செவ்வாய்க்கிழமை, நவம்பர் 17
Shadow

HOME SLIDER

நிவின் பாலி நடிப்பில் “மாஹாவீர்யார்” படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியானது !

நிவின் பாலி நடிப்பில் “மாஹாவீர்யார்” படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியானது !

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
    புகழ்பெற்ற எழுத்தாளர் M.முகுந்தன் அவர்களின் கதையிலிருந்து தழுவி உருவாக்கப்பட்ட, அப்ரித் ஷைனி அவர்களின் “மஹாவீர்யார்” திரைப்படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் இன்று வெளியிடப்பட்டது. நிவின் பாலி மற்றும் ஆஷிஃப் அலி முதன்மை பாத்திரங்களில் நடிக்கும் இப்படம், ஃபேண்டஸி, டைம் ட்ராவல், சட்ட நுணுக்கங்கள், சட்ட புத்தகங்களை மையமாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. மிகப்பெரும் பொருட்செலவில் உருவாகியுள்ள இப்படம் ரசிகர்களுக்கு ஒரு புதுமையான பேரனுபவமாக இருக்குமென்று திரைப்படக்குழு உறுதியளித்துள்ளது. Pauly Jr Pictures நிறுவனம் சார்பில் நிவின் பாலி மற்றும் Indian Movie Makers சார்பில் PS சம்னாஸ் இணைந்து இப்படத்தை தயாரிக்கின்றனர். கொச்சியில் நடைபெற்ற விழாவினில் எழுத்தாளர் M.முகுந்தன் படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டரை வெளியிட்டார். திரைக்கதை ஆசிரியர் மற்றும் இயக்குநர் அப்ரித் ஷைனி, ஆஷிஃப...
“காத்து வாக்குல ரெண்டு காதல்” திரைப்படத்தின் டீசர் !

“காத்து வாக்குல ரெண்டு காதல்” திரைப்படத்தின் டீசர் !

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
  *பெரும் எதிர்பார்ப்புடன் வெளியானது “காத்து வாக்குல ரெண்டு காதல்” திரைப்படத்தின் டீசர் !* இந்த ஆண்டில் ரசிகர்களிடம் பலத்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் முக்கியமான படங்களின் ஒன்றான “காத்து வாக்குல ரெண்டு காதல்” படத்தின் அழகான டீசர் சற்று முன் இணையத்தில் வெளியாகி வைரலாக பரவி வருகிறது. தமிழ் திரையுலகில் மாறுபட்ட களங்களில் தரமான படைப்புகளை வழங்கி வரும் செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோ நிறுவனம் வழங்க, இயக்குநர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி, நயன்தாரா,சமந்தா என தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திர கூட்டணி இணைந்து நடித்திருக்கும் படம் “காத்து வாக்குல ரெண்டு காதல்”. ‘நானும் ரௌடி தான்’ படத்திற்கு பிறகு இயக்குநர் விக்னேஷ் சிவன் மீண்டும் ரொமாண்டிக் காமெடி ஜானரில் இப்படத்தை இயக்கியுள்ளார். இப்படம் அறிவிக்கப்பட்ட நாளிலிருந்தே, ரசிகர்களிடம் எக்கசக்க எதிர்பார்ப்பு நிலவி...
சைக்கோ த்ரில்லர் பாணியில் உருவாகும் கருப்புகண்ணாடி!

சைக்கோ த்ரில்லர் பாணியில் உருவாகும் கருப்புகண்ணாடி!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள்
  சைக்கோ த்ரில்லர் பாணியில் உருவாகும் புதிய திரைப்படம் “கருப்பு கண்ணாடி” ! PSR Film Factory  தயாரிப்பாளர் PSR பிரதீப் தயாரிப்பில் அறிமுக இயக்குனர் நியூட்டன்.ஜி இயக்கும் 'கருப்பு கண்ணாடி' படத்தின் படப்பிடிப்பு, இன்று சென்னை, சைதாப்பேட்டை லைட்ஸ் ஆன் ஸ்டுடியோவில் இனிதே துவங்கியது. ‘கருப்பு கண்ணாடி' என்று பெயரிடப்பட்டுள்ள இப்படம் சைக்கோ த்ரில்லர் பாணியில்,  உருவாகிறது. இந்த படத்தின் படப்பிடிப்பை இயக்குனர் சுப்ரமணிய சிவா கிளாப் அடித்து துவக்கி வைத்தார். கருப்பு கண்ணாடி திரைப்படத்தில் நடிகர் தணிகை, சுப்ரமணிய சிவா, துர்கா, ஜிஜினா, ராஜா சிம்ஹா, காகராஜ், பாடகர் வேல்முருகன், மாப்பு ஆண்ட்ரூஸ், ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கவுள்ளனர். ஒளிப்பதிவாளராக சம்சாத், இசையமைப்பாளராக சித்தார்த்தா பிரதீப், ஆகியோர் பணிபுரியவுள்ளனர்....
22 ஆண்டுகால விசுவாச ஊழியருக்கு பென்ஸ் காரை பரிசளித்த தொழிலதிபர்!

