TNPSC தேர்வு முறைகேடு விவகாரத்தில் தவறு செய்தது யாராக இருந்தாலும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.
சட்டப் பேரவையில் முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி விளக்கம்
அதிகரிக்கும் விவாகரத்து ஆர்.எஸ் எஸ் தலைவர் மோகன் கருத்துக்கு பிரபல நடிகை கடும் எதிர்ப்பு!
விவாகரத்து பெறுவது என்பது மிக அதிகமாகி வரும் நிலையில் இந்த விவாகரத்துக்கு கல்வியும் வசதியும் தான் காரணம் என்று ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் அவர்கள் கூறியுள்ளார்
திருமண உறவுகளில் விவாகரத்து ஏற்படுவது என்பது படித்தவர்கள் மற்றும் வசதி படைத்தவர்களின் மத்தியில் மட்டும் தான் என்றும், ஏழை எளியவர்கள் மற்றும் கல்வி கற்காதவர்கள் விவாகரத்து செய்வதில்லை என்றும் ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் கூறியிருந்தார்
ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத்தின் இந்த கருத்து குறித்து தனது டுவிட்டரில் தெரிவித்துள்ள நடிகை சோனம் கபூர் ”அறிவுள்ள எந்த மனிதரும் இப்படிப் பேசுவார்களா? இந்த கருத்து முட்டாள்தனமான பிற்போக்கான கருத்து” என காட்டமாக விமர்சனம் செய்துள்ளார்
ஆர்எஸ்எஸ் தலைவரின் திருமணம் விவாகரத்து கு...
நிர்பயா கொலை குற்றவாளிகளை மார்ச் 3-ம் தேதி தூக்கிலிட கோர்ட் உத்தரவு!
டெல்லி மருத்துவ மாணவி நிர்பயா பாலியல் வன்கொடுமை வழக்கில் அக்சய் தாகூர், பவன் குப்தா, முகேஷ் சிங், வினய் சர்மா ஆகியோருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது. கடந்த ஜனவரி 22ம் தேதி தூக்கு தண்டனை நிறைவேற்றப்படவிருந்த நிலையில், பின்னர் பிப்ரவரி 1ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. ஆனால் குற்றவாளிகள் தரப்பில் புதிய மனுக்களை தாக்கல் செய்ததால் தண்டனையை நிறைவேற்றுவதில் சட்ட சிக்கல் ஏற்பட்டது.
இந்நிலையில் தண்டனையை நிறைவேற்றுவதற்கான புதிய தேதியை அறிவிக்கக்கோரி, திகார் சிறை நிர்வாகம் மற்றும் நிர்பயாவின் பெற்றோர் சார்பில் டெல்லி பாட்டியாலா ஹவுஸ் நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
இந்நிலையில் நிர்பயா குற்றவாளிகளான 4 பேரையும் மார்ச் 3-ந்தேதி காலை 6 மணிக்கு தூக்கிலிட டெல்லி நீதிமன்றம் உத்தரவிட்டுள...
குறைந்த செலவில் எடுக்கப்படும் 'மரிஜுவானா' போல தரமான படங்கள் வெற்றியடைய வேண்டும் - இயக்குனர் மிஸ்கின்
3rd Eye கிரியேஷன்ஸ் சார்பில் எம்.டி.விஜய் தயாரிப்பில், எம்.டி.ஆனந்த் இயக்கி 'அட்டு' நாயகன் ரிஷி ரித்விக், நாயகி ஆஷா நடிப்பில் உருவாகியுள்ள 'மரிஜுவானா' படத்தின் இசை மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழா காமராஜர் அரங்கத்தில் நடைபெற்றது. இந்த விழாவிற்கு வந்திருந்த சிறப்பு விருந்தினர்கள் மற்றும் படக்குழுவினர்கள் பேசியதாவது:
தயாரிப்பாளர் எம்.டி.விஜய் பேசும்போது,
'மரிஜுவானா' என்ற இந்த படத்தின் பெயரைக் கூறியதும் அப்படி என்றால் என்ன என்று கேட்டார்கள். இது கஞ்சா என்பதன் அறிவியல் பெயர் தான் 'மரிஜுவானா:.
