சனிக்கிழமை, நவம்பர் 14
Shadow

HOME SLIDER

கனமழை எதிரொலி: 6 மாவட்டங்களில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை!

கனமழை எதிரொலி: 6 மாவட்டங்களில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை!

HOME SLIDER, NEWS, செய்திகள்
கனமழை எதிரொலி: 6 மாவட்டங்களில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை! இலங்கை கடலோரப்பகுதி மற்றும் அதனையொட்டிய தென் தமிழக கடலோர பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நீடித்து வருகிறது. இதனால், தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் நேற்று முதல் தீபாவளி வரை 5 நாட்களுக்கு பலத்த மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதையடுத்து, டெல்டா மாவட்டங்கள் மற்றும் புதுக்கோட்டை, ராமநாதபுரம், திருநெல்வேலி, தூத்துக்குடி, கடலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்யும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இதற்கிடையே, தமிழகத்தில் கொரோனா தொற்று காரணமாக ஒன்றரை ஆண்டுகளாக மூடப்பட்டிருந்த பள்ளிகள் இன்று முதல் செயல்பட உள்ளன. 1-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரை இன்று முதல் பள்ளிகள் திறக்கப்படுகிறது. இந்நிலையில், வேலூர், நெல்லை, விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி, திருவாரூர் ஆகிய மாவட்டங்களில் தொடர...
‘வலிமை’ பாணியில் வீடியோ வெளியிட்ட ‘ஆர்.ஆர்.ஆர்’ படக்குழு – கொண்டாடும் ரசிகர்கள்!

‘வலிமை’ பாணியில் வீடியோ வெளியிட்ட ‘ஆர்.ஆர்.ஆர்’ படக்குழு – கொண்டாடும் ரசிகர்கள்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
‘வலிமை’ பாணியில் வீடியோ வெளியிட்ட ‘ஆர்.ஆர்.ஆர்’ படக்குழு - கொண்டாடும் ரசிகர்கள்! தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம் ஆகிய 5 மொழிகளில் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள படம் ‘ஆர்.ஆர்.ஆர்’. ராஜமவுலி இயக்கியுள்ள இப்படத்தில் பிரபல தெலுங்கு நடிகர்கள் ராம்சரண் தேஜா மற்றும் ஜூனியர் என்.டி.ஆர் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். மேலும் ஆலியா பட், அஜய் தேவ்கன், சமுத்திரகனி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். டிவிவி தனய்யா தயாரித்துள்ள இப்படத்திற்கு கீரவாணி இசையமைக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து பின்னணி பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், அஜித்தின் ‘வலிமை’ பாணியில் ‘ஆர்.ஆர்.ஆர்’ படக்குழு கிளிம்ப்ஸ் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது. பிரம்மிப்பூட்டும் காட்சிகள் அடங்கிய இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இப்படம் அடுத்தாண்டு ஜனவரி மாதம் 7-ந் தேதி த...
ஒரே நாளில் ரிலீசாகும் சசிகுமாரின் 2 படங்கள்!

ஒரே நாளில் ரிலீசாகும் சசிகுமாரின் 2 படங்கள்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
ஒரே நாளில் ரிலீசாகும் சசிகுமாரின் 2 படங்கள்! தமிழ் திரையுலகில் பிசியான நடிகராக வலம் வருபவர் சசிகுமார், இவர் கைவசம் எம்.ஜி.ஆர்.மகன், ராஜவம்சம், கொம்புவச்ச சிங்கம்டா, பகைவனுக்கு அருள்வாய், முந்தானை முடிச்சு 2, நாநா உள்ளிட்ட படங்கள் உள்ளன. இவற்றில் பெரும்பாலான படங்கள் படப்பிடிப்பு முடிந்து ரிலீசுக்கு தயாராக உள்ளன. அதன்படி, பொன்ராம் இயக்கத்தில் சசிகுமார் நடித்துள்ள ‘எம்.ஜி.ஆர்.மகன்’ திரைப்படம் வருகிற நவம்பர் 4-ந் தேதி நேரடியாக ஓடிடி-யில் ரிலீசாக உள்ளது. இதேபோல் எஸ்.ஆர்.பிரபாகரன் இயக்கத்தில் சசிகுமார் நடித்துள்ள ‘கொம்புவச்ச சிங்கம்டா’ திரைப்படம் வருகிற நவம்பர் 26-ந் தேதி திரையரங்குகளில் ரிலீசாகும் என கடந்த சில வாரங்களுக்கு முன்னர் அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், அந்த படத்துக்கு போட்டியாக, சசிகுமாரின் மற்றொரு படமும் களமிறங்கி உள்ளது. கதிர்வேலு இயக்கத்தில் சசிகுமார், நிக்கி கல்ராணி நடிப்ப...
வன்னியர்களுக்கான 10.5 சதவீத இட ஒதுக்கீடு சட்டம் ரத்து: உயர்நீதிமன்றம் மதுரை கிளை தீர்ப்பு!

