ரஜினி வெளியிட்ட தோனியின் சூப்பர் ஹீரோ புத்தகம்!
இந்திய அணியின் நட்சத்திர முன்னாள் கேப்டன் எம்.எஸ் தோனி, இந்திய அணிக்கு டி20, ஒருநாள் உலகக் கோப்பை உள்ளிட்ட பல கோப்பைகளை வென்று தந்துள்ளார்.
இது தவிர ஐபிஎல் தொடரில் சி.எஸ்.கே அணிக்கு தலைமை தாங்கும் தோனி, 4 முறை தொடரை வென்று தந்துள்ளார்.
இதனால் தோனிக்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் அதிகம்.
எம்.எஸ். தோனி ‘அதர்வா: தி ஒரிஜின்’ என்ற கிராஃபிக் நாவலில் கதாநாயகனாகவும் அறிமுகமாகவுள்ளார்.
விர்ஸு ஸ்டூடியோஸ் மற்றும் மிடாஸ் டீல்ஸ் நிறுவனம் இணைந்து தயாரித்து, ரமேஷ் தமிழ்மணி என்பவர் எழுதும் ‘அதர்வா: தி ஒரிஜின்’என்ற கிராபிக்ஸ் நாவலில் வரும் சூப்பர்ஹீரோ கதாபாத்திரத்துக்கு எம்.எஸ்.தோனியின் தோற்றம் கொடுக்கப்பட்டுள்ளது.
இந்த கிராஃபிக் நாவலுக்கான மோஷன் போஸ்டரை சமீபத்தில் தோனி அவருடைய சமூக வலைத்தளப்பக்கத்தில் வெளியிட்டிருந்தார்.
வரலாற்றுக் கதையை பின்னணியாக கொண்ட இந்த நாவலுக்காக 150 ஓவியங்கள் வ...