22 ஆண்டுகால விசுவாச ஊழியருக்கு பென்ஸ் காரை பரிசளித்த தொழிலதிபர்!

HOME SLIDER, NEWS, செய்திகள்
  தொழிலதிபர் ஒருவர் தன் நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியருக்கு 1 கோடி ரூபாய் மதிப்புள்ள பென்ஸ் காரை பரிசளித்து அசத்தியுள்ளார். கேரள மாநிலத்தைச் சேர்ந்த ஏ.கே.ஷாஜி என்பவர் மைஜி என்ற மார்க்கெட்டிங் நிறுவனத்தை நடத்தி வருகிறார். இவரது நிறுவனத்தில் சுமார் 22 ஆண்டாக பணியாற்றி வரும் அனிஷ் தலைமை வணிக மேம்பாட்டு அதிகாரியாக இருந்து வருகிறார். இந்நிலையில், அனிஷின் 22 ஆண்டுகால விசுவாசத்திற்கு பரிசாக 1 கோடி ரூபாய் மதிப்புள்ள மெர்சிடிஸ் பென்ஸ் கார் ஒன்றை பரிசாக அளித்துள்ளார். இதுதொடர்பாக ஷாஜி வெளியிட்ட டுவிட்டர் பதிவில், கடந்த 22 ஆண்டாக எனக்கு ஒரு வலுவான தூணாக இருக்கிறீர்கள். தற்போது புதிய பயணக் கூட்டாளியை நீங்கள் நேசிப்பீர்கள் என நம்புகிறேன் என தெரிவித்துள்ளார். மேலும், அனீஷ் குடும்பத்துக்கு அளித்த காருடன் எடுத்த புகைப்படத்தையும் பதிவிட்டுள்ளார். ஏற்கனவே, ஷாஜி கடந்த இரு ஆண்டுக...
ட்ரோன்களை இறக்குமதி செய்வதற்கு மத்திய அரசு தடை!

ட்ரோன்களை இறக்குமதி செய்வதற்கு மத்திய அரசு தடை!

HOME SLIDER, NEWS, politics, அரசியல், செய்திகள்
  வெளிநாடுகளில் இருந்து ட்ரோன்களை இறக்குமதி செய்வதற்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது. மேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ் உள்நாட்டிலேயே ட்ரோன்கள் உற்பத்தியை ஊக்குவிக்கும் வகையில் இந்த தடை பிறக்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து மத்திய விமான போக்குவரத்து அமைச்சகம் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், ராணுவ பயன்பாட்டிற்காக இறக்குமதி செய்வதற்கு விதிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே நேரம் ட்ரோன்களுக்கான உதிரி பாகங்களை இறக்குமதி செய்வதற்கு எந்த அனுமதியும் பெறத் தேவையில்லை என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது....
மாதவனின் ராக்கெட்ரி பட அப்டேட் விரைவில்!

மாதவனின் ராக்கெட்ரி பட அப்டேட் விரைவில்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
  இஸ்ரோ விஞ்ஞானியாக பணியாற்றியவர் நம்பி நாராயணன். திறமையான விஞ்ஞானியாக பணியாற்றிய இவரை கடந்த 1994ம் ஆண்டு தேசதுரோக வழக்கில் காங்கிரஸ் அரசு கைது செய்தது. இதை எல்லாம் தவறு என நிரூபித்து அவர் வெளியேறி விட்டார். அவரின் வாழ்க்கை கதையை மாதவன் படமாக இயக்கி  அவரே நடித்து வருகிறார்.   இந்நிலையில் விரைவில் இந்த படம் குறித்து அப்டேட் வரும் என மாதவன் சொல்லி இருக்கிறார். அதனால் படம் வெளியாகும் தேதி அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கலாம்....
லிபியா பிரதமரை கொல்ல முயற்சி: காரில் சென்றபோது துப்பாக்கிச்சூடு!

லிபியா பிரதமரை கொல்ல முயற்சி: காரில் சென்றபோது துப்பாக்கிச்சூடு!

HOME SLIDER, NEWS, politics, அரசியல், உலக செய்திகள், செய்திகள்
லிபியா நாட்டின் பிரதமராக அப்துல் ஹமீத் அல் திபய்பா (வயது 62) உள்ளார். இவர் நேற்று தலைநகர் திரிபோலியில் காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது மர்ம நபர்கள் அவர் கார் மீது சரமாரியாக துப்பாக்கிச்சூடு நடத்தி விட்டு தப்பினர். இந்த கொலை முயற்சியில் அவர் அதிர்ஷ்டவசமாக காயங்கள் இன்றி உயிர் தப்பினார். இது அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. லிபியாவில் உள்நாட்டுப்போர் நடந்து வருகிறது. அங்கு அரசியல் குழப்பமும் நிலவுகிறது....
கீழடியில் 8ம் கட்ட அகழாய்வு பணி- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்கிறார்!

கீழடியில் 8ம் கட்ட அகழாய்வு பணி- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்கிறார்!

