப்பதாக இருந்த‌து.  அய்யா என்றால் தந்தை பெரியார். துரை என்றால் அண்ணாவின் பெயருக்கு பின்னால் வரக்கூடிய துரை என்று வைக்க வேண்டும் என்று கருதி இருந்தா...
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்: கட்சி, வேட்பாளர் பெயரில் சுவரொட்டி ஒட்ட தடை!

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்: கட்சி, வேட்பாளர் பெயரில் சுவரொட்டி ஒட்ட தடை!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள், தமிழக அரசியல்
  நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் புதிய கையேட்டை வெளியிட்டுள்ளது.  அதில், வேட்பாளர் மற்றும் கட்சி பெயரில் சுவரொட்டி ஒட்ட தடை விதிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தல் கடந்த ஆண்டு நடைபெற்று முடிந்த நிலையில், நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் விரைவில் நடைபெறவுள்ளது. இதற்கான தேதி ஒருசில நாட்களில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால், அரசியல் கட்சிகள், தேர்தலில் போட்டியிட விரும்புவர்களிடம் விருப்ப மனுவை பெற்று வேட்பாளர் தேர்வில் மும்முரமாக உள்ளன. இந்நிலையில், நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக மாநில தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள 18 பக்க அறிக்கையில், இந்த முறை நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வேட்பாளர்கள் செலுத்த வேண்டிய காப்புத் தொகை (டெபாசிட்) இரட்டிப்பாக உயர்த்தப்பட்டுள்ளது. அதன்படி, மாநகராட்சி உறுப்பினர் பதவிக்கு போட்...
பெற்றோர்கள் காது கொடுத்து கேட்டால் குழந்தைகள் தற்கொலை எண்ணம் தவிர்க்கப்படும் என்கிறார் கிருத்திகா உதயநிதி

பெற்றோர்கள் காது கொடுத்து கேட்டால் குழந்தைகள் தற்கொலை எண்ணம் தவிர்க்கப்படும் என்கிறார் கிருத்திகா உதயநிதி

HOME SLIDER, NEWS, politics, செய்திகள், தமிழக அரசியல்
    பள்ளிகளில் பாலியல் சீண்டலுக்கு உள்ளாகும் பெண் குழந்தைகளின் பிரச்சனைகளை பெற்றோர்கள் காது கொடுத்து கேட்டாலே தற்கொலை போன்ற முடிவுகளை தவிர்க்கலாம் என்று கிருத்திகா உதயநிதி தெரிவித்தார். சென்னை எழும்பூரில் உள்ள குழந்தைகள் மருத்துவமனையில், சைல்டு அடோலெசென்ட் பவுண்டேஷன் இந்தியா என்கிற தன்னார்வ அமைப்பு சார்பில், நோயினால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கிருத்திகா உதயநிதி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு குழந்தைகளுக்கு தேவையான பொருட்களை வழங்கினார். அப்போது நிகழ்ச்சியில் பேசிய கிருத்திகா உதயநிதி, ’பிள்ளைகளுக்கு நாம் உறுதுணையாக இருக்க வேண்டுமே தவிர, நம்முடைய விருப்பங்களை அவர்கள் மீது திணிக்க கூடாது என்றார். பிள்ளைகளின் விருப்பத்தை தெரிந்து அவர்களை வளர்க்க வேண்டும் என்றும், சேப்பாக்கம் சட்டமன்ற தொகுதியில் உள்ள கு...