கோடை வெயிலிலிருந்து தெருநாய்களைக் காப்பாற்ற ‘Keep a Bowl’ நிகழ்வு!
பிரபலங்கள் கலந்துகொண்ட ‘Keep a Bowl’ நிகழ்வு, கோடை வெயிலிலிருந்து தெருநாய்களைக் காப்பாற்ற Save Shakti Foundation மற்றும் Royal Canin ஒரு புதிய முயற்சி
Save Shakti Foundation, Royal Canin உடன் இணைந்து 'Keep a Bowl' என்ற சிறப்பு நிகழ்ச்சியை நடத்தியது, இது இந்த கோடையில் தெருநாய்கள், விலங்குகள் மற்றும் பறவைகளுக்கு தேவையான தண்ணீரை ஒரு கிண்ணத்தில் வைப்பது குறித்து பொதுமக்களிடையே ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்தும் முயற்சியாக நடத்தப்பட்டது.
தமிழகத்தின் மாண்புமிகு நிதியமைச்சர் டாக்டர்.பி.டி.ஆர்.பழனிவேல் தியாக ராஜன், அரசு முதன்மைச் செயலர் டாக்டர்.ஜே.ராதாகிருஷ்ணன் ஐ.ஏ.எஸ். தமிழ்நாடு, ஸ்ரீமதி நீனா ரெட்டி, Chair Person Savera Group of Hotels, ஆகியோர் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.
சேவ் சக்தி அறக்கட்டளையின் நிறுவனர் சாயா தேவி, சிறப்பு அழைப்பாளர்கள் பற்றி உரையாற்றி, விருந்தினர்களை கௌரவித்...









