புதன்கிழமை, ஜூலை 8
Shadow

தமிழக அரசியல்

சட்டமன்ற வரலாற்றில் முதன்முறையாக சபாநாயகருக்கு துபாஷ்-காக பெண்மணி நியமனம்!

சட்டமன்ற வரலாற்றில் முதன்முறையாக சபாநாயகருக்கு துபாஷ்-காக பெண்மணி நியமனம்!

Assembly news, HOME SLIDER, NEWS, செய்திகள், தமிழக அரசியல்
  சட்டமன்ற வரலாற்றில் முதன்முறையாக சபாநாயகருக்கு துபாஷ்-காக பெண்மணி நியமனம் சட்டமன்றத்தில் துபாஷ் என்ற பெயருடன் அழைக்கப்படும் இந்த பொறுப்பு சட்டமன்ற வளாகத்தில் உள்ள சபாநாயகர் அறையில் இருந்து சட்டமன்றம் வரை சபாநாயகர் செல்லும் போது முன்னே செல்வார். சபாநாயகர் பேரவையில் இருக்கும்போது பேரவைக்கு வெளியில் காத்திருப்பார். மீண்டும் சபாநாயகர் அவர் அறைக்குச் செல்லும்போது உடன் செல்வார். அவ்வளவுதான் 1990 ஆம் ஆண்டு சட்டமன்ற அலுவலகத்தில் உதவியாளராக பணியில் சேர்ந்த ராஜலட்சுமி என்பவருக்கு தற்போது 60 வயது எட்டியுள்ளது. வரும் மே மாதம் ராஜலட்சுமி ஓய்வு பெற உள்ளார். இந்நிலையில் இந்த பொறுப்பிற்கு அவர் நியமிக்கப்பட்டுள்ளது அனைவர் மத்தியிலும் ஒரு ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு முன் இந்த பொறுப்பில் ஆண்களே இருந்து வந்த நிலையில் முதல்முறையாக பெண் ஒருவர் இந்த பொறுப்புக்கு நியமனம் செய்யப்பட...
இராமதாஸ்,காடுவெட்டி குருவின் பேச்சுதான் இளவரசன் படுகொலைக்கு காரணம் – வக்கீல் மோகன் அனல் பேச்சு

இராமதாஸ்,காடுவெட்டி குருவின் பேச்சுதான் இளவரசன் படுகொலைக்கு காரணம் – வக்கீல் மோகன் அனல் பேச்சு

HOME SLIDER, kodanki voice, politics, செய்திகள், தமிழக அரசியல், வீடியோ
இராமதாஸ்,காடுவெட்டி குருவின் பேச்சுதான் இளவரசன் படுகொலைக்கு காரணம் - வக்கீல் மோகன் அனல் பேச்சு   https://youtu.be/C0Xf9x41jDQ    
ஜெ., மரண விசாரணை கிடுக்கிப்பிடி கேள்விகளால் தடுமாறும் ஓபிஎஸ்!

ஜெ., மரண விசாரணை கிடுக்கிப்பிடி கேள்விகளால் தடுமாறும் ஓபிஎஸ்!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள், தமிழக அரசியல்
  ஜெ., மரண விசாரணை கிடுக்கிப்பிடி கேள்விகளால் தடுமாறும் ஓபிஎஸ்! முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக ஓய்வு பெற்ற நீதியரசர் ஆறுமுகசாமி ஆணையம் விசாரணை நடத்தி வருகிறது. இந்த விசாரணை ஆணையத்தில் இன்று அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஒபிஎஸ் ஆஜராகி இருந்தார். அவரிடம் சுமார் மூன்றரை மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டது. இந்நிலையில் அவரிடம் நாளையும் விசாரணை நடத்த ஆறுமுகசாமி ஆணையம் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 3 மணி நேரத்திற்கு மேலாக இன்று நடைபெற்ற விசாரணையில் அவரிடம் சுமார் 78 கேள்விகள் கேட்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதற்கு அவர் தரப்பில் சில விளக்கங்களும் பதில்களும் அளிக்கப்பட்டுள்ளது. இன்று நடைபெற்ற விசாரணையில், “அப்பல்லோ மருத்துவமனையில் ஜெயலலிதா அனுமதிக்கப்பட்ட 35 நாட்களில் அண்ணா, எம்.ஜி.ஆர் போல ஜெயலலிதாவையும் வெளிநாடு அழைத்துச் செல்லலாம் என அப்போதைய சுகாதாரத்துறை...
அரைகுறை ஆடையில் 50 பெண்கள் ஆட்டம்… காங்.,எம்.எல்.ஏ.வின் ரிசசார்ட்டில் மது, மாது கும்மாளம்?

