₹120 கோடி AP–TG ஒப்பந்தம்: தில் ராஜுவின் ( Dil Raju’s)SVC-யுடன் யாஷ் & KVN-ன் டாக்ஸிக் திரைப்பட ஒப்பந்தம், வரலாற்றுச் சாதனை!
'டாக்ஸிக்: எ ஃபேரி டேல் ஃபார் கிரோன்-அப்ஸ் (Toxic: A Fairytale for Grown-ups) திரைப்படம், திரையரங்குகளில் வெளியாகும் முன்பே இந்திய சினிமா வரலாற்றில் புதிய சாதனையை படைத்துள்ளது. பான்-இந்திய சினிமாவின் விதிகளையே மாற்றியமைக்கும் வகையில், ஆந்திரா–தெலுங்கானா (AP–TG) விநியோக உரிமையை ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் (SVC) நிறுவனம், தயாரிப்பாளர் தில் ராஜு தலைமையில், ரூ.120 கோடி (கமிஷன் அடிப்படையிலான முன்பணம்) செலுத்தி கைப்பற்றியுள்ளது. இது தெலுங்கு மொழி அல்லாத ஒரு திரைப்படத்திற்கான மிகப்பெரிய விநியோக ஒப்பந்தமாக அதிகாரப்பூர்வமாக பதிவாகியுள்ளது.
டாக்ஸிக் படத்தின் தயாரிப்பு நிறுவனங்களான KVN Productions மற்றும் Monster Mind Creations ஆகியவற்றுக்கும், SVC-க்கு...
*சசிகுமார்- ராஜு முருகன் கூட்டணியில் ' மை லார்ட் ( My Lord) திரைப்பட இசை வெளியீட்டு விழா*
ஒலிம்பியா மூவிஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ஜெயந்தி அம்பேத்குமார் தயாரிப்பில், ராஜுமுருகன் இயக்கத்தில், நட்சத்திர நடிகரான சசிகுமார் கதையின் நாயகனாக அழுத்தமான வேடத்தில் நடித்திருக்கும் ' மை லார்ட்' ( My Lord) எனும் திரைப்படம் - பிப்ரவரி மாதம் 13 ஆம் தேதி முதல் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது.
பட வெளியீட்டை ஒட்டி படக்குழுவினர் நேற்று பத்திரிக்கை ஊடக நண்பர்களைச் சந்தித்து படம் பற்றிய தகவல்களை பகிர்ந்து கொண்டனர்.
இந்நிகழ்வினில்
குரு சோமசுந்தரம் பேசியதாவது..,
இயக்குநர் ராஜு முருகன் அவர்களை நான் முதலில் குக்கூ படத்தில் ஒரு கதாபாத்திரத்திற்காகத் தான் சந்தித்தேன். அவர் எழுத்துக்களை முன்பே படித்திருக்கிறேன்.அவர் எழுத்தாளராகவும், பத்திரிகையாளராகவும் கொண்ட அ...
*மெகா பவர் ஸ்டார் ராம் சரண் – புச்சி பாபு சானா இயக்கத்தில் உருவாகும் ‘பெத்தி’ (peddi) படம் ஏப்ரல் 30 அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது !!*
*மெகா பவர் ஸ்டார் ராம் சரண், புச்சி பாபு சானா (Buchi Babu Sana), வெங்கட சதீஷ் கிலாரு( Venkata Satish Kilaru),விருத்தி சினிமாஸ் (Vriddhi Cinemas) இணையும் ‘பெத்தி’ படம் ஏப்ரல் 30 அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது !!*
மெகா பவர் ஸ்டார் ராம் சரண் நடிப்பில், புச்சி பாபு சானா ,இயக்கத்தில் உருவாகும், மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள பிரம்மாண்டமான பான்-இந்தியா கிராமத்து பின்னணியில் ஆக்சன் ஸ்போர்ட்ஸ் டிராமா திரைப்படமான “பெத்தி” படத்தின் இறுதிக்கட்ட பணிகள் பரபரப்பாக நடந்து வருகிறது. முன்னதாக மார்ச் 27 அன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்த இப்படம், தற்போது ஏப்ரல் 30 என்ற முக்கியமான கோடை வெளியீட்டு தேதிக்கு...
வித் லவ் விமர்சனம் 4/5
முதல் காதல் பலருக்கு தோல்வியில் முடிந்தாலும், அதன் நினைவுகள் மட்டும் ஏதாவது ஒரு தருணத்தில், நம் இதயத்தை தொட்டுக்கொண்டே இருக்கும். அப்படி ஒரு தருணமாக நம் முதல் காதலை நினைவுப்படுத்துவது மட்டும் இன்றி, அந்த காதலை மீண்டும் தேடிச் செல்லும் ஒரு இனிமையான பயணத்தை மேற்கொள்ள தூண்டுவது தான் இப்படத்தின் கதைக்கரு.
