ஏவுகணை சோதனைக்கு பின்னால் உலக நாடுகளில் பணம் கொள்ளையடிக்கும் வடகொரியாவின் திருட்டுத்தனம்!
ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் தீர்மானங்களை மீறி வடகொரியா தொடர்ச்சியாக ஏவுகணைகளை சோதித்து வருகிறது.
கடந்த ஒரு மாதத்தில் மட்டும் வடகொரியா 7 முறை ஏவுகணை சோதனையை நடத்தி அதிரவைத்தது.
சர்வதேச நாடுகளின் பொருளாதார தடை மற்றும் கொரோனா கட்டுப்பாடுகளின் எதிரொலியால்
வடகொரியாவின் பொருளாதாரம் கடும் சரிவை சந்தித்துள்ளபோதும் அந்த நாடு ஏவுகணை சோதனையில் கவனம் செலுத்துவது வியப்பாகவே உள்ளது.
இந்த நிலையில் வடகொரியா பல நாடுகளின் நிதிநிறுவனங்கள், கிரிப்டோகரன்சி பரிமாற்ற நிறுவனங்கள் உள்ளிட்டவற்றின் மீது சைபர் தாக்குதல் நடத்தி கோடிக்கணக்கில் பணத்தை திருடி அதை கொண்டு ஏவுகணை மற்றும் அணுஆயுத திட்டத்தை செயல்படுத்தி வருவதாக ஐ.நா. கண்காணிப்பு குழு தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக அந்த குழு வெளியிட்டுள...
இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத் என்றாலே பெரும்பாலானவர்களுக்கு வியப்பு தான். அவரைப் பற்றி தெரிந்து கொள்ள இன்னும் ஏராளமான விஷயங்கள் இருக்கிறது.
பிப்ரவரி 6 ஆம் தேதி, இங்கிலாந்து ராணி அரியணையில் அமர்ந்து, ஆட்சி செய்யத் தொடங்கி 70 ஆண்டுகள் நிறைவடைகிறது.
இவருடைய ஆட்சி, நாட்டை பல்வேறு முறையில் முன்னேற உதவியதோடு மட்டுமல்லாமல், ஒவ்வொரு முறை தத்தளித்த போதும் எப்படி ஆட்சி செய்ய வேண்டும் என்பதற்கான உதாரணமாகவும் செயல்பட்டு வருகிறது.
நினைவுகள் எவ்வளவு அழகானவை என்பது அரசிக்கும் பொருந்தும். இரண்டாம் எலிசபெத் ராணி, தனது 70 ஆண்டு கால ஆட்சியை முன்னிட்டு,
ஆட்சியை நினைவு கூறும் முக்கிய நினைவுச் சின்னங்களைப் பார்த்துக் கொண்டிருக்கும் போது ஒரு நாய் குறுக்கிட்டது.
நினைவுச்சின்னங்களில் கலைப்பொருட்கள், குழந்தைகள் அனுப்பிய அட்டைகள் மற்றும் பொதுமக்கள் அரசியை வாழ்த்திய செய்திகள் ஆகியவை இருந...
தேர்தல் அலுவலர்கள் வழிகாட்டு நெறிமுறைகளை முறையாக பின்பற்றாததன் காரணமாக, தூத்துக்குடி மாவட்டம் கடம்பூர் பேரூராட்சியில் தேர்தலை ரத்து செய்வதாக மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
இதுதொடர்பான அறிக்கையில், தூத்துக்குடி மாவட்டம் கடம்பூர் பேரூராட்சிக்கான தேர்தல் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் மீது ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளுமாறும், தூத்துக்குடி மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள கடம்பூர் பேரூராட்சியில் 12வார்டுகளுக்கு நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு 33 பேர் மனுத்தாக்கல் செய்திருந்தனர். கடந்த 5ந்தேதி நடைபெற்ற வேட்புமனு பரிசீலனையில் 1வது வார்டில் திமுக சார்பில் போட்டியிட்ட ஜெயராஜ், 2வது வார்டில் தி...