வன்னியர்களுக்கான 10.5 சதவீத இட ஒதுக்கீடு சட்டம் ரத்து: உயர்நீதிமன்றம் மதுரை கிளை தீர்ப்பு!

HOME SLIDER, NEWS, செய்திகள்
வன்னியர்களுக்கான 10.5 சதவீத இட ஒதுக்கீடு சட்டம் ரத்து: உயர்நீதிமன்றம் மதுரை கிளை தீர்ப்பு! எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசு, ஆட்சியில் இருந்தபோது வன்னியர்களுக்கு 10.5 சதவீத இட ஒதுக்கீடு வழங்க முடிவு செய்தது. சட்டம் நிறைவேற்றப்பட்டு அதற்கான  அரசாணையும் வெளியிடப்பட்டது. இதனை எதிர்த்து வழக்குகள் தொடரப்பட்டன. உயர்நீதிமன்றம் மதுரை கிளையிலும் வழக்குகள் தொடரப்பட்டன. வழக்கு மீதான விசாரணைகள் முடிவடைந்த நிலையில் உயர்நீதிமன்றம் மதுரை கிளை இன்று தீர்ப்பு வழங்கியது. அப்போது வன்னியர்களுக்கு 10.5 சதவீத இட ஒதுக்கீடு சட்டம் செல்லாது என பரபரப்பான தீர்ப்பை அளித்துள்ளது. மேலும், இடஒதுக்கீடு வழங்க அதிகாரம் உள்ளதா? உள்ளிட்ட ஆறு கேள்விகளையும் எழுப்பியுள்ளது....
19 மாதங்களுக்குப் பிறகு பள்ளிகள் திறப்பு: உற்சாகத்துடன் வருகை தந்த மாணவ- மாணவிகள்!

19 மாதங்களுக்குப் பிறகு பள்ளிகள் திறப்பு: உற்சாகத்துடன் வருகை தந்த மாணவ- மாணவிகள்!

HOME SLIDER, NEWS, செய்திகள்
19 மாதங்களுக்குப் பிறகு பள்ளிகள் திறப்பு: உற்சாகத்துடன் வருகை தந்த மாணவ- மாணவிகள்! கொரோனாவின் கோரத்தாண்டவத்தால் தமிழகம் மட்டுமின்றி நாடு முழுவதும் பள்ளிகள் மூடப்பட்டன. இதனால், கடந்த 19 மாதங்களாக பள்ளிகள் திறக்கப்படாமல் இருந்தது. கடந்த சில நாட்களாக கொரோனா தொற்றின் எண்ணிக்கை குறைந்து வருவதை அடுத்து, நாட்டின் பல்வேறு மாநிலங்களிலும் பள்ளிகள் திறக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில், தமிழகத்தில் ஏற்கனவே 9-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்புகளுக்கு நேரடி வகுப்புகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன. தொடரந்து, 1-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்புகளுக்கு  நவம்பர் 1-ம் தேதி முதல் திறக்கப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அறிவித்திருந்தார். அதன்படி கொரோனா நெறிமுறைகளுடன் இன்று முதல் 1-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்புகள் வரை பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன. பள்ளிகளுக்கு வரும் மாணவ -மாணவிகளை ...
நலமுடன் வீடு திரும்பிய “அண்ணாத்த” ரஜினி I நலமுடன் இருப்பதாக ரசிகர்களுக்கு வாய்ஸ்!