அரைகுறை ஆடையில் 50 பெண்கள் ஆட்டம்… காங்.,எம்.எல்.ஏ.வின் ரிசசார்ட்டில் மது, மாது கும்மாளம்?

HOME SLIDER, NEWS, politics, செய்திகள், தமிழக அரசியல்
  சென்னை கிழக்கு கடற்கரை சாலையிலுள்ள தனியார் ரிசார்ட்டில் பெண்கள் நடனம், மதுவிருந்து ஆகியவை சட்டவிரோதமாக நடைபெற்றதாகவும், இந்த விருந்தில் பங்கேற்றதாக 50 பெண்கள் உட்பட 500 பேரைப் போலீசார் சுற்றி வளைத்தனர். வேளச்சேரி காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் ஹசன் மௌலானாவுக்கு சொந்தமாக சென்னை கிழக்கு கடற்கரை சாலை பனையூரில் ஆர்ச்சிட் ரிசார்ட் உள்ளது. இங்கு ஹோலி பண்டிகையன்று அனுமதியில்லாமல் மது விருந்து நடைபெறுவதாகவும் அந்த மது விருந்தில் பலவிதமான போதை மருந்து பயன்படுத்துவதாகவும் தாம்பரம் காவல் ஆணையர் ரவிக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. இந்தத் தகவலைத் அடிப்படையில் சம்பவ இடத்திற்குச் சென்ற மது ஒழிப்பு மற்றும் சட்ட ஒழுங்கு காவல்துறையினர் நள்ளிரவை கடந்து விடிய விடிய மூன்று மணிவரை சோதனை நடத்தினர். அப்போது அங்கு சட்ட விரோதமாக மது விருந்து நடத்திய சென்னையை சேர்ந்த மேனஜர் சைமன் கைது செய்யப்பட...
மார்ச்-31க்குள் நகைக்கடன் தள்ளுபடி செய்யப்பட்டு நகைகள் திரும்பி தரப்படும் அமைச்சர் ஐ.பெரியசாமி உறுதி

மார்ச்-31க்குள் நகைக்கடன் தள்ளுபடி செய்யப்பட்டு நகைகள் திரும்பி தரப்படும் அமைச்சர் ஐ.பெரியசாமி உறுதி

HOME SLIDER, NEWS, politics, செய்திகள், தமிழக அரசியல்
  தமிழகத்தில் வரும் மார்ச்-31ம் தேதிக்குள் 14.40 லட்சம் பேருக்கு நகைக்கடன் தள்ளுபடி செய்யப்பட்டு நகைகள் திரும்பி தரப்படும் என அமைச்சர் ஐ.பெரியசாமி உறுதியளித்துள்ளார். திமுக ஆட்சிக்கு வந்தால் கூட்டுறவு வங்கி பயிர்க் கடன், நகைக் கடன் தள்ளுபடி செய்யப்படும் என தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் வாக்குறுதியில் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில், திமுக ஆட்சிக்கு வந்த பின்னர், 110 விதி கீழ் இது குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டது. அதற்கான அதிகாரபூர்வ அரசாணையும் தமிழக அரசு வெளியிடப்பட்டது. நகைக் கடன் தள்ளுபடி அறிவிப்பு குறித்து தகுதியான நபர்களைக் கண்டறிவதற்காக, அனைத்து நகைக்கடன்கள் பற்றிய பெயர், கடன் பெற்ற கூட்டுறவு சங்கங்களின் விவரம், கடன் பெற்ற நாள், கடன் தொகை, கடன் கணக்கு எண், வாடிக்கையாளர் தகவல் குறிப்பு எண், குடும்ப அட்டை எண், ஆதார் எண், முகவரி, தொலைப்பேசி எண் உள்ளிட்ட 51 விதமான தகவ...
இந்தியாவில் நீதித்துறை நம்பிக்கையாக இல்லை என்கிறார் அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன்!

