அல்லு அர்ஜுனின் பிறந்தநாளில் வெளியான “ராக்கா” டைட்டில் போஸ்டர் !!
“ராக்கா” – அல்லு அர்ஜுனின் பிறந்தநாளில் வெளியான டைட்டில் போஸ்டர் !!
அட்லீயின் உலகளாவிய ஃபாண்டஸி-ஆக்ஷன் திரைப்பட அறிவிப்பு !!
இந்திய சினிமாவில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்திய AA22 x A6 படத்தின் தலைப்பு அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டது.
அல்லு அர்ஜூன் பிறந்தநாளை முன்னிட்டு இந்த மிகப்பெரிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. அந்தப் படத்திற்கு “ராக்கா” என பெயரிடப்பட்டுள்ளது.
இந்த டைட்டில் அறிவிப்புடன் வெளியிடப்பட்ட போஸ்டர், படத்தின் உலகை பற்றிய ஒரு தீவிரமான முன்னோட்டத்தை வழங்குகிறது. இருண்ட, மர்மமான உயிரினத்தை வெளிப்படுத்தும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள இந்த போஸ்டர், ஒரு புதிய உலகை முன்வைக்கிறது. இது ஒரு புதிய, வித்தியாசமான சினிமா அனுபவத்தை தரும் என சுட்டிக்காட்டுகிறது.
“ராக்கா” ஒரு பிரம்மாண்டமான ஃபாண்டஸி-ஆக்ஷன் படமாக உருவாகி வருகிறது. உலகளாவிய ரசிகர்களை குறிவைத்...









