ட்ரெயின் படத்தின் இசை வெளியீட்டு விழா
ட்ரெயின் படத்தின் இசை வெளியீட்டு விழா
வி கிரியேஷன்ஸ் கலைப்புலி எஸ் தானு தயாரிப்பில் மிஷ்கின் இயக்கத்தில் விஜய் சேதுபதி, ஷ்ருதி ஹாசன், ஐரா தயானந்த, ப்ரீதி கரன், மாளவிகா, தியா ஷர்மா, நாசர், கே எஸ் ரவிக்குமார், சம்பத் ராஜ், நரேன், கலையரசன் மற்றும் பலர் நடித்து விரைவில் திரைக்கு வரவிருக்கும் ட்ரெயின் (Train) படத்தின் இசை மற்றும் டீஸர் வெளியீட்டு விழா சத்தியம் சினிமாஸில் மிக பிரம்மாண்டமாக நடைபெற்றது இதில் மடோன் அஷ்வின், பி எஸ் வினோத் ராஜ், தமிழரசு பச்சைமுத்து, அருண் மாதேஸ்வரன், அமீர், விக்னேஷ் சிவன், சசி, ஆர் பார்த்திபன், ராம், வெற்றிமாறன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
தயாரிப்பாளர் கலைப்புலி எஸ் தானு அவர்கள் பேசும்பொழுது இன்ப நாள் இது இனிய நாள் இது. மிஷ்கின் பற்றி சொன்னால் நான் ஈன்று எடுக்காத பிள்ளை. எல்லா படத்திற்கும் நான் கதை கேட்பேன் இந்த படத்திற்கு நான் கதை கேட்கவே இல்லை...