ஐ.பி.எல். 2022 சீசனுக்கான மெகா ஏலம் வரும் 12, 13-ம் தேதி அன்று நடைபெற உள்ளது.
மூத்த வீரர்கள், அதிரடி பேட்ஸ்மேன்கள், அசத்தல் பவுலர்கள், சிறந்த ஆல் ரவுண்டர்கள், இளம் வீரர்கள் என பலர் தங்கள் பெயரை பதிவுசெய்துள்ளனர்.
இதற்கிடையே, தமிழக வீரரான தினேஷ் கார்த்திக் கடந்த சீசனில் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணிக்காக விளையாடினார். தற்போது அங்கிருந்து விடுவிக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில், நடப்பு ஐ.பி.எல். சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியுடன் இணைந்து விளையாட விரும்புவதாக தினேஷ் கார்த்திக் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய தினேஷ் கார்த்திக், சென்னையை சேர்ந்தவன் நான்.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாட வாய்ப்பு கிடைத்தால் அது சிறப்பானதாக இருக்கும். எந்த அணியில் விளையாட வாய்ப்பு வந்தாலும் அந்த அணிக்காக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவேன் என தெரிவித்துள்ளார்....
இலங்கை கடற்படையால் தமிழக மீனவர்களின் படகுகள் பறிமுதல் செய்யப்பட்டு இலங்கை அரசின் கட்டுப்பாட்டில் இருந்தது. இந்த படகுகளை இலங்கை அரசு அரசுடைமையாக்கி தங்கள் வசம் வைத்து இருந்தது.
இந்த படகுகளை விடுவிக்க வேண்டும் என மீனவர் சங்கத்தினர் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர். தமிழக அரசியல் கட்சிகளும் அதனை வலியுறுத்தின.
இதற்கிடையே, இந்த படகுகளை ஏலம் விடும் பணி இன்று தொடங்கியது. முதல் கட்டமாக 65 படகுகள் இன்று ஏலம் விடப்படுகின்றன.
இலங்கையில் உள்ள காரை நகரில் ஏலம் விடுவதற்கான பணிகளை இலங்கை அரசு மேற்கொண்டது. அடுத்தடுத்த நாட்களில் மற்ற படகுகளும் ஏலம் விடப்படுகின்றன.
வரும் 11-ம் தேதிக்குள் மீதமுள்ள அனைத்து படகுகளையும் ஏலத்தில் விட இலங்கை அரசு முடிவு செய்துள்ளது.
இந்நிலையில், இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்ட தமிழக மீனவர்களின் படகுகளை ஏலம் விடும் முயற்சிகளை மத்திய அரசு தடுத்து நிறுத்த வ...
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான விஜய் தற்போது இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் பீஸ்ட் படத்தில் நடித்துள்ளார்.
இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை பூஜா ஹெக்டே நடிக்கிறார். மேலும், யோகி பாபு, செல்வராகவன் உள்ளிட்ட திரை பிரபலங்கள் பலரும் நடித்துள்ளனர்.
அனிருத் இசையமைத்து வரும் இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. பீஸ்ட் படத்தின் படப்பிடிப்பு முழுவதும் முடிவடைந்துவிட்ட நிலையில் விரைவில் இந்த படத்தின் டீசர் மற்றும் டிரைலர் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில், பீஸ்ட் படத்தின் புதிய அப்டேட் இன்று மாலை 6 மணிக்கு வெளியிட இருப்பதாக படக்குழுவினர் அறிவித்தனர்.
அதன்படி 6 மணிக்கு பீஸ்ட் படத்தின் பர்ஸ்ட் சிங்கள் புரமோவை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். முழு பாடல் பிப்ரவரி 14 ஆம் தேதி வெளியாக இருக்கிறது.
https://youtu.be/-aVdxDDrcTc...
உக்ரைன் மீது தாக்குதல் நடத்தினால் பதிலடி கொடுக்கப்படும் - ரஷ்யாவுக்கு அமெரிக்கா எச்சரிக்கை!
உக்ரைன் மீதான ரஷ்யாவின் ராணுவ தாக்குதல் திட்டம் குறித்து அமெரிக்க அதிபரின் வெள்ளை மாளிகை தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜேக் சல்லிவன் தெரிவித்துள்ளதாவது:
ரஷ்யா உக்ரைனை எந்த நாளும் ஆக்கிரமிக்கக் கூடும். உக்ரைன் மீதான முழு அளவிலான படையெடுப்பால் அதிக மனித உயிர் இழப்பு ஏற்படும்.
ஆனால் எங்கள் தயாரிப்புகள் மற்றும் எங்கள் பதிலின் அடிப்படையில், ரஷ்யாவிற்கும் அதிக ராணுவ இழப்பு ஏற்படும் என்று நாங்கள் நம்புகிறோம்.
உக்ரைன் தலைநகர் கெய்வை விரைவாகக் கைப்பற்றுவதற்கு ரஷ்யா முயலும் போது 50,000 பேர் வரை உயிரிழக்கக்கூடும் என்றும் அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜேக் மறைமுகமாக குறிப்பிட்டுள்ளார்....
கொரோனாவின் உருமாறிய வடிவமான ஒமைக்ரான் வைரஸ் பரவலால் கடந்த டிசம்பர் இறுதியில் இருந்து இந்தியாவில் தினசரி பாதிப்பு மீண்டும் உயரத் தொடங்கியது.
தினசரி பாதிப்பு 6 ஆயிரத்தில் இருந்து நாள்தோறும் படுவேகமாக உயர்ந்தது.
முதல் 2 அலைகளை விட 6 மடங்கு வேகத்தில் தினசரி பாதிப்பு அதிகரித்ததால் சுகாதாரத்துறையினர் அதிர்ச்சி அடைந்தனர்.
அதே நேரம் நாடு முழுவதும் மக்களுக்கு 160 கோடி டோசுக்கும் மேல் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டிருந்ததால் உயிரிழப்புகள் குறைவாகவே இருந்தது.
மேலும் நோயின் தீவிரமும் குறைவாகவே காணப்பட்டதால் தொற்று பாதிப்புக்கு உள்ளானவர்களில் பெரும்பாலானோர் வீட்டு தனிமையிலேயே குணம் அடைந்தனர்.
இதனால் 3-ம் அலை குறுகிய காலத்தில் உச்சம் அடைந்தது.
கடந்த மாதம் 21-ந்தேதி 3.47 லட்சம் பேர் பாதிப்புக்குள்ளானதே இந்த அலையின் உச்சமாக சுகாதாரத்துறையினர் அறிவித்தனர்.
அதன் பிறகு தினசரி பாதிப்பு நாள்தோறு...
கேரளாவில் கொரோனா பரவல் அதிகரித்ததால் அங்கு பள்ளி, கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டது.
இதையடுத்து பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடத்தப்பட்டன.
இந்த நிலையில் மாநிலம் முழுவதும் கொரோனா பரவல் குறைய தொடங்கியது. கடந்த 24 மணி நேரத்தில் மாநிலம் முழுவதும் 26 ஆயிரத்து 729 பேருக்கு மட்டுமே பாதிப்பு ஏற்பட்டது.
கேரளாவில் கொரோனா தொற்று குறைந்ததால் அங்கு பள்ளி, கல்லூரிகளை திறக்க மாநில அரசு முடிவு செய்தது.
அதன்படி இன்று முதல் மாநிலம் முழுவதும் 10, 11 மற்றும் 12-ம் வகுப்புகளும், கல்லூரிகளும் திறக்கப்பட்டன.
பள்ளிகளுக்கு வந்த மாணவர்களுக்கு தெர்மல் கருவி மூலம் காய்ச்சல் பரிசோதனை நடத்தி வகுப்புகளுக்கு அனுமதிக்கப்பட்டனர்.
வகுப்புகளுக்கு வர விரும்பாத மாணவ-மாணவிகள் வீட்டில் இருந்தபடியே ஆன்லைன் மூலம் பாடங்களை படிக்கலாம் எனவும் அரசு அறிவித்து உள்ளது.
ஒன்று முதல் 9-ம் வகுப்பு வ...