’ரிவால்வர் ரீட்டா’ விமர்சனம் 3/5
’ரிவால்வர் ரீட்டா’ விமர்சனம்
பாண்டிச்சேரியின் பெரிய ரவுடியான சூப்பர் சுப்பராயன், தவறுதலாக கீர்த்தி சுரேஷின் வீட்டுக்குள் புகுந்து விட, அவரை வெளியேற்றும் முயற்சியில் கீழே விழுந்து உயிரிழந்து விடுகிறார். அவரது மகனான சுனில், காணாமல் போன தனது தந்தையை அடியாட்களுடன் தேட, மறுபக்கம் உயிரிழந்த ரவுடியின் உடலகை கைப்பற்றி அதன் மூலம் ரூ.5 கோடி பெறுவதற்காக சிலர் முயற்சிக்கிறார்கள்.
இதற்கிடையே, உடலை அப்புறப்படுத்தும் முயற்சியில் கீர்த்தி சுரேஷின் குடும்பம் ஈடுபடும் போது, அவரால் பாதிக்கப்பட்ட போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜான் விஜய், கீர்த்தி சுரேஷை பழிவாங்க துடிக்கிறார்.
இப்படி பிணத்தின் பின்னாடி ஒரு கூட்டமும், கீர்த்தி சுரேஷ் பின்னாடி போலீஸும், காணாமல் போன ரவுடியை தேடி அவரது ரவுடி குடும்பம்பமும் மேற்கொள்ளும் இந்த பயணம் இறுதியில் ஒரே புள்ளியில் இணைய, இது கீர்த்தி சுரேஷின் குடும்பத்திற்கு சாதகம...