கஞ்சா போன்ற போதை பொருட்களைப் பயன்படுத்துவதால் பள்ளி குழந்தைகளும், இளைஞர்களும் எந்தளவு பாதிக்கப்படுகிறார்கள் என்பதை இப்படத்தில் கூறியிருக்கிறோம். இப்படத்தின் கதையை பல முன்னணி நாயகர்கள...
ஏலியனோடு மோதுகிறாரா சிவகார்த்திகேயன் "அயலான்" கலாட்டா!
ஹீரோ படத்தை தொடர்ந்து சிவகார்த்திகேயன் தற்போது இன்று நேற்று நாளை பட இயக்குனர் ரவிக்குமார் இயக்கத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக ரகுல் பிரீத் சிங் நடிக்கிறார். கருணாகரன், யோகி பாபு உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள்.
அறிவியல் சார்ந்த படமாக உருவாகி வரும் இப்படத்தை 24 ஏ.எம்.ஸ்டூடியோ சார்பில் ஆர்.டி.ராஜா தயாரிக்கிறார். பெயரிடப்படாமல் எஸ்.கே.14 என்று அழைக்கப்பட்டு வந்த இப்படத்திற்கு ‘அயலான்’ என்று பெயர் வைத்து சமீபத்தில் மோஷன் போஸ்டரை வெளியிட்டார்கள்.
சிவகார்த்திகேயனின் பிறந்தநாளை முன்னிட்டு இன்று அயலான் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.
ஏலியன் போன்ற உருவம் ஒரு பக்கமும், இன்னொரு பக்கம் சிவகார்த்திகேயனும் இருப்பது போன்ற இந்த போஸ்டர் ரசிகர்களை கவர்ந்து சமூ...
தமிழர்களை ஈவு இரக்கமற்ற கொடூர கொலைகாரர்களாக சித்தரிக்கும் படத்துக்கு தேசியவிருது!
தமிழ் சினிமாவின் சாபக்கேடு நல்ல திரைக்கதைகளோடு காத்திருக்கும் திறமையாளர்களை கண்டுகொள்வதில்லை. அதே நேரம் மத்திய மாநில அரசுகளுக்கு ஏற்றவாறு "இணக்கமாக" படம் எடுப்பவர்களுக்கு மாநில விருது, தேசிய விருது மானியம் என பல சலுகைகளை வாரி வழங்கும் கேவலம்தான் கால காலமாக நடந்து வருகிறது.
நம்மூர் ஏ.ஆர்.ரஹ்மான் ஆஸ்கர் விருதுக்கு தகுதி பெற்றார் என்றதும் அதன் உள் அரசியல் தெரியாமல் இந்தியாவே கொண்டாடியது.
நிஜத்தில் ரஹ்மான் இசையமைத்த ஸ்லம் டாக் மில்லினியர் படத்தில் இந்தியர்களை எந்தளவுக்கு தரம் தாழ்த்தி காட்ட முடியுமோ அந்தளவுக்கு கேவலப்படுத்தி அருவருப்பாக சித்தரித்து வேடிக்கை மனிதர்களாக காண்பித்திருப்பார்கள்.
இந்தியர்களை அத்தனை கேவலமாக சித்தரித்த அந்த படத்தில் பணியாற்றியதால் தான் ரஹ்மான் ஆஸ்கர் வ...
நடிகர் போஸ் வெங்கட் தொலைக்காட்சி தொடர்களில் அறிமுகமாகி தமிழ் சினிமாவில் வில்லன், குணசித்திர வேடங்களில் நடித்து, தனக்கென ஒரு தனித்த இடத்தை பிடித்திருப்பவர். தற்போது முதல் முறையாக வெள்ளித்திரையில் இயக்குநராக அறிமுகமாகிறார். புதுமுகங்கள் நடிப்பில் “கன்னி மாடம்” எனும் படத்தை இயக்கியுள்ளார். சில நாட்கள் முன் வெளியான இப்படத்தின் டிரெய்லர் அனைத்து தரப்பிலும் பாராட்டு பெற்றது. படத்தின் வெளியீட்டு வேலைகள் நடந்து வரும் சூழலில் இன்று இப்படத்தின் இசை வெளியீடு கோலகலமாக நடைபெற்றது. விழாவில் கலந்து கொண்ட ஒவ்வொரு ஆளுமையையும் அவர்களின் அட்டகாச அறிமுகத்துடன் படத்தில் அவர்களது பங்கு குறித்தும் கூறி, இந்நிகழ்வை வெகு அற்புதமாக தொகுத்து வழங்கினார் இயக்குநர் போஸ் வெங்கட்..