இந்தியாவில் நீதித்துறை நம்பிக்கையாக இல்லை என்கிறார் அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன்!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள், தமிழக அரசியல்
  இந்தியாவில் நீதித்துறை நம்பிக்கையாக இல்லை என்று தமிழக நிதித்துறை அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் பேசியுள்ளார். தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி  பார் கவுன்சில் சார்பில் வழக்கறிஞர் சங்கங்களுக்கு சட்டப்புத்தகம் வழங்கும் நிகழ்வு சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் உள்ள பார் கவுன்சிலில் நடைபெற்றது. இதில் , சட்டத்துறை அமைச்சர்  ரகுபதி, நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பங்கேற்றனர். நிதியமைச்சர்  பிடிஆர்.பழனிவேல் தியாகராஜன், "படித்தவர்களுக்கு அடையாளம் எந்த இடத்தில் பேச வேண்டும் என்பதை அறிந்து பேசுவது தான். பொருளாதாரம் விஞ்ஞானம், திராவிட தத்துவம் இவை இரண்டையும் இணைத்து செய்வது எங்கள் அடையாளம், கடமை, பெருமை. இந்தியாவில் நீதித்துறை அவ்வளவு நம்பிக்கையாக இல்லை. எனினும், மாநில அரசின் கையில் இருக்கும் அதிகாரங்களைக் கொண்டு பொருளாதாரத்தில் முதல்வர் வழிகாட்டுதல் படி சில நல்ல மாற்றங்க...
தமிழக சட்டசபை பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று தொடங்குகிறது! பட்ஜெட்டில் இன்ப அதிர்ச்சிக்கு வாய்ப்பு!!

தமிழக சட்டசபை பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று தொடங்குகிறது! பட்ஜெட்டில் இன்ப அதிர்ச்சிக்கு வாய்ப்பு!!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள், தமிழக அரசியல்
தமிழக சட்டசபை பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று தொடங்குகிறது. 2022-2023-ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்கிறார். தமிழக சட்டசபை கூட்டம் நாளை காலை 10 மணிக்கு தொடங்குகிறது. கூட்டம் தொடங்கியதும் பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது. நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பட்ஜெட்டை தாக்கல் செய்து வாசிப்பார். அப்போது எம்.எல்.ஏ.க்கள் இருக்கைகள் முன்பாக வைக்கப்பட்டிருக்கும் டேப்லெட்டில் பட்ஜெட் விவரங்களை பார்க்க வசதி செய்து கொடுக்கப்பட்டுள்ளது. சட்டசபை யில் எல்லோரும் பார்க்கும் வகையிலும் பெரிய திரையில் ஒளிபரப்ப கம்ப்யூட்டர்கள் வைக்கப்பட்டுள்ளன. காகிதம் இல்லாத பட்ஜெட் என்பதால் சட்டசபையில் எம்.எல்.ஏ.க்களுக்கு பட்ஜெட் நகல் வழங்கப்படாது. நாளை தாக்கல் செய்யப்படும் பட்ஜெட்டில் புது அறிவிப்புகள் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. தி.மு.க. தேர்தல் அறிக்கையில் சொன்ன வாக்குற...
முதல் படியில் வெற்றி விரைவில் நீட் தேர்வில் இருந்து விலக்கு பெறுவோம் – முதல்வர் மு.க.ஸ்டாலின் நம்பிக்கை

முதல் படியில் வெற்றி விரைவில் நீட் தேர்வில் இருந்து விலக்கு பெறுவோம் – முதல்வர் மு.க.ஸ்டாலின் நம்பிக்கை

HOME SLIDER, NEWS, politics, செய்திகள், தமிழக அரசியல்
  விரைவில் நீட் தேர்வுக்கு விலக்கு கிடைக்கும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் நம்பிக்கை தெரிவித்துள்ளார். அமைச்சர் கே.என்.நேருவின் சகோதரர் கே.என்.ராமஜெயத்தின் மகன் விநீத்நந்தன்–அக்‌ஷயா ஆகியோரின் திருமண வரவேற்பு சென்னையில் நடைபெற்றது. இந்த திருமண விழாவில் பங்கேற்ற முதல்வர் மு.க.ஸ்டாலின் திருமணத்தை தலைமையேற்று நடத்திவைத்தார். தொடர்ந்து, மேடையில் பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின், ஏழை, எளிய, நடுத்தர மாணவர்களின் மருத்துவ கல்வி கனவை சிதைக்கும் நீட் தேர்வுக்கு விலக்க பெற வேண்டும் என சட்டமன்றத்தில் ஒரு மசோதாவை நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்பி வைத்தோம். பல மாதங்களாக அந்த மசோதான கிடப்பில் போடப்பட்டது. அதன் பின்னர் திடீரென ஒருநாள் அதனை திருப்பி அனுப்பி வைத்துவிட்டார்கள். இதையடுத்து உடனடியாக சட்டமன்றத்தை கூட்டி மீண்டும் தீர்மானம் நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்பி வைத்தோம். அது எந்த நிலையில் ...
பகவந்த் மானுக்கு வாழ்த்து தெரிவித்த முதல்வர் மு.க.ஸ்டாலின்!

பகவந்த் மானுக்கு வாழ்த்து தெரிவித்த முதல்வர் மு.க.ஸ்டாலின்!

HOME SLIDER, NEWS, politics, அரசியல், செய்திகள், தமிழக அரசியல்
தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:- இன்று பஞ்சாப் மாநில முதலமைச்சராகப் பொறுப்பேற்கும் பகவந்த் மானுக்கு என்னுடைய நெஞ்சார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். மொழியுரிமை மற்றும் இந்திய ஒன்றியத்தில் மாநிலங்களுக்கான உரிமைகள் குறித்துக் குரலெழுப்புவதில் தமிழ்நாட்டிற்கும் பஞ்சாபிற்கும் நெடிய வரலாறு உண்டு. பஞ்சாப் மாநிலத்தில் அமையவுள்ள புதிய அரசின் ஆட்சிக்காலம் வெற்றிகரமானதாக அமைய எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்....
வன்னியர் பொது சொத்துக்கள், ராமதாஸால், ஆக்கிரமிக்கப்படுகிறதா❓ விற்க்கபடுகிறதா❓ -வன்னியர் குல சத்திரியர் கூட்டியக்கம் தமிழக அரசுக்கு கடிதம்.

வன்னியர் பொது சொத்துக்கள், ராமதாஸால், ஆக்கிரமிக்கப்படுகிறதா❓ விற்க்கபடுகிறதா❓ -வன்னியர் குல சத்திரியர் கூட்டியக்கம் தமிழக அரசுக்கு கடிதம்.

HOME SLIDER, NEWS, கட்டுரை, செய்திகள், தமிழக அரசியல்
வன்னியர் கல்வி அறக்கட்டளையையும், அதைச் சார்ந்த கல்வி நிறுவனங்களையும், சொத்துக்களையும், மீட்டெடுத்து, தமிழ்நாடு வன்னியகுல சத்திரியர் பொது அறநிலைப் பொறுப்பாட்சிகள் மற்றும் நிலைக்கொடைகள்(பாதுகாத்தல் மற்றும் பேணி வருதல்) வாரியத்தில், 04.02.2019 அன்று, தமிழ்நாடு, அரசிதழில் வெளியிடப்பட்ட, சட்டம் 44/2018 ன் படி, இணைத்திட, கோரும் மனு. ****** விடுநர், இராம.நாகரத்தினம்-- தலைவர்-- வன்னியர் குல சத்திரியர் கூட்டியக்கம்.???? 9444068943. பெறுநர், மாண்புமிகு, தமிழக முதலமைச்சர் அவர்கள், தலைமைச் செயலகம், செயின்ட் ஜார்ஜ் கோட்டை, சென்னை.600009. பொருள்:- தமிழகம் உள்ளிட்ட, உலக வன்னியர்களிடம் பெறப்பட்ட, நிதியிலிருந்து, பதிவு செய்து, ஆரம்பிக்கப்பட்ட, வன்னியர் கல்வி அறக்கட்டளையும், அதனைச் சார்ந்த கல்வி நிறுவனங்களையும், சொத்துக்களையும், ஜனாதிபதியின் அங்கீகாரத்துடன், சட்டம் 44/2018 ன் அடிப்படையில்,...