Assembly news, HOME SLIDER, NEWS, politics, அரசியல், செய்திகள், தமிழக அரசியல்
சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே உள்ள கீழடியில், மத்திய அரசின் தொல்லியல் துறை சார்பில் கடந்த 2015-ம் ஆண்டு முதல் 3 கட்டங்களாக அகழாய்வு பணிகள் நடைபெற்று முடிந்துள்ளன. அதன் பின்னர் 2018-ம் ஆண்டு முதல் தமிழக தொல்லியல் துறை சார்பில் 4 கட்டங்களாக அகழாய்வுகள் நடந்துள்ளன. இங்கு கிடைத்த தொல்பொருட்கள், உலக அரங்கில் தமிழர்களின் பெருமையை பறை சாற்றுகின்றன.. இதுவரை நடந்த 7 கட்ட அகழாய்விலும் சேர்த்து மொத்தம் 18 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொருட்கள் எடுக்கப்பட்டுள்ளன. இந்தநிலையில் கீழடி மற்றும் சுற்றுப்பகுதிகளில் 8-ம் கட்ட அகழ்வாராய்ச்சி பணிகளை தமிழக தொல்லியல் துறை மேற்கொள்ள இருக்கிறது. இந்த பணிகளை சென்னையில் இருந்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி மூலமாக இன்று(வெள்ளிக்கிழமை) காலையில் தொடங்கி வைக்கிறார். இதற்காக கீழடியில் அலங்காரப் பந்தல் அமைக்கும் பணி நடைபெற்றுள்ளது. அகழாய்...
அவினாசி பகுதியில் வைக்கப்பட்டுள்ள லஞ்ச பேனரால் பரபரப்பு!

அவினாசி பகுதியில் வைக்கப்பட்டுள்ள லஞ்ச பேனரால் பரபரப்பு!

HOME SLIDER, NEWS, செய்திகள்
அரசின் நலத்திட்டங்கள் மற்றும் சேவைகளை பெறுவதற்கு கிராம நிர்வாக அதிகாரியிடம் சான்று பெற்ற பின்பே விண்ணப்பிக்க முடியும். இதனால் தினந்தோறும் அந்தந்த கிராம நிர்வாக அலுவலகங்களுக்கு சான்றிதழ் தொடர்பாக பொதுமக்கள் செல்கிறார்கள். இந்த நிலையில் திருப்பூர் மாவட்டம் அவினாசி ஒன்றியம் செம்பியநல்லூர் பகுதியில் அறிவிப்பு பேனர் ஒன்றை யாரோ வைத்துள்ளனர். அதுவும் முக்கிய அறிவிப்பு என்று அந்த பேனரின் தலைப்பில் பெரிய எழுத்துகளில் அச்சிட்டு, அதற்கு கீழ் மணியக்கார அம்மாவிடம்சென்று யாரும் வாக்குவாதம் செய்ய வேண்டாம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அதன் பின்னர் ஒவ்வொரு சான்றுக்கும் எவ்வளவு லஞ்சமாக கொடுக்க வேண்டும் என்று தொகை விவரம் அதில் எழுதப்பட்டுள்ளது. இந்த தொகையை கொடுத்தால் மட்டுமே வேலை நடக்கும். மீறி ஏதாவது கேட்டால் உங்கள் மீது போலீசில் புகார் கொடுக்கப்படும் என்றும் அந்த பேனரில் எழுதப்பட்டுள்ள...
தோனி குறித்து அஸ்வின் புகழாரம்!

தோனி குறித்து அஸ்வின் புகழாரம்!

HOME SLIDER, NEWS, sports, செய்திகள், விளையாட்டு செய்திகள்
ஐ.பி.எல். 2022 டி20 தொடர் தொடங்க உள்ள நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை  எம் எஸ் தோனி வழிநடத்தி செல்வது குறித்து சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் தெரிவித்துள்ளதாவது : ஐ.பி.எல்.லில் மிகவும் வெற்றிகரமான கேப்டன்களில் ஒருவராக தோனி இருந்தார். கடந்த சீசன் உள்பட  சென்னை சூப்பர் கிங்ஸ் 4 பட்டங்களை கைப்பற்ற தோனி அணியை வெற்றிகரமாக வழி நடத்தி உள்ளார். சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக பல சந்தர்ப்பங்களில் முக்கியமான பினிஷிங் ஷாட்கள் விளையாடியதன் மூலம் கடந்த காலங்களில் தோனி அணியின் மன உறுதியை உயர்த்த உதவியுள்ளார். அவரது கேப்டன் திறமை குறித்து பேசுபவர்கள் இது குறித்து  சரியாக பேசுவதில்லை. ஐபிஎல் வரலாற்றில் சென்னை சூப்பர் கிங்ஸை மிகவும் நிலையான அணியாக மாற்றினார். தோனியின் அமைதியான மற்றும் கூட்டு அணுகுமுறை சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு பல அதிசயங்களை நிகழ்த்தியிருக்கிறது. இவ்வாறு அவர் ...