ZEE5 ஒரிஜினல் சீரிஸ் வழங்கும், பிரசாந்த் பாண்டியராஜ் நடிக்கும் “வாரண்ட்” சீரிஸ் டிரெய்லர் அறிமுக விழா !!
ZEE5 வழங்கும் புதிய தமிழ் கிரைம் த்ரில்லர் வெப் தொடரான “வாரண்ட்” தற்போது ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சீரிஸை Sivan Pictures, S Studios சார்பில், பிரசாந்த் பாண்டியராஜ், P விஷால், P M ஆதீஸ்வர் இணைந்து தயாரித்துள்ளனர்.
விலங்கு சீரிஸ் மற்றும் மாமன் படம் மூலம் கவனம் ஈர்த்த இயக்குநர் பிரசாந்த் பாண்டியராஜ் முதன்மைப் பாத்திரத்தில் நடித்துள்ள இந்த சீரிஸின் திரைக்கதையை பிரசாந்த் பாண்டியராஜ், விக்னேஷ் நடராஜன் உடன் இணைந்து எழுதியுள்ளார். இந்த சீரிஸை விக்னேஷ் நடராஜன் இயக்கியுள்ளார்.
வரும் 22 ஆம் தேதி முதல் ZEE5 தளத்தில் வெளியாகவுள்ள நிலையில், இந்த சீரிஸின் டிரெய்லர் அறிமுக விழா, படக்குழுவினர் கலந்துகொள்ள, பத்திரிக்கை ஊடக நண்பர்கள் முன்னிலையி...
மர்மம், கொலை, கிராமத்து ரகசியங்கள் — ZEE5-ல் ‘கொலை சேவல்’
இந்தியா, 15 மே 2026: ZEE5 தமிழ் ZEE5, பரபரப்பூட்டும் கிராமப்புற திரில்லர் திரைப்படமான கொலை சேவல் தற்போது தங்களது தளத்தில் ஸ்ட்ரீமிங் ஆகி வருவதாக அறிவித்துள்ளது. சஸ்பென்ஸ், உணர்ச்சிகள் மற்றும் தீவிரமான கிராமத்து நாடக அம்சங்களை இணைக்கும் இப்படம், பேராசை, துரோகம் மற்றும் மனித உறவுகளின் இருண்ட பக்கங்களை ஒரு நாட்டுப்புற பின்னணியில் ஆழமாக ஆராயும் வலுவான கதையை கொண்டுள்ளது.
தனித்துவமான தலைப்பும், இயல்பான கதை சொல்லும் முறையும் கொண்ட கொலை சேவல், அதன் யதார்த்தமான அணுகுமுறை மற்றும் சூழல்மிக்க காட்சிப்படுத்தலால் ஏற்கனவே பார்வையாளர்களிடையே பெரும் ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது. மறைக்கப்பட்ட நோக்கங்கள் மற்றும் நீண்டகாலமாக புதைந்திருந்த ரகசியங்கள் மெல்ல வெளிப்படுகின்ற ஒரு பதற்றமான விசாரணையை மையமாகக் கொண்ட இப்படம், இறுதி வரை பார்வையா...
உலகை உலுக்கிய இசையின் அரை நூற்றாண்டு : கனெக்ட் மீடியா, மெர்குரி மூவீஸ் மற்றும் WPP புரொடக்ஷன் இணைந்து இளையராஜாவின் திரையுலக 50 ஆண்டுகளை கௌரவிக்கும் வகையில் இசை அஞ்சலியை உருவாக்கியுள்ளன !!
கலாசாரம், சினிமா மற்றும் தொழில்நுட்பம் ஆகியவை ஒன்றிணைந்து, முன்னெப்போதும் இல்லாத முயற்சியாக, இசைஞானி இளையராஜாவின் வாழ்க்கை வரலாறு படத்தை தயாரித்து வரும் கனெக்ட் மீடியா மற்றும் மெர்குரி மூவீஸ் நிறுவனங்கள், WPP புரொடக்ஷனுடன் இணைந்து, இந்திய திரையுலகில் இளையராஜாவின் 50வது ஆண்டு திரையுலக பயணத்தின் நினைவாக ஒரு பிரம்மாண்டமான சினிமா அஞ்சலியை உருவாக்கியுள்ளன.
1976 மே 14ஆம் தேதி வெளியான அன்னக்கிளி திரைப்படம், இந்திய சினிமாவின் ஆன்மாவையே மாற்றியமைத்த இசையை உலகிற்கு அறிமுகப்படுத்தியது. ஐம்பது ஆண்டுகள் கடந்தும், 09 மொழிகளில் 1,500க்கும் மேற்பட்ட படங்களுக்கும், 9,000க்கும் அதிகமான பாடல்கள...
'ஆக்ஷன் கிங்' அர்ஜுன் நடிக்கும் 'பிளாஸ்ட்' படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு
ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனத்தின் தயாரிப்பில், 'ஆக்ஷன் கிங்' அர்ஜுன், அபிராமி, ப்ரீத்தி முகுந்தன் ஆகியோரின் நடிப்பில், அறிமுக இயக்குநர் சுபாஷ் கே. ராஜ் இயக்கத்தில் உருவாகி, வரும் 28ம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகவுள்ள 'பிளாஸ்ட்' திரைப்படத்தினை விளம்பரப்படுத்தும் வகையில் சென்னையில் பத்திரிகையாளர் சந்திப்பு நடைபெற்றது.