நேற்று என்பது இன்று கடந்த காலம் .இன்று என்பது நாளை கடந்த காலமாகிவிடும். இப்படிக் கடந்த கால நினைவேக்கத்தில் கதாபாத்திர உணர்வுகளைச் சொல்லும் படைப்புகளுக்குத் தனி மதிப்பு உண்டு. ஒவ்வொரு மனிதனும் அந்த உணர்வைக் கடக்காமல் வந்திருக்க முடியாது.நமது அடிமன ஆழத்தில் உறைந்து கிடக்கும் அந்த உணர்வுகளை மீட்டிப் பார்ப்பது என்றுமே சிலிர்ப்பூட்டும் சுகமான அனுபவமாக இருக்கும்.காயத்தின் வடுவாக இருந்தாலும் கூட பிற்காலத்தில் அதைத் தடவி பார்க்கும்போது தோன்றும் மன எழுச...
*பரப்பரப்பான தமிழக அரசியல் சூழ்நிலையில் 4கே தொழில்நுட்பத்தில் டால்பி ஒலியுடன் மீண்டும் வெளியாகிறது சத்யராஜ்-மணிவண்ணனின் 'அமைதிப்படை'*
*ஸ்பேரோ சினிமாஸ் கார்த்திக் வெங்கடேசன் 'அமைதிப்படை' படத்தை தமிழ்நாடு, ஆந்திரா, தெலங்கானா, கேரளா, கர்நாடகாவில் உள்ள 500க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெளியிடுகிறார்*
தளபதி விஜய் நடித்த 'மெர்சல்' திரைப்படத்தை அவரது பிறந்தநாளை முன்னிட்டும், புரட்சி கலைஞர் விஜயகாந்த் நடித்த 'கேப்டன் பிரபாகரன்' படத்தை அவரது பிறந்தநாளை முன்னிட்டும் அதிநவீன தொழில்நுட்பத்தில் மறுவெளியீடு செய்து பெரும் வெற்றி கண்ட ஸ்பேரோ சினிமாஸ் கார்த்திக் வெங்கடேசன், புரட்சி தமிழன் சத்யராஜ்-மணிவண்ணன் வெற்றிக் கூட்டணியின் சூப்பர் ஹிட் 'அமைதிப்படை' படத்தை மீண்டும் வெளியிடுகிறார்.
சட்டசபை தேர்தலை எதிர்நோக்கியுள்ள தமிழகத்தில் அரசியல் களம் சூடு பிடித்துள்ள நிலையில் இக்கால அரசிய...
*வித் லவ் ( With Love )” திரைப்பட முன் வெளியீட்டு விழா !!*
Zion Films சார்பில் சௌந்தர்யா ரஜினிகாந்த் மற்றும் MRP Entertainment இணைந்து வழங்கும், பசிலியான் நாசரேத், மகேஷ் ராஜ் பசிலியான் தயாரிப்பில், டூரிஸ்ட் ஃபேமிலி' இயக்குநர் அபிஷன் ஜீவிந்த் மற்றும் அனஸ்வரா ராஜன் நடிப்பில் உருவாகியுள்ள, “வித் லவ் ( With Love )” திரைப்படம் வரும் 2026 பிப்ரவரி 6 ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகிறது.
இப்படத்தின் முன் வெளியீட்டு விழா படக்குழுவினருடன் திரை பிரபலங்கள் கலந்துகொள்ள, பத்திரிக்கை ஊடக பண்பலை நண்பர்கள் முன்னிலையில் கோலாகலமாக நடைபெற்றது
இந்நிகழ்வினில்..,
உடை வடிவமைப்பாளர் ப்ரியா ரவி பேசியதாவது..,
இப்படத்தில் நானும் ஒரு பங்காக இருப்பது மகிழ்ச்சி. வாய்ப்பு தந்த இயக்குநர் தயாரிப்பாளருக்கு நன்றி. அபிஷன், அனஸ்வரா உங்கள் எல்லோருடன் வேலை பார்த்தது இனிமையான அனுபவம்...
*சசிகுமார்- ராஜு முருகன் கூட்டணியின் ' மை லார்ட்' ( My Lord) திரைப்படம் பிப்ரவரி 13 ஆம் தேதி வெளியாகிறது*
தொடர்ந்து வெற்றி படங்களை கொடுத்த நட்சத்திர நடிகரான சசிகுமார் கதையின் நாயகனாக அழுத்தமான வேடத்தில் நடித்திருக்கும் ' மை லார்ட்' ( My Lord) எனும் திரைப்படம் - பிப்ரவரி மாதம் 13 ஆம் தேதி முதல் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது என்பதை படக் குழுவினர் பிரத்யேக புகைப்படத்தை வெளியிட்டு உற்சாகத்துடன் அறிவித்துள்ளனர்.
முன்னணி இயக்குநரான ராஜு முருகன் இயக்கத்தில் உருவாகி வரும் ' மை லார்ட் ' எனும் திரைப்படத்தில் சசிகுமார், சைத்ரா ஜே. ஆச்சார், ஜெயப்பிரகாஷ், குரு சோமசுந்தரம் , ஆஷா சரத் , இயக்குநர் கோபி நயினார், வசுமித்ரா உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்யும் இந்த திரைப்படத்திற்கு, பாடலாசிரியர் யுகபாரதி பாடல்களை எழுத, ஷான் ரோல்டன் இசையமைக்கிறார். கலை இ...