நலமுடன் வீடு திரும்பிய “அண்ணாத்த” ரஜினி I நலமுடன் இருப்பதாக ரசிகர்களுக்கு வாய்ஸ்!

CINI NEWS, HOME SLIDER, kodanki voice, நடிகர்கள்
  நலமுடன் வீடு திரும்பிய "அண்ணாத்த" ரஜினி I நலமுடன் இருப்பதாக ரசிகர்களுக்கு வாய்ஸ்!   காவேரி மருத்துவமனையில் உடல்நலக்குறைவு காரணமாக அனுமதிக்கப்பட்டிருந்த நடிகர் ரஜினிகாந்த் டிஸ்சார்ஜ். தலைசுற்றல் மற்றும் மயக்கம் காரணமாக கடந்த 28ம் தேதி காவிரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் வீடு திரும்பினார் நடிகர் ரஜினிகாந்த்.   https://youtu.be/2L3jITUCDRE...
நயன்தாரா படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமாகும் சி.எஸ்.கே வீரரின் தங்கை!

நயன்தாரா படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமாகும் சி.எஸ்.கே வீரரின் தங்கை!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, sports, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகைகள், விளையாட்டு செய்திகள்
நயன்தாரா படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமாகும் சி.எஸ்.கே வீரரின் தங்கை! நடிகை நயன்தாரா தனது காதலர் விக்னேஷ் சிவனுடன் இணைந்து ரவுடி பிக்சர்ஸ் என்ற பட நிறுவனத்தை தொடங்கி சில திரைப்படங்களை தயாரித்து வருகிறார். அந்த வகையில் அவர்கள் தயாரிக்கும் புதிய படம் ‘வாக்கிங்/டாக்கிங் ஸ்ட்ராபெரி ஐஸ்கிரீம்’. இப்படத்தை அறிமுக இயக்குனர் விநாயக் இயக்குகிறார். சூரரைப்போற்று படத்தில் சூர்யாவின் நண்பராக நடித்த கேகே, இப்படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமாக உள்ளார். அதேபோல் பிரபல பின்னணி பாடகி ஜோனிடா காந்தியும் இப்படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமாக உள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், ‘வாக்கிங்/டாக்கிங் ஸ்ட்ராபெரி ஐஸ்கிரீம்’ படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க மல்தி சாஹர் ஒப்பந்தமாகி உள்ளார். இவர் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நட்சத்திர வீரர் தீபக் சாஹரின் தங்கை...
இது பதவி அல்ல பொறுப்பு – தேர்தலில் வென்ற மக்கள் இயக்க நிர்வாகிகளுக்கு விஜய் அறிவுரை!

இது பதவி அல்ல பொறுப்பு – தேர்தலில் வென்ற மக்கள் இயக்க நிர்வாகிகளுக்கு விஜய் அறிவுரை!

CINI NEWS, HOME SLIDER, politics, சினி நிகழ்வுகள், தமிழக அரசியல், நடிகர்கள்
இது பதவி அல்ல பொறுப்பு - தேர்தலில் வென்ற மக்கள் இயக்க நிர்வாகிகளுக்கு விஜய் அறிவுரை! தமிழகத்தில் சமீபத்தில் நடந்து முடிந்த 9 மாவட்டத்துக்கான ஊரக உள்ளாட்சித் தேர்தலில், விஜய் மக்கள் இயக்கத்தைச் சேர்ந்த உறுப்பினர்கள் 110 இடங்களில் வெற்றி பெற்றனர். இவர்களின் இந்த வெற்றி அரசியல் வட்டத்தில் பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது. இத்தனைக்கும் தேர்தலில் தன் படமோ, கொடியோ பயன்படுத்தக்கூடாது என்று விஜய் கண்டிப்பாகக் கூறி, தடை போட்டிருந்தார். ஆனாலும் சோர்வடையாத விஜய் ரசிகர்கள் மக்களை வீடு வீடாக சென்று சந்தித்து ஆதரவு கேட்டனர். தேர்தலில் நின்ற பல நிர்வாகிகள் அதிக ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற்றனர். தேர்தலில் வெற்றி பெற்ற மக்கள் இயக்க நிர்வாகிகளை அண்மையில் நேரில் அழைத்து பாராட்டினார் விஜய். அந்த சந்திப்பின் போது நடிகர் விஜய் சில அறிவுரைகளை வழங்கி உள்ளார். அவர்களிடம், “இது பதவி அல்ல பொறுப்பு என்பதை உ...
‘அண்ணாத்த’ கூட்டணி மீண்டும் இணைய வேண்டும் – ரஜினி மகள் விருப்பம்!