'பிளாஸ்ட்' படத்தில் ஜான் கொக்கன், அர்ஜுன் சிதம்பரம், பவன், பாலா ஹாசன், வினோத் சாகர் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். அருண் ராதாகிருஷ்ணன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ரவி பஸ்ரூர் இசையமைத்திருக்கிறார். கலை இயக்கத்தை வீரமணி கணேசன் கவனித்திருக்கிறார். ஃபேமிலி ஆக்ஷன் என்டர்டெய்னராக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை ஏ ஜி எஸ் என்டர்டெய்ன்மென்ட் நிற...
எக்ஸாம் – இணையத் தொடர் விமர்சனம்
ஊட்டி மலைப்பகுதியில் காவல்துறை டிஎஸ்பி ஆக பொறுப்பேற்கச் செல்கிறார் அதிதிபாலன்.அவரைக் கடத்திவிட்டு அந்த இடத்துக்குச் செல்கிறார் துஷாரா விஜயன்.ஒரு காவல்துறை அதிகாரியைக் கடத்தியதோடு அவரைப் போல் பொறுப்பேற்கும் பெருங்குற்றத்தை துஷாரா விஜயன் செய்வது ஏன்? ஆள்மாறாட்டம் செய்து அதிகாரத்தைப் பிடித்து அவர் செய்யும் செயல்கள் என்னென்ன? என்கிற கேள்விகளுக்கான விடையாக விரிந்திருக்கிறது இந்த எக்ஸாம் தொடர்.
துஷாரா விஜயன், தொடரில் போலியான காவலதிகாரியாக நடித்திருக்கலாம்.ஆனால் நிஜ காவலதிகாரிக்குரிய மிடுக்கு,துணிவு உள்ளிட்ட எல்லா அம்சங்களையும் நடிப்புலும் உடல்மொழியிலும் நன்றாக வெளிப்படுத்தி வரவேற்புப் பெறுகிறார்.அவர் ஏன் அப்படிச் செய்கிறார்? என்கிற கேள்விக்கான விடை தெரியும்போது அவருக்கு ராயல் சல்யூட் அடிக்கத் தான் தோன்றுகிறது.
காவல்திகாரியாக நடித்...
ப்ரைம் வீடியோ வழங்கும் “சிஸ்டம்” படத்தின் அதிரடியான டிரெய்லர் வெளியானது !!
தனது புதிய ப்ரைம் ஒரிஜினல் திரைப்படமான “சிஸ்டம்” திரைப்படத்தின் உலகளாவிய வெளியீட்டு தேதியை மே 22 என அறிவித்துள்ளது.
ப்ரைம் வீடியோ தயாரிப்பில் உருவாகியுள்ள பரபரப்பான நீதிமன்ற த்ரில்லர் திரைப்படமான சிஸ்டம், அஸ்வினி ஐயர் திவாரி இயக்கத்தில் உருவாகியுள்ளது. பம்மி பவேஜா, ஹர்மன் பவேஜா மற்றும் ஸ்மிதா பாலிகா ஆகியோர் Baweja Studios நிறுவனத்தின் கீழ் தயாரித்துள்ளனர். ஹர்மன் பவேஜா, அருண் சுகுமார், அஸ்வினி ஐயர் திவாரி, தஸ்னீம் லோகண்ட்வாலா மற்றும் அக்ஷத் கில்தியல் ஆகியோர் இணைந்து திரைக்கதை எழுதியுள்ளனர்.
சோனாக்ஷி சின்ஹா, ஜோதிகா மற்றும் அஷுதோஷ் கோவாரிகர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ள இப்படத்தில், ப்ரீத்தி அகர்வால், ஆதிநாத் கோத்தாரே, ஆஷ்ரியா மிஷ்ரா, கவுரவ் பாண்டே மற்றும் சயந்தீப் குப்தா உள்ள...
சென்னைஸ் அமிர்தாவின் விளம்பர தூதர் நடிகை ஶ்ரீலீலா, சென்னைஸ் அமிர்தா ஏவியேஷன் கல்லூரியை பார்வையிட்டு, மாணவர்களுடன் கலந்துரையாடி உற்சாகமூட்டினார்.
சென்னைஸ் அமிர்தா கல்லூரியின் உலகத்தரம் வாய்ந்த உள்கட்டமைப்புகளை பார்த்து அவர் பாராட்டு தெரிவித்தார். விமான நிலையம் போன்ற நிஜ அனுபவத்தை வழங்கும் ஏர்லைன் கேட்-பாஸ் சிமுலேஷன் பகுதி, சிறிய விமான நிலைய மாதிரி அமைப்பு, உண்மையான விமான அமைப்பு மற்றும் விமான எஞ்சின் பயிற்சி வசதிகள் ஆகியவை மாணவர்களுக்கு தொழில்துறை அனுபவத்தை நேரடியாக வழங்கும் வகையில் அமைந்துள்ளதாக அவர் பாராட்டினார்.
இந்நிகழ்ச்சியில் சென்னைஸ் அமிர்தா குழுமத்தின் தலைவர் திரு.பூமிநாதன் அவர்கள் 100க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு 28 லட்சம் மதிப்பிலான கல்வி உதவித்தொகையை வழங்கினார்.
சென்னைஸ் அமிர்தாவின் தனித்துவமான பயிற்சி முறையை வெகுவாக பாராட்டிய ஸ்ரீலீலா, மாணவர்களுக்கு வழங்கப...