டிரோன்ஸ் — வித்தியாசமான ஐடியா… கோடங்கி விமர்சனம் 2.5/5
டிரோன்ஸ் — வித்தியாசமான ஐடியா… கொஞ்சம் தடுமாறும் திரைக்கதை!
கோடங்கி விமர்சனம் | ⭐ 2.5/5
சினிமாவில் பேய் வந்தால் பயப்பட வேண்டும்… தேவதை வந்தால் ரசிக்க வேண்டும்… விஞ்ஞானி வந்தால் ஏதாவது புதுசாகச் செய்வார் என்று எதிர்பார்க்க வேண்டும்!
ஆனால் இந்த டிரோன்ஸ் படத்தில் யார் தேவதை, யார் சூனியக்காரி, யார் விஞ்ஞானி என்று புரிந்துகொள்வதற்குள் இடைவேளையே வந்துவிடுகிறது!
கல்லூரியில் சிக்கலில் மாட்டிக்கொள்ளும் மூன்று நண்பர்கள், ஒரு மர்மமான ஆய்வுக்கூடம், வித்தியாசமான விஞ்ஞானி, தேவதை போன்ற தோற்றத்தில் வரும் சித்தி இத்னானி, சூனியக்காரியாக மிரட்ட முயற்சிக்கும் தேவதர்ஷினி… இப்படிப் பல விசித்திரமான விஷயங்களைக் கலந்து ஒரு ஃபேண்டஸி ஹாரர் காமெடி விருந்து கொடுக்க இயக்குநர் முயற்சி செய்திருக்கிறார்.
நடிப்பு எப்படி?
டிராவிட் செல்வம்: பரிதாபங்கள் மூலம் அறிமுகமான டிராவிட், கதாநாயகனாகத் தன்னை நிரூ...