நடிகர் ரோபோ சங்கர் கூறியதாவது...
நான் பல இசை விழாக்களில் பங்கு கொண்டிருக்கிறேன் ஆனால் இந்த மேடை எனக்க...
மே விடுமுறையை குறி வைக்கும் எஸ்.ஜே.சூர்யாவின் பொம்மை!
மான்ஸ்டர்' படத்துக்கு பிறகு எஸ்.ஜே.சூர்யா - பிரியா பவானி சங்கர் இணைந்து ‘பொம்மை’ என்ற படத்தில் நடித்து வருகிறார்கள். இந்த படத்தை ராதா மோகன் இயக்க, யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
மான்ஸ்டர் வெளியாகி வெற்றி பெற்ற பார்முலாபடி இந்த படத்தையும் பள்ளி விடுமுறை நேரத்தில் மே மாதம் வெளியிட திட்டம் வைத்திருக்கிறார்கள்....
பிரதமர் மோடியின் உதவியை எதிர்பார்க்கிறேன் - டெல்லி முதல்வராகப் பதவியேற்ற கேஜ்ரிவால் பேச்சு !
மனிஷ் சிசோடியா, சத்யேந்தர் ஜெயின், கோபால் ராய், கைலாஷ் கெலாட், இம்ரான் உசைன், ராஜேந்திர கவுதம் ஆகியோர் அமைச்சர்களாக பதவியேற்றனர்.
*பதவியேற்பு விழா, டில்லி ராம்லீலா மைதானத்தில் நடந்தது. கெஜ்ரிவால் மற்றும் அமைச்சர்களுக்கு, டில்லி துணை நிலை கவர்னர் அனில் பைஜால் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.
பதவியேற்ற பின் மக்கள் முன்னிலையில் பேசிய கெஜரிவால், 'டெல்லியின் மகன் முதல்வராக பதவியேற்றுள்ளதால் மக்கள் கவலைப்படத் தேவையில்லை.
கட்சி, சாதி, மத பேதமின்றி தில்லி மக்களுக்காக அடுத்த 5 ஆண்டுகளுக்கு பாடுபடுவேன்.
நாட்டுக்கே டெல்லி ஒரு உதாரணமாக இருக்கிறது. ஆம் ஆத்மி கட்சியின் வெற்றி ஒவ்வொரு டெல்லி வாசிக்கும் கிடைத்த வெற்றி. தில்லியில் உள்ள 2 கோடி மக்களும் எனது குடும்பத்தினர்.
டெல்லி ...
இலங்கையின் ராணுவ தளபதியாக ஷவேந்திர சில்வா கடந்த ஆண்டு நியமிக்கப்பட்டார். இவர், கடந்த 2009-ம் ஆண்டு நடந்த இறுதிக்கட்ட போரின்போது பல்வேறு போர்குற்றங்களில் ஈடுபட்டதாக ஐ.நா. மனித உரிமை ஆணையம் குற்றம் சாட்டி இருந்தது. போரின்போது இவர் இலங்கையின் வடக்கு பிராந்தியத்தில் இயங்கி வந்த ராணுவப்பிரிவு ஒன்றுக்கு தளபதியாக செயல்பட்டு வந்தார்.
இந்த நிலையில் ஷவேந்திர சில்வா மீதான போர்குற்றங்களை முன்வைத்து, அவர் தங்கள் நாட்டுக்குள் நுழைய அமெரிக்கா தடை விதித்து உள்ளது. இது தொடர்பாக அமெரிக்காவின் வெளியுறவு மந்திரி மைக் பாம்பியோ வெளியிட்ட அறிக்கையில், ‘ஐ.நா. மற்றும் பிற அமைப்புகளால் ஷவேந்திர சில்வா மீது சுமத்தப்பட்டுள்ள மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுகள் அனைத்தும் தீவிரமானவையும், நம்பகமானவையும் ஆகும்’ என்று குறிப்பிட்டு உள்ளார்.
போர்குற்றச்சாட்டுகள் காரணமாக, ஷவேந்திர சில்வாவை ராணுவ தளபதியாக நி...