’ரேகை’ இணையத் தொடர் விமர்சனம் 4/5
’ரேகை’ இணையத் தொடர் விமர்சனம்
ஒட்டிப் பிறந்த இரட்டை குழந்தைகளாக இருந்தாலும் அவர்களது கைவிரல் ரேகை வெவ்வேறாக இருக்கும். அப்படி இருக்க, ஒரே கைவிரல் ரேகை நான்கு பேருக்கு பொறுந்துகிறது. அப்படி இருக்க வாய்ப்பில்லையே, என்ற சந்தேகத்தில் அந்த ரேகை தொடர்பாக போலீஸ் சப் இன்ஸ்பெக்டரான நாயகன் பாலா ஹாசன், விசாரணை மேற்கொள்கிறார். சம்மந்தப்பட்ட நான்கு பேரும் இறந்த தகவல் கிடைக்கிறது. நான்கு பேரும் எதிர்பாராத விபத்தில் சிக்கி உயிரிழந்ததாக மருத்துவ அறிக்கை தெரிவித்தாலும், பாலா ஹாசன் அதன் பின்னணியில் ஏதோ மர்மம் இருக்கிறது, என்பதை உணர்ந்து விசாரணையில் தீவிரம் காட்டும் போது, நான்கு பேரும் கொலை செய்யப்பட்டிருக்கும் உண்மை தெரிய வருகிறது.
எந்தவித தடயங்களும் இல்லாமல், குறிப்பாக பிரேத பரிசோதனையில் கூட எந்தவித சந்தேகமும் ஏற்படாத வகையில் கொலை செய்யப்பட்டிருக்கும் இந்த நான்கு பேர் யார் ?, அவர்...