‘அண்ணாத்த’ கூட்டணி மீண்டும் இணைய வேண்டும் – ரஜினி மகள் விருப்பம்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
‘அண்ணாத்த’ கூட்டணி மீண்டும் இணைய வேண்டும் - ரஜினி மகள் விருப்பம்! சிவா இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள படம் ‘அண்ணாத்த’. சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இப்படத்துக்கு டி.இமான் இசையமைத்துள்ளார். இப்படத்தில் ரஜினியுடன் நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், குஷ்பு, மீனா, சூரி, சதீஷ், பிரகாஷ் ராஜ் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது. இப்படம், வருகிற நவம்பர் 4-ந் தேதி தீபாவளி பண்டிகையன்று திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்நிலையில், சமீபத்தில் குடும்பத்தினருடன் ‘அண்ணாத்த’ படத்தைப் பார்த்த ரஜினியின் மகள் சௌந்தர்யா. படத்தைப் பற்றி தனது ஹூட் செயலில் போட்ட குரல் பதிவில், “படம் பார்த்துவிட்டு கண்களில் கண்ணீருடன் சிவா சாருக்கு நன்றி சொன்னேன். நீங்கள் செய்திருப்பது மேஜிக் என்பதையும் தாண்டி சொல்ல வார்த்தைகள் இல்லை. தலைவரும் - நீங்களும் மீண்டும் ஒரு படம் பண்ண வேண்டும்” என்று அவர் அந்த பதிவில் கூறியிருக...
கோலியின் புதிய வியூகம்: ஆச்சர்யத்தில் மூழ்கிய ரசிகர்கள்!

கோலியின் புதிய வியூகம்: ஆச்சர்யத்தில் மூழ்கிய ரசிகர்கள்!

HOME SLIDER, NEWS, sports, செய்திகள், விளையாட்டு செய்திகள்
கோலியின் புதிய வியூகம்: ஆச்சர்யத்தில் மூழ்கிய ரசிகர்கள்! டி20 உலக கோப்பையில் இந்தியா- நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான ஆட்டம் துபாயில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. இந்திய அணியில் கே.எல். ராகுல், ரோகித் சர்மா, இஷான் கிஷன், விராட் கோலி, ரிஷாப் பண்ட், ஹர்திக் பாண்ட்யா, ஜடேஜா, ஷர்துல் தாகூர், முகமது ஷமி, வருண் சக்ரவர்த்தி, பும்ரா ஆகியோர் இடம் பிடித்துள்ளனர். ரோகித் சர்மா- கே.எல். ராகுல் அல்லது இஷான் கிஷன்- கே.எல். ராகுல் ஆகியோரில் ஏதாவது ஒரு ஜோடி களம் இறங்கும் என ரசிகர்களும், நியூசிலாந்து பந்து வீச்சாளர்களும் எதிர்பார்த்தனர். ஆனால், யாரும் எதிர்பார்க்காத வகையில் இந்திய அணி சர்ப்ரைஸ் அளித்தது. கே.எல். ராகுல், இஷான் கிஷன் ஆகியோரை தொடக்க வீரர்களாக களம் இறக்கினார் விராட் கோலி. இது இந்திய ரசிகர்களுக்கு ஆச்சர்யத்தை கொடுத்தது. மேலும், நியூசிலாந்த...