மல்யுத்த வீராங்கனைகளின் பிரச்னை குறித்து பேச மறுப்பதேன்? – குஷ்பூவுக்கு மாதர் சங்கம் கேள்வி
மல்யுத்த வீராங்கனைகளின் பிரச்னை குறித்து பேச மறுப்பதேன்? - குஷ்பூவுக்கு மாதர் சங்கம் கேள்வி
பெண்களுக்கு பிரச்சனை என்றால் தேசிய மகளிர் ஆணையம் கேள்வி கேட்கும் என கூறிய பாஜக நிர்வாகி குஷ்பூ, மல்யுத்த வீராங்களைகளின் பிரச்னை குறித்து பேச மறுப்பதேன்? என அகில இந்திய ஜனநாயக மாதர் சங்கம் கேள்வி எழுப்பியுள்ளது.
திமுக நிர்வாகியான சிவாஜி கிருஷ்ணமூர்த்தி தன்னை பற்றி பொது மேடையில் அவதூறாக பேசியதாகி கூறி பாஜக நிர்வாகியும் தேசிய மகளிர் ஆணையத்தின் உறுப்பினராகவும் இருக்கும் குஷ்பூ தனது அலுவலகத்திலிருந்து செய்தியார்களுக்கு அளித்த பேட்டியில் கடுமையாக கண்டனம் தெரிவித்திருந்தார்.
பெண்களை பற்றி அவதூறாக பேச தந்தைக்கோ கணவருக்கோ உரிமை இல்லாத போது திமுக நிர்வாகியான சிவாஜி கிருஷ்ணமூர்த்தி ஒரு பொதுக்கூட்டத்தில் எப்படி பேச உரிமை இருக்கிறது ? என கேள்வி எழுப்பி கடுமையாக சாடினார்.
அ